சாதி இழிவு முறைமை தேவையா ?

வெளிப்படையான விவாதத்திற்கு தயார். சாதி உண்டு என்பவர்களிடமும் சரி. வர்ணம் தவறு என்பவர்களிடமும் சரி.
இன்றைய தினங்களில் வலைப்பதிவுகளில் வெளிப்படும் சாதி ரீதியான கருத்துக்கள் நாம் இன்னும் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது சாதி அழிக்கபட வேண்டும் என் நினைப்போரும் பார்பனியம் என்று எழுதுவதும் நான் ஒரு பார்ப்பனர் என்று தங்களை கூறி கொள்வோரும் பயத்தையே ஏற்படுத்துகின்றனர். பிரிவுகள் எல்ல மதத்திலும் உள்ளன. இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உட்பட. இவர்களுக்குள்ளும் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை ஏற்காத மன நிலையும் உள்ளது. சில சமயங்கள் வன்முறையும் நடக்கின்றன.
ஆனால் இந்தியர்களிடம் உள்ள சாதி எனும் விசத்தை கழுவினால், நம் நாட்டில் 70% மக்கள் (70 கோடி மக்கள்) எழுச்சி பெறுவார்கள். சரி மத ரீதியான விளக்கம் என்பதை பகவத் கீதையில் பார்ப்போம். [கவனிக்க இது கீதையை பற்றி பல ஞானிகள் முன்னமே எழுதிய கருத்துக்களின் அடிப்படையில்  என் தனிப்பட்ட புரிதல் மற்றும் செயல்முறை ஆகும்]

கீதை ”நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [ சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ ] என்று வகுத்துரைக்கிறது.

 • சத்வ குணம் [செம்மைத்தன்மை] கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும்

 • ராஜஸ குணம் [ செயலூக்கம்] கொண்டவர்கள் ஷத்ரியர்கள் என்றும்

 • தாமஸகுணம் [ ஒடுங்கும்தன்மை] கொண்டவர்கள் சூத்திரர்கள் என்றும்

 • ராஜஸ தாமஸ குணங்களின் கலவை வைசியர்கள் என்றெல்லாம் இந்நூல்களில் நாம் காண்கிறோம்.
கீதை சொல்வது இதை தான்:

 1. எவன் உண்மையை சத்தியத்தை, புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிவிக்கிறானோ அவனே பிராமணன்.

 2. எவன் மக்களை காக்க இராணுவ வீரனாகவோ, காவல் துறையிலோ, அரசிலோ வாழ்க்கையை அர்பணிக்கிறாணோ அவனே சத்ரியன்.

 3. எவன் எல்லா பொருள்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க பாடுபடுகிறானோ அவனே வைசியன்.

 4. எவன் தன் உதிரத்தை வியர்வையாக சிந்தி மக்களுக்கு உழைக்கிறானோ அவனே சூத்ரன்.

  உண்மையில் இவர்களுக்குள் ஏற்ற தாழ்வு என்பதே கிடையாது. (இவர்கள் எந்த நாடாலும், மதமானாலும், இப்போது கூறப்படும் சாதியானாலும்). கவனிக்க: பஞ்சமர்கள் எனும் பிரிவே ஆரம்பத்தில் இல்லை என்பது வெளிப்படை.  மோசடியாக ஒரு பிரிவை சேர்த்தது எப்படி ? அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது எப்படி ?
பகவத் கீதையின் அடிப்படையில் உதாரணமாக  காட்ட வெண்டுமானால் பிரம்மத்தை (அறிவை, உண்மையை, சத்தியத்தை) வெளிப்படுத்தும் ஐன்ஸ்டீன், அப்துல் கலாம், அண்ணாதுரை போன்ற அறிவாளிகள் தான் பிராமணர்கள். தன் மக்களை காக்க போரில் ஈடுபட்ட இந்திய வீரர்களானாலும் சரி, ஈராக்கிய வீரர்களானுலும் சரி, அமெரிக்க வீரர்களானலும் சரி (ஜார்ஜ் வாசிங்டன், காந்தி, மண்டேலா) சத்ரியர்கள் தான்.
[கவனிக்க: பகவத் கீதையில் மதம் என்ற வார்த்தையே இல்லை. இந்த இந்திய மக்களுக்கானது மட்டும் எனவும் இல்லை. அனைத்து மனிதர்களுக்குமாகவே வழங்கப்பட்டது.]
வர்ணமும் சாதியும் அடிக்கடியும் குழப்பிக்கொள்ளப்படும் கருத்துக்களாகும். சாதி, பிறப்பு அடிப்படையில் அமைந்தது; வர்ணமோ தொழிலை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகளை வர்ணத்தில் வகைப்படுத்தும்போது, வர்ணமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறதே தவிர, தன்னளவில் அது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இதை தவிர ”என் தந்தை இவர், என் பிறப்பால் எனக்கு இது வந்தது” எனக் கூறுபவர்கள் அறியாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பகவத் கீதையையே மாற்றுபவர்கள். பகவத் கீதை தத்துவம் இன்றும் ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. 

 1. அறிவியல் அறிஞர்கள் (பௌதீக, மனோ)-பிராமணர்கள்,

 2. வீரர்கள் & ஆட்சியர்கள் (இராணுவம்,உள்துறை)-சத்ரியர்கள்,

 3. தொழிலதிபர்கள்-வணிகர்,

 4. உழைப்பாளிகள்-சூத்ரர்
எனவே ஒவ்வொரு நாட்டிலும் படி நிலை உள்ளது.
பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பது என்ன ? ஒருவனின் பிறக்கும் போதே இருக்கும் மனநிலைக்கு ஏற்பவே தொழிலை ஏற்படுத்தி கொள்கிறார்கள். எனவே செயல்களின் அடிப்படையில் வர்ணம் கற்பிக்க பட வேண்டும் என்பது தானே ? இதைக் குழைத்து முன்னோர்களின் அடிப்படையில் சாதியை அமைத்தது தானே மிகப்பெரிய தவறு ? இது தானே இன்று இத்தர்மமே அழியக்கூடிய நிலையில் இருப்பதற்கு காரணம்? இன்றைய் சூழ்நிலையில் இத்தர்மம் இரு தாக்குதல்களை எதிர் நோக்குகிறது.

 1. கண்மூடி தனமாக வெறும் உயிரற்ற சடங்குகளை பின்பற்றி மதத்தின் பெயராலேயே அதை அழிப்போர்.

 2. குருட்டுதனமான சடங்குகளை வைத்து அதன் பின் உள்ள அறிவியலையும் பகுத்தறிவின் பெயரால் ஏற்க மறுப்போர்.
இவ்விருவகை பிரிவினரால் இந்தியர்களுக்கு எவ்வகை நட்டமும் இல்லை. ஆனால் இந்தியர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னே கண்டுபிடித்த  அற்புதமான செயல்முறைகளை உலகத்தினர் இழந்து விடுவர். அவ்வளவு தான்.

நண்பர்களே பின்னூட்ட மட்டறுப்பு நீக்கபட்டுள்ளது. கருத்துக்கள் பரிமாறுவதற்கு முன் தயவு செய்து பகவத் கீதை, வர்ணம், சாதி என்பவை பற்றி தயவு செய்து தேடி படித்து கொள்ளுங்கள். ஏனெனில் நம் மனமாகிய கோப்பை ஏற்கனவே நிரம்பி இருந்தால் அவற்றில் பகிரவதற்கு ஏதுமில்லை.

கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -ஜெயமோகன்
கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2-ஜெயமோகன்

33 கருத்துகள்:

 1. அருமையான விளக்கம்.
  தொழிலை அடிப்படையாக கொண்டது தான் வர்ணம். அது மிகத் தெளிவாக மனுசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பிறப்பினால் வர்ணத்தை நிர்ணயிக்க முடியாது. அப்படி எந்த நூலிலும் சொல்லவில்லை. அது போல வர்ணங்களில் ஏற்றத் தாழ்வு கிடையாது. இந்து சமயமே இல்லாத நாடுகளில் கூட தொழில் அடிப்படையில் வகைப்படுத்துதல் இருந்து கொண்டு தான் வருகிறது.

  spiritual community, lawyer community, doctor community, students community, media, என பல்வேறு வகையில் தொழிலின் அடிப்படையில் வர்ணத்தின் அடிப்படையில் வகைப்படுத்திகொண்டு தான் இருக்கின்றன.

  இதற்கு மாறாக முதலியார் சங்கம், வன்னியர் சங்கம், தேவர் சங்கம், தலித் சங்கம் என்று அந்த காலத்தில் எதுவுமே கிடையாது. இது அரசியல் காரணங்களுக்காக,ஏதாவது ஒரு வகையில் மக்களை ஒன்று திரட்ட அரசியல் சூதாட்டக்காரர்கள்/ஆங்கிலேயர்கள் பின்னிய வலை.

  நீங்கள் சொல்லும் விஷயங்களை ஒப்புக்கொள்ளும் அல்லது ஆராயும் மனநிலைமையில் இப்பொழுதிருக்கும் தாலிபான் பெரியாரிஸ்டுகள்(குழல் அவர்களிடம் கடன் வாங்கிய வார்த்தை) இல்லை.

  இன்னும் ஒரு மேட்டர் சபர்,

  கீதையில் முதல் அத்தியாயத்தில், அர்ஜூனன், கிருஷ்ணனிடம்
  "உறவினர்களுக்குள்ளேயே நடக்கும் போரானது, யார் தோல்வி அடைந்தாலும் அந்தக் குல ஆடவர்கள் மரண்மடைந்திருப்பர். ஆகையால், வர்ணக் கலப்பு ஏற்படும். குலநாசம் ஏற்பட்டால் மனுதர்மத்தை மீறுவது போல் ஆகாதா?" என்று கேள்வி எழுப்புவார். இதில் வரும் குலநாசம் என்பது என்ன?

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. //Gita's divisions are based on natural characters - that sathva, raja, etc. Such natural characters come by births only. Genes.

  நண்பரே என்ன சொல்ல வருகிறீர்கள் தந்தை நல்லவர் என்றால் மகன் நல்லவர்; தந்தை கெட்டவர் எனில் மகனும் கெட்டவர் என்றா?

  [கீதை கூறி இருப்பது குண நலன்கள்.]

  பதிலளிநீக்கு
 6. //You may claim you treat the scavenger who cleanses your latrine as your equal. Will people share food on the same dining table with that fellow?//


  நண்பரே நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் செய்வதில்லையா என்ன ?

  பதிலளிநீக்கு
 7. //the Gita divisions being based on births,//
  //You have asked the readers to read Gita before writing their feedback.//

  கீதை இப்படி சொல்லவில்லை. கீதையில் எத்தணை முறை சத்வ,ரஜோ, குணங்கள் பற்றி விளக்கப்பட்டு இருக்கிறது படித்தால் தானே தெரியும்.

  //My feedback is based on your explanation.//
  //If one cant write his feedback on reading you, then what is the use of your blogpost?//

  இல்லை எனது இடுகையை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை. புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யவில்லை.

  உங்களது கோப்பை ஏற்கனவே நிரம்பியுள்ளது நண்பரே.

  பதிலளிநீக்கு
 8. கீதை கூறி இருப்பது ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ளக் கூடிய [நல்ல, சம, தீய போன்ற] மன நிலைகள் அவன் பிறக்கும் போதே நிர்ணயிக்கபட்டுள்ளது என்பதே. Gene - தாய், தந்தையை பொருத்ததல்ல.
  இதைதானே நான் இடுகை முழுவதும் கூறி இருந்தேன் ?

  பதிலளிநீக்கு
 9. நண்பரே
  1. நம்முடைய தொழிலில்/ வேலையில் புது முயற்சி செய்யும் போது நாம் யார் ?
  2. சுற்றி இருக்கும் சமூகத்தின் நிலையின் பேரில் பதிவெழுதும் போது நாம் யார் ?
  3. கடைகளில் பொருள்களை விற்கும் போதும் வாங்கும் போதும் நாம் யார்?
  4. முகச்சவரம் செய்யும் போது நாம் யார் ?
  5. காலை கடன்களை கழிக்கும் போதும் நம்முடைய கழிவறையை தூய்மை செய்யும் போதும் நாம் யார் ?

  இப்போது ஒரு மனிதனே அனைத்து வர்ணங்களின் கலவையாகி விட்டான்.[ஆனால் ஆழ் மன நிலைகளுக்கேற்ப பிரதான தொழில் அமையும்]

  இச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றிய அமலனின் கேள்வி வருத்தப்பட வைக்கிறது. :(

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. //Gunanalangkal.

  How do you translate them into Tamil>//
  ஏங்க குணம் என்பதை தமிழில் மொழிபெயர்க்கணுமா ?
  அப்ப அது தமிழ் வார்த்தை இல்லையா ? :))
  இல்லை நலன் என்பதை மொழிபெயர்க்கணுமா ?

  "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
  மிகை நாடி மிக்கக் கொளல்".

  பதிலளிநீக்கு
 18. //Europe gave up this theory//

  ஏங்க ஈரோப் தியரி அண்டார்டிகா தியரி கதையெல்லாம் வேண்டாம். இங்க தாய் தந்தையின் (gene) அடிப்படையில் குழந்தைக்கு புத்தியும் குணமும் வருகிறது என எப்படி சொல்கிறீர்கள்? அதை நீங்கள் முதலில் நிரூபியுங்கள் ? நான் திரும்ப கூறுகிறேன் பகவத் கீதை அப்படி சொல்லவில்லை. அல்லது அந்த வரிகளை எனக்கு காட்டுங்கள். நான் புரிந்து கொள்கிறேன்.

  சேற்றிலும் செந்தாமரை முளைக்கும் சிப்பிக்குள் முத்து போன்றவை தான் இந்திய தொன்மை.

  பதிலளிநீக்கு
 19. //Not from parents. But character traits are fixed in genes. In other words, congental.//
  ஏங்க ஜீன் என்ற வார்த்தையை பதிவிலே எப்பங்க பயன்படுத்தி இருக்கிறேன்?
  திரும்ப திரும்ப மனதிற்கும், ஜீனுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி போட்டு குழப்பாதிங்க.
  நீங்க ஜீன்(தாய், தந்தை, மூதாதையர்) மணம் இவற்றை போட்டு குழப்பி கொள்கிற வரைக்கும் என்னால் என்ன விளக்கம் சொல்ல முடியும் ?

  //Who cares what you and I do in our personal lives? Or, do we care it ourselves here?//
  இந்து மதம் சொல்றதே இது ஒன்னு தாங்க அடிப்படை. ”ஊரை திருத்துவதற்கு முன் உன்னை திருத்தி கொள்.” எனவே நீங்க கேட்டதுக்கு நான் அப்படி தான் பதில் சொல்ல முடியும். ”காலை கடன்களை கழிக்கும் போதும் நம்முடைய கழிவறையை தூய்மை செய்யும் போதும் நாம் யார் ?” இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும் ஐயா.

  //Mine is not full//
  இது எப்பங்க நான் சொன்னது ? நான் சொன்னது நீங்க ஒரு முடிவை எற்கனவே எடுத்து விட்டீர்கள். இடுகையில் இருப்பது எதையும் படிக்கவில்லை. (இப்போது பின்னூட்டங்களும் கூட)

  //What you say is under debate here.
  சரிதாங்க. நான் தான் பதிவிலேயே இரண்டு விதமான ஆட்களிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டேனே !

  பதிலளிநீக்கு
 20. //Let me conclude myself now://

  nowஆ நீங்க பின்னூடம் போட ஆரம்பிக்கும் போதே இதை தான் முடிவெடுத்து விட்டீர்கள் என்பது தெரிஞ்சு போச்சுங்க. எனவே தான் சொன்னேன். உங்க கோப்பை நிரம்பி இருக்கிறது.

  பழைய இந்தியர்களுக்கு மதத்தை தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லைன்னு சொன்னா உங்க ஆளுங்களே சிரிப்பாங்க. அப்படியே இந்த விசயத்தை பாருங்க. இந்திய அறிவியலின் உலக கொடை: http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_31.html

  இன்னும், அழியாத ஓவியங்கள், சிற்பகலை, கட்டட கலை, வாணிபம், வாசனை திரவியங்கள், மருத்துவம்,கணிதம், வானியல் என சொல்லி கொண்டே போகலாம். இவையெல்லாம் குறிப்பிட்ட மக்கள் மட்டுமாய்யா செஞ்சது ?

  கும்மி அடிப்பது தப்பில்லை. ஆனால் சரித்திரம் சரியா படிச்சிட்டு கும்மி அடிக்கனும் சரிதானே ? :))

  பதிலளிநீக்கு
 21. இன்னும் ஒரு விடயம் இங்க சித்தர்கள்னு அறிவாளிகள் இருந்தாங்க. இவங்க செய்யாத வித்தையே கிடையாது. இரசவாதம், மருத்துவம், மனோ விஞ்ஞானம் மேலும் பல.

  இவர்கள் சாதியையும் ஏன் மதத்தையுமே எதிர்த்தவர்கள் !!!

  இவர்கள் எந்த அடக்குமுறையை கையாண்டார்கள் அல்லது யாருக்கு கற்று கொடுத்தார்கள் என்று சொன்னால் இந்தியர்களுக்கு உதவி கரமாக இருக்கும். :)

  பதிலளிநீக்கு
 22. @கபிலன்
  //வர்ணக் கலப்பு ஏற்படும்.//
  பிறப்பின் மூலம் சாதி என்பது அக்காலத்திலேயே இருந்தது. ஆனால் மகாபாரதமே பரம்பரை ரீதியான சாதியை தகர்க்கிறது. முழுதாக படித்தவர்களுக்கு தெரியும்.

  கவனியுங்கள் இதை அர்ச்சுனன் தான் கேட்கிறார். கிருஷ்னர் மறுக்கிறார். போர் புரிய சொல்கிறார். இதற்கு விளக்கமாக தான் வர்ணம் பரம்பரை அடிப்படையில் வருவதில்லை என சொல்கிறார்.

  மனு பற்றிய குறிப்பு இச்சூத்திரத்தில் இல்லை.

  பதிலளிநீக்கு
 23. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. //What does it mean நல்ல, சம, தீய போன்ற] மன நிலைகள் அவன் பிறக்கும் போதே நிர்ணயிக்கபட்டுள்ளது என்பதே.

  This means genes.//

  நண்பரே This doesnt mean genes. மணம் பிறக்கும் போதே நிர்ணயிக்க படுதல் முன்னோர் வழி அல்ல. முற்பிறவி பலன்கள் எனலாம். [கீதை கூறுவது இதை தான்]. சிலர் விதி, சோதிடகோள் பலன் எனவும் கூறுவர்.

  உதாரணமாக ஒரே தாய் தந்தைக்கு பிறந்து ஒரே சூழ்நிலையில் வளரும் இரட்டை குழந்தைகள் கூட கிரகிக்கும் திறன், வாழ்க்கை முறை வெவ்வேறாக இருப்பதை உணரலாம்.

  //I am sorry to find your closed mind, whereas you feel I have closed mind.//
  சந்தேகம் இப்போது தீர்ந்து விட்டதல்லவா ? விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன் நண்பரே. ஆனால் கேள்விகள் சரியான திசையில் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 25. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 26. கும்மி நல்லாத்தான் போகுது. நிறை தெரிஞ்சிக்க முடியுது.

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 27. //What were those acts that a brahmin did to make his eligible to read vedas; and those acts that a scavenger to make him eligible to clean toilets?//

  ஏங்க நான் எழுதியதை புரிஞ்சிகிட்டு தான் கேள்வி கேட்கிறீங்களா ?

  வேதம் படிப்பவன் பிராமணன் இல்லை. உண்மையை வெளிப்படுத்தும் அனைவரும் தான் பிராமணன். டாய்லெட் சுத்தம் செய்பவன் பஞ்சமன் இல்லை. உடலால் உழைப்பவர்கள் அனைவரும் சூத்ரர்.

  ஒரே மனிதன் எல்லா வகையான வர்ண வேலைகளையும் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவன் முற்பிறவியில் கற்று கொண்டவைகள், செயல்கள் இவற்றை பொருத்து இப்பிறவியின் மனநிலை ஏற்படுகிறது. மனநிலையை பொருத்து மனிதன் தொழிலையும் செயல்களையும் ஏறபடுத்தி கொள்கிறான்.

  செயல்களின் & தொழிலின் அடிப்படையில் மக்களை நிர்வகிக்கும் முறை எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சந்ததி மக்களுக்கு குறிப்பிட்ட வேலையை நிர்ணயித்த சாதி முறை தவறு.

  முடியலங்க. செக்கு மாடு மாதிரி திரும்ப திரும்ப ஒரே பதிலை சோல்ல வேண்டியது இருக்கு. உண்மையாலும் கண்ணை கட்டுது.

  கேள்வி கேட்பதற்கு முன் தயவு செய்து பதிவையும், பின்னூட்டங்களையும் படிங்கப்பா :)

  பதிலளிநீக்கு
 28. இப்போது சிலர் இந்த மாதிரி திரிக்க வாய்ப்பு இருக்கிறது. ”சூத்ரர்களாக மக்கள் கொடுமை படுத்த பட்டதற்கு அவர்கள் முற்பிறவியில் செய்த இழிசெயல்கள் தான் காரணம் என் சாதி வெறி பிடித்த சபரிநாதன் பதிவிட்டு உள்ளார்”

  ஏனெனில் கீதையையும், காந்தியையும் பாரதியையுமே அவர்கள் “வர்ணம்” என்பதை ஆதரித்தார்கள் என்பதற்காக ”சாதி” வெறியர்கள் என முத்திரை குத்தும் அறிவு ஜீவிகளை இணையத்தில் காண்கிறோம்.

  என் கருத்துக்களையும் உண்மையையும் நன்றாக கவனியுங்கள். நான் கூறி இருப்பது இதற்கு முற்றிலும் மாறானது. சாதியை சரி என நான் கூறவே இல்லை. மக்களை வகைப்படுத்தும் வர்ணத்தை பற்றி மட்டுமே கூறி உள்ளேன்.

  வரலாறு அடிப்படையில் விளக்க வேண்டுமானால் ஆரம்பத்தில் எல்லா பிரிவு மக்களும் எல்லா விதமான கல்வியும் பெற்று வர்ணம் மாறுதல் நடைபெற்று வந்துள்ளது. இடையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளில் குறிப்பிட்ட சந்ததியினர் குறிப்பிட்ட கல்வியும், வேலையையும் மட்டுமே செய்ய வேண்டும் எனவும், வேலைகளுக்குள் உயர்ந்தது என்றும் தாழ்ந்தது என்றும் பேதங்கள் உருவாயின. இவைதான் சாதி தோன்றலுக்கு அடிப்படை.

  இப்போது மக்களிடையே பேதங்களை உருவாக்கும் சாதியை அழிப்பது தான் இந்தியர்களுக்கு வேண்டிய தலையாய கடமை.

  பதிலளிநீக்கு
 29. @பிரபாகர்
  பிரபாகர் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி.

  @அமலன்
  எம்முயற்சியும் செய்யவில்லை எனில் பிறப்பின் குண நலன்கள் வழியே மணம் செல்லும். ஆனால் தியானம் போன்ற மன ஒருமைப்பாட்டு வழி முறைகள் மூலம். மணதின் பாதையை மாற்ற முடியும். ஒருவர் தன்னுடைய செயல்களையும் மாற்ற முடியும் என்பதும் குறிப்பிட பட்டுள்ளது.

  “முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்”

  பதிலளிநீக்கு
 30. :) புராணம் இதிகாசம் சுட்டிப் பேசுவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

  வருணம் பிறப்பு அடைப்படை அல்ல என்றால், கர்ணன் தொடையில் வண்டு துளைத்துச் சென்ற போதும் அவன் முனிவரை தாங்கிக் கொண்டதை வைத்து அவன் பலம் மிக்கவன், சத்திரியன் என்றே கதைச் சொன்னார்கள்.

  ராஜரிஷி என்றழைக்கப்பட்ட விஸ்வாமித்திரர் பிறப்பால் பிராமணன் இல்லை என்பதற்காக அவன் தவவலிமையே கேலி செய்யப்பட்டது.

  இவையும் புராணங்களில் இருப்பது தான், இதே புராணங்கள் பிறப்பின் அடிப்படையில் தான் சாதி இருப்பதாக அடித்தும் சொல்கின்றன.

  பிறப்பின் அடிப்படை இன்றி வேறு எந்த தகுதியில் ராவணன் பிராமணன் என்று சொல்லப்பட்டான் அவனை கொன்றதால் ஏன் இராமர் பிரம்ஹத்திப் போக்கிக் கொள்ள யாகம் வளர்த்தார் ?

  பதிலளிநீக்கு
 31. வருணக்கொள்கை தவறாகப்புரிந்து கொண்டு அதைத்தாக்குகிறார்களே என்று சொல்பவர், அக்கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? வலிமை பெற்றவர்கள் யார்? பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசும்போது அக்கொள்கையைப் போற்றவா செய்ய முடியும் என்றெல்லாம் தம்மைக்கேட்டுக்கொண்டாரா?

  60 ஆண்டுகளுக்கு முன்புதானே திராவிடக்கட்சிகள் தோன்றின. 20 நூற்றாண்டில்தானே கிருத்துவ மிசுனோரிகள் வந்தார்கள்.

  அதற்கு முன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வருணக்கொள்கை, பிறப்பிலேயே ஒருவன் பிராமணன் என்றும் இன்னொருவன் சக்கிலியன் என்றும்தானே பொருளாக்கப்பட்டு, தீண்டாமை என்னும் ஆயுதம் அப்பாவி சக்கிலியர்கள் மீது வீசப்பட்டது.

  அதற்கு இந்த வருணக்கொள்கைதானே மூல காரணம்?

  பதிலளிநீக்கு
 32. //கர்ணன்

  சூரிய புத்ரன் எப்படி சத்ரியன் ஆனான். (தேவர்களுக்கு ஏது வர்ணம் ?) விளக்கம் கர்ணனின் சத்ரிய தணம் அவனது அரசாட்சிக்கு பிறகு ஏற்பட்டது. அதற்கு முன் சூத்திரன் என்றே அழைக்க பட்டான். அதன் பிறகு தான் தொடையில் வண்டு துளைத்த கதை

  //விஸ்வாமித்திரர்
  தவவலிமை கேலி செய்யப்பட்ட பிறகு தான் கடவுளே அவர் இராஜ ரிஷி என நிரூபித்தார். (அவரை கேலி செய்தது பிறப்பின் அடிப்படையில் இல்லை. பாலியல் உணர்வுகளுக்கு அடிமை பட்டிருந்ததால்)

  //எந்த தகுதியில் ராவணன் பிராமணன் என்று சொல்லப்பட்டான் //
  இராவணன் ஒரு மிகப்பெரிய வித்தைகாரன். அவனுக்கு சகல கலைகளிலும் தேர்ச்சி இருந்தது.

  பதிலளிநீக்கு
 33. //அக்கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? வலிமை பெற்றவர்கள் யார்? //

  இக்கொள்கை சரியாக புரிந்து கொண்டு பின்பற்றுதல் தொடர்ந்து இருக்குமேயானால் யாருமே பாதிக்க பட்டு இருக்க மாட்டார்களே ?!!!

  //என்றும்தானே பொருளாக்கப்பட்டு//
  வர்ணம் வேறு பொருளாக்கப்பட்டது என்பது வரையிலாவது புரிந்து கொண்டமைக்கு நன்றி.

  //அதற்கு முன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வருணக்கொள்கை, பிறப்பிலேயே ஒருவன் பிராமணன் என்றும் இன்னொருவன் சக்கிலியன் என்றும்தானே பொருளாக்கப்பட்டு, தீண்டாமை என்னும் ஆயுதம் அப்பாவி சக்கிலியர்கள் மீது வீசப்பட்டது.//
  இதற்கு பெயர் வர்ணாசிரமம் இல்லை. சாதி.

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)