அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்

ஆதித்ய ஹ்ருதயம் என்பது என்ன ?

  • ஆதித்யா என்றால் சூரியன். ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். குறிப்பாக இதயத்திற்கும் மனதிற்கும் ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை
  • உலக நாயகனான ஆதித்யனின் இருதயமாகவும் போற்றப்படுகிறது. 

ஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரம்

  • சூட்சுமமான பல கருத்துக்கள் அடங்கிய இந்த ஸ்தோத்திரத்தை வெவ்வேறு அறிஞர்களின் கருத்தை ஆய்ந்து தொகுத்து பகிர்ந்துள்ளேன். மந்திரங்களும், விரிவான அர்த்தங்களும் கூகிள் டாக்ஸில் இச்சுட்டியில் உள்ளது.  மந்திரம் மட்டும் இங்கே உள்ளது.
  • பாடலை இங்கே கேட்கலாம். இந்த ஆடியோவில் ஆரம்ப துதியில் இருந்து முடிவு துதி வரை முழுமையாக உள்ளது.
  • “இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார். சூரிய பகவானின் பல்வேறு பெயர்களின் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன். 

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். ஹிந்து சூரிய வழிபாட்டு முறைகளில் முக்கியமானது அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம்.

இரகசியம் -1 


எல்லா வேத வரிகளும் இருவித அர்த்தங்களை கொண்டுள்ளன. 

  1. வெளிப்படையானது - சடங்குகள் சார்ந்தது, 
  2. உட்கருத்து - ஆத்ம போதத்திற்கானது
உதாரணமாக சூரியனை போற்றும் ஸப்த ஸப்தி எனும், சூரியனின் பதம் 7 குதிரைகள், 7 கதிர்கள் (VIBGYOR) மட்டும் குறிப்பதல்ல, மனித உடலில் உள்ள 7 மூலாதார சக்கரங்களையும் குறிக்கிறது.

அது போலவே,
  • அண்டத்தை படைத்து, காத்து, ஒடுக்கும் பரம்பொருள் பரமாத்மன். (மனித உடலிலும் அதுவே உள்ளது.)
  • அப்பரம்பொருளின் பிரகாச வடிவமே இவ்வுலகில் சூரியனாக வெளிப்படுகிறது. 
  • பரம்பொருளின் முழு வடிவையும் மனிதர்களால் பார்க்க இயலாததால் அகஸ்தியர் இராமரை சூரியனை வழிபட சொல்கிறார். 
  • எனவே இம்மந்திரம் சூரியனை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பரமாத்மனையும் வழிபடுகிறது.
ஆயுர்வேதம் உடம்பில் முதுகு தண்டில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகவும் அவை ஆன்மீக மையங்களாக செயல்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நவீன் ஆயுர்வேத மருத்துவர்கள் அவற்றை ஒவ்வொரு நிறத்தோடும், உறுப்போடும் தொடர்பு படுத்துகின்றனர். நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பை குணப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

A New Age conceptualisation of the chakras of Indian body culture and their positions in the human body
ColorChakraChakra locationAlleged function
RedFirst
Muladhara
Base of the spine, முதுகு தண்டின் அடிப்பகுதிGrounding and Survival
OrangeSecond
Svadhishthana
Lower abdomen, genitals, குறிEmotions, sexuality
YellowThird
Manipura
Solar plexus, நாபிPower, ego
The “accounting mind” that categorizes everything, assesses the pluses and minuses in life
GreenFourth
Anahata
Heart, இருதயம்Love, sense of responsibility
BlueFifth
Vishuddha
Throat, தொண்டைPhysical and spiritual communication
IndigoSixth
Vishuddha
Just above the center of the brow, middle of forehead
புருவ மத்தி
Forgiveness, compassion, understanding
VioletSeventh
Sahasrara
Crown of the head, உச்சிConnection with universal energies, transmission of ideas and information

புராணம்


தனித்தன்மை மிக்கவர் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.

மகத்தான மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால், அகிலமே பயனடையும் என்று கருதினார். அவர் தேர்வு செய்தது தான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.

ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது.

வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் உள்ளது.


இரகசியம் -2


ராம ராவண யுத்தம் மனித மனதிற்குள் உள்ள நல்ல மற்றும் தீய எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் ஆகும்.
  • ராமன் சிறந்த உள்ளத்திற்கான அடையாளம். 
  • இராவணன் என்பது பெண்களை தவறாக நடத்தும் எண்ணம்.

    தர்ம சாஸ்திரப்படி இத்தகைய பெரும் கொடிய செயல்களுக்கு தீர்வு இல்லை. தீய எண்ணங்களால் உருவாகும் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும்.

    மகிமைகள்

    ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
    1. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
    2. ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும்  அழிக்க வல்லது)
    3. ஜயாவஹம் (வெற்றி தருவது)
    4. ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
    5. அக்ஷயம் - அழிவற்றது பொங்கி பெருக கூடியது. Akṣayaṁ is the most important quality of the sun.
    6. பரமம் - மிகப்பெருமை கொண்டது
    7. சிவம் - மங்களம் தருவது
    8. ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது) blessing of all blessings
    9. ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
    10. சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
    11. ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
    12. உத்தமம் - சிறந்தது

    பலன்கள்

    • மனச்சோர்வையும். நோய்களையும் தீர்த்து, உடலை வச்ரம் போல் மாற்றும். 
    • எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள். மூன்று வேளை பாடம் செய்தார் என்றால் – எங்கேயும் அவருக்கு தோல்வியே ஆகாது. எந்த காரியத்திலும் தோல்வியாகாது. லௌகீக-சத்ருக்களும் நாசமாகி விடுவார்கள். அதோடு ஆன்மீக மார்க்கத்தில் வரும் சத்ருக்கள் – காமம், குரோதம், இத்தியாதி – அவைகளும் நாசமாகி விடும். 
    • கிரகபீடைகள் நீங்கும். ஆபத்துக் காலங்களிலும்எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும்.துன்பங்கள் தூள் தூளாகும். 
    • நினைத்த காரியம் நடந்து முடியும். தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும்.


    ஜோதிட ரீதியான பலன்கள்

    1. இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும். சூரிய தோஷம் நீங்கும். தொழுநோய் குணமாகும்
    2. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.
    3. கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
    4. ஆண் புத்திர பிராப்தி கிடைக்கும்.
    5. நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும். 
    6. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். அரசாங்க ஆதரவு உண்டாகும். அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும்.   பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும்.  ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.
    7. அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும். 
    8. அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும். 
    9. எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    வழிமுறை

    • அதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 
    • இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்! 
    • விரதமாக இருந்து சொல்வது மேலும் பயன் தரும். 
    • நீர் நிலைகள் சூரிய சக்தியை மென்மேலும் பிரதிபலிப்பதால், அவற்றின் அருகில் இருந்து நமஸ்கரிப்பது நல்ல பலன் தரும். 
    • ஆதித்ய ஹ்ருதயம் இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. 
    • இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. 
    • ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்! 
    • ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். 
    • அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும். 
    • முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும். பின்பு கணபதியை வணங்கவும். பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும். பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும். 
    • இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும். கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும். பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும். எனவே அதனை விலக்க வேண்டும். எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.

    வேறு வடிவிலான ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரங்கள்

    தமிழ்

    மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும்.

    சமஸ்கிருத்தில் படிக்க இயலாதவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும்.


    ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி!

    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
    இருள் நீக்கும் தந்தாய் போற்றி!


    தாயினும் பரிந்து சாலச்
    சகலரை அணைப்பாய் போற்றி!

    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
    துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

    தூயவர் இதயம் போலத்
    துலங்கிடும் ஒளியே போற்றி!

    தூரத்தே நெருப்பை வைத்து
    சாரத்தைத் தருவாய் போற்றி!


    – கண்ணதாசன்


    பவிஷ்யோத்தர புராணம்

    இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைவதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

    சுட்டிகள்

    இப்பதிவின் அணைத்து தகவல்களும், கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
    1. https://en.wikipedia.org/wiki/Adityahridayam 
    2. https://www.youtube.com/watch?v=-SakTUHIxek
    3. http://sthothramaalaa.blogspot.in
    4. http://www.manblunder.com/articlesview/aditya-hrudayam-introduction 
    5. https://www.hindugallery.com/devotional-songs/aditya-hrudayam/tamil/ 
    6. http://www.sanskritweb.net/sansdocs/aditya-hridayam.pdf 
    7. https://templesinindiainfo.com/aditya-hridayam-lyrics-in-tamil-and-english-with-meaning/ 
    8. http://stotraratna.sathyasaibababrotherhood.org/n3.htm
    9. http://rightmantra.com/?p=2646
    10. http://www.mazhalaigal.com/2010/february/20100229nbs_aditya-hrudayam.php#.Wnn5xyVuaaE 
    11. சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்
    12. ஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம்
    13. சூரிய வணக்கம்
    14. ஆதித்ய ஹ்ருதயம்.
    15. https://siththanarul.blogspot.in/2011/08/ 
    16. http://aanmeegachudar.blogspot.in/2013/12/blog-post_15.html 
    17. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1312 
    18. http://www.chakras.info/7-chakras/ 
    19. https://en.wikipedia.org/wiki/Chromotherapy
    20. https://docs.google.com/document/d/1fxDkseqRrSs2XqTTuSUBVvyN1hJTI5NqvwCTpC6zLVA/edit?usp=sharing

    8 கருத்துகள்:

    1. Sun is a star where every second violent thermo nuclear fusion reactions happen due the extreme pressure, gravity and temperatures exceeding 10000 degrees Centigrade.its is just like any other many billions of stars identified in this Universe!!!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. ஆம். கோடான கோடி சூரியர்களில் ஒன்று. அது மனிதர்களால் முழுதும் உணர முடியாத பெரு வெடிப்பின் துகள். அந்த துகளான சூரிய குடும்பத்தில் அணைத்து படைப்பிற்கும் மூலமாக விளங்குவதோ அது.

        நீக்கு
      2. அளவிட இயலா பெரும்சக்தியின் கண்ணுக்கு புலனாகும் வடிவம்.

        நீக்கு
    2. எளிமையான சிறந்த விளக்கத்துடன் விரதமிருந்து உச்சாடனம் செய்ய உகந்த காலம்/இடம குறித்தும் பதிவிட்டமைக்கு கோடி நன்றிகள்.

      பதிலளிநீக்கு
    3. சித்தர்களின்மாந்திரிகமந்திரங்கள்எதிரிகளைஅடக்கமந்திரம்

      பதிலளிநீக்கு
    4. அகஅத்தியர் தமிழர் வடமொழியிலோ மந்திரம் சொன்னவர் .பாவம் அகத்தியர் தமிழ் தெரியாது போலும்

      பதிலளிநீக்கு
    5. Hanuman Chalisa in Tamil PDF is a collection of forty quatrains that praise and glorify Lord Hanuman.

      பதிலளிநீக்கு

    எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)