நீ

காதலில் வெற்றியடைந்த காதலன் பாடும் பாடல்

 

நீயும் உன் சிரிப்பும் போதுமம்மா எந்நாளும்

          எவரும் என் நினைவில் வராரம்மா

நீயும் உன் அன்பும் போதுமம்மா என் கண்ணே

           இந்த ஜென்மம் வரமே ஆகுமம்மா

 

 

என்னுடைய உயிர் நீயே

நான் கண்ட கலை நீயே

என் பாடல் ஸ்ருதி நீயே

என் அன்பு கதை நீயே

என்நாளும் பெருகும் என் ஆனந்தமும் நீயேதான்

 

உன்னுடன் சொர்க்கமும் நிஜமே

உன்னுடன் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்

உன்னுடன் ஒவ்வொரு குரலும் திவ்ய சங்கீதம்

 

உன்னுடனே நான் முழுமை அடைவேன்

உன்னுடனே ஒவ்வொரு பொழுதும் சொர்க்கம்

உன்னுடனே  வாழ்வின் ஒவ்வொரு கணமும் சந்தோசம்

 

 

[இக்கவிதை தெலுங்கு பாடல் ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல்.

மொழிபெயர்ப்பில் உள்ள குறைகள் என்னையே சாரும். சுட்டி காட்டவும்]

2 கருத்துகள்:

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)