மனோ தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனோ தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்

ஆதித்ய ஹ்ருதயம் என்பது என்ன ?

  • ஆதித்யா என்றால் சூரியன். ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். குறிப்பாக இதயத்திற்கும் மனதிற்கும் ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை
  • உலக நாயகனான ஆதித்யனின் இருதயமாகவும் போற்றப்படுகிறது. 

ஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரம்

  • சூட்சுமமான பல கருத்துக்கள் அடங்கிய இந்த ஸ்தோத்திரத்தை வெவ்வேறு அறிஞர்களின் கருத்தை ஆய்ந்து தொகுத்து பகிர்ந்துள்ளேன். மந்திரங்களும், விரிவான அர்த்தங்களும் கூகிள் டாக்ஸில் இச்சுட்டியில் உள்ளது.  மந்திரம் மட்டும் இங்கே உள்ளது.
  • பாடலை இங்கே கேட்கலாம். இந்த ஆடியோவில் ஆரம்ப துதியில் இருந்து முடிவு துதி வரை முழுமையாக உள்ளது.
  • “இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார். சூரிய பகவானின் பல்வேறு பெயர்களின் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன். 

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். ஹிந்து சூரிய வழிபாட்டு முறைகளில் முக்கியமானது அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம்.

இரகசியம் -1 


எல்லா வேத வரிகளும் இருவித அர்த்தங்களை கொண்டுள்ளன. 

  1. வெளிப்படையானது - சடங்குகள் சார்ந்தது, 
  2. உட்கருத்து - ஆத்ம போதத்திற்கானது
உதாரணமாக சூரியனை போற்றும் ஸப்த ஸப்தி எனும், சூரியனின் பதம் 7 குதிரைகள், 7 கதிர்கள் (VIBGYOR) மட்டும் குறிப்பதல்ல, மனித உடலில் உள்ள 7 மூலாதார சக்கரங்களையும் குறிக்கிறது.

அது போலவே,
  • அண்டத்தை படைத்து, காத்து, ஒடுக்கும் பரம்பொருள் பரமாத்மன். (மனித உடலிலும் அதுவே உள்ளது.)
  • அப்பரம்பொருளின் பிரகாச வடிவமே இவ்வுலகில் சூரியனாக வெளிப்படுகிறது. 
  • பரம்பொருளின் முழு வடிவையும் மனிதர்களால் பார்க்க இயலாததால் அகஸ்தியர் இராமரை சூரியனை வழிபட சொல்கிறார். 
  • எனவே இம்மந்திரம் சூரியனை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பரமாத்மனையும் வழிபடுகிறது.
ஆயுர்வேதம் உடம்பில் முதுகு தண்டில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகவும் அவை ஆன்மீக மையங்களாக செயல்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நவீன் ஆயுர்வேத மருத்துவர்கள் அவற்றை ஒவ்வொரு நிறத்தோடும், உறுப்போடும் தொடர்பு படுத்துகின்றனர். நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பை குணப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

A New Age conceptualisation of the chakras of Indian body culture and their positions in the human body
ColorChakraChakra locationAlleged function
RedFirst
Muladhara
Base of the spine, முதுகு தண்டின் அடிப்பகுதிGrounding and Survival
OrangeSecond
Svadhishthana
Lower abdomen, genitals, குறிEmotions, sexuality
YellowThird
Manipura
Solar plexus, நாபிPower, ego
The “accounting mind” that categorizes everything, assesses the pluses and minuses in life
GreenFourth
Anahata
Heart, இருதயம்Love, sense of responsibility
BlueFifth
Vishuddha
Throat, தொண்டைPhysical and spiritual communication
IndigoSixth
Vishuddha
Just above the center of the brow, middle of forehead
புருவ மத்தி
Forgiveness, compassion, understanding
VioletSeventh
Sahasrara
Crown of the head, உச்சிConnection with universal energies, transmission of ideas and information

புராணம்


தனித்தன்மை மிக்கவர் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.

மகத்தான மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால், அகிலமே பயனடையும் என்று கருதினார். அவர் தேர்வு செய்தது தான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.

ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது.

வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் உள்ளது.


இரகசியம் -2


ராம ராவண யுத்தம் மனித மனதிற்குள் உள்ள நல்ல மற்றும் தீய எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் ஆகும்.
  • ராமன் சிறந்த உள்ளத்திற்கான அடையாளம். 
  • இராவணன் என்பது பெண்களை தவறாக நடத்தும் எண்ணம்.

    தர்ம சாஸ்திரப்படி இத்தகைய பெரும் கொடிய செயல்களுக்கு தீர்வு இல்லை. தீய எண்ணங்களால் உருவாகும் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும்.

    மகிமைகள்

    ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
    1. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
    2. ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும்  அழிக்க வல்லது)
    3. ஜயாவஹம் (வெற்றி தருவது)
    4. ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
    5. அக்ஷயம் - அழிவற்றது பொங்கி பெருக கூடியது. Akṣayaṁ is the most important quality of the sun.
    6. பரமம் - மிகப்பெருமை கொண்டது
    7. சிவம் - மங்களம் தருவது
    8. ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது) blessing of all blessings
    9. ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
    10. சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
    11. ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
    12. உத்தமம் - சிறந்தது

    பலன்கள்

    • மனச்சோர்வையும். நோய்களையும் தீர்த்து, உடலை வச்ரம் போல் மாற்றும். 
    • எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள். மூன்று வேளை பாடம் செய்தார் என்றால் – எங்கேயும் அவருக்கு தோல்வியே ஆகாது. எந்த காரியத்திலும் தோல்வியாகாது. லௌகீக-சத்ருக்களும் நாசமாகி விடுவார்கள். அதோடு ஆன்மீக மார்க்கத்தில் வரும் சத்ருக்கள் – காமம், குரோதம், இத்தியாதி – அவைகளும் நாசமாகி விடும். 
    • கிரகபீடைகள் நீங்கும். ஆபத்துக் காலங்களிலும்எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும்.துன்பங்கள் தூள் தூளாகும். 
    • நினைத்த காரியம் நடந்து முடியும். தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும்.


    ஜோதிட ரீதியான பலன்கள்

    1. இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும். சூரிய தோஷம் நீங்கும். தொழுநோய் குணமாகும்
    2. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.
    3. கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
    4. ஆண் புத்திர பிராப்தி கிடைக்கும்.
    5. நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும். 
    6. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். அரசாங்க ஆதரவு உண்டாகும். அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும்.   பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும்.  ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.
    7. அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும். 
    8. அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும். 
    9. எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    வழிமுறை

    • அதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 
    • இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்! 
    • விரதமாக இருந்து சொல்வது மேலும் பயன் தரும். 
    • நீர் நிலைகள் சூரிய சக்தியை மென்மேலும் பிரதிபலிப்பதால், அவற்றின் அருகில் இருந்து நமஸ்கரிப்பது நல்ல பலன் தரும். 
    • ஆதித்ய ஹ்ருதயம் இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. 
    • இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. 
    • ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்! 
    • ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். 
    • அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும். 
    • முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும். பின்பு கணபதியை வணங்கவும். பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும். பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும். 
    • இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும். கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும். பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும். எனவே அதனை விலக்க வேண்டும். எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.

    வேறு வடிவிலான ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரங்கள்

    தமிழ்

    மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும்.

    சமஸ்கிருத்தில் படிக்க இயலாதவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும்.


    ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி!

    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
    இருள் நீக்கும் தந்தாய் போற்றி!


    தாயினும் பரிந்து சாலச்
    சகலரை அணைப்பாய் போற்றி!

    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
    துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

    தூயவர் இதயம் போலத்
    துலங்கிடும் ஒளியே போற்றி!

    தூரத்தே நெருப்பை வைத்து
    சாரத்தைத் தருவாய் போற்றி!


    – கண்ணதாசன்


    பவிஷ்யோத்தர புராணம்

    இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைவதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

    சுட்டிகள்

    இப்பதிவின் அணைத்து தகவல்களும், கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
    1. https://en.wikipedia.org/wiki/Adityahridayam 
    2. https://www.youtube.com/watch?v=-SakTUHIxek
    3. http://sthothramaalaa.blogspot.in
    4. http://www.manblunder.com/articlesview/aditya-hrudayam-introduction 
    5. https://www.hindugallery.com/devotional-songs/aditya-hrudayam/tamil/ 
    6. http://www.sanskritweb.net/sansdocs/aditya-hridayam.pdf 
    7. https://templesinindiainfo.com/aditya-hridayam-lyrics-in-tamil-and-english-with-meaning/ 
    8. http://stotraratna.sathyasaibababrotherhood.org/n3.htm
    9. http://rightmantra.com/?p=2646
    10. http://www.mazhalaigal.com/2010/february/20100229nbs_aditya-hrudayam.php#.Wnn5xyVuaaE 
    11. சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்
    12. ஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம்
    13. சூரிய வணக்கம்
    14. ஆதித்ய ஹ்ருதயம்.
    15. https://siththanarul.blogspot.in/2011/08/ 
    16. http://aanmeegachudar.blogspot.in/2013/12/blog-post_15.html 
    17. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1312 
    18. http://www.chakras.info/7-chakras/ 
    19. https://en.wikipedia.org/wiki/Chromotherapy
    20. https://docs.google.com/document/d/1fxDkseqRrSs2XqTTuSUBVvyN1hJTI5NqvwCTpC6zLVA/edit?usp=sharing

    இரண்டாவது உலகம் – செய்வினை (Schizophrenia)

    நாம் நம் இளமை காலங்களில், பார்வைக்கு இதமான இயற்கை எழில்கள் அமைந்ததும், நறுமண சுகந்தம் வீசுவதாகவும், சுவை தரக்கூடிய பண்டங்களுடையதும், இனிய இன்னிசையுடன், அப்சரஸ்களுடன் சல்லாபித்து இருக்க கூடிய சொர்கத்தை மண்ணுலகில் நிறுவக்கூடிய முயற்சியை செய்கிறோம்.

    முதுமை அடையும் போது அவற்றையே சொர்கத்திலும் அடையக்கூடிய முயற்சி செய்வதையே தனிமனித மற்றும் புனித கடமையாக கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொரு முறை தவறுகளை இழைக்கும்போதும் இச்சொர்கத்திற்கு நேர் எதிரான நரகத்திற்கு பயப்படுகிறோம்.

    இவ்வாறான முயற்சிகளாலான வாழ்க்கையில் நம் ஆழ்மனதானது உறக்கத்தின்போதும் கனவுலகில் அதே போன்ற சொர்கங்களையும், நரகங்களையும் உருவாக்கி மகிழ்கிறது. இவ்வாறான கனவுலகில் கூட நாம் நம்முடைய சுய அடையாளத்தை இழக்காமலேயே ஜீவிக்கிறோம். நம்மில் ஒரு சதவிகிதத்தினர் (இந்தியாவில் மட்டும் 1 கோடி பேர்) இவற்றிற்கு நேர் எதிரான ஒரு இரண்டாம் உலகத்தை நேரடியாகவே அனுபவிக்கின்றனர். அவர்களின் நனவுலகை நம்முடைய கனவுலகில் நுழைந்து பார்க்கும்முயற்சியே இது.

    உங்களது உலகம் தனிமையில் சோகத்தில் இருக்கும் தருணத்தில்ஆரம்பிக்கிறது. இனம் புரியாத யார் யாரோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திரும்ப திரும்ப திட்டுகின்றனர். தற்கொலை செய்து கொள் என குரல் மிரட்டுகிறது. பேய், பாம்பு போன்ற பயமுறுத்தும் உருவங்கள் திரும்ப திரும்ப தோன்றுகிறது, உங்களது அந்தரங்க பகுதிகளை உங்களது விருப்பதிற்கு மாறாக பார்ப்பது & தொடுவது போன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். தாங்க முடியாத நாற்றமும், உண்ணும் உணவில் விசம் அல்லது மலம் போன்றவை தட்டுபடுதல் போன்ற நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்தால் உங்களுடைய எதிர்வினை என்ன ?

    பிரச்சிணை என்னவெனில் இச்சதி செயல் புரிபவர்கள் நீங்கள் தனிமையில் இருக்கும் போது தான் அதிகம் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். இவற்றால் மிகக்கலவரமடையும் நீங்கள் உங்களுடன் இருக்கும் ஆத்மாத்மானவர்களுடன் இந்நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களால் தெளிவாக உணர முடிகிற இவற்றை, அவர்கள் ஆனால் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். 

    குரல்களும், தோற்றங்களும் அருகில் தோன்றுவதால் இவற்றை செய்வது உங்களை தெரிந்தவர் மட்டுமே. எனவே தான் நெருங்கியவர்களும் கூட சுய ஆதாயம் கருதி உங்களை துன்புறுத்துபவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது என்ற முடிவிற்கு வருகிறீர்கள்.

    எனவே அவர்களுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்க வேண்டி தடயத்தை கண்டுபிடித்து பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.  உங்களுக்கு கேட்கும் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள். அவற்றை பதிவு செய்வதில் தோல்வி அடையும் போது தான்சாதாரண மனிதர்களுக்கு அப்பாற் பட்ட ஒரு சக்தி வேலை செய்வதாக புரிந்து கொள்கிறீர்கள்.

    இது நீங்கள் நேரடியாக சிலரிடம் கேட்டும் கதைகளில் படித்தும்இருக்கும் செய்வினை, வசியம், சூன்யம் ஆகியவற்றிற்கு சமமாக இருக்கிறது அல்லது படித்த நாவலில் வரும் CIA, RAW போன்ற உளவுத்துறை கையாளும் மனத்தை கட்டுபடுத்தும் தொழில்நுட்பத்திற்குஒப்பாக இருக்கிறது.

    இவ்வாறு சமுதாய உறுப்பினர்கள் அணைவரும் கைவிட்டபின், மனிதனின் மிகப்பெரும் நம்பிக்கையான ஆன்மீகம் நோக்கி செல்கிறீர்கள். செய்வினைக்கு மாத கணக்கில் கோவிலில் ஹோமங்கள் செய்தோ, மசூதிகளில் தொழுகைகள் செய்தோ, சர்சுகளில் ஊழியம் செய்தோ நாட்களையும் பனத்தையும் செலவு செய்யும் போதும், மேலும் மேலும் குரல்களும், காட்சிகளும் அதிகரிக்கும் போது உங்களுடைய மிகப்பெரும் நம்பிக்கையும் சீர்குலைகிறது.

    எனவே இத்தொல்லைகள் தாங்க முடியாத அளவிற்கு போகும் போது, உங்களால் முழுவதும் நம்ப பட்டவர்கள் அணைவரும் கை விட்ட பின், சட்டம் ஒன்று தான் வழியாக படுகிறது.காவல்துறையினரிடம் ஒரு குழுவோ, அமைப்போ அல்லது உங்களது வீட்டில் உள்ளவர்களோ அல்லதுஉடன் பணி புரிவர்களோ அல்லது அருகில் வசிப்பவர்களோ உங்களை கொடுமை படுத்துவதாக புகார்செய்கிறீர்கள்.

    ஆனால் அவர்களோ உங்களின் புகாரை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். உங்களது பேற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தகவல் சொல்லி உங்களை ஒப்படைக்கின்றனர். உங்களைபெற்றோரோ/வாழ்க்கை துணையோ உங்களை திமிர் பிடித்தவர் என்றும் பிடிவாதகாரர் என்றும் பட்டம் கட்டி திட்டியும்/அடித்தும் வெறுப்பை  தொடர்ந்து ஏன் விதைத்தால் வேறு என்ன தான் செய்வது ?  எல்லோரும் உங்களை நக்கலாகபார்க்க ஆரம்பிக்கும் சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கிறது. “கிறுக்கு”, “பைத்தியம்”போன்ற வார்த்தைகள் சுற்றி உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாமல் பேச ஆரம்பிக்கிறார்கள்.

    இப்படி உங்கள் வாழ்க்கையே நரக உலகத்திற்கு இட்டு சென்றால்இதன் முடிவு என்னவாக இருக்கும் என நிணைக்கிறீர்கள் ?

    கனவுலகில் இருக்கும் நம்மால், நம் கனவை எளிதாக கலைத்து விட்டு எழுந்து விட முடிகிறது. ஆனால் உண்மையில் இம்மாதிரியான நனவுலகில் வாழும் மன பாதிப்புக்குள்ளானவர்களால் அவ்வாறு இயலுவதில்லை.

    மேலே பார்த்த சூழ்நிலை ஒரு வகை எடுத்துகாட்டு மட்டுமே. இதற்கு எதிர்மாறாக, நன்றாக கலகலவென பழகும் சிலர், தீடீரென்று தங்களுடன் நன்றாக பழகியவரின்குரல், உருவத்தை கூட மறந்து போதல், யாரிடமும் பழகாமல் தங்களை ஒரு அறையினல் ஒதுக்கி கொள்ளுதல், தங்களுடைய அன்றாட கடமைகளான பல் துலக்குதல், மலம் கழித்தல் போன்றவற்றை கூட செய்ய முணையாமல் இருப்பது, என ஒவ்வொரு புலன்களையும் உணரும் திறன் மூளைக்கு மழுங்குதல்போன்றவற்றிற்கு ஆளாகக்கூடும். இது இரண்டாவது வகை.

    வயிற்று வலியினால் தற்கொலை என பதியப்படும் பல வழக்குகள், செய்வினையால் குடும்பம் அழிந்தது என வருத்தப்படும் பல நிகழ்வுகள் என கூர்ந்து கவனித்துபார்த்தால், இந்நிகழ்வு உங்கள் கிராமத்தில் / பகுதியில் யாரேனும் ஒருவருக்கு நடந்ததாகதான் இருக்கும்.

    செய்வினை என தவறாக கருதப்படும் ஸ்கிட்ஸோஃபிர்னியா (Schizophrenia - மனப்பித்து)

    அறிகுறிகள்
    1. மனப்பிரமைகள் tactile, auditory, visual, olfactory and gustatory hallucinations, ஐந்து புலன்களையும் உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வு( பார்வை, கேட்கும்திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி), எடுத்துகாட்டுகளில் முதலாவது கூடுதல்உணர்வுகள் எனவும், இரண்டாவது குறை உணர்வு எனவும் கொள்ளலாம் positive and negative (or deficit) symptoms 
    2. திரிபுணர்வுப்பிணி (paranoid),
    3. பயங்கரமான மருட்சி (delusion) அல்லது
    4. ஒழுங்கில்லாத பேச்சும், சிந்தனையும் இவற்றுடன்
    5. சமூக வழக்கங்கள் மற்றும் பணி செய்யும் திறன் திரிதல்

    ஆகியவை ஸ்கிட்ஸோஃபிர்னியா(மனப்பித்து) எனும் மனதின் நோயின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

    • சிறுவயதில் மோசமான சூழ்நிலைகளை சந்தித்து இருப்பவர்கள் (மோசமான தாய்/ தந்தை/ சகோதரர்கள்/நெருங்கிய உறவினர்கள்), வன்முறைக்கு ஆளாக்கபட்டவர்கள், பாலியல் ரீதியில் துன்புறுத்தபட்டவர்கள்,எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், கடும் வறுமைக்குள்ளானவர்கள், இன துவேசத்திற்கு ஆளானவர்கள்,கொடுமையான இடங்களில் வசிப்பவர்கள் இவ்வகையில் பாதிக்கபட வாய்ப்பு அதிகம்.
    •  நகரத்தில்வாழ்பவர்களும், அதிகமாக நண்பர்களை கொண்டிராதவர்களும், எளிதாக புதியவர்களுடன் பழக தெரியாதவர்களாலும்,நம்பிக்கை துரோகத்தால் பாதிக்க பட்டவர்களுமே இவ்வகையில் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
    •  இவையல்லாமல்மரபணு காரணமாக பரம்பரை(தாய், தந்தை, தாத்தா, பாட்டி) வழியிலும் இந்நோயால் பாதிக்கபடவாய்ப்பு இருக்கிறது.
    • மகப்பேற்றின்போது ஏற்படும் கோளாறுகளும் குழந்தையை இந்நோய் தாக்க காரணம்.
    •  மெதாம்ஃபெடமைன் மற்றும் கொக்கெயின் போன்ற போதை பொருள்களும் உளப்பிணிகளுக்குக் காரணமாகும் என்று அறியப்பட்டுள்ளது. மது, கஞ்சா போன்றவையும் , தவறான மருந்து உட்கொள்தலும் இந்நோய் உருவாக காரணமாக அமையலாம்.


    ஆண்களிலும் பெண்களிலும் ஸ்கிசோஃப்ரினியாசம அளவிலேயே ஏற்படுகிறது; இதன் ஆரம்ப கட்டம் ஆண்களில் 20-28 வயதிலும் பெண்களில் 26-32 வயதிலுமாக உள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏற்படுவது என்பது அரிதானது, அதைப்போலவே நடுத்தர வயது மற்றும் முதிர்ந்த வயதுஆகியவற்றிலும்இது அரிதானது.

    மேலும் இந்த நோய் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து யாரை வேண்டுமானாலும் தாக்க கூடும். உதாரணமாக இராமானுஜம் (இவர் ஈரோட்டு சீனிவாசன் இராமானுஜம் அல்ல சென்னைகாரர்) எனும் மிகப்பெரிய இந்திய கணித மேதை இந்நோயினால் பாதிக்கப்பட்டு, சரியாக மருத்துவம்செய்யப்படாத காரணத்தால், இந்நோய் தொல்லை தாங்க முடியாமல், தனது 37 வயதிலேயே அதிகப்படியானமருந்துகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நோயிற்கு மருந்துகளும், திட்டமிட்ட மருத்துவமுறைகளும் உள்ளன என்பதும், இந்நோயை வெற்றி கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தவர்களும்இருக்கிறார்கள் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்.

    இந்நோயால் பாதிக்கப்பட்டும் அதிலிருந்து மீண்டு வந்து 1994 வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பெற்றவர் யு.எஸ் கணித மேதை திரு.ஜான் நேஷ் John Forbes Nash Jr . இவரை பற்றிய "எ ப்யூட்டி ஃபுல் மைன்ட்” ஸ்கிட்ஸோஃபிர்னியா பற்றி சரியாக சித்தரிக்கும் மிக அருமையான படம் (2001 வருடத்திற்கான ஆஸ்கார்விருது பெற்றது)

    Schizophrenia நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து குடும்ப உதவியினால் வாழ்க்கையையும் அமைத்து கொண்டு பல முக்கிய தமிழ் படைப்புகள் எழுதிய தமிழ் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.

    இந்தியர்களும், மனப்பித்தும்

    இந்தியர்களுக்கு இவ்விசயத்தில் நேர்மறை நன்மைகளும், எதிர்மறை தீமையும் உண்டு. மிகப்பெரிய எதிர்மறை சூழ்நிலை என்னவெனில் செய்வினை, சூன்யம், வசியம், மாந்திரீகம் என்ற பெயரில் நடக்கும் தவறான வழிகாட்டல்கள் தான். படித்தவர்களும், பண்பானவர்களும்கூட இந்த முறைக்கு பலியாவதில் இருந்து தடுக்க முடிவதில்லை.

    பாதிக்கபட்டவர் ஒருமுறை இவற்றை நம்ப ஆரம்பித்தால், அதிலிருந்து விடுபட்டு மனோ/மருத்துவ ரீதியான முறைக்கு கொண்டு வருவது மிகக்கடினமாகும். ஏனெனில் தங்களிடம் இப்பிரச்சிணைக்கு முழுமையான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்ப வைக்கின்றனர்.
    ஆனால் நோயாளிக்கு இவற்றில் தீர்வு கிடைக்காமல் கேள்வி கேட்கும்போது, மேலும் பணம் பறிப்பதற்காகவும், தன் பெயர் கெட்டு விட கூடாது என்பதற்காகவும் பாதிக்கபட்டவர்களிடம் தங்களது தோல்வியை வெளிகாட்டி கொள்ள இந்த மாந்திரீகர்கள் தயங்குவர். எனவே வித விதமான பெயரில் புதுப்புது ஹோமங்கள் செய்ய தான் முற்படுவர்.

    நோயாளிகள் தங்களது பிரச்சிணையின் உண்மை நிலையை புரிந்து கொள்வதே இந்நோயை தீர்க்க முக்கியமான விசயம். அப்போது தான் மருத்துவத்தின்அவசியத்தை புரிந்து கொண்டு சரியாக கடைபிடிப்பர்.

    இவ்வகை நோயாளிகள் அதிகம் பாதிக்கபடுவது தனிமையாலும், கைவிடபட்டுவிட்டோம்என்ற மனநிலையாலுமே ஆகும். இதை சரி செய்வதற்கு மாறாக வழிபாட்டு தலங்களில் விடப்படுகின்றனர். எனவே வீடுகளிலும், கோவில்களிலும், தர்காவிலும், சர்சுகளிலும் கட்டி போடப்பட்டுள்ள நோயாளிகள் மிக மோசமாக பாதிக்கபடுகின்றனர்.

    அவர்களுக்கு தேவை நமது ஆதரவும், அன்பான வார்த்தைகளும் தானே ஒழிய, வழிபாடு அளிக்கும் தனிமை அல்ல என்பதை முக்கியமாகஉணர வேண்டும்.

    மேற்கத்திய கலாசாரத்தைஒப்பிடும் போது இந்தியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகமான அம்சம் உதவி செய்யும் குடும்ப அமைப்பு ஆகும். சரியாகபுரிந்து கொள்ள வைக்கபட்டால் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு பெற்றோரும், வாழ்க்கை துணையும்உதவி செய்யவே விரும்புகின்றனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய நோயாளிகள்மிக விரைவில் குணமடையவும், குடும்ப வாழ்வை அமைத்து கொள்ளவும் உதவுகிறது.

    மருத்துவம்

    நோயாளிகளின் பிரச்சிணையை அவர்கள் கேட்கும் ஒலிகளையும், காட்சிகளையும் வெளிப்படுத்தும் போதே பெரும்பாலும் மற்றவர்களுக்கு தெரிவிக்க படுகிறது. இப்பிரமை என்பது பிரச்சிணையின் வெளிப்பாடு மட்டுமே. அதுவே முழுப்பிரச்சிணை அல்ல. இப்பிரமையை தீர்க்க அவை தோன்றிய மூல காரணத்தை மனதை ஆய்வு செய்து நீக்குவதன் மூலம் மட்டுமே நீக்க முடியும்.

    நோயாளிகளிடம் அவர்கள் உணர்வது வெறும் மன பிரமை மட்டுமே, அவை உண்மையல்ல என்று அறிவுரைகள்/விவாதங்கள் செய்வது பலனை அளிக்காது. அது எதிர்மறை தீமைகளை மட்டுமே விளைவிக்கும். எனவே நோயாளிகள் பிரமைகளின் மூலம் படும் துன்பத்தின் ஆழத்தை அவர்களுடன் உரையாடுவதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முயல வேண்டும். 

    இந்நோய் எவ்வளவு விரைவில் கண்டுபிடித்து கவனிக்க படுகிறதோ அவ்வளவுவிரைவில் குணமாக்க முடியும். இந்நோயை குணமாக்க மருந்துகளுடன் கூடிய கூட்டு மருத்துவம்நடைமுறைபடுத்த படுகிறது.
    • ஸ்கிசோஃப்ரினியாவுக்கான முதல் மருத்துவத் தெரிவு antipsychotic  ஆன்டிசைகோடிக் எனப்படும் உளப்பிணி எதிர் மருத்துவமாகும். இவை உளப்பிணியின் நேர்மறை அறிகுறிகளைக் குறைக்கலாம். பல உளப்பிணி எதிர்மருத்துவங்களும் அவற்றின் பிரதான விளைவை அளிக்க 7-14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்
    • ஸ்கிசோஃப்ரினியாசிகிச்சையில் உளவியல் மருத்துவமும் பெருமளவில் பரிந்துரைக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது.
    •  புரிதிறன் நடத்தை சிகிச்சை(cognitive behavior therapy) குறிப்பிட்ட அறிவு திறன் அறிகுறிகளை இலக்காக கொள்வதற்கும் அவற்றுடன் தொடர்புடைய சுய மதிப்பு, சமூகத்தில்செயலாற்றும் திறன் மற்றும் உட்பார்வை ஆகியவற்றை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
    • ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள ஒருதனி நபருக்கான சிகிச்சையில் அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை அல்லது கல்வி, குறைந்த பட்சமாக அந்த இடையூடு நீண்ட காலத்திற்கானதாக இருக்கும்போது, பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
    யாரிடம் உதவி கேட்கலாம்?
    schizophreniaக்குஎன்றே schizophrenia research and foundation of india எனும் அரசு சாரா நிறுவனம் 1984 ம் ஆண்டு  மனவியல் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டு சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்றது. இங்கே இலவசமாகவே மருத்துவ ஆலோசனையும் வழங்கி வருகின்றார்கள். மிக சிறந்த சேவையை முடிந்த அளவு கொடுக்கின்றார்கள்.

    மருத்துவமனையில் எப்போது சேர்க்க வேண்டும்?
    இந்நோய் அதிகம் பாதிக்கப்பட்ட சிலர் அபூர்வமாக சிலநேரங்களில் வன்முறையில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அல்லது தற்கொலை போன்றசெயல்களிலும் ஈடுபடலாம். 

    உதாரணமாக மும்பையில் தொடர் கொலைகளில் (9 பேர்) ஈடுபட்ட ராமன்ராகவ் Chronic paranoid schizophrenia நோயால்கடுமையாக பாதிக்கபட்டவர். அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு எஞ்சிய வாழ்நாள் முழுவதும்மன நோய் மருத்துவமனையில் கழித்தார்.

    மிகவும் தீவிரமான நோயாளிகளில்-அதாவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து நேரும் சாத்தியமிருந்தால் அவர்களை பலவந்தமாக மருத்துவ மனையில் சேர்ப்பது அவசியமாகலாம்; இருப்பினும், இவ்வாறு மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதும், அங்கே தங்கியிருக்கும் கால அளவும் தற்போது குறைந்து வருகிறது.

    References

    உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா - 2 ?

    வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதிலும் சிந்தணைகளின் விளக்கமும். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

    முதல் பகுதி: உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

    ”உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.“ என வெளியிட்டு இருந்தேன்.

    பதிவை பார்வையிட்ட 250 பேரில் ஒருவர் கூட தங்கள் அனுபவத்தை வெளியிட முன்வரவில்லை. ஆனால் இது நான் எதிர் பார்த்தது தான் எனவே தான் ”விருப்பமுள்ளவர்கள்” என்று கூறினேன். ஏனெனில் இது உங்கள் ஆழ்மனதிலுருந்த பல சிந்தணைகளை வெளி கொணர்ந்து இருக்கும். அவை பெரும்பாலும் மிக அந்தரங்கமானவையால் வெளியிடுவது சிரமமே.

    உங்கள் சிந்தணைகளின் படி நிலைகள்

    medi1

    நிலை 1:  (முதன் முறையாக செய்பவர்களுக்கு மட்டும்)

    இத்தியானம் ஒரு கேலிகூத்தை போல உணர்வீர்கள். இது ஒரு முட்டாள்தனம். 10 நிமிடங்களும் வீண் தான் இதற்கு பதிலாக ஒரு உருப்படியான வேலை செய்யலாம் என மனம் சொல்லும். நீங்கள் உங்களுக்குள் சொல்லி கொள்வீர்கள் ஒரு முறை செய்து தான் பார்க்கலாமே என்று.

    நிலை 2: (நிகழ்காலத்தை சிந்தித்தல்)

    நீங்கள் தியானத்தில் அமர்வதற்கு முன் 1 மணி நேரத்தில் நடைபெற்ற செயல்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். இது உங்களை பாதித்த செயல், அல்லது அறை, உடை, உடமைகள் பற்றியதாக இருக்கலாம்.

    இப்படியாக சிந்தணைகள் பின்னோக்கி போய் கொண்டிருக்கும். அதாவது முன் தினம், கடந்த வாரம் என்று.

    நிலை 3: ( அவமானங்கள், அபிலாசைகள், ஏக்கங்கள், திட்டங்கள்)

    இப்படியாக கடந்த காலத்தை பற்றிய எண்னங்களுடன் ’நீ’ங்கள் போராடிய பிறகு, உங்கள் மனம், நீங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் வந்து நிற்கும். இது உங்கள் மன நிலையை பொருத்து இனிமையானதாகவோ, துன்பமான சம்பவமாகவோ இருக்கலாம்.

    அந்த சம்பவத்தை  எவ்வாறு நீடிக்க செய்யலாம் (அ) மாற்றி அமைக்கலாம் என மனம் திட்டம் தீட்ட ஆரம்பிக்கும். இந்த வகையான மனிதர்களை உபயோகிக்கலாம்; இந்த அளவு பணம், காலம் செலவு செய்யலாம் என்பது போல.

    நிலை 4: (சிந்தணை நின்று போதல்)

    medi3

    (இந்த நிலை எல்லோரும் ஒரே முயற்சியில் அடைய முடியும் என சொல்ல இயலாது)

    இப்போது நீங்கள் சிந்திக்க ஏதுமில்லை என்று ஒரு கால கட்டம் வரும். நீங்கள் மிகுந்த சோர்வாக உணர்வீர்கள். தூக்கம் உங்களை தழுவும். வாழ்வில் என்றும் நீங்கள் காணாத அளவிற்கு சுகம் தருவதாக இருக்கும்.

     

    சரி இவற்றை செய்வதால் என்ன பயன் ?

    இது தான் உங்களுக்கான கேள்வி என கொள்ளலாம். இத்தியானத்தை 2 / 3 நாட்கள் தொடர்ந்து செய்தவர்கள் தாராளமாக தம் அனுபவத்தை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் ;-) இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய குறிப்பு இது தான். ”உங்களது மனம் சூப்பர் கணினியின் வேகத்திலிருந்து இமயமலையின் ஆழ்ந்த அமைதிக்கு செல்வது”

    நண்பர் Jawarlal

    “சிந்தனையைத் தொடர்ந்து கொண்டே இருங்கள், நாளா வட்டத்தில் மனம் நிச்சலனமாகி விடும் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். மணிக் கணக்கானாலும் மனசு ஓயாதிருப்பதுதான் பல வருஷங்களாக என் பிரச்சினை!”

    என குறிப்பிட்டு இருந்தார். இது ஒரு பொதுவான பிரச்சிணை தான்.

    நான் குறிப்பிட்டு இருந்தது போல உங்களது சிந்தணைகளை தாளில் குறிப்பிடுவது மிக மிக முக்கியமான விடயம். உங்களுக்கு தோன்றும் சிந்தணைகள் ஒரே விடயத்தை பற்றியதெனில் அதை சரி செய்ய / தீர்க்க வேண்டியது அவசியம் என தெரிகிறது.

    உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

     

    வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதில். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

    கேள்வி :

    //தியானம் என்பது இப்படி தான் செய்யனும் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றேன்!
    நான் செய்வதே தியானம் என்ற போதே தெரியவில்லையா!?//

    பதில்:

    தியானம் என்பது பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். தியானம் என்பது மன அறிவியல் ஆகும். இதை நம்மால் நிரூபிக்க முடியும். வால்பையனுக்கு நான் தியானத்தை நடைமுறையிலேயே உணர்த்த முடியும். உங்களை நீங்களே உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

    ஏனெனில் பிறவியிலுருந்தே கண்களை மூடி கொண்டு இருப்பவருக்கு முழு நிலவின் அருமையை விளக்குவது அவருக்கும், விளக்குபவருக்கும் துன்பம் தரும் செயல் அல்லவா?எளிமையான வழி: கண்களை திறவுங்கள். முழு நிலவு தாமாகவே தெரியும்.

    அதுபோலவே தியானம் செய்யுங்கள். அந்நேரத்திற்கும், மற்ற நேரத்திற்குமான வித்தியாசம் தாமாகவே தெரியும்.

    ramanar

    இரமணர் சொல்கிறார். “ஒருவன் கடவுளை தேட வேண்டிய அவசியமே இல்லை. ‘நான்’ என்பது என்ன என்பது பற்றி அறிந்தாலே போதும். மற்ற ஆன்மீக / உண்மை தேடல்களுக்கான எல்லா பதில்களும் கிடைத்து விடும்”

    நான் என்பது என்ன (உடலா / மனமா / உயிரா) ?

    [பகுத்தறிவு வாதிகளுக்கு இப்போதே ஒரு கேள்வி உதயமாகி இருக்கும்? மனம், உயிர் என்பது பொய் என கீழ் கண்டவற்றை செய்யுங்கள் உங்களுக்கே உண்மை தெரியும்]

    1. ஒரு அலாரம் டைப் செட்டரில் 10 நிமிடங்கள் அமைப்பை ஏற்படுத்தவும்
    2. நீங்கள் ஒரு தனி அறையில் (அ) தனிமையில் தளர்வாக, வசதியாக (உடம்பை சிரமப்படுத்தாத அளவிற்கு) அமருங்கள் / படுத்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அறை உங்களுடைய உடல், உடமைகள் பற்றி நீங்கள் பொருட்படுத்தாத அளவிற்கு இருக்க வேண்டும்.
    3. உங்கள் கண்களை மூடுங்கள்.
              இப்போது உங்கள் மனம் மிக மிக வேகமாக சூப்பர் கணினியை போல சிந்தணைகள் செய்யும்.
    4. இப்போது சில சிந்தணைகள் தோன்றும். அவற்றை பின் தொடருங்கள்.
    5. எந்த சிந்தணையையும் தடை செய்யாதீர்கள். (இதுவே மிக மிக முக்கியம்) எவ்வளவு தூய எண்ணங்களானுலும், தீய சிந்தணைகளானுலும் சரியே
    6. இவ்வாறு செய்யும் போது தூக்கம் வரும். தயவு செய்து தூங்க மட்டும் வேண்டாம் ;-)
    7. நடுவில் கண் விழிக்க நேர்ந்தால் கவலை பட வேண்டாம். இவ்வாறு எவ்வளவு நேரம் இருக்க முடிந்தது என்பதை  குறிப்பெடுத்து கொள்ளவும். மறுபடியும் முயற்சி செய்யவும்.
    8. கண்களை மூடிக்கொண்டு இருந்த போது  உங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும்,
      இத்தியானத்திற்கு பிறகு 15 நிமிடங்களுக்கு நீங்கள் செய்த செயல்களையும் வரிசை கிரமமாக ஒரு பேப்பரில் குறிப்பெடுத்து கொள்ளவும்.

    இவ்வளவு தான் முதற் கட்ட தியானம். உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் குறைந்த பட்சம் 3 படி நிலைகள் உள்ளன. அதை இத்தியானம் செய்பவர்களுக்கு தாமாகவே தெரியும்.

     

    இம்முதற் கட்ட நிலையை செய்தவர்களுக்கு தாமாகவே பல சந்தேகங்கள் தீர்ந்து விடும்.    உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.

    வாழ்த்துக்கள்.

    கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா ?

      krishna1 நண்பர் இளவரசி ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் முக்கிய பகுதிக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இதே கேள்வியை பலரும் கேட்டு கொண்டுள்ளனர். இப்பதிலை இவ்வனைவருக்கும் தரக்கூடிய வாய்ப்பாக கருதுகிறேன்.

      “ஒருவன் புலுக்கமாக இருக்கிறது என்று விசிறி வீசிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் விசிறி வீசுவது என்பது கடமை காற்று வருவது அதனுடைய பலன்,ஆகவே பலனை எதிர்பார்த்துதான் ஒருவன் தன் கடமையை செய்கிறான்

      ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற பதம் பலரால் தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. பகவான்  கடமை என்பதை இது போன்ற சிறு விடயங்களுக்கு சொல்லவில்லை. இங்கு கடமை என்பதை (essential actions) தான் குறிப்பிடுகிறார், சிலர் நினைப்பது போல் வேலையை(basic tasks) அல்ல.  அதேபோல பலன் என்பது தன் சொந்த ஆதாயங்களை, புலன் நிகர்ச்சியை(self interest) தான் குறிப்பிடுகிறார்; விளைவு(result) என்பதை குறிக்கவில்லை.

      ஒருவன் தன் அடிப்படை கடமையை செய்வதற்கு கூட அதன் மூலம் தனக்கு ஒரு இன்பம், சுகம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறு உதாரணமாக சிறு குழந்தைகளை பெற்றோர் காப்பாற்றுவதும், வயதான பெற்றோரை குழந்தைகள் காப்பாற்றுவதும் என்பதும் கடமை அதில் ஒரு பலனை எதிர்பார்ப்பது தவறானது அல்லவா?

      இரண்டாவது பலனை எதிர்பார்க்காதே என்ற சொல்லாடலுக்கு பலன் கிடைக்காது என்றோ, செய்வதற்கு முன் முறைபடுத்தாதே (plan) என்றோ பொருள் அல்ல. இந்த செயலை செய்வதனால் எனக்கு இந்த பலன் தான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் தவறானது என்று குறிப்பிடுகிறார்.

      திருமணம் என்பதை உடலின்பத்திற்காக என்ற நோக்கத்திற்காக மட்டும் ஒருவன்/ஒருத்தி அக்கடமையை செய்தால் அவன் மிகுந்த ஏமாற்றம் அடைவான்/ள் என்பது சந்தேகமில்லை. எதிர்பாராத பல பக்க விளைவுகளையும் (குடும்பம், குழந்தைகள்) சந்திக்க வேண்டியிருக்கும் (இது நகைச்சுவைக்காக :-)) )

    netaji1 அதே போல தான் பலருக்கும் பல உதவிகள் செய்திருந்தாலும் ஒருவரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று கவலை படுபவர்களை அதிகம் பார்த்திருப்போம். பிறருக்கு உதவி செய்வதில் கூட பலனை எதிர்பாராதீர்கள் என்று பகவான் கற்பிக்கிறார். பாரதியார், வ.உ.சி., சிவா, பகத்சிங், நேதாஜி போன்றோர்களை நினைத்து பாருங்கள்: இவர்களே உதாரண புருஷர்கள். இவர்கள் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு  ஏதேனும் சுய பலனை (ஆதாயங்களை) எதிர்பார்த்திருப்பார்களா ?

    ஒருவன் அடிமையாக இருப்பதற்கு மறுப்பது என்பது கூட ஒரு கடமை தான் (தனக்கு தானே செய்து கொள்வது). எனவே தான் தன் சொந்த புலன் ஆதாயங்களை கருதாது மேற்கூறிய தலைவர்கள் பாடுபட்டனர்.