நம் நுண்கலைகளை நாமே அழிப்பதா ?

 

இடுகையை இட காரணம்

ஊர்சுற்றி

சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை

 

  நம்முடைய இந்திய துணை கண்டம் பல  நுண்கலைகளை கொண்டிருந்தது என்பதையும், (அழியாத ஓவியங்கள், சிற்ப கலை, கட்டிட கலை, மூலிகைகள், சித்த மருத்துவ முறைகள்) அவற்றில் பெரும்பான்மையானவை நுட்பங்கள் கால போக்கில் அழிந்து போய்விட்டன என்பது மறுக்க முடியாத உண்மைகள்.

  இது போலவே சோதிடம் என்பது இன்னும் வளர்ந்து வரும் ஒரு நுண் கலை என்பதையும், ஆயிரக்கணக்கான வருடங்களாக பல மாற்றங்களை ஏற்று கொண்டு இருக்கிறது என நிரூபிக்க முடியும். இன்னும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.

சமீபத்திய பூகம்பம் பற்றிய விவாதத்தில் நான் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.

சோதிடம் என்பது என்ன?

சோதிடம் என்பது வானியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை புள்ளி விவர அடிப்படையில் ஆராய்வதாகும்.

  அதற்கு நண்பர் ஊர் சுற்றி அவர் அறிந்த வகையில் அப்படி கேள்விபட்டதில்லை என்கிறார். ஆனால் சோதிடம் அடிப்படை அறிந்த ஆரம்ப நிலை மாணவர் கூட இதை ஒப்பு கொள்வார். உதாரணமாக எந்த ஒரு மாணவரும் குறைந்தது 100 சாதக அமைப்புகளையும், அந்த சாதகர்களின் விவரங்களையும் ஒரு ஆராய்ச்சி மாணவரை போல ஆராய வேண்டும். இதன் பிறகு தான் ”ஓரளவாவது சோதிடம் சொல்வது என்பது என்ன” என்பதை ஓரளவாவது நாம் அறிந்து கொள்ள முடியும்.

  இதையே திரு. சுப்பையா வாத்தியாரும் ஒரு பாடத்தில் அறிவுருத்தி இருந்தார்.

 

மல்லார்ந்து படுத்து நாமே நம் மீதே உமிழ்வதா?

  இதை நேரடியாக  மறுத்து கூற முடியாமல் அதில் ஒரு சில மோசடியாளர்கள் தவறாக கடை பிடிப்பதை சுட்டி காட்டுகிறார்கள். சோதிட மோசடியாளர்களை கண்டியுங்கள். சோதிடத்தை அல்ல.

  சுகப்பிரசவம் ஆகும் நிலைகளை கூட சில மோசடி மருத்துவர்கள் வேண்டுமென்றே அறுவை சிகிச்சை செய்கிறார்களே அதனால் மருத்துவம் என்பதே பொய் என்று கூற முடியுமா ? (எவ்வளவோ நல்லுள்ளம் கொண்ட மருத்துவர்கள் இருக்கிறார்களே ?)

  எனவே எவரோ சொல்கிறார்கள், என்னவோ கேள்வி பட்டேன் என்று தவறான கருத்துக்களை பரப்பி நலிந்து கொண்டிருக்கும் கலைகளை் அழித்து விடாதீர்கள்.

  சோதிட நிலைகள் தவறென்று தெரிந்தால், அதனை கற்று கொண்டு அதை திருத்துங்கள். (இவ்வாறு கடந்த சில வருடங்களில் செய்து அதை செம்மை செய்தவர்கள் ஏராளம்).

புதிய உத்திகள்

 

(KP System of Astrology)

The Krishnamurthy Paddhati (KP Astrology) was devised by learned astrologer KS Krishnamurthi who introduced many insights to improve the accuracy of astrological predictions. He gave importance to the Nakshatra and worked on finer subdivisions of time to create the Krishnamurthy System which has now become the fastest growing astrology methodology.

K-S-Krishnamurthy

'Krishnamurthi Paddhathi' of astrology is the product of 40 years of research by the founder Late Prof. K.S. Krishnamurthi. Prof. K.S.Krishnamurthi was born on 1st November 1908 at Thiruvaiyaru, Tanjore district. He later moved to Madras ie Chennai. KSK passed away in March 1972. (source http://astropskp.com/)

சென்ற நூற்றாண்டு அறிஞர்

Dr. B. V. Raman - Vedic Astrologer

Dr.B.V.Raman, Editor-in-chief of 'The Astrological Magazine' and a World Renowned Astrologer.

Dr. Raman spent his whole life in the study of relations between cosmic and terrestrial phenomena. He was able to demonstrate by his writings and predictions made through The Astrological Magazine and other media that the astrological theory of cosmic influences affecting human life is essentially correct. Through a number of books, lectures and research papers, Dr. Raman influenced the educated public and made them astrology-conscious. His special fields of research were Hindu astronomy, astro-psychology, weather and political forecasts, disease diagnosis, natural calamities, management and other areas in relation to celestial phenomena.

 

திரு. சுப்பையா வாத்தியார்

subbaiah

SP.VR. SUBBIAH Coimbatore, Tamil Nadu, India நம்ப வாத்தியார்.
 

திரு. சுவாமி ஓம்கார்- Workshop on Stellar Astrology (கே.பி முறை)

Workshop on Stellar Astrology
Conducting a Workshop on Stellar Astrology- An Internal View on Astrology (KP system). This is unique opportunity of learning Krishnamurthy Paddhati, which is an advance system of astrology.

 

வாழ்த்துக்கள்!

நன்றி!!

சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை

 

முதலில் சுனாமி எச்சரிக்கை, பூகம்பத்தகவலை தந்து உதவிய நண்பர் ஊர்சுற்றிக்கு நன்றி ;-)

மேலும்

Chennai Earth Quake

Japan Earth Quake

நண்பர் பூகம்பக தகவலை தவறான முறையில் புரிந்து கொண்டிருக்கிறார். முதலில் ஒவ்வொரு அமாவாசையும் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். ஒவ்வொரு பௌர்ணமியும் எதிர் எதிர் திசையில் வரும். ஆனால் இது சூரிய கிரகணத்தில் இருந்து வேறுபட்டது ஆகும்.

சரியான தகவல்: அறிவியல்

புதிது:** Natural Disasters, Prof. Stephen A. Nelson, Tulane University. இவர் ஒரு அறிவியல் அறிஞர். சந்திரனின் சஞ்சாரத்திற்கும், கடல் நீரோட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பற்றி எழுதி உள்ளார்.

hightides 

சோதிடம் என்பது என்ன?

சோதிடம் என்பது வானியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை புள்ளி விவர அடிப்படையில் ஆராய்வதாகும்.

நவீன சோதிட அறிவியல்

ஒரு கணிணி அறிவியல் அறிஞர் புள்ளி விவர அடிப்படையில் மிகத்துல்லியமக கணித்த தற்போதய நில நடுக்கம். (நன்றாக கவனியுங்கள் இவர் அறிவியல் அறிஞர் கிடையாது. வானவியலுக்கும், சம்பவங்களுக்கும் இருக்கும் தொடர்பை வைத்து கணித்தார் அவ்வளவு தான்)

இது மிகச்சரியாக இப்போது நடந்துள்ளது. இது தான் Hi-Tech சோதிடம்.

Eclipse & Earthquake Simulator 

by Britton LaRoche · 01/07/2009  http://www.garagegames.com/community/blog/view/15946/7

japan.eclipse.results

The results show 100% accuracy on the original prediction with significant earthquakes in all 3 circles between July 22nd and July 28th. Follow up results indicate a trend where the magnitude of the quakes are increasing. A new theory proposed on July 28th explains this and predicts larger quakes in these circles before August 25th.


The new lunar tectonic weakening theory is proving out to be correct. This theory correctly predicted the 7.1 and 6.1 earthquakes in Japan on August 9th and 10th. The theory also indicates the worst may still be to come between August 17th and August 25th with the next lunar perigee. See page 8 for details. Page 8 - Updates to prediction - Why we will have more 7+ quakes before August 25th

எனவே கோள்களின் சஞ்சாரத்திற்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம் அறிவியல் பூர்ணமாகவும் சரி, சோதிட பூர்வமாகவும் சரி நிரூபிக்க பட்டுள்ளது.

 

நண்பருக்கு விளையாட்டாக சில கேள்விகள் :

1. அமாவாசையும், பௌர்ணமியும் 28 நாள்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது. ஆனால் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பதும் வருடம் ஒரு முறை மட்டும் நிகழ்கிறது. இது ஏன் ?

2.  அமாவாசையில் கடலில் அலைகள் அதிகமாவது போல, பௌர்ணமியில் குறைவாக வேண்டுமே? ஆனால்  பௌர்ணமியிலும் அதிகமாகிறதே ஏன் ? (அமாவாசையில் பைத்தியம் அதிகமாவது போல, பௌர்ணமியில் குணமாக/குறைவாக வேண்டுமே? ஆனால்  பௌர்ணமியிலும் அதிகமாகிறதே ஏன் ?)

 

பகுத்தறிவையும்- அறைகுறை அறிவையும் சேர்த்து குழப்பி ஒரு சூப்பர் சிலர் குருமாவாக பைத்தியகோடிகளுக்கும் வாசகர்களுக்கும் தந்துகொண்டிருக்கிறார்கள் . நண்பரும் அந்த வரிசையில் சேர வேண்டாமென கேட்டு கொள்கிறேன்.

எதற்கெடுத்தாலும் பகுத்தறிவு, மத எதிர்ப்பு, சோதிட எதிர்ப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். உண்மையிலேயே அவ்விசயம் உண்மை தானா, மக்களுக்கு நன்மை பயக்குமா ? என்று மட்டும் சிந்திக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்!!

உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா - 2 ?

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதிலும் சிந்தணைகளின் விளக்கமும். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

முதல் பகுதி: உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

”உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.“ என வெளியிட்டு இருந்தேன்.

பதிவை பார்வையிட்ட 250 பேரில் ஒருவர் கூட தங்கள் அனுபவத்தை வெளியிட முன்வரவில்லை. ஆனால் இது நான் எதிர் பார்த்தது தான் எனவே தான் ”விருப்பமுள்ளவர்கள்” என்று கூறினேன். ஏனெனில் இது உங்கள் ஆழ்மனதிலுருந்த பல சிந்தணைகளை வெளி கொணர்ந்து இருக்கும். அவை பெரும்பாலும் மிக அந்தரங்கமானவையால் வெளியிடுவது சிரமமே.

உங்கள் சிந்தணைகளின் படி நிலைகள்

medi1

நிலை 1:  (முதன் முறையாக செய்பவர்களுக்கு மட்டும்)

இத்தியானம் ஒரு கேலிகூத்தை போல உணர்வீர்கள். இது ஒரு முட்டாள்தனம். 10 நிமிடங்களும் வீண் தான் இதற்கு பதிலாக ஒரு உருப்படியான வேலை செய்யலாம் என மனம் சொல்லும். நீங்கள் உங்களுக்குள் சொல்லி கொள்வீர்கள் ஒரு முறை செய்து தான் பார்க்கலாமே என்று.

நிலை 2: (நிகழ்காலத்தை சிந்தித்தல்)

நீங்கள் தியானத்தில் அமர்வதற்கு முன் 1 மணி நேரத்தில் நடைபெற்ற செயல்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். இது உங்களை பாதித்த செயல், அல்லது அறை, உடை, உடமைகள் பற்றியதாக இருக்கலாம்.

இப்படியாக சிந்தணைகள் பின்னோக்கி போய் கொண்டிருக்கும். அதாவது முன் தினம், கடந்த வாரம் என்று.

நிலை 3: ( அவமானங்கள், அபிலாசைகள், ஏக்கங்கள், திட்டங்கள்)

இப்படியாக கடந்த காலத்தை பற்றிய எண்னங்களுடன் ’நீ’ங்கள் போராடிய பிறகு, உங்கள் மனம், நீங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் வந்து நிற்கும். இது உங்கள் மன நிலையை பொருத்து இனிமையானதாகவோ, துன்பமான சம்பவமாகவோ இருக்கலாம்.

அந்த சம்பவத்தை  எவ்வாறு நீடிக்க செய்யலாம் (அ) மாற்றி அமைக்கலாம் என மனம் திட்டம் தீட்ட ஆரம்பிக்கும். இந்த வகையான மனிதர்களை உபயோகிக்கலாம்; இந்த அளவு பணம், காலம் செலவு செய்யலாம் என்பது போல.

நிலை 4: (சிந்தணை நின்று போதல்)

medi3

(இந்த நிலை எல்லோரும் ஒரே முயற்சியில் அடைய முடியும் என சொல்ல இயலாது)

இப்போது நீங்கள் சிந்திக்க ஏதுமில்லை என்று ஒரு கால கட்டம் வரும். நீங்கள் மிகுந்த சோர்வாக உணர்வீர்கள். தூக்கம் உங்களை தழுவும். வாழ்வில் என்றும் நீங்கள் காணாத அளவிற்கு சுகம் தருவதாக இருக்கும்.

 

சரி இவற்றை செய்வதால் என்ன பயன் ?

இது தான் உங்களுக்கான கேள்வி என கொள்ளலாம். இத்தியானத்தை 2 / 3 நாட்கள் தொடர்ந்து செய்தவர்கள் தாராளமாக தம் அனுபவத்தை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் ;-) இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய குறிப்பு இது தான். ”உங்களது மனம் சூப்பர் கணினியின் வேகத்திலிருந்து இமயமலையின் ஆழ்ந்த அமைதிக்கு செல்வது”

நண்பர் Jawarlal

“சிந்தனையைத் தொடர்ந்து கொண்டே இருங்கள், நாளா வட்டத்தில் மனம் நிச்சலனமாகி விடும் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். மணிக் கணக்கானாலும் மனசு ஓயாதிருப்பதுதான் பல வருஷங்களாக என் பிரச்சினை!”

என குறிப்பிட்டு இருந்தார். இது ஒரு பொதுவான பிரச்சிணை தான்.

நான் குறிப்பிட்டு இருந்தது போல உங்களது சிந்தணைகளை தாளில் குறிப்பிடுவது மிக மிக முக்கியமான விடயம். உங்களுக்கு தோன்றும் சிந்தணைகள் ஒரே விடயத்தை பற்றியதெனில் அதை சரி செய்ய / தீர்க்க வேண்டியது அவசியம் என தெரிகிறது.

உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

 

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதில். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

கேள்வி :

//தியானம் என்பது இப்படி தான் செய்யனும் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றேன்!
நான் செய்வதே தியானம் என்ற போதே தெரியவில்லையா!?//

பதில்:

தியானம் என்பது பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். தியானம் என்பது மன அறிவியல் ஆகும். இதை நம்மால் நிரூபிக்க முடியும். வால்பையனுக்கு நான் தியானத்தை நடைமுறையிலேயே உணர்த்த முடியும். உங்களை நீங்களே உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

ஏனெனில் பிறவியிலுருந்தே கண்களை மூடி கொண்டு இருப்பவருக்கு முழு நிலவின் அருமையை விளக்குவது அவருக்கும், விளக்குபவருக்கும் துன்பம் தரும் செயல் அல்லவா?எளிமையான வழி: கண்களை திறவுங்கள். முழு நிலவு தாமாகவே தெரியும்.

அதுபோலவே தியானம் செய்யுங்கள். அந்நேரத்திற்கும், மற்ற நேரத்திற்குமான வித்தியாசம் தாமாகவே தெரியும்.

ramanar

இரமணர் சொல்கிறார். “ஒருவன் கடவுளை தேட வேண்டிய அவசியமே இல்லை. ‘நான்’ என்பது என்ன என்பது பற்றி அறிந்தாலே போதும். மற்ற ஆன்மீக / உண்மை தேடல்களுக்கான எல்லா பதில்களும் கிடைத்து விடும்”

நான் என்பது என்ன (உடலா / மனமா / உயிரா) ?

[பகுத்தறிவு வாதிகளுக்கு இப்போதே ஒரு கேள்வி உதயமாகி இருக்கும்? மனம், உயிர் என்பது பொய் என கீழ் கண்டவற்றை செய்யுங்கள் உங்களுக்கே உண்மை தெரியும்]

  1. ஒரு அலாரம் டைப் செட்டரில் 10 நிமிடங்கள் அமைப்பை ஏற்படுத்தவும்
  2. நீங்கள் ஒரு தனி அறையில் (அ) தனிமையில் தளர்வாக, வசதியாக (உடம்பை சிரமப்படுத்தாத அளவிற்கு) அமருங்கள் / படுத்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அறை உங்களுடைய உடல், உடமைகள் பற்றி நீங்கள் பொருட்படுத்தாத அளவிற்கு இருக்க வேண்டும்.
  3. உங்கள் கண்களை மூடுங்கள்.
            இப்போது உங்கள் மனம் மிக மிக வேகமாக சூப்பர் கணினியை போல சிந்தணைகள் செய்யும்.
  4. இப்போது சில சிந்தணைகள் தோன்றும். அவற்றை பின் தொடருங்கள்.
  5. எந்த சிந்தணையையும் தடை செய்யாதீர்கள். (இதுவே மிக மிக முக்கியம்) எவ்வளவு தூய எண்ணங்களானுலும், தீய சிந்தணைகளானுலும் சரியே
  6. இவ்வாறு செய்யும் போது தூக்கம் வரும். தயவு செய்து தூங்க மட்டும் வேண்டாம் ;-)
  7. நடுவில் கண் விழிக்க நேர்ந்தால் கவலை பட வேண்டாம். இவ்வாறு எவ்வளவு நேரம் இருக்க முடிந்தது என்பதை  குறிப்பெடுத்து கொள்ளவும். மறுபடியும் முயற்சி செய்யவும்.
  8. கண்களை மூடிக்கொண்டு இருந்த போது  உங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும்,
    இத்தியானத்திற்கு பிறகு 15 நிமிடங்களுக்கு நீங்கள் செய்த செயல்களையும் வரிசை கிரமமாக ஒரு பேப்பரில் குறிப்பெடுத்து கொள்ளவும்.

இவ்வளவு தான் முதற் கட்ட தியானம். உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் குறைந்த பட்சம் 3 படி நிலைகள் உள்ளன. அதை இத்தியானம் செய்பவர்களுக்கு தாமாகவே தெரியும்.

 

இம்முதற் கட்ட நிலையை செய்தவர்களுக்கு தாமாகவே பல சந்தேகங்கள் தீர்ந்து விடும்.    உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.

வாழ்த்துக்கள்.