கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா ?

  krishna1 நண்பர் இளவரசி ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் முக்கிய பகுதிக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இதே கேள்வியை பலரும் கேட்டு கொண்டுள்ளனர். இப்பதிலை இவ்வனைவருக்கும் தரக்கூடிய வாய்ப்பாக கருதுகிறேன்.

  “ஒருவன் புலுக்கமாக இருக்கிறது என்று விசிறி வீசிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் விசிறி வீசுவது என்பது கடமை காற்று வருவது அதனுடைய பலன்,ஆகவே பலனை எதிர்பார்த்துதான் ஒருவன் தன் கடமையை செய்கிறான்

  ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற பதம் பலரால் தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. பகவான்  கடமை என்பதை இது போன்ற சிறு விடயங்களுக்கு சொல்லவில்லை. இங்கு கடமை என்பதை (essential actions) தான் குறிப்பிடுகிறார், சிலர் நினைப்பது போல் வேலையை(basic tasks) அல்ல.  அதேபோல பலன் என்பது தன் சொந்த ஆதாயங்களை, புலன் நிகர்ச்சியை(self interest) தான் குறிப்பிடுகிறார்; விளைவு(result) என்பதை குறிக்கவில்லை.

  ஒருவன் தன் அடிப்படை கடமையை செய்வதற்கு கூட அதன் மூலம் தனக்கு ஒரு இன்பம், சுகம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறு உதாரணமாக சிறு குழந்தைகளை பெற்றோர் காப்பாற்றுவதும், வயதான பெற்றோரை குழந்தைகள் காப்பாற்றுவதும் என்பதும் கடமை அதில் ஒரு பலனை எதிர்பார்ப்பது தவறானது அல்லவா?

  இரண்டாவது பலனை எதிர்பார்க்காதே என்ற சொல்லாடலுக்கு பலன் கிடைக்காது என்றோ, செய்வதற்கு முன் முறைபடுத்தாதே (plan) என்றோ பொருள் அல்ல. இந்த செயலை செய்வதனால் எனக்கு இந்த பலன் தான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் தவறானது என்று குறிப்பிடுகிறார்.

  திருமணம் என்பதை உடலின்பத்திற்காக என்ற நோக்கத்திற்காக மட்டும் ஒருவன்/ஒருத்தி அக்கடமையை செய்தால் அவன் மிகுந்த ஏமாற்றம் அடைவான்/ள் என்பது சந்தேகமில்லை. எதிர்பாராத பல பக்க விளைவுகளையும் (குடும்பம், குழந்தைகள்) சந்திக்க வேண்டியிருக்கும் (இது நகைச்சுவைக்காக :-)) )

netaji1 அதே போல தான் பலருக்கும் பல உதவிகள் செய்திருந்தாலும் ஒருவரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று கவலை படுபவர்களை அதிகம் பார்த்திருப்போம். பிறருக்கு உதவி செய்வதில் கூட பலனை எதிர்பாராதீர்கள் என்று பகவான் கற்பிக்கிறார். பாரதியார், வ.உ.சி., சிவா, பகத்சிங், நேதாஜி போன்றோர்களை நினைத்து பாருங்கள்: இவர்களே உதாரண புருஷர்கள். இவர்கள் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு  ஏதேனும் சுய பலனை (ஆதாயங்களை) எதிர்பார்த்திருப்பார்களா ?

ஒருவன் அடிமையாக இருப்பதற்கு மறுப்பது என்பது கூட ஒரு கடமை தான் (தனக்கு தானே செய்து கொள்வது). எனவே தான் தன் சொந்த புலன் ஆதாயங்களை கருதாது மேற்கூறிய தலைவர்கள் பாடுபட்டனர்.

4 கருத்துகள்:

 1. \\”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற பதம் பலரால் தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. பகவான் கடமை என்பதை இது போன்ற சிறு விடயங்களுக்கு சொல்லவில்லை. இங்கு கடமை என்பதை (essential actions) தான் குறிப்பிடுகிறார், சிலர் நினைப்பது போல் வேலையை(basic tasks) அல்ல. அதேபோல பலன் என்பது தன் சொந்த ஆதாயங்களை, புலன் நிகர்ச்சியை(self interest) தான் குறிப்பிடுகிறார்; விளைவு(result) என்பதை குறிக்கவில்லை.\\

  என் கருத்தும் இதேதான்.

  பதிலளிநீக்கு
 2. வாங்க அறிவே தெய்வம்,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா4/3/14 3:50 முற்பகல்

  ஆன்மிகம் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை
  கடமையை செய், பயனை எதிர்பார்க்கதே
  எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
  இது கீதையில் இல்லேவே இல்லை. இன்டர்நெட் முழுவதும் தேடித் பார்த்து விட்டோம். உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பொய் சொல்லி, இந்து மதத்தை நாம் வளர்க்க வேண்டாம்.
  பார்க்க : http://subavee-blog.blogspot.in/2014/03/1.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/FGESw+%28%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%29
  காப்பி, பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றி.
  உங்கள் சகோதரி

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  நான், கடமைகளைச் செய்வது பற்றி, ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!

  நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருந்தும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

  www.lusappani.blogspot.in

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)