ஒரு தலை காதல் கவிதை (Feel My Love - காதலை உணர்வாயா)

என் அன்பில் கோபம் காணே என் அன்பில் துவேஷம் காணே
என் அன்பில் சாபம் காணே அன்பே Feel My Love
என் அன்பின் அளவை காணே என் அன்பின் ஆழம்  காணே
என் அன்பின் வேகம் காணே அழகே Feel My Love
என் அன்பின் மௌனம் காணே என் அன்பின் அர்த்தம் காணே
என் அன்பின் சூன்யம் காணே மறுப்போ வெறுப்போ ஏதோ Feel My Love

[என் அன்பில்]

 

நான் அளிக்கும் கடிதமெல்லாம் கிழித்தெறிந்து Feel My Love
நான் வழங்கும் பூவையெல்லாம் கீழெறிந்து Feel My Love
நான் எழுதும் கவிதையெல்லாம் பரிகசித்து Feel My Love
நான் செய்யும் சேஷ்டையெல்லாம் சீ யென்று Feel My Love

நீ என்னை விரும்பவில்லை என் மீது அன்புமில்லை
நீ என்னை நினைப்பதில்லை  என் பேச்சோ பிடிப்பதில்லை 
நீ இல்லை இல்லை என்ற போதும் எந்தன் அன்பில் நிஜமுண்டு Feel My Love

 

வெறுப்பாக முறைத்தாலும் விழியாலே Feel My Love
சினமாகி சுட்டாலும் நாவார Feel My Love
கசடென கடந்தாலும் காலாலே Feel My Love
விட்டு விலகி செல்லும் தடங்களிலே Feel My Love

வெறுப்பதிலே சோர்வடைந்தால், முறைப்பதிலே தளர்வடைந்தால்,
தடங்களிலே முடிவிருந்தால், சுடுவதிலே வலு இழந்தால்,  
இதற்கும் மேலே இதயம் என்று உனக்கொன்றிருந்தால் Feel My Love

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=udl5Q-RJl5U) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

1 கருத்து:

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)