திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)

[எதிர்வினை: இவ்விடுகைக்கு காரணமான தோழி தீபாவின் இடுகையை பார்வையிடவும்]

ஜாதகம் தவறல்ல. ஜாதகம் பார்க்கும் முறை தான் தவறு. ஒரு சிலர் சுய வைத்தியம் செய்வது போல சுய ஜாதக பொருத்தம் பார்க்கிறார்கள். இது மிக மிக தவறு.

இரண்டாவது ஜாதகம் பற்றிய மூட நம்பிக்கைகள்

1. 10 பொருத்தம் மட்டும் பார்ப்பது.
2. சில நட்சத்திரங்களை தாங்களாகவே ஒதுக்குவது.
3. செவ்வாய் தோசம், நாக தோசம் பற்றிய விதிவிலக்குகளை நிராகரிப்பது (தோசம் இல்லை என ஒத்து கொள்ள மறுப்பது)

 

பத்து பொருத்தம்

எவ்வளவு ஜாதக ஆராய்ச்சியாளர்கள் சொன்னாலும் சரி மக்கள் 10 பொருத்தம் மட்டுமே பார்க்கிறார்கள். ஆண் மற்றும் பெண் ஜாதகத்தை ஒன்றினைத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையில் 10 பொருத்தங்கள் மட்டுமே பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது சாதக அறிஞர்களுக்கு நன்றாக தெரியும்,
10 பொருத்தம் என்பது நட்சத்திரங்களை பொருத்தி பார்ப்பது. உதாரணமாக ஒருவர் புனர்பூசம் நட்சத்திரம் எனில் அவருக்கு மீதமுள்ள 5 நட்சத்திரங்கள் பொருந்தி வருகிறது.

http://www.chennaiiq.com/astrology/marriage_match_by_star_tamil.asp

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உலகத்தில் உள்ள அனைவருமே 27 நட்சத்திரங்களில் ஒன்று தான். எனவே  600 கோடி * 5 / 27  = 111 கோடி பேர் பொருந்தி வருவர். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் ?

 

எப்படி பார்க்க வேண்டும் ?

சாதக பொருத்தம் பார்ப்பது என்பது தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஆண் பெண் சாதகம் பார்ப்பது மட்டுமே. இதற்கு முன்னோட்டம் மட்டுமே 10 பொருத்தம்.  மேலை நாடுகளில் உள்ளது போல ஆணும் பெண்ணும் ஒன்றினைந்து சில காலம் தங்கி விட்டு பின் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நம் கலாசாரத்திற்கு ஒத்து வரகூடியது அல்ல. எனவே இம்மாதிரியான தருணங்களில் ஜாதகம் ஒரு அருமையான கருவியாக அமையும். உண்மையில் ஜாதகம் பார்ப்பதில் கீழ் காணும் சில விடயங்களை கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

1. ஆண் உண்மையில் ஆண்மை உடையவரா ?
2. ஆண் / பெண் ஒருபால் உறவில் ஆர்வம் உள்ளவரா?
3. ஆண் / பெண் திருமணத்தில் ஆர்வம் உள்ளதா?
4. பெண் உண்மையில் குழந்தை பெரும் அளவு கருப்ப பை உடையவரா ?
5. ஆணிற்கும் பெண்ணிற்குமான உடலுறவு எப்படி பட்டது (செக்ஸ் ஒத்துழைப்பு) ?
6. ஆண் பெண் மனப்பொருத்தம் எப்படி பட்டது ?
7. ஆண் பெண் எதிர் கால வாழ்க்கை எப்படி செல்லும் ?


ஆனால் எந்த சோதிடராவது ஒரு ஆண் ஆண்மையற்றவர் என கூறி சாதகத்தை நிராகரித்ததை கேள்வி பட்டது உண்டா ? இம்மாதிரியான விசயங்களை வெளியிடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வேறு விதமாக கூறுவர். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


என்னுடைய இரு நண்பர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே காதல் திருமணம் தான் நடக்கும் என்று நான் கணித்து கூறியது இன்று மிகச்சரியாக நடந்துள்ளது. சோதிடம் என்பது நம் முன்னோர்களின் ஒளிவிளக்கு. அதை நாம் தான் சரியான முறையில் பயன்படுத்தி உண்மை சோதியாக மாற்ற வேண்டும்.

14 கருத்துகள்:

 1. அறிவியல் தமிழ் என்ற தலைப்பில் ஜாதகமா ...!

  பேஷா இருக்கு !

  பதிலளிநீக்கு
 2. தருமி என்ற பெயரில் நாத்திகம் எழுதினாலும் இப்படி தான் பின்னூட்டம் போட வேண்டுமோ ? ;)

  சோதிடத்தில் மூட நம்பிக்கையை ஒழித்து அறிவியல் மட்டும் தருவதே பதிவின் நோக்கம். சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை

  பிற அறிவியல் கருத்துக்களும் பதிவில் உள்ளன பார்க்கவும்.

  நன்றி தருமி வருகைக்கும் கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 3. பத்து பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் செய்து கொள்வது இதய நோய்க்கு இலுப்பைப் பூ ஒத்தடம் கொடுத்தது போல்தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னென்ன பொருத்தம் தேவை என்பதை மிகச் சரியாக அறுதியிட்டு குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
  மேலோட்டமாக பார்த்துவிட்டு பாதிப்பு ஏற்படும்போது ஜோதிடத்தையும் ஜோதிடரையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுவது நடைமுறையில் இருக்கிறது.
  அந்த நடைமுறைக்கு உங்கள் விளக்கம் நல்ல மருந்தாக அமையும் என்பது அடியேனின் கருத்து. தங்கள் நண்பனாக நான் இருப்பது என்னுடைய பாக்கியம்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி இந்திரத் தேவன் வருகைக்கும் கருத்துக்கும்.

  என்னை புது நண்பனாக ஏற்று கொண்டது எனக்கும் மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
 5. How did you decide that astrology is scientific? It has been long established that it's pseudoscience and there are no truths in it.

  பதிலளிநீக்கு
 6. Welcome Mrs. The Analyst,

  //It has been long established that it's pseudoscience and there are no truths in it.//
  Simple question: Who established there is no truth in astrology ?

  "There is disagreement among philosophers of science and among commentators in the scientific community about whether there is a reliable objective way to distinguish 'pseudoscience' from non-mainstream 'science'."
  ---http://en.wikipedia.org/wiki/Pseudoscience

  ha ha ha :)

  As I already mentioned in my previous post, I believe that astrology is still evolving and in experimentation stage. We can't just kill it because its not having all the answers.
  But please explain is science complete ? Has it explanations for all the facts ? How many times science corrected itself from the ideas it found over the years ?
  I think I'll get the straight forward and correct answers for my questions.

  You mention you are an atheist.(in your blog) I don't have any hard feelings when atheists say things like this. If you're really interested to understand an idea please remove all the prejudices from your mind and learn it. Otherwise you'll never find the truth.

  I think first time I received a comment from the scientist(as per your blog). Thanks for the visit and comment.

  பதிலளிநீக்கு
 7. "There is disagreement among philosophers of science and among commentators in the scientific community about whether there is a reliable objective way to distinguish 'pseudoscience' from non-mainstream 'science'."
  ---http://en.wikipedia.org/wiki/Pseudoscience

  ha ha ha :)”

  :) Even though I don’t normally put a lot of trust in Wikipedia as anyone can modify it, if you read down the link you provided, it explains the difference between science and pseudoscience. Science is different from pseudoscience not only in evidence and plausibility but in how they change. Science is cumulative and progressive in that they continue to improve and refine knowledge of our world on new observations and interpretations. Hopefully some of my answers will give you an idea about what scientific investigation actually is.

  “As I already mentioned in my previous post, I believe that astrology is still evolving and in experimentation stage. We can't just kill it because its not having all the answers. “
  • How can you say that it is still evolving and in experimental stage when the origins of astrology can be traced back to 2nd century AD? It was initially based on a primitive belief system about the cosmos and as far as I understand have not moved on despite discoveries of new planets and shift in the earth’s rotational axis.
  • Can you explain me the theory behind astrology? What evidence do you have that convinces you that the planetary movements have physical influence on people’s lives? Do you think astrologers can accurately and distinctively predict human destiny from the configuration of the planets?
  • Among the nine planets of the astrologers (navagrahangal) only five are actual planets (Earth, Mercury, Mars, Saturn, Jupitor), one is a star (sun), one is a moon (the moon) and two are imaginary planets that are not real (Raagu and Kethu). Please explain it to me, the principles behind this?
  • There have been quite a few attempts in doing proper controlled study to establish whether there are any truths in astrology and every single one of them have failed (example– Carlson S, A double-blind test of astrology. Nature 1985:318; 419-425.) – This should answer your first question as well. There simply is not any evidence to suggest that its true.
  By the way, if you are interested, James Randi Foundation is willing to offer million US dollars to any person or persons who can demonstrate any psychic, supernatural or paranormal ability of any kind under mutually agreed upon scientific conditions. The foundation is offering it for a while now without any takers.
  In the late 70s Dr. Abraham Kovoor offered an award of one lakh Sri Lankan rupees to those who could make 95 per cent or more correct predictions in an experimental set-up, again with no takers.

  பதிலளிநீக்கு
 8. “But please explain is science complete? Has it explanations for all the facts? How many times science corrected itself from the ideas it found over the years?”

  Nobody ever claimed science is complete and has all the answers. In fact, I would say science is one of the few disciplines if not the only discipline that is not afraid to claim that “kattrathu kaimann alavu, kalaathathu ulahavu”, that we have only scratched the surface in trying to understand many things in the universe and we have a long way to go. Have you heard any established scientists claim that science has all the facts? Science is a self-correcting process that consistently produces descriptions of the real world that more close approximate reality. Scientific investigations have only been thriving from the last century or two or so. The humans have found a lot about the world, the universe in that time. Through meticulous investigations, repeat experiments and logical conclusions. The result is that scientific knowledge is constantly changing but hopefully proceeding toward a more correct view of the world. As Einstein once said “One thing I have learned in a long life: that all our sciece, measured against reality, is primitive and childlike – and yet it is the most precious thing we have.”

  “You mention you are an atheist.(in your blog) I don't have any hard feelings when atheists say things like this. If you're really interested to understand an idea please remove all the prejudices from your mind and learn it. Otherwise you'll never find the truth.”

  I have a very open mind. I did not wake up one morning and suddenly decided that ‘hey, I want to bean atheist’. Nope, far from it. I read a lot, researched a lot and thought a lot. I just can’t see any plausible evidence for a god up there. If you think you can provide me with the evidence, by all means do. I promise you that I will consider it with out any prejudice. I consider lateral thinking, open mindedness and critically evaluating ideas as some of the most important skills a scientist should have in order to try to shed light of the unknown. I ask you to do the same.

  Hope these answered your questions.

  More info for you about the definition of science:

  What science is?
  1.The systematic observation of natural events and conditions in order to discover facts about them and to formulate laws and principles based on these facts. 2. the organized body of knowledge that is derived from such observations and that can be verified or tested by further investigation. 3. any specific branch of this general body of knowledge, such as biology, physics, geology, or astronomy.
  Academic Press Dictionary of Science & Technology

  பதிலளிநீக்கு
 9. Dear Mrs.The Analyst,

  Sister (I prefer to call like this), You have asked interesting questions regarding science and astrology. For last few days i was also thinking to write more articles regarding the same topics.

  I'll reply you ASAP in a new post when i have some time to discuss.

  I would like to respond to these topics in Tamil as most of the visitors may comfortable with Tamil.

  Once again thanks for the good discussion.

  பதிலளிநீக்கு
 10. எனது கருத்தும் சொன்ன விதமும் உங்களுக்குப் பிடிக்கவில்லை. அறிவியலுக்கும் ஜாதகத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை அப்படிக் கேட்டேன்.

  the analyst சொன்னதோடு இந்த என் இரு பதிவுகளையும் படித்துப் பாருங்களேன்.

  http://dharumi.blogspot.com/2006/04/150-12.html


  http://www.blogger.com/posts.g?blogID=12236223&searchType=ALL&txtKeywords=&label=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

  பதிலளிநீக்கு
 11. //எனது கருத்தும் சொன்ன விதமும் உங்களுக்குப் பிடிக்கவில்லை.//

  என்ன தருமி இப்படி எடுத்துகிரிங்க. நீங்க செய்த பகடிக்கு எதிர் பகடி அவ்வளவு தான்.

  இந்த பதிவுகளில் நீங்க புதிதாக எதையும் கேட்டுவிடவில்லை.

  பதில் வரும்

  பதிலளிநீக்கு
 12. ஹலோ ! பத்து பொருத்தம் உண்மையாக இருக்கட்டும். யாரு சரியா ஜோசியம் சொல்லுவாங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது ? எந்த ரெண்டு சோதிடராவது ஒரே மாதிரி கணித்து இருக்காங்களா ? அறிவியல்ன்னு சொன்னா அது சாத்தியப்படனும் :)- பாதி குடும்பத்துல ஜாதகம் பார்த்த ஜோசியரை தேடி அலைஞ்சிகிட்டு இருக்காங்க ! Beware

  பதிலளிநீக்கு
 13. //பத்து பொருத்தம் உண்மையாக இருக்கட்டும்.//

  பதிவை சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன். பத்து பொருத்தம் போதாது முழுமையான பொருத்தம் பார்க்க வேண்டும் என்பதே பதிவின் கருத்து.

  //அறிவியல்ன்னு சொன்னா அது சாத்தியப்படனும்//
  சாத்தியம் தான். சோதிடரின் அனுபவத்தை பொருத்து Accuracy மாறுகிறது. (வைத்தியத்தை போல)

  //பாதி குடும்பத்துல ஜாதகம் பார்த்த ஜோசியரை தேடி அலைஞ்சிகிட்டு இருக்காங்க//
  மறுபடியும் பார்க்கவா ?!! :)

  நன்றி மணிகண்டன் வருகைக்கும் கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)