இந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2

 

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும், முதல் இடுகைக்கு இங்கு செல்லவும்]

குரு பெயர்ச்சி என்பது என்ன?

விஞ்ஞான ரீதியாக குரு (Jupiter) கிரகம் 6.12.08 அன்று பகல் 11.15 மணிக்கு, பூமிக்கு 270 டிகிரியிலுருந்து 271 டிகிரிக்கு மாறியது. தமிழில் பூமியின் 230 முதல் 270 பாகைக்கு வில்-தனுசு என்றும், 270 முதல் 300 பாகைக்கு சுறா-மகரம் என்றும் பெயர். சோதிடத்தில் இதையே சோதிடத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு  குருபகவான் பெயர்ச்சியடைந்தார் என்று கூறுவர். 

 

குரு பெயர்ச்சியின் விளைவுகள் எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சியின் ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பலன்கள் பூமிக்கு கிடைத்து விடும் என்பது சோதிட விதியானதால் நாம் 6.11.2008 நாளிலிருந்து கிடைக்கும் பலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். சமீபத்திய குரு பெயர்ச்சி உலகிற்கு மிக முக்கியமான கிரகமான குரு சாதகமாக இல்லாத சூழ்நிலையை இப்போது உலகிற்கு  ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிகள் தெளிவாக காட்டுகிறது. 

 1. உலக பொருளாதார நெருக்கடியின் உச்ச நிலை (ஆயில் விலை, ஆட்டோ நிறுவனங்கள் சரிவு-நவம்பர் 2008)
 2. காசா பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் (டிசம்பர் 2008)
 3. இலங்கையில் தீவிரமடைந்துள்ள போர் (நவம்பர் 2008)

இந்தியாவில்,

 1. பாகிஸ்தான் பயஙகரவாதிகளினால் மத சம நிலைக்கு எற்பட்டுள்ள அச்சுருத்தல் (நவம்பர் 2008)
 2. சத்யம் நிறுவனத்தால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு (ஜனவரி 2009)

 

குரு உலகிற்கு எவ்வெவற்றை அளிக்கிறார்?

இப்போது குரு நீச நிலையில் உள்ளார். நீச நிலை என்பது பலம் குறைந்துள்ளதையும், எதிர் மறையான பலன்களையும் குறிக்கிறது. எனவே உலகில் கீழ்கண்ட விடயங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

”தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை, நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், மத தலைவர்கள், சான்றோர், புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல்.”

இந்தியா பிறந்த ஜாதகத்தின் படியும் இப்போது சாதகமான நிலையில்லை. சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 முதல் 08/2009 வரை, ஏழரையாண்டு சனி வேறு 09/2009 வரை நடக்கிறது.

ஏழரை சனி -3: 07/2002 முதல் 09/2009 முடிய

 1. July 11, 2006 மும்பை குண்டு வெடிப்பு
 2. 2007ல் 6 பயங்கரவாத தாக்குதல்கள்
 3. 2008ல் 10 பயங்கரவாத தாக்குதல்கள்
 4. திறமையற்ற அரசு நிர்வாகம்

இவ்வருடத்தில் பின்வருபவை ஏற்பட வாய்ப்பு உள்ளதை எடுத்து காட்டுகிறது.

 1. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையும் குழப்பங்களும் ஏற்படும். வரும் தேர்தலில் மக்கள் கட்சி பாகுபாடின்றி  தூய தலைவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
 2. நாட்டின் நிதி நிலைமை- நிதி நிறுவனங்கள், நிதி சந்தைகள் பாதிக்கப்படும்.  மக்கள் தக்களது சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். புதிய கடன்களை அறவே தவிர்க்க வேண்டும்.
 3. பட்ஜெட் மக்களை வாட்டி வதைக்கும்- ஏழை மக்கள் மேலும் கடும் வரிச்சுமையினால் பாதிக்கப்படுவர். மக்கள் ஆதிக்க மனநிலையை விட்டு பொருளாதார சம நிலைக்கு பாடுபட வேண்டும்.
 4. மததலைவர்கள் உயிருக்கும்  மத நிறுவனங்களுக்கும் ஊறு ஏற்படும். மத நல்லினக்கம் பாதிக்கப்படும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து பிளவு படுத்துபவர்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.

ஆனால் இத்தகைய நிலை தற்காலிகமானது தான். 29.08.2009 முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

தொடரும்...

[அடுத்த பாகத்தில்: இந்தியாவின் வளமையான எதிர்காலம்]

 

2 கருத்துகள்:

 1. உங்கள் குருப்பெயர்ச்சியின் விளைவுகளின் கணிப்பு சரியில்லை. நீங்கள் செய்வாயின் விளைவுகளை பொருட்படுத்தவில்லை.

  பதிலளிநீக்கு
 2. வாங்க நற்கீரன்,

  வருகைக்கும் கருத்துக்கும் முதலில் மிக்க நன்றி!!

  செய்வாய் மிக வேகமாக நகரும் ( ஒரு ராசிக்கு 1-1/2 மாதங்கள்) கிரகமாதலால் வருடத்திற்கான பொது கோசார பலன்கள் அறிவிக்கும் போது அதன் விளைவுகளை பொருட்படுத்தவில்லை.

  தங்களது கணிப்புகள் வேறு மாதிரியாக இருந்தால் தாராளாமாக பின்னூட்டமிடுங்கள் வெளியிடப்படும்.

  சுட்டி காட்டியமைக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)