இந்திய அறிவியலின் உலக கொடை

[விவாதங்களின் தொடர்ச்சி 1, 2]

கிரகணம் போன்ற அரிய சோதிட அறிவியல் கண்டுபிடிப்புகள் கடவுள் நேரடியாக வந்து சோதிடர்களுக்கு உபதேசம் செய்து விட்டு போனதில்லை. சோதிடம் கற்று கொள்ளும் ஒவ்வொருவரும், விமர்சிப்பவர்களும் உண்மைகளை அறிய அதன் அடிப்படை அறிவியல் மூலாதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் விடயங்கள் மூட நம்பிக்கைகளை தவிர வேறெதயும் தரப்போவது இல்லை.

zero,  π = 3.1416, ட்ரிக்னாமெண்ட்ரி (sin, cos etc), square and cubic roots, புவி சுழற்சி,  கிரகணங்கள், கிரகங்கள் சூரிய சக்தியை எதிரொளிப்பது இவற்றை கண்டுபிடித்தது யார் ? இவர்களாலேயே சோதிடமும் வடிவமைக்க பட்டது.

With Kala-kriya Aryabhata turned to astronomy—in particular, treating planetary motion along the ecliptic. The topics include definitions of various units of time, eccentric and epicyclic models of planetary motion (see Hipparchus for earlier Greek models), planetary longitude corrections for different terrestrial locations, and a theory of “lords of the hours and days” (an astrological concept used for determining propitious times for action).

ஆர்யபட்டா, Bhāskara II கண்டுபிடித்த, பயன்படுத்திய கணித, அறிவியலின் தொகுப்பை பார்த்தால் உண்மையில் அதிர்ந்து போய் விடுவீர்கள். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு

 

பாஸ்கரரின் சூத்திரம்

image

In English, the multiples of 1000 are termed as thousand, million, billion, trillion, quadrillion etc. These terms were named recently in English, but Bhaskaracharya gave the terms for Numbers in multiples of ten, which are as follows:

Eka (1), dasha (10), shata (100), sahastra (1000),
ayuta (10000), laksha (100000), prayuta (10^6 = million), koti (10^7),
arbuda (10^8), abja (10^9=billion), kharva (10^10), nikharva (10^11),
mahapadma (10^12=trillion), Shankh (10^12), Jaladhi (10^14),
antya (10^15=quadrillion), Madhya (10^16) and parardha (10^17).

 

நன்றிகள் (References)

ஆர்யபட்டா -http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE

பிரம்மகுப்தர் - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D

Bhāskara II - http://en.wikipedia.org/wiki/Bh%C4%81skara_II,
http://scientistsinformation.blogspot.com/2009/09/bhaskara-ii-1114-1185.html

 

சகோதரி Mrs. The Analyst போன்றோருக்காக,

"Aryabhata I." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/37461/Aryabhata-I>.

"Brahmagupta." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/77073/Brahmagupta>.

"Bhāskara II." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/64067/Bhaskara-II>.

 

மேலும் பல விடயங்களை தெரிந்து கொள்ள தூண்டிய சகோதரி Mrs. The Analyst, தருமி ஆகியோரின் கேள்விகளுக்கு நன்றி.

தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும்

[சென்ற இடுகையிலுள்ள விவாதத்தின் தொடர்ச்சியாக கருதலாம்]

இப்போதெல்லாம் பழந்தமிழர் பயன்படுத்திய எல்லா விடயங்களையும் குறை சொன்னால் தான் பகுத்தறிவு வாதி என எளிதாக நிருவலாம் எனும் நினைக்க கூடிய கொடிய வைரஸ் தமிழர்கள் மத்தியில் பரவி வருகிறது. அவற்றில் ஒன்று தான் ”கிரகம்/கோள்” எனும் சொற்களின் பொருட்கள்

வார்த்தைகளின் சிதைவுகள்

தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் சிதைக்கப்பட்ட விதத்தை வைத்து இதனை விளக்கலாம்.

1. பழங்காலத்தில் தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் முற்றிலும் வேறான விதத்தில் பயன்பட்டு வத்தது. வினாடி இன்றைய SI அளவு முறையில் 2 நிமிடங்களுக்கும் அதிகமானது.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் Second எனும் அளவு முறை நடைமுறைக்கு வந்தது.
3. Second என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த வினாடி என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
4. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் உள்ளனர்.
5. நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நினைக்கும்: "பழந்தமிழர்கள் முட்டாள்கள் 1 வினாடிக்கு 2 நிமிடங்களாம் ?" !!!

இப்படி தான் ஆகிவிட்டது கிரகங்கள் எனும் வார்த்தையின் அர்த்தமும்

1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை வானியல் பொருட்கள் அனைத்தையும் குறிக்கும் பொருளில் பயன்பட்டு வத்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
3. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் சோதிடம் தவறு என உளறி கொண்டுள்ளனர்.

பிறகு சாயாகிரகங்கள் - ராகு, கேது பற்றிய விளக்கங்களை அடுத்த இடுகையில் பார்க்கலாம். இது மிக எளிமையான விடயம். “சாயா” என்பதன் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டாலே விளக்கங்கள் கிடைத்து விடும். பின்னூட்டத்தில் விளக்குவதின் மூலம் என்னுடைய நேரத்தை நீங்கள் மிச்சபடுத்தலாம்.

 

நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609085&format=print&edition_id=20060908

2 கண்ணிமை - 1 நொடி

2 கைநொடி - 1 மாத்திரை

2 மாத்திரை - 1 குரு

2 குரு - 1 உயிர்

2 உயிர் - 1சணிகம்

12 சணிகம் - 1 விநாடி

60 விநாடி - 1நாழிகை

2 1/2 நாழிகை - 1 ஒரை

3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் - 1 சாமம்

4 சாமம் - 1 பொழுது

2 பொழுது - 1 நாள்

திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)

[எதிர்வினை: இவ்விடுகைக்கு காரணமான தோழி தீபாவின் இடுகையை பார்வையிடவும்]

ஜாதகம் தவறல்ல. ஜாதகம் பார்க்கும் முறை தான் தவறு. ஒரு சிலர் சுய வைத்தியம் செய்வது போல சுய ஜாதக பொருத்தம் பார்க்கிறார்கள். இது மிக மிக தவறு.

இரண்டாவது ஜாதகம் பற்றிய மூட நம்பிக்கைகள்

1. 10 பொருத்தம் மட்டும் பார்ப்பது.
2. சில நட்சத்திரங்களை தாங்களாகவே ஒதுக்குவது.
3. செவ்வாய் தோசம், நாக தோசம் பற்றிய விதிவிலக்குகளை நிராகரிப்பது (தோசம் இல்லை என ஒத்து கொள்ள மறுப்பது)

 

பத்து பொருத்தம்

எவ்வளவு ஜாதக ஆராய்ச்சியாளர்கள் சொன்னாலும் சரி மக்கள் 10 பொருத்தம் மட்டுமே பார்க்கிறார்கள். ஆண் மற்றும் பெண் ஜாதகத்தை ஒன்றினைத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையில் 10 பொருத்தங்கள் மட்டுமே பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது சாதக அறிஞர்களுக்கு நன்றாக தெரியும்,
10 பொருத்தம் என்பது நட்சத்திரங்களை பொருத்தி பார்ப்பது. உதாரணமாக ஒருவர் புனர்பூசம் நட்சத்திரம் எனில் அவருக்கு மீதமுள்ள 5 நட்சத்திரங்கள் பொருந்தி வருகிறது.

http://www.chennaiiq.com/astrology/marriage_match_by_star_tamil.asp

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உலகத்தில் உள்ள அனைவருமே 27 நட்சத்திரங்களில் ஒன்று தான். எனவே  600 கோடி * 5 / 27  = 111 கோடி பேர் பொருந்தி வருவர். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் ?

 

எப்படி பார்க்க வேண்டும் ?

சாதக பொருத்தம் பார்ப்பது என்பது தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஆண் பெண் சாதகம் பார்ப்பது மட்டுமே. இதற்கு முன்னோட்டம் மட்டுமே 10 பொருத்தம்.  மேலை நாடுகளில் உள்ளது போல ஆணும் பெண்ணும் ஒன்றினைந்து சில காலம் தங்கி விட்டு பின் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நம் கலாசாரத்திற்கு ஒத்து வரகூடியது அல்ல. எனவே இம்மாதிரியான தருணங்களில் ஜாதகம் ஒரு அருமையான கருவியாக அமையும். உண்மையில் ஜாதகம் பார்ப்பதில் கீழ் காணும் சில விடயங்களை கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

1. ஆண் உண்மையில் ஆண்மை உடையவரா ?
2. ஆண் / பெண் ஒருபால் உறவில் ஆர்வம் உள்ளவரா?
3. ஆண் / பெண் திருமணத்தில் ஆர்வம் உள்ளதா?
4. பெண் உண்மையில் குழந்தை பெரும் அளவு கருப்ப பை உடையவரா ?
5. ஆணிற்கும் பெண்ணிற்குமான உடலுறவு எப்படி பட்டது (செக்ஸ் ஒத்துழைப்பு) ?
6. ஆண் பெண் மனப்பொருத்தம் எப்படி பட்டது ?
7. ஆண் பெண் எதிர் கால வாழ்க்கை எப்படி செல்லும் ?


ஆனால் எந்த சோதிடராவது ஒரு ஆண் ஆண்மையற்றவர் என கூறி சாதகத்தை நிராகரித்ததை கேள்வி பட்டது உண்டா ? இம்மாதிரியான விசயங்களை வெளியிடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வேறு விதமாக கூறுவர். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


என்னுடைய இரு நண்பர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே காதல் திருமணம் தான் நடக்கும் என்று நான் கணித்து கூறியது இன்று மிகச்சரியாக நடந்துள்ளது. சோதிடம் என்பது நம் முன்னோர்களின் ஒளிவிளக்கு. அதை நாம் தான் சரியான முறையில் பயன்படுத்தி உண்மை சோதியாக மாற்ற வேண்டும்.

காதலர்களின் ஏகாந்த தனிமை-கவிதை(Dating)

[காதலர்களின் ஏகாந்த தனிமை. மூல ஒளிப்பதிவு காணவும்.]

நிஜமாக நான் தானா? இங்கு உன் இடம் உள்ளேனா?
இதன் பெயர் தான் காதலா? ஏதோ விந்தையை பார்க்கின்றேன்
எவரோ எங்கோ நுழைந்து எல்லாம் செய்கின்றாரா?
பின்னால் பின்னால் வந்து என்னை தள்ளுகின்றாரா?

ஹரேஹரே ஹரேஹரே ராமா !
இங்கே எங்கே வந்தது இத்துணிவு
எவ்வளவு உஷாராக இருந்ததே இம்மனது ஏம்மா ?   [2 தடவை]

[நிஜமாக]

இவ்வயதினில் ஒவ்வொர் கணமும் ஒவ்வோர் வசந்தம்
என்மனதுக்கு ஒவ்வோர் க்‌ஷணமும் நீயே பிரபஞ்சம்
சமுத்திரமாய் அனுதினமும் பொங்கும் சந்தோசம்

அருகினில் சென்று கரங்களை கோர்த்து நடந்திட்ட தூரம் எவ்வளவு உண்டே
களைப்போ இன்றி கடந்திட்ட காலம் இவ்வளவு என நம்புவமோ ?

[நிஜமாக]

என் கனவு இங்கே நிஜமாக நிற்கின்றதே
என் பழமை இங்கே வெட்கமதை தருகின்றதே
உன் அருகாமை உல்லாசத்தை கொடுக்கின்றதே
கன்னத்தின் அருகே சென்றிற்ற உதடு நம் பரவசம் தொடங்கட்டுமே
பகலே எனினும் வின்மீனெல்லாம் உதயம் காணட்டுமே

[நிஜமாக]

[ஹரேஹரே 2 தடவை]

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=xA0sSwB3wyU) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

ஒரு தலை காதல் கவிதை (Feel My Love - காதலை உணர்வாயா)

என் அன்பில் கோபம் காணே என் அன்பில் துவேஷம் காணே
என் அன்பில் சாபம் காணே அன்பே Feel My Love
என் அன்பின் அளவை காணே என் அன்பின் ஆழம்  காணே
என் அன்பின் வேகம் காணே அழகே Feel My Love
என் அன்பின் மௌனம் காணே என் அன்பின் அர்த்தம் காணே
என் அன்பின் சூன்யம் காணே மறுப்போ வெறுப்போ ஏதோ Feel My Love

[என் அன்பில்]

 

நான் அளிக்கும் கடிதமெல்லாம் கிழித்தெறிந்து Feel My Love
நான் வழங்கும் பூவையெல்லாம் கீழெறிந்து Feel My Love
நான் எழுதும் கவிதையெல்லாம் பரிகசித்து Feel My Love
நான் செய்யும் சேஷ்டையெல்லாம் சீ யென்று Feel My Love

நீ என்னை விரும்பவில்லை என் மீது அன்புமில்லை
நீ என்னை நினைப்பதில்லை  என் பேச்சோ பிடிப்பதில்லை 
நீ இல்லை இல்லை என்ற போதும் எந்தன் அன்பில் நிஜமுண்டு Feel My Love

 

வெறுப்பாக முறைத்தாலும் விழியாலே Feel My Love
சினமாகி சுட்டாலும் நாவார Feel My Love
கசடென கடந்தாலும் காலாலே Feel My Love
விட்டு விலகி செல்லும் தடங்களிலே Feel My Love

வெறுப்பதிலே சோர்வடைந்தால், முறைப்பதிலே தளர்வடைந்தால்,
தடங்களிலே முடிவிருந்தால், சுடுவதிலே வலு இழந்தால்,  
இதற்கும் மேலே இதயம் என்று உனக்கொன்றிருந்தால் Feel My Love

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=udl5Q-RJl5U) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

ஹாலிவுட் இசையில் தமிழ் பாடல் (AR Rahman debuts)

 

இசையமைப்பாளர் AR ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படம் Couple’s Retreat. இதில் ஒரு தமிழ் பாடல் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலை கேட்க http://www.couplesretreatsoundtrack.com/ எனும் இணைய தளத்தில் Kuru Kuru Kan (Tamil) எனும் பாடலை தெரிவு செய்யவும். இப்பாடலின் மூலம் தமிழ் பாடலை Hollywood தரத்திலான இசையில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாடல் வரிகள் (நண்பர் Murali பின்னூட்டத்திற்கு பிறகு)

Kuru Kuru | AR Rahman (Tamil Lyrics with English Translation) | Listen

Thanks to Tina & http://www.rahmanism.com/2009/09/couples-retreat-lyrics-translation.html

Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale... (she won me)
Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale.. (she won me)

Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)

Siru siru pennilave.. (Will the girl like a small moon become my partner?)
En thunai avaalo..
Siru siru pennilave.. (Will the girl like a small moon satisfy my hunger?)
En pasi theerpalo..

Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)

 

இப்படத்திற்கான பாடல்களை இலண்டனிலும் லாஸ் ஏஞ்சல்சிலும் மூன்று மாதங்கள் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் யோகா + காமெடி + காதல் பற்றிய கதையை சொல்கிறது.

இந்த ஆல்பத்திலுள்ள சஜ்னா (when you cry I cry with you.. ) எனும் பாடலும் நன்றாக உள்ளது.

Couple’s Retreat Tracklist

  1. Na Na
  2. Kuru Kuru Kan (Tamil)
  3. Jason & Synthia Suite
  4. Sajna
  5. Tour of the Villas
  6. Meeting Marcel
  7. Itinerary
  8. Undress
  9. Sharks
  10. Luau by John O Brien
  11. Salvadore
  12. Intervention
  13. The Waterfall
  14. Animal Spirits
  15. Jason & Synthia Piano Theme

நன்றி AR ரஹ்மான் 

AR-Rahman_oscar_performance.jpg

Thanks: http://www.extramirchi.com/hotcelebs/ar_rahman/ar-rahmans-hollywood-debut-movie-couples-retreat/

புதிய பொன்னுலகம் அழைத்தால்

[தலைவியின் காதல் சுற்றத்தாரால் புரிந்து கொள்ளப் படாத போது தலைவனுக்கான அழைப்பு. மூல ஒளிப்பதிவு காணவும்.]

 

நீயெனவும் நானெனவும் வேறுவெறி  ல்லையே

                   செப்பினாலும் கேட்பரோ ஒருவரேனும்

நானே உன் நிழலல்லவா நீயே என் நிஜமல்லவா

                   ஒப்பு கொள்வரோ எப்போ தேனும்

விழிகள் மறை க்கின்ற சொப்(ப)னம், இப்போ தெதிரான நிஜமாய் தெரிந்தால்

அடக்க முடியாத அன்பு புதிய பொன் உலகாக அழைத்தால்

 

 

தடையை தாண்டி இதயம் சேர்ந்து மனதை எழுப்பிய உதயமே

வயதை காட்டி வணக்கம் கூறி பழக்கமாகிய காதலே

இது உண்மையே மறு ஜென்மமே இது புரியுமா இனியும் உன் மாயமா ?

[நீயெனவே ...]

வார்த்தை எனது; லயம் உனது; பாடலாகி வா பிரி யமே

போர் எனது வீரம் உனது எனை வெல்ல வா என்வீரனே

நீயே முடி வல்லவா உனை சேரவா? எனை காண வா என்னை சேர வா

[நீயெனவே ...]

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=6_JUt73Q8mY) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

நீ

காதலில் வெற்றியடைந்த காதலன் பாடும் பாடல்

 

நீயும் உன் சிரிப்பும் போதுமம்மா எந்நாளும்

          எவரும் என் நினைவில் வராரம்மா

நீயும் உன் அன்பும் போதுமம்மா என் கண்ணே

           இந்த ஜென்மம் வரமே ஆகுமம்மா

 

 

என்னுடைய உயிர் நீயே

நான் கண்ட கலை நீயே

என் பாடல் ஸ்ருதி நீயே

என் அன்பு கதை நீயே

என்நாளும் பெருகும் என் ஆனந்தமும் நீயேதான்

 

உன்னுடன் சொர்க்கமும் நிஜமே

உன்னுடன் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்

உன்னுடன் ஒவ்வொரு குரலும் திவ்ய சங்கீதம்

 

உன்னுடனே நான் முழுமை அடைவேன்

உன்னுடனே ஒவ்வொரு பொழுதும் சொர்க்கம்

உன்னுடனே  வாழ்வின் ஒவ்வொரு கணமும் சந்தோசம்

 

 

[இக்கவிதை தெலுங்கு பாடல் ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல்.

மொழிபெயர்ப்பில் உள்ள குறைகள் என்னையே சாரும். சுட்டி காட்டவும்]