உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா - 2 ?

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதிலும் சிந்தணைகளின் விளக்கமும். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

முதல் பகுதி: உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

”உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.“ என வெளியிட்டு இருந்தேன்.

பதிவை பார்வையிட்ட 250 பேரில் ஒருவர் கூட தங்கள் அனுபவத்தை வெளியிட முன்வரவில்லை. ஆனால் இது நான் எதிர் பார்த்தது தான் எனவே தான் ”விருப்பமுள்ளவர்கள்” என்று கூறினேன். ஏனெனில் இது உங்கள் ஆழ்மனதிலுருந்த பல சிந்தணைகளை வெளி கொணர்ந்து இருக்கும். அவை பெரும்பாலும் மிக அந்தரங்கமானவையால் வெளியிடுவது சிரமமே.

உங்கள் சிந்தணைகளின் படி நிலைகள்

medi1

நிலை 1:  (முதன் முறையாக செய்பவர்களுக்கு மட்டும்)

இத்தியானம் ஒரு கேலிகூத்தை போல உணர்வீர்கள். இது ஒரு முட்டாள்தனம். 10 நிமிடங்களும் வீண் தான் இதற்கு பதிலாக ஒரு உருப்படியான வேலை செய்யலாம் என மனம் சொல்லும். நீங்கள் உங்களுக்குள் சொல்லி கொள்வீர்கள் ஒரு முறை செய்து தான் பார்க்கலாமே என்று.

நிலை 2: (நிகழ்காலத்தை சிந்தித்தல்)

நீங்கள் தியானத்தில் அமர்வதற்கு முன் 1 மணி நேரத்தில் நடைபெற்ற செயல்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். இது உங்களை பாதித்த செயல், அல்லது அறை, உடை, உடமைகள் பற்றியதாக இருக்கலாம்.

இப்படியாக சிந்தணைகள் பின்னோக்கி போய் கொண்டிருக்கும். அதாவது முன் தினம், கடந்த வாரம் என்று.

நிலை 3: ( அவமானங்கள், அபிலாசைகள், ஏக்கங்கள், திட்டங்கள்)

இப்படியாக கடந்த காலத்தை பற்றிய எண்னங்களுடன் ’நீ’ங்கள் போராடிய பிறகு, உங்கள் மனம், நீங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் வந்து நிற்கும். இது உங்கள் மன நிலையை பொருத்து இனிமையானதாகவோ, துன்பமான சம்பவமாகவோ இருக்கலாம்.

அந்த சம்பவத்தை  எவ்வாறு நீடிக்க செய்யலாம் (அ) மாற்றி அமைக்கலாம் என மனம் திட்டம் தீட்ட ஆரம்பிக்கும். இந்த வகையான மனிதர்களை உபயோகிக்கலாம்; இந்த அளவு பணம், காலம் செலவு செய்யலாம் என்பது போல.

நிலை 4: (சிந்தணை நின்று போதல்)

medi3

(இந்த நிலை எல்லோரும் ஒரே முயற்சியில் அடைய முடியும் என சொல்ல இயலாது)

இப்போது நீங்கள் சிந்திக்க ஏதுமில்லை என்று ஒரு கால கட்டம் வரும். நீங்கள் மிகுந்த சோர்வாக உணர்வீர்கள். தூக்கம் உங்களை தழுவும். வாழ்வில் என்றும் நீங்கள் காணாத அளவிற்கு சுகம் தருவதாக இருக்கும்.

 

சரி இவற்றை செய்வதால் என்ன பயன் ?

இது தான் உங்களுக்கான கேள்வி என கொள்ளலாம். இத்தியானத்தை 2 / 3 நாட்கள் தொடர்ந்து செய்தவர்கள் தாராளமாக தம் அனுபவத்தை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் ;-) இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய குறிப்பு இது தான். ”உங்களது மனம் சூப்பர் கணினியின் வேகத்திலிருந்து இமயமலையின் ஆழ்ந்த அமைதிக்கு செல்வது”

நண்பர் Jawarlal

“சிந்தனையைத் தொடர்ந்து கொண்டே இருங்கள், நாளா வட்டத்தில் மனம் நிச்சலனமாகி விடும் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். மணிக் கணக்கானாலும் மனசு ஓயாதிருப்பதுதான் பல வருஷங்களாக என் பிரச்சினை!”

என குறிப்பிட்டு இருந்தார். இது ஒரு பொதுவான பிரச்சிணை தான்.

நான் குறிப்பிட்டு இருந்தது போல உங்களது சிந்தணைகளை தாளில் குறிப்பிடுவது மிக மிக முக்கியமான விடயம். உங்களுக்கு தோன்றும் சிந்தணைகள் ஒரே விடயத்தை பற்றியதெனில் அதை சரி செய்ய / தீர்க்க வேண்டியது அவசியம் என தெரிகிறது.

7 கருத்துகள்:

  1. ///ஈகரை தமிழ்:
    படிக்க மிகவும் நன்றாகத்தான் உள்ளது, முயற்சி செய்து பார்க்கிறேன். இதில் வெற்றிபெற்றால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் என்பது மட்டும் உறுதி!//

    இப்பின்னூட்டம் நண்பர் ஈகரை தமிழ் இட்டது. பதிவின் தொழில் நுட்ப காரணங்களால், பின்னூட்டம் வெளியிடுவதில் தவறு ஏற்பட்டுள்ளது.

    கருத்துக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது! ஒருவருமே முன்வராதது!

    எந்த இரு மனிதர்களுடைய அனுபவமுமே ஒரே மாதிரியாகவோ, ஒத்திசைந்துஇருக்க வேண்டியதோ இல்லை. அனுபவங்கள் உள்ளார்ந்து நிகழ்வது, தவிர ஒரு குறிப்பிட்ட அனுபவம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வர உதவுவது என்பது மட்டுமே, அதுவே முடிவானதாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

    தியானம், யோகம் என்பது ஒரு கருவி மட்டுமே. ஒவ்வொரு மனிதனும் அந்த கருவியை ஒரே மாதிரிக் கையாளுவதில்லை!

    பதிலளிநீக்கு
  3. //கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

    தியானம், யோகம் என்பது ஒரு கருவி மட்டுமே. ஒவ்வொரு மனிதனும் அந்த கருவியை ஒரே மாதிரிக் கையாளுவதில்லை! எந்த இரு மனிதர்களுடைய அனுபவமுமே ஒரே மாதிரியாகவோ, ஒத்திசைந்துஇருக்க வேண்டியதோ இல்லை.//


    சரியான கருத்து. நான் குறிப்பிட்டு இருந்தது step படிநிலைகள் / pattern மட்டும் தான்.

    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  4. செய்து பார்ப்பது என்று முடிவு பண்ணி படுத்துக் கொண்டு கண்ணை மூடி மனதில் ஓடும் எண்ணங்களை கவனிக்கத் துவங்கினேன்.
    ஏற்கனவே ஒரு crash course வாழ்க வளமுடன் குழுவிடம் பயிற்சி எடுத்திருந்ததால் கொஞ்சம் த்யானம் முயற்சி செய்து பார்த்த பழக்கம் உண்டு. மனசு ரொம்ப சங்கடப் படும் போது கொஞ்சம் த்யானம் முயற்சி செய்தது உண்டு.
    அதனால் எண்ண ஓட்டம் என் கவனித்தலை அறிந்து நின்று விட்டது. இந்த பதிவில் இருந்து போய் த்யானிக்க முயன்றதால் மனதில் மேலாக இருந்த தமிழ் மொழிக் கலப்பு எண்ணங்களை ஓட விட்டு பின் தொடர முயற்சி செய்தேன். கவனிப்பதால் எண்ணங்கள் சீராக செல்ல வில்லை. அப்படியே அட டா தூங்கி விட்டேன்.
    கொஞ்சம் கழித்து முழித்துக் கொண்டதும் மறுபடி முயற்சி செய்தேன். எண்ணங்களின் பயணம் இப்போது இன்னும் கொஞ்சம் பின்னோக்கி ஆனால் சீராக இல்லை. அட டா மறுபடியும் தூங்கி விட்டேன்.
    ஓன்று புரிந்தது. படுத்துக் கொண்டு செய்ய நான் லாயக்கில்லை.

    மறுபடி முயற்சி செய்து விட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. @virutcham
    முயற்சி செய்தமைக்கு நன்றி.

    //மனதில் மேலாக இருந்த தமிழ் மொழிக் கலப்பு எண்ணங்களை ஓட விட்டு பின் தொடர முயற்சி செய்தேன்.//
    கவனிப்பது என்பது வெறும் கவனித்தல் மட்டும் தான். எந்த ஒரு குறிப்பிட்ட எண்ணத்தையும் மனதில் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே பின் தொடராதீர்கள்.

    //கவனிப்பதால் எண்ணங்கள் சீராக செல்ல வில்லை.//
    எந்த எண்ணங்களையும் தடை செய்ய முயற்சி செய்யாதீர்கள். எந்த எண்ணமாக இருந்தாலும் வெளிவர அனுமதியிங்கள். (தவறோ, சரியோ)

    முக்கியமாக கவனிக்க வேண்டியது தோன்றிய எண்ணங்களை குறிப்பு எடுத்தல் தான்.

    //அட டா மறுபடியும் தூங்கி விட்டேன். படுத்துக் கொண்டு செய்ய நான் லாயக்கில்லை.//
    படுத்து கொண்டு செய்தால் நல்ல தூக்கம் வரும். தூக்கம் வராமல் மன அழுத்தத்தால் அவதி படும் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வது ;)

    பதிலளிநீக்கு
  6. இந்த முறை நின்று கொண்டு முயற்சி செய்தேன்.
    எண்ணங்களை கவனிப்பதால் எண்ணங்கள் சீராக இருப்பதில்லை. இது ஒரு விதத்தில் எனக்கு திருப்தி அளிக்கிறது. காரணம் நம் மனத்தில் வருத்தமான சிந்தனைகள் எழும் போது அது நம்மை பின்னோக்கி ஒரு கோர்வையாக அந்த எண்ணங்களுக்கு வலு சேர்த்து கழிவிரக்கம் கொள்ளச் செய்யும் எண்ணங்களாகவே தறி கெட்டு ஓடும். இது என் அனுபவம். ஆனால் இப்படி கவனிக்க முற்படும் போது இதே எண்ணங்கள் அதன் கோர்வையான எண்ணங்கள் என்று வலு சேர்த்துக் கொண்டு மேலும் மேலும் வருத்தமடியச் செய்யாமல் எண்ணம் ஒரு கட்டுப் பாட்டில் நின்று விடுகிறது.
    இப்போ கொஞ்சம் கொஞ்சமாக எண்ணங்களில் இருந்து விடுதலை. முற்றிலும் என்று சொல்லி விட முடியாது. எண்ணம் ஓடிக் கொண்டு இருக்கும் போது அது எங்கோ ஒரு தூரத்தில் இருந்து புறப்பட்டு வருவது போல இருந்து பின் மன குவியக் குவிய நான் எனக்குள் செல்வதை உணர்கிறேன்.
    பின் நான் எனக்குள் பார்கையில் என் பார்வை உள்ளேயும் ஒரு outer cover போன்ற ஒரு வெளித் தோற்றம் எனக்கு தெரிவது போல உணர்கிறேன்.
    சுவாமி ஓம்கார் பதிவில் த்யானம் செய்யும் போது ஒன்றுமே தெரியாது அல்லது நாம் எதுவுமே செய்யவில்லை என்றே நிலை என்பதே சரி என்று படித்தேன்.
    அது ஞாபகம் வந்து ஒரு சின்ன தயக்கம் அந்த நிலை தொடர. த்யானத்தை முடித்துக் கொண்டேன். முன்னே கூட, அதாவது ஒம்காரின் பதிவு படிப்பதற்கு வெகு காலம் முன்பு இதே மாதிரி நிலைக்கு வந்ததும் ஒரு தயக்கம் வந்து நிறுத்திவிடுவேன்.


    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  7. @virutcham
    //கவனிக்க முற்படும் போது இதே எண்ணங்கள் அதன் கோர்வையான எண்ணங்கள் என்று வலு சேர்த்துக் கொண்டு மேலும் மேலும் வருத்தமடியச் செய்யாமல் எண்ணம் ஒரு கட்டுப் பாட்டில் நின்று விடுகிறது.
    இப்போ கொஞ்சம் கொஞ்சமாக எண்ணங்களில் இருந்து விடுதலை.//

    முயற்சி சரியான திசையில் செல்வதாகவே தெரிகிறது.

    //எண்ணம் ஓடிக் கொண்டு இருக்கும் போது அது எங்கோ ஒரு தூரத்தில் இருந்து புறப்பட்டு வருவது போல இருந்து பின் மன குவியக் குவிய நான் எனக்குள் செல்வதை உணர்கிறேன்.//

    //பின் நான் எனக்குள் பார்கையில் என் பார்வை உள்ளேயும் ஒரு outer cover போன்ற ஒரு வெளித் தோற்றம் எனக்கு தெரிவது போல உணர்கிறேன்.//

    ஆம் நம் மனம் இரு பிளவாகும். அதாவது கவனிக்க படும் பொருள், கவனிக்கும் பொருள்.

    ஒரே சமயத்தில் பல்வேறு சிந்தணைகளை மனம் செய்வதால் முன்னோர்கள் மனிதர்களின் மனதை பைத்தியகாரனனின் நிலைக்கு ஒப்பாக சொல்வர். அதை மாற்றி நாம் இரு வேறு கூறுகளாக மாற்றுகிறோம்.

    இந்நிலை மிக முக்கியமானது. இதற்கு பிறகு கவனிக்கபடும் கூறானது விழிப்படைந்து அது செயலாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை எனும் நிலை ஏற்படும். இது உங்களுடைய வருத்தம் அல்லது துயரம் அல்லது மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் இருந்து வெளியேறிய பிறகு நடக்கும்.

    பிறகு கவனிக்கபடும் பொருள் இல்லையெனில் கவனிக்கும் பொருளிற்கான தேவையும் மறைந்து விடும். பிறகே சலனமற்ற மன நிலை ஏற்படும்.

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)