காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்திய முஸ்லிம் சகோதரர்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதற்கு காந்தி காரணமா ?


இந்திய முஸ்லிம்கள் கல்வியை புறக்கணித்ததற்கு/பின் தங்கியதற்கு, சுதந்திர போராட்டத்தின் போது  காந்தியின் பேச்சை கேட்டதனால் தான் என்று சமீபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் பொய் பேசிய மததலைவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். 


பாகிஸ்தானிய பத்திரிக்கையில் வெளியானது இந்த கட்டுரை. இதை எழுதியவர் பாகிஸ்தானிய யுனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். //The writer retired as professor of physics from Quaid-e-Azam University, Islamabad//

அக்பருக்கு பிறகு வந்த கால கட்டத்தில்,  200 வருடத்திற்கு முன்பே, அறிவியல்/பகுத்தறிவிற்கு எதிராக முக்கிய  மத தலைவர்களால்விதிக்கப்பட்ட பத்வாக்களால் எவ்வாறு கணிதம், அறிவியல் பாடங்கள் புறக்கணிக்க பட்டன, மத போதணைகள் மட்டும் கற்பிக்க பட்டன என்று விளக்குகிறார்.

பாகிஸ்தானிய பிரிவினையின் பிதாமகர்களான (சையித், இக்பால் எனும் இருவரையும் ஒப்புவமை செய்து பிற்போக்கான இக்பால் என்பவர் எவ்வாறு முன்னிலை படுத்த படுகிறார், அதனால் எவ்வாறு முஸ்லிம்கள் கல்வியினமையால் அவதி படுகின்றனர் என்று விவரிக்கிறார்.



இதை வெளியிடுவதற்கு காரணம் பெரும்பாண்மை இந்திய முஸ்லிம் சகோதரர்கள் தங்களின் பிற்போக்கிற்கு உண்மையான காரணமான மத வெறியர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து அறிவியல் படித்து அறிவு பூர்ணமாக சிந்திக்க வேண்டும் எனும் ஆவலே.



//It was a difficult enterprise to take on. The period after the end of Emperor Akbar’s reign had been one of unbroken anti-science and anti-rationalist conservatism. Some 200 years before Sir Syed, Sheikh Ahmed Sirhindi and other influential religious figures had issued fatwas against mathematics and the secular sciences, and demanded that the education of Muslims be limited to religious books. Initially Sir Syed was also inclined to this point of view but, following his gradual transformation during the 1850s, he rejected this view and challenged his contemporaries.


In Tahzib-ul-Akhlaq, he writes: “Yes, if the Mussulman be a true warrior and thinks his religion correct, then let him come fearlessly to the battleground and do unto Western knowledge and modern research what his forefathers did to Greek philosophy. Only then shall our religious books be of any real use. Mere parroting and praising ourselves will not do.” (“Apnay moon mian mithoo kahney say koee faida nahin”)



In his mind, the way forward was clear: Indian Muslims must learn the English language, practice the scientific method, accept that physical phenomena are explainable by physics only, and support British imperial rule against the rule of Mughals (who had by then sunk into decadence and depravity). This last piece of advice made him a target of bitter ridicule by secular nationalists such as Jamaluddin Afghani.//


//In the battle for Pakistan’s soul, Sir Syed’s rational approach ultimately lost out and the Allama’s call on emotive reasoning won. Iqbal said what people wanted to hear — and his genius lay in crafting it with beautifully chosen words. Unfortunately, his prescriptions for reconstructing society cannot help us in digging ourselves out of a hole.//

காந்தியின் மீது கல்லெறிதல்

சமீபத்தில் படித்தவைகளில் காந்தி ஒரே விதமான கருத்து மத ரீதியாக முற்றிலும் எதிர் நிலைகளில் இருப்பவர்களால் பரப்ப பட்டது.

”காந்தி சாதியை ஆதரித்தார். அவர் ஒர் சாதி வெறியர்”

இதே விதமான குற்றசாட்டு பாரதியாரை நோக்கியும் வீசப்படுகிறது.

 

இவர்களின் மீது வீசப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரமாக காட்டபடுவது இவர்கள் பயன்படுத்திய வர்ணாசிரமம் என்ற வார்த்தைகளின் அடிப்படையில். ஆனால் வர்ணாசிரமம் எனும் சொல் பழைய நூட்களில் முற்றிலும் வேறான நிலையில் பயன்படுத்த பட்டது. இப்போதைய சாதி எனும் பொருளில் அல்ல. கீதையை அதன் உண்மையான பொருளில் வாசிப்பவர்களுக்கு மனு நீதியில் சொல்லப்பட்ட திரிக்கபட்ட வர்ணாசிரமத்தில் உள்ள  முரண் வெளிப்படையாக தெரியும்.

 

    • கீதையில் விளக்கப்படும் வர்ணாசிரமம் வேறு இப்போதய சாதி வேறு . (மனு நீதி முதற் கொண்டு)
    • குலத்தொழிலும், பிறப்பின் அடிப்படையிலான சாதியும் ஒழிக்க பட வேண்டும்.
    • வேலையை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்தலும் ஒழிய வேண்டும்.

      http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html

 

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் சில சமூகத்தினரை இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே சமூகத்தை முழுமையாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.


DSC02078//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //


//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”
சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//


//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//


//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

--http://www.jeyamohan.in/?p=4103

 

[படம்: பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.
http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html]

 

சாதியின் இன்றைய நிலை

    • மக்களிடையே உருவாக்க படும் பரம்பரை பெருமை எனும் மந்தை குணமே இன்றைய சாதி நிலமைக்கு முதற் காரணமாக இருக்கிறது.
      • பரம்பரை பரம்பரையாக சிறுமை படுத்த பட்ட மக்கள், தங்களுக்கு அடிமையாக இருப்பதையே விரும்பும் தன் முனைப்பு
      • தங்களுடைய  தன் இன மக்கள் ”நாடாண்ட வம்சம்”, “கட்டியாண்ட வம்சம்” என்று போலி பெருமிதங்களின் மூலம் ஏற்றி விடப்படும் சாதி வெறி
    • பொருளாதார தேவைகள்
      • சில மக்களை அறியாமையில் ஆழ்த்தி அடிமை பணிகளில் ஈடுபடுத்தி பொருளாதார ரீதியாக சுரண்டுவது
      • பொருளாதார ரீதியாக முன்னேறிய தன் சாதி மக்களிடம் கிடைக்கும் பொருளாதார பலன்கள் எனும் நம்பிக்கை
    • திரிக்கப்பட்ட மத நம்பிக்கைகள்

      http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post.html

 

21ம் நூற்றாண்டில் சங்கங்கள் இல்லாத சாதியே இல்லை எனும் நிலைமை உருவாகி விட்டது, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவு. ஒரு திறந்த சவால் என்னிடமிருந்து இன்றைய சாதி சங்க தலைவர்களில்,

  1. எத்தணை பேர் மனு நீதியை கேள்வி பட்டிருக்கிறார்கள்? (மனு நீதியின் மக்களை வகைப்படுத்தல் திரிக்கபட்டது)
  2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
  3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?
  4. எத்தணை பேர் அதனை ஏற்று கொள்கிறார்கள் ? (ஏனெனில் அதில் தவறாக கூறப்பட்ட பிரிவு மக்கள் கூட சாதி வெறியில் முன்னணியில் இருக்கின்றனர் !!!)

 

திரிக்கப்பட்ட வர்ணாசிரமம் மட்டுமே சாதிக்கான காரணமாக இருப்பது 21ம் நூற்றாண்டில் காலாவதியாகி விட்டது. பொருளாதார ரீதியான காரணம் பூதாகரமாக இருக்கிறது.  நோய்க்கான காரணம் ஒன்றாக இருக்க நாம் தவறான சிகிச்சை செய்து வருகிறோம் என்பதே சாதி சங்கங்கள் பெருகி இருக்கிறது என்பதற்கான காரணங்கள்.

 

காந்தியும், பாரதியும் குறை சொல்லும் முன்னர் அவர்களின் வாழ்க்கை, வாழ்ந்த சூழலையாவது தெரிந்து கொள்வதே அடிப்படை நேர்மை. இல்லையெனில் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை கோமாளியாகவே காட்டும்.

தாந்திரிகம், காந்தி, காமம்- விளக்கங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

தங்களுடைய காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகள் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு சில நண்பர்களின் எதிர் வினைகள் மிக மன வேதனையை ஏற்படுத்தியது.  தியானம், மனவலிமை, பிரம்மச்சரியம், புலனடக்கம் பற்றிய தவறான பரப்புரைகள் மூலம் விளக்கங்கள் குறைவான  இன்றைய காலகட்டத்தில் உள்ளோம் . அந்நண்பர்கள் புரிந்து கொண்டது இவ்வாறு தான் என எண்ணுகிறேன்.


1. தாந்திரீகம் உடலுறவை ஊக்க படுத்த கூடியது
2. காந்தி தனது பேத்தியுடன் உடலுறவு கொண்டார்
3. பிரேமானந்தாவை போன்ற போலி சாமியார்

 

எனக்கு தெரிந்த வகையில் விளக்க முற்படுகிறேன். உண்மை என்ன என்பதை மேலும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் போது காந்தி ஒரு பிரம்மச்சாரி என்பதையும், உடலுறவை முற்றிலும் தவிர்த்தவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். தியானம் & தாந்திரிகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்நிகழ்வை எதிர்க்கும் நண்பர்களுக்கு விளக்க வேண்டி ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.

 

  • தாந்திரீகத்தில் ஒரு வழி எல்லா பெண்களையும் தாயாக காணுதல். அதன் மூலம் உடலிச்சையை அகற்றுதல். (தாந்திரிகத்தில் மேலும் பல வழிகள் உள்ளன. காந்தி கடைபிடித்தது அவை அல்ல. அவை இங்கே பொருந்தி வரக் கூடியவை அல்ல.)
  • ஒரு மனிதன் தன் தாயின் உடலை முழு நிர்வாணமாக காண நேர்ந்தால் அது உடலிச்சையை தூண்டுமா ? அல்லது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா ? அல்லது பக்தியுடன் தொழ தோன்றுமா ?
  • காந்தியின் தாயார் உயிருடன் இருந்திருந்தால் தன் தாயுடனும் இதே வகையான சோதனையை மேற் கொண்டிருப்பார். உண்மையில் மற்ற பெண்களிலும் தாயையே கண்டார் என்பது தான் இங்கு அடிப்படையே

 

மேலும் மேற்கண்ட நிகழ்வை சரியான வகையில் புரிந்து கொண்டால், 

  1. தாந்திரிகம் எனபது ஒரு கருவி. அது உடலுறவை இயற்கையின் ஒரு பகுதி என தியானத்தின் கருவியாக உபயோக படுத்துகிறது. உடலுறவை வளர்ப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கொள்வதும் இல்லை. 
  2. காந்தி ஈடுபடுத்தி கொண்டது அக்னி பரிட்சை கூட இல்லை. நெருப்பாற்றில் நீந்துவது. தனது பேத்தியுடன் இவ்வாறு இருந்தது (ஆடையின்றி தாயின் அரவணைப்பில் இருந்தது போல) உடலுறவிற்காக இல்லை. காந்தி என்பதே ஒரு உடல் இல்லை. உடலை துறந்தவன் என்பதை உணர்த்துவதற்கு ஏற்படுத்திய வழி.
  3. காந்தி ஒரு மகாத்மா 

என்பது யாவரும் ஒப்பு கொள்வர்.

 

தாந்திரிகம் என்பது மேல் நிலை தியானம். அது தியானம் பற்றி அடிப்படை கூட அறியாத பொது மக்களுக்கு அறிவிக்க படுதல் இது போன்ற எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே தான் இந்நிகழ்வுகள் பெரும்பான்மை மக்களுக்கு அறிவிக்க படுவதில்லை. தாந்திரிகத்தில் விருப்பப்படுபவர்கள் மட்டுமே அறிந்து கொண்டுள்ளனர்.

காந்தியின் மேல் சுமத்தபடும் அரசியல் குற்றசாட்டு    இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்ட பட்டனர் என்பது. இவ்வகை குற்றசாட்டுகளுக்கு வரலாற்று அறிவு பெற்ற நீங்கள் விளக்குவதே சிறப்பானதாக இருக்கும்.

காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியமும், தாந்திரிகமும் பயிற்றுவிக்க பட்டதா ? இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் தாந்திரிகம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களா ?

 

தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.

பழந்தமிழ் அறிவியல் (http://www.tamilscience.co.cc/)