வலையுலக சாதிய பன்னாடைகள்

சாதி தேவை இல்லை என வலைப்பதிவில் எழுதும் போதே சாதியை வைத்தும் அதை ஒழிக்க போகிறேன் என்றும் வலையுலக கழிவறை கடையை திறந்து வியாபாரம் செய்யும் சில அறிவிஜீவிகளுக்கு சொறிந்து விட்டது போலாகும் என்பது தெரிந்தது தான். சகோ. பழமைபேசிக்கு நடந்த தனி மனித தாக்குதலுக்கு பிறகு தான்  நான் சாதி இல்லை எனும் பதிவுகளையே போட்டேன்.
ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை! (பழமைபேசி)
சாதி இழிவு முறைமை தேவையா ?
இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

சாதி - த்தூ! (பால முருகன்)

சாதியும் தனிமனித தாக்குதலும்(பால முருகன்)


இந்த முற்போக்கு சைக்கோக்களுக்கு சாதியம் எல்லா தளத்திலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது தானே அதை ஒழிக்க இந்த பன்னாடைகளின் தேவை நமக்கு இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு தளத்தில் இல்லையெனில் தாமாகவே உருவாக்கியும் விடுவர். ”முன்னதாக வந்து முன் வரிசையில் இருந்த குறிப்பிட்ட சாதியினரை எழ வைத்த முற்போக்கு பன்னாடை” எனும் பட்டம் கூட எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கலாம்!! (இந்த பிழைப்பிற்கு ?)
 
மனிதனை மனிதனாக பாருங்கள் என்று பார்க்க சொன்னால் சில பிறவிகளுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது?  அடுத்தவன் சட்டையையும் ஜட்டியையும் கழட்டி அவன் என்ன மதம் என்ன சாதி என்று பார்க்கும் காட்டு மிராண்டி தனம் எப்போது ஒழியும் ? பிரிவினையின் இன்னோரு முகம் எனக்கு   நேற்று காட்டியது. “அவரவர் தளத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்” என திருவாய் மலர்ந்தருளிய பதிவர், அவருடைய ஞான திருஷ்டியின் மூலம் என்னுடைய சாதியை கண்டறிந்து உள்ளார்.
சாத்திதூ என்று முதலில் பின்னூட்டமிட்டு துப்பியவர் தன் ஜாதிக்காக வால்பிடிப்பவர் என்பதை அவர் வலைபதிவில் கண்டுகொள்ளலாம்.

என்னுடைய சாதி எது என உங்களுக்கு எப்படி தெரியும் அமலன்? என்னுடைய சாதியை/இனத்தை உங்களை போல என் பெயரில் கூட நான் வைத்து கொள்ளவில்லையே ? முற்போக்கு யோக்கிய சிகாமணிகளின் இலட்சணம் இப்படி தான் இருக்கும் :)

இவருக்கு இருக்கும் ஞான திருஷ்டியை முன்வைத்து இந்திய அரசாங்கம் சாதி சான்றிதழ் இல்லாமல் திரியும் கோடிக்கணக்கான குறவர் குறத்தியர் போன்ற நாடோடிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்கிறேன். தவறாக கூறுவதற்கு அரசாங்கம் டின் கட்டினால் நான் பொறுப்பல்ல ;) அவருடைய கணிப்பின் நம்பகத்தன்மையெல்லாம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் :).
இன்றைய தினத்தில் நாம் சாதியம் வலிந்து திணிக்கபடுவதை எதிர்க்காவிட்டால் (எந்த இனவகை மக்களிடமும் சரி) வலைப்பதிவுலகம் சாதி நாற்றம் வீசும் இடமாக ஆகிவிடும் என்பதை அவரது பின்னூட்டம் நிரூபிக்கிறது.