பித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்


இப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பித்ரு தோஷம்தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும். • http://rameswaram-jothidam1.blogspot.in/2015/09/blog-post.html
 • https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2017/07/23112700/1098057/pitru-dosha-pitru-tarpanam-dosham-reason.vpf
 • http://www.adityaguruji.in/2015/08/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/
 • http://www.yourastrology.co.in/news/pithruthoshamvilaga-jothidam.html


பித்ருக்கள்

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். சிரார்த்தம்

பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். 

நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.  இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.


பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்
1. பிதா - தகப்பனார்
2. பிதாமஹர் - பாட்டனார்
3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
4. மாதா - தாயார்
5. பிதாமஹி - பாட்டி
6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி
மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.


பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

சூரியனும் சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படுகிறார்கள். தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம்.

நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் ஒளி இழந்த இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.

சூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல ராகுபகவான் தந்தையின் முன்னோர்களையும் கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது முதன்மையான தோஷமானது.

ராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகுபகவான் சூரியனின் வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா? வேறுவகைகளில் அந்த ராகு கேதுக்களுக்கோ சூரிய சந்திரர்களுக்கோ சுபர்பார்வை தொடர்பு ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.
 • ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. 
 • ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். 
 • ஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், அரசாங்க அதிகாரத்தை கொண்ட உயர்நிலையில் இருப்பவர்களையும் என்னால் காட்ட முடியும். 
 • உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம். 
 • ஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது. 
 • இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் காட்டுகிறது. 
 • தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண்-பெண் இருபலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். 
 • 6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.
 • சந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 
 • சூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது 
 • சூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.
 • கடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும். 
 • குருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.

 பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

 • தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்- தந்தையர் காலமாகிவிட்டால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை (இறுதிச் சடங்கு) பிள்ளைகள் செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும். 
 • கூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் (ஆண்-பெண் இருவரும்) வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருப்பது.
 • இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தும் சொத்துச் சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமகிரியைகளைச் செய்யாமல் உதாசீனப்படுத்துவது. 
 • (வெளிமாநிலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் பயணத்தடை காரணமாக தாமதமாக வந்து இறுதிச் சடங்கு செய்யத் தவறிவிடுவார்கள். இவர்களை பித்ரு தோஷம் பாதிக்காது)
 • ஸ்ரீ ராமபிரான் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டிற்குச் செல்கிறார். அப்போது அவர் தந்தை இறந்த செய்தி அவருக்குக் கிடைக்கிறது. இறைவன் அவதாரமான ஸ்ரீராமபிரான், ஆஞ்சனேயரை வைத்து தர்ப்பணம் செய்து புண்ணியம் பெற்றதாகப் புராணக் கதைகள் வாயிலாகத் தெரிய வருகிறது. 
 • பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது. 
 • ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 
 • ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 
 • ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது. 
 • ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 
 • ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது. 
 • கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். 
 • பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். 
 • ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். 
 • ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். 
 • துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். 
 • நமது முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும். அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத் தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.

பரிகாரம்

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு 'பித்ரு பூஜை' செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்

பரிகாரம் – 1

நூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும். உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும்.) அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.

பரிகாரம் – 2

சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் நூறு கிராம் பச்சரிசி, ஐந்து ரூபாய்க்கு அகத்திக்கீரை 50 கிராம் கருப்பு எள், 100கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை


இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன

பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்!

ராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.

பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்

காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும். 


ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய! 
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா 

இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்

ஆதித்ய ஹ்ருதய மந்திரம் சூரியனை வழிபடும் மிகச்சிறந்த மந்திரம் ஆகும். அது பற்றிய முழுவிளக்கத்தை இங்கு காணலாம்.

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..? 

இந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும் கோயில- ராமேஸ்வரம் கோவில்

யாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். 

குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங்களால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)