இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

இப்பதிவு எழுத தூண்டிய  பழமைபேசி பதிவிற்கு நன்றிகள். சாதி பற்றிய முந்தய பதிவையும் பார்த்து விடுங்கள்.

இப்பதிவில் சில முக்கிய விசயங்களை விவாதிக்கலாம் என்று உள்ளேன்.

 

  1. இன்று தமிழகத்தில் சாதி பெயரால் மக்கள் கொடுமை படுத்த படுவது நகரத்திலா ? கிராமத்திலா ?
  2. சமீப காலங்களில் சில பிரிவு மக்கள் தமிழகத்தின் தனி பகுதிகளில் கொடுமை படுத்த படுவது மத ரீதியானதா? பொருளாதார ரீதியிலா?

 

இன்றைய சாதியின் நிலை

எப்போதுமே சாதி என்பது பொருளாதார ரீதியானது தான். விவாசயத்தை மட்டுமே பெரிதும் நம்பி வாழும் அனைத்து கிராம நண்பர்களுக்கும் இது தெரியும். ஒரு கிராமத்தில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆதிக்க சாதியினர். (உதாரணமாக கொங்கு பகுதியில் கவுண்டர், திருநெல்வேலியில் தேவர் இப்படி.) மற்ற பிரிவினர் இவர்களை நம்பியே வாழ வேண்டும். கூலி தொழிலாளிகளும், கீழ் நிலை தொழிலாளிகளும் மிக மோசமாக நடத்த படுகின்றனர்.

 

கிராமங்களில் தொழில் வாய்ப்புகளும் மிகக்குறைவு. எனவே ஒரு பிரிவு மக்கள் இன்னொரு தொழிலை ஆரம்பிக்கும் போது போட்டியாக இல்லாமல் பொறாமையாக மாறி மிகப்பெரிய கலவரங்களில் முடிகிறது. எனவே குறிப்பிட்ட சந்ததியினர் குறிப்பிட்ட தொழில் மட்டுமே செய்ய வேண்டுமென வற்புறுத்த படுகின்றனர். (சாதி வலியுறுத்த படுகிறது)

 

தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள நகரங்களில் (சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு) போன்ற நகரங்களில்  (மற்ற பகுதிகளை ஒப்பிட) சாதி வெறி குறைவாக உள்ளதையும், வாய்ப்புக்கள் குறைவாக உள்ள (மதுரை, திருநெல்வேலி) போன்ற நகரங்களில் சாதி பதற்றம் அதிகமாக உள்ளதையும் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

 

 

மத அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உண்டா எனில் அதுவும் கிடையாது. (முந்தய பதிவு பார்க்க). இன்றைய சாதிக்கு மனு தர்மம் எனும் கூச்சல் பொய்யே தவிர வேறொன்றும் இல்லை. எந்த ஆதிக்க சாதியினர் மனு தர்மத்தை படித்து விட்டு அதனால் தான் சாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ? அதே போல மதமாற்றம் செய்யப்பட்ட மக்களும் சாதி கொடுமையிலிருந்து தப்பி விட்டார்களா ? இல்லை எனும் பதிலே கிடைக்கிறது !!! அங்கேயும் அதே கொடுமை.

 

திராவிடர் கழகங்களும் சாதி ஒழிப்பு வேலை செய்யாமல் மற்ற பிரிவு மக்களை தூண்டி விட்டதால் தான் இன்று தமிழர்கள் கூறு பட்டு கிடக்கின்றனர். ஏகப்பட்ட சாதி சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. அவற்றை வைத்து ஓயாமல் சாதி அரசியலும் நடைபெறுகிறது. இல்லக்கில்லாமல் அம்பு எய்வதால் தான் சாதி ஒழிப்பு நடைபெறவே இல்லை. மாறாக சாதி சங்கங்கள் பெருகி உள்ளன. மராட்டியர்களும், கன்னடர்களும் போன்ற பிற மாநிலத்தவர் மொழியால் ஒன்று படும் போது தமிழர்கள் ஒன்று பட முடியாமல் செய்வது இது போன்ற அமைப்புகள் தான். இவ்வகை பிரிவினை ஏற்படுத்தியதற்கு திராவிட கழங்களே முழு பொறுப்பு ஏற்றாக வேண்டும்.

 

சாதி ஒழிய என்ன செய்ய வெண்டும் ?

  1. கிராமங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பட வேண்டும்.
  2. அனைத்து பிரிவு மக்களுக்கும் சமமான முறையில் கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் வழங்க பட வேண்டும்,
  3. முதலில் அனைத்து சா(ச)தி சங்ககளும் கலைக்க பட வேண்டும். (மேல் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும், கீழ் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும்)
  4. ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரின் போட்டியையும் ஏற்று கொள்ள பழக வேண்டும்.

 

இவை இல்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமாகாது.

15 கருத்துகள்:

  1. //3.முதலில் அனைத்து சா(ச)தி சங்ககளும் கலைக்க பட வேண்டும். (மேல் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும், கீழ் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும்)//

    சாதீய அடையாளங்களும் 'கழட்டப்பட' வேண்டும் என்கிற வழியுறுத்தல் இல்லையே, சாதி பட்டப் பெயராக இருந்தாலும் தோளைச் சுற்றிய அடையாளமாக இருந்தாலும் ஒண்ணு தானே

    பதிலளிநீக்கு
  2. u r supporting wrong idelogy ..
    u know how this "VARANASIRAM" is used now a days .

    //கீதை சொல்வது இதை தான்:

    எவன் உண்மையை சத்தியத்தை, புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிவிக்கிறானோ அவனே பிராமணன் //

    ippadi paatha non brahmin judges should be declared as "BRAHMIN" .
    Will hinduism accept this ?

    பதிலளிநீக்கு
  3. u r supporting wrong idelogy ..
    u know how this "VARANASIRAM" is used now a days .

    //கீதை சொல்வது இதை தான்:

    எவன் உண்மையை சத்தியத்தை, புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிவிக்கிறானோ அவனே பிராமணன் //

    ippadi paatha non brahmin judges should be declared as "BRAHMIN" .
    Will hinduism accept this ?

    பதிலளிநீக்கு
  4. //எந்த ஆதிக்க சாதியினர் மனு தர்மத்தை படித்து விட்டு அதனால் தான் சாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் //

    Is really Upper caste people to ready have marriage relationships with so called lower caste people who have the characteristics of upper caste people as mentioned in "GEETHAI" .

    Theeyil neekiravanuku thaan thee chuduthunu theriyum .. vedikkai paakuravankaluku athu theriyathu ..

    chudupattavan kittae ketta antha anupavathai kettae solluvan.

    vedikkai paathavan kittae ketta "chuducham" appadi nu solluvan....

    பதிலளிநீக்கு
  5. //சாதீய அடையாளங்களும் 'கழட்டப்பட' வேண்டும் என்கிற வழியுறுத்தல் இல்லையே//

    பொருளாதார ரீதியான பலன் இல்லாவிடில் சாதி எனும் பொய்மைக்கு எந்த அர்த்தமும் இல்லை கோவி.கண்ணன். சாதி என்பது பொருளாதார ரீதியான பலன்களை தந்து கொண்டு இருப்பதால் தான் அதை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறார்கள். (புரியுமென நினைக்கிறேன்.)

    பூணூல் என்பது சாதிய அடையாளம் இல்லையெனவும் யார் வேண்டுமானாலும் அணியலாம் என பாரதி முதலானோர் கூறி இருக்கிறார்கள். இதை பற்றிய விவரங்கள் உங்களிடம் இருந்தால் தரலாம்.

    பதிலளிநீக்கு
  6. //ippadi paatha non brahmin judges should be declared as "BRAHMIN" .
    Will hinduism accept this ?//

    இந்து மதம் புதிதாக ஒப்புகொள்ள வேண்டியதில்லை நண்பரே.இந்து மதத்தில் உள்ளதே இப்படிதான்.

    ’சாதி’யை எதிர்ப்பவர்கள் ’வர்ணாசிரமம்’ என்பதை தவறாக புரிந்து கொண்டு எதிர்த்து கொண்டுள்ளனர். சிலரால் தவறாக வேண்டுமெனவே வலியுறுத்தமும் செய்ய படுகிறது.

    பதிலளிநீக்கு
  7. //Is really Upper caste people to ready have marriage relationships with so called lower caste people//

    இது இப்போது இளைய தலைமுறையினடையே நடக்கவில்லை என கருதுகிறீர்களா ? உங்களுக்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் காட்ட இயலும்.

    //chudupattavan kittae ketta antha anupavathai kettae solluvan.//

    சாதி என்பதால் யார் பாதிக்கபடவில்லை என கூறுங்கள் பார்க்கலாம் ? முழு சமுதாயத்தின் அழிவும் சேர்ந்து இக்கொடுமையில் அடங்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. //சாதி என்பது பொருளாதார ரீதியான பலன்களை தந்து கொண்டு இருப்பதால் தான் அதை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறார்கள். //

    பொருளாதார ரீதியான் ப்லன்கள் எப்போதிருந்து? இடஒதுக்கீடு அரசியல் தொடங்கியபின்னரே. 50 களில் ஆரம்பித்து இன்று வரை. அதற்கு முன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் வாழ்க்கை சாதிகளற்ற ஒன்றா?

    இடஒதுக்கீடு அரசியல் ஒரு தற்காலிகமே. அரசியல் மாற்றங்கள், வாழ்க்கையின் பிற சமூகக்காரணிகள் அதை மாற்றும். ஆனால், சாதிகள்? சாதிகளும் மாறிவிடுமென்றால், ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது நடக்கவில்லை?

    பதிலளிநீக்கு
  9. வருணாசிரமக்கொள்கையின் உங்கள் புரிதலே சரியென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதை எவ்வளவு பேர் ஒத்துக்கொண்டார்கள்? ஏன் அதை ஆயிரக்கணக்கான் ஆண்டுகளாக அனைவரும் ஒத்துக்கொள்ளாமல், மேல்சாதி, கீழ்சாதி, தீண்டத்தகாத சாத் என்றார்கள்?
    இன்று கூட உங்கள் கருத்து பரவலான கருத்தல்ல. இந்துத்வா காரர்கள் அரசியல் காரணங்களுக்காக நீங்கள் சொல்வதைப்போல சொல்கிறார்கள். உங்கள் கருத்து கிருத்துவ மிசுனோரிகளின் பிரச்சாரத்தை எதிர்னோக்க கூறப்படுவது. நீங்கள் இதை மறுப்பீர்கள். உங்களையும் மீறினது உலகம்.

    பதிலளிநீக்கு
  10. கோவி கண்ணன் சொல்லியது சரி: சாதிகள் இல்லயென்றால், இன்னும் ஏன் ஐயர், ஐய்ங்கார், செட்டி, முதலி? அப்பட்டங்களை விடுங்கள் என்கிறார். பின்னர் பேசுங்கள் என்கிறார். நிங்கள் என்ன சொல்கிறீர்கள்? இப்பட்டங்கள் இடஒதுக்கீடு அரசியலுக்கு முற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?

    பதிலளிநீக்கு
  11. //பூணூல் என்பது சாதிய அடையாளம் இல்லையெனவும் யார் வேண்டுமானாலும் அணியலாம் என பாரதி முதலானோர் கூறி இருக்கிறார்கள்.//

    பாரதி சொல்லிவிட்டால் அது அனைவ்ரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமா? அவர் என்ன அத்தாரிட்டி? அவர் என்ன இந்துமதத்தலைவரா? அவர் செய்கைகள் பிராமணருக்குப் பிடிக்கவில்லை என்பது உங்களுக்குத்தெரியுமா? பூணால் அனைவரும் போட்டுக்கொள்ள அது ஒரு கடைச்சரக்கா? நூலைவாங்கி கட்டிக்கொள்ள்லாமா? இந்துமதம் அதைச்சரி என்கிறதா?

    பூணூல் எல்லாரும் போடலாம் என்று சொல்ல பாரதி, தன் மகள் சகுந்தலாவுக்கு ஒரு பழுத்த பார்ப்பனக்குடும்பத்து மாப்பிள்ளை (சங்கரனை)த்தானே பார்த்துக்கட்டிக்கொடுத்தார்?

    பண்டங்கள் விற்பது செட்டி, வேதம் ஓதுபவன் பிராமணன், அவன் சரியாக ஓதினால் மாதம் மும்மாரி பெய்யும் என்றெல்லாம் எழுதிய பாரதி, அனைவரும் பூணுல் போடலாம் என்றால் சாதி ஒழிந்துவிடுமா? அவர் அப்படி தன் வாழ்க்கையில் சாதியை ஒழித்தாரா? எங்கே வாழ்ந்தாலும் அக்ரகாரத்தில்தானே வாழ்ந்தார்?

    பாரதியைத்தவிர எத்தனை பேர் பூணல்ல் ஒரு ஒப்பன் சரக்கென்றார்கள்? பாரதியின் நணபர், வ்.வே.சு சொன்னாரா? குவளைக்கண்ணன் சொன்னாரா?

    பதிலளிநீக்கு
  12. பாரதியை ஏன் அக்ரகாரத்திலிருந்து விரட்டி அடித்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  13. //பொருளாதார ரீதியான் ப்லன்கள் எப்போதிருந்து? இடஒதுக்கீடு அரசியல் தொடங்கியபின்னரே.//

    நீங்கள் சாதியை ஆதரிக்கிறீர்களா ?!!!
    நான் கூறி இருந்தது சாதிய அடக்குமுறை பொருளாதார பலன்களுக்காக ஏற்பட்டது அதை தவிர்க்க வேண்டுமென. (பதிவை சரியாக படிக்கவும்)

    //உங்கள் கருத்து கிருத்துவ மிசுனோரிகளின் பிரச்சாரத்தை எதிர்னோக்க கூறப்படுவது.//

    ஏங்க என்ன 1000 கணக்கான வருடங்களுக்கு பின் மிசுனெரிகள் வருவார்கள் என பகவான் அப்போதே சொல்லி விட்டு சென்றாரா ? (கீதையை படிக்கவும்)

    //அப்பட்டங்களை விடுங்கள் என்கிறார். பின்னர் பேசுங்கள் என்கிறார்.//
    இதையே தான் நானும் சொல்கிறேன். இப்போது என் பெயருக்கு பின் சாதி/மத அடையாளம் இல்லை. உங்கள் பெயரை சரி பார்க்கவும்.

    //பண்டங்கள் விற்பது செட்டி, வேதம் ஓதுபவன் பிராமணன்//
    இதையே தான் எல்லோரும் கூறுகிறோம். யாராக இருந்தாலும் உண்மையை உணர்த்துபவன் பிராமணன் வாணிகம் செய்பவர் வைசியன் (தூய தமிழில் செட்டி). தொழிலால் வருவது பிறப்பால் வருவது அல்ல.

    //பாரதி சொல்லிவிட்டால் அது அனைவ்ரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?//
    நல்ல விசயங்கள் யார் சொன்னாலும் ஏற்று கொள்ளதான் வேண்டும்

    //பாரதியை ஏன் அக்ரகாரத்திலிருந்து விரட்டி அடித்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?//
    உண்மையை உணர்த்தினால் வரலாற்று பெருமை உங்களுக்கு கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. ////ippadi paatha non brahmin judges should be declared as "BRAHMIN" .
    Will hinduism accept this ?/////
    முதலில் எதிர்ப்பவர்கள் யாரென்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. @கோவி.கண்ணன், @Meenthulliyaan, @ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ, @hayyram @hayyram

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)