ஹூசைன் X நிர்வாணம் X வியாபாரம்

கலை என்பது கடவுளுக்கும் கலைஞனுக்குமான கூட்டு பணி, கலைஞன் குறைவாக  ஈடுபடும் அளவிற்கு நல்லது ~அன்ரே கிட்

Art is a collaboration between God and the artist, and the less the artist does the better.  ~André Gide

 

சமீபத்தில் எம் எப் ஹீசைனின் தனிப்பட்ட வாழ்க்கையினால் மறுபடியும்அவரது ஓவியங்கள் பதிவர்களிடம் விவாத பொருளாகி இருக்கிறது. வலைப்பதிவுகளில் மிகப்பிரபலமான கலைஞர்களான எழுத்தாளர் திரு. ஜெயமோகனும், மன நல மருத்துவர் திரு. ருத்ரனும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இருவரின் பதிவுகளையும் படித்து வரும் எனக்கு, எழுத்தாளரான திரு. ஜெயமோகன் ஒரு ஓவியரின் பார்வையில் சரஸ்வதியின் படத்தை கலை கண்ணோடத்தோடு பார்க்கும் படி வாசகர்களை அறிவுறுத்தியதும், ஓவியரான திரு ருத்ரன் ”ஸ்ரீமாதா” விளக்கமளித்து இது இந்திய மதங்களின் வழிகாட்டுதல் அல்ல என்று அறிவுறுத்தியதும் ஒரு மாற்று அனுபவமாக இருந்தது.

 

பொதுவாக வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் பதிவுகளின் சாராம்சம் கடை நிலை வாசகனான என்னை போன்றவர்களுக்கு கீழ் வரும் கருத்துக்களை அறிவுறுத்துவதாக கருதுகிறேன்.

 1. இந்து மதம் அல்லது இந்திய மதம் என்பது தன் தெய்வங்களை நிர்வாணமாக வரைய அனுமதி அளிக்கிறது.
 2. ஒரு ஓவியனுக்கு தன்னுடைய படைப்பை தான் விரும்பிய வகையில் படைக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது.

 

கீழ்வரும் படங்களை பாருங்கள் இவை இரண்டுமே அரை நிர்வாண படங்கள் தாம். இவ்விரண்டு படங்களும் ஒரே விதமான விளைவுகளையா பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன ?

 

bagavaty_967 fw7hg9

 

 

 1. தெய்வங்களின் நிர்வாண உருவகங்கள் பெண்களை உயர்வு படுத்துவதாகவும், வழிப்பாட்டுகுறியதாகவும் இருந்தன. அல்லது குறைந்த பட்சம் உடல் / உடலுறவின் அழகியலை வெளிப்படுத்தவதாக கூட இருந்தன. ஆனால் ஹூசைன் வரையும் படங்கள் அவர் வணங்க தக்கதாகவோ அழகியல் வெளிப்பாடாகவோ உள்ளனவா? நீரில் மூழ்கி கொண்டிருக்கும்; முகமும், கழுத்துமில்லாத சரஸ்வதியின் மூலம்  அவர் விமர்சனங்களை அல்லவா முன் வைக்கிறார் ? (அவரது மேலும் சில படங்கள் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை ?! அவை என்னை பொருத்த அளவில் இப்போது இருக்கும் சூழலில் வெளியிடுவதற்கு தகுதியானவை அல்ல)
 2. மதங்களிலுள்ள ஓட்டைகளை அவர் விமர்சனம் செய்ய துணிந்ததை வரவேற்கிறேன். ஆனால் அவர் தன் மதத்தின் கருத்துக்களில் இருந்தல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? இதை தானே சீர்திருத்த வாதிகளான காந்தி, அம்பேத்கார், ஈவேரா முதலானோர் முன்வைத்தனர் ?  பிற மதத்தினரை புண் படுத்தி தன் மதத்தை முன் நிறுத்தும் மனம் எந்த விதமான பகுத்தறிவினால் ஆனதென விளங்கி கொள்ள முடியவில்லை.

 

--- *** ---

ஒவ்வொரு கலைஞனும் தன் தூரிகைகளை தன்னுடைய ஆன்மாவில் நிரப்பி தன் சுய இயல்பை தன் படங்களில் வரைகிறான். -ஹென்றி வார்ட் பீச்சர்.

Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures.  ~Henry Ward Beecher

 

இப்பதிவு  மதங்கள் பற்றியது மட்டுமள்ள திரு. ஹுசைன் பற்றியது கூட தான். அப்படியே கீழே உள்ள படங்களையும் பாருங்கள். இப்பதிவிற்காக தேடிய போது அவரின் மேலும் சில ஓவியங்கள் கிடைத்தன. இவைகளை எப்படி கலை கண்ணோட்டத்தோடு பார்ப்பதென்று புரியவில்லை ?

 

husain_hw_exhibition_announcement_m hansuperman

 

 1. தன்னுடைய கண்காட்சிக்கு வரும்படி அழைக்க கடவுள் உருவத்தை பயன்படுத்திய வியாபார தந்திரம்? அஞ்சா நெஞ்சர்களின் தேர்தல் நேர கடவுள் உருவ போஸ்கள் ஞாபகத்திற்கு வந்தால் அவர் பொறுப்பல்ல :)
 2. சூப்பர் மேன் பனியன், ஜெட்டியுடன் அனுமன். கடவுள்களின் உருவ பொம்மை பொறித்த பொருள்களுக்கு அமெரிக்காவில் அமோக கிராக்கி.  அமெரிக்க சந்தையில் ஓவியங்கள் விலை போக வேண்டாமா என்ன ? (இப்போதெல்லாம் உள்ளாடையுடன் கூடிய கலைப்படைப்பு என்றாலே ஒரு எழுத்தாளரின் ஞாபகம் தான் வருகிறது ;)

 

எனக்கென்னவோ அவருடைய வாழ்க்கை குறிப்பு, தன்னுடைய வியாபார திறமையின் மூலமும்,எதிர் மறையான புகழின் மூலம் வளர்ச்சியடைந்த ஒரு மனிதர்; தன்னுடைய சுய லாபத்திற்காக சொந்த நாட்டு மக்களிடம் நீங்காத பிளவை ஏற்படுத்தி விட்டு; அவர்களையும் கைவிட்டு தான் விரும்பிய சொர்க்க புரியில் வாழ போவதை போன்ற அனுபவத்தை தான் ஏற்படுத்துகிறது.

குறிப்பு:

திரு ருத்ரன், திரு ஜெயமோகன் வலைப்பதிவுகளில் அவர்களுக்கு எதிராக நிகழ்ந்த தனிமனித தாக்குதல்களுக்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன். மதம் குறித்த கருத்துக்களில் மிகவும் இறுக்கமான நிலை நிலவும் இப்போதைய தமிழ் வலைப்பதிவு சூழ்நிலை கருத்து பரிமாற்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்த நீண்ட மன போராட்டத்தை என்னுள் ஏற்படுத்தியது. இருந்த போதும் மாற்றங்களுக்கான ஆரம்ப விதையாக சிறு நிகழ்வு கூட இருக்கலாம் அல்லவா?

20 கருத்துகள்:

 1. // தனிமனித தாக்குதல்களுக்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்.//

  அது!

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பழமைபேசி.

  பதிலளிநீக்கு
 3. நன்றி உங்களின் இந்த பதிவிற்கு.
  இந்த விஷயம் ஒரு மிகச் சூடான தொடர் பதிவுகளாக ஆனதில் எனது பங்களிப்பும் இருப்பதில் எனக்கு வருத்தமே.

  ஹுசேனின் ஓவியங்கள் கொடுத்த எரிச்சலை விட ருத்ரனின் எழுத்துக்களில் இல்லாத நடு நிலைமையே என்னையும் சற்று எல்லை தாண்டி எழுத வைத்தது என்று எனக்குப் படுகிறது.
  நிர்வாணம் புனிதமா இலையா என்பதில் ருத்ரனுக்கு சந்தேகம் இருப்பதையே அவரது தொடர் பதிவுகளும் அதில் தெறிக்கும் கோபமும், வார்த்தைகளின் தரமின்மையும் திருமத் திரும்பக் காட்டுகின்றன. அவர் என் பின்னூட்டங்களை கூட நடு நிலையோடு படிக்க வில்லை என்று நான் உணர்கிறேன். மேலும் அவர் மாட்டிய கண்ணாடியை கழட்டுபவர் என்று இப்போதைக்கு நான்நம்பவில்லை.
  நான் அங்கு சென்று எதுவும் எழுத விரும்பவில்லை. காரணம் அவரின் ரத்தக் கொதிப்பை மேலும் நான் அதிகப் படுத்த விரும்பவில்லை.

  இந்து மதம் எல்லா நிலைகளையும் வைத்திருப்பது மனிதர்கள் தானே புரிந்து தெரிந்து ஒவ்வொரு படியாக ஏறி வரட்டும் என்று தான். அங்கே இது தான் சரி என்ற திணிப்பு இல்லை. பார்வையாளன் எல்லாமே ஒரே மாதிரி தான் பார்பபான் என்று ஒரு கலைஞன் நினைக்கலாம், ஆசைப்படலாம். ஒரு மன நலமருத்துவர்?
  பத்திரிகைகள் எனக்கு பல காலமாக கொடுத்திருந்த ஒரு மருத்துவரின் பிம்பத்தை அவரே என் முன் போட்டுடைத்த வருத்தம் மட்டுமே எனக்கு இதில் இருக்கிறது.

  கலைஞர்கள் தங்கள் சுதந்திரத்தை அடுத்தவர் ( சம்பந்தமே இல்லாது, எங்கோ ஒரு மூலையில் எவனோ ஒருவனின் ) உயிரை வாங்கியேனும் நிலை நாட்டிவிட முயலும் அவலம் இன்னும் தொடரும் என்று தான்தோன்றுகிறது.

  http://www.virutcham.com

  பதிலளிநீக்கு
 4. ஜெயமோகனின் அந்த பதிவு படித்தேன்.
  அவரின் எழுத்துக்களை முதல் முறை படிக்கிறேன். இந்த பதிவில் அவர் இந்து மதம் குண்டர்கள் பிடியில் சிக்கி தன் சுயம் இழந்து விடுவதை விரும்பாத தன் ஆதங்கத்தை தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். அனால்எதிர் வினை வைப்பவர்கள் எல்லாமுமே வெறியர்கள் என்று ஒரு பொது கருத்து நிலவுகிறதோ என்றும் தோன்றுகிறது. எப்படி இருந்தாலும் அவர் பல முக்கியமான தகவல்கை பகிர்த்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். ஓவியர் குறித்த அவர் கருத்துக்களை அவர் நிலையில் இருந்து எல்லோரும் பார்க்க மாட்டார்கள் என்றாலும் தன் கருத்துக்களை ஒரு பொறுப்புணர்ச்சியுடன் சொல்லியதாகவே எனக்கு தோன்றுகிறது

  virutcham

  பதிலளிநீக்கு
 5. @Virutcham

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Virutcham.

  //நிர்வாணம் புனிதமா இலையா என்பதில் ருத்ரனுக்கு சந்தேகம் இருப்பதையே அவரது தொடர் பதிவுகளும் அதில் தெறிக்கும் கோபமும், வார்த்தைகளின் தரமின்மையும் திருமத் திரும்பக் காட்டுகின்றன.//

  என்பது

  //குண்டர்கள் பிடியில் சிக்கி தன் சுயம் இழந்து விடுவதை விரும்பாத தன் ஆதங்கத்தை தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்//

  சூழ்நிலையின் அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 6. பென்சில் கோடுகளை கோவில் சிற்பங்களோடு ஒப்பீடு செய்து அங்கீகாரம் செய்து கொள்வது, மற்றும் ரவி வர்மா ரவிக்கை போட்டுக் கொடுத்து விட்டானா என்றே ஏளனத்துக்கும் எனது எதிர் வினைஇதோ

  பென்சில் கோடுகள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா? link http://www.virutcham.com/?p=1004

  பதிலளிநீக்கு
 7. நிச்சயம் ஹுசைன் செய்தது, சரி என வாதிட முடியாத பெரும் தவறு. அப்படி அவருக்காக வாதிடுபவர்கள் தன்னைத் தானே அறிவாளிகள் என நினைத்துக் கொள்கிறார்கள். என்ன சொல்ல...

  பதிலளிநீக்கு
 8. @விக்னேஷ்வரி

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Virutcham, விக்னேஷ்வரி.

  பதிலளிநீக்கு
 9. இன்னும் விடியவில்லை !

  இந்த நிலை நீடித்தால் இனியும் விடியப்போவதில்லை !

  பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 10. தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

  http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 11. இதைப்படித்தப் பிறகாவது நிர்வாண நிலை ஓவியங்களை கலை என்பவர்கள் சிந்திக்கட்டும். கலை என்பவர்கள் தங்களது தாய், சகேதாரி மற்றும் மனைவி ஆகியோரை நிர்வாண நிலையில் ஓவியம் வரைந்து அதைப் பொது ஓவியக் கண்காட்சியில் வைத்தால் அதையும் கலை என்று ஆமோதிப்பார்களா?

  ஒட்டு மொத்த இந்துக்களின் உணர்வை புண்படுத்திய ஹசைன் அவர்களின்ஓவியங்களுக்கு எனது கடுமையான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. @VijayaSamundeeswari

  நிர்வாணம் கூட அழகுணர்ச்சியை வெளிப்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். பெண்களை இழிவு செய்யாததாக இருக்க வேண்டும். உடையுடன் கூடிய காட்சியில் கூட ஆபாசத்தை வெளிப்படுத்தும் கலைஞர்கள் (?) இருக்கும் நாட்டில் வேறு என்ன எதிர் பார்க்க இயலும் ?

  இதைவிட கொடுமை கலை எனும் பெயரில் நிர்வான ஓவியங்களை வியாபாரம் செய்வது தான். பண்டைய கலை படைப்புக்களோடு சிலர் இந்த ஓவியத்தை ஒப்பு நோக்குகின்றனர்.

  இதில் உள்ள மிகப்பெரிய முரண்பாடு தாம் வணங்கும் தெய்வங்களுக்கு உருவம் கொடுத்த உன்னத கலைஞர்களின் படைப்புகளையும், பணத்திற்காக படம் வரையும் ஹீசைன் போன்ற கலை வியாபாரிகளின் படைப்புகளையும் ஒரு சமமென கூறுவது தான்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 13. மதங்களிலுள்ள ஓட்டைகளை அவர் விமர்சனம் செய்ய துணிந்ததை வரவேற்கிறேன். ஆனால் அவர் தன் மதத்தின் கருத்துக்களில் இருந்தல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? இதை தானே சீர்திருத்த வாதிகளான காந்தி, அம்பேத்கார், ஈவேரா முதலானோர் முன்வைத்தனர் ? பிற மதத்தினரை புண் படுத்தி தன் மதத்தை முன் நிறுத்தும் மனம் எந்த விதமான பகுத்தறிவினால் ஆனதென விளங்கி கொள்ள முடியவில்லை.
  //

  i second this.

  பதிலளிநீக்கு
 14. //மதங்களிலுள்ள ஓட்டைகளை அவர் விமர்சனம் செய்ய துணிந்ததை வரவேற்கிறேன். ஆனால் அவர் தன் மதத்தின் கருத்துக்களில் இருந்தல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? //

  என்னங்க இப்டி சொல்லிடேங்க ? அவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்.இஸ்லாமிய தூதுவரை இதே போல் வரைந்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முஸ்லிம்கள் இந்துக்களை போல் இழிச்சவாயிக்ளா ?

  பதிலளிநீக்கு
 15. நல்ல பார்வை.. !
  ஒரு பதிவர்.. அவர் சரஸ்வதியை மட்டும் வரைந்து இருக்காரே.. முகமதியரை வரையட்டும் என்று கேட்கிறார்.. என்ன சொல்ல வருகிறார்..
  முகமதியரை வரைந்துவிட்டால் , பின்னர் சரஸ்வதியை வரைந்தது பற்றி இவர் பேச மாட்டாரா?
  அப்போ இவரின் பிரச்னை சரசுவதியை வரைந்தது அல்ல.. முகமதியரை வரையாமல் சரஸ்வதியை வரைந்துவிட்டரே என்பது தான்.
  என்ன விதமான இசம் இது என்று தெரியவ்வில்லை.. இத்தனைக்கு வயது முதிர்ந்த பதிவராம் அவர்,.., கொடுமை டா

  ---


  ராமாயண "ராமனும்" நவீன யுக "ராமன்களும்"
  http://myownscribblings.blogspot.com/2010/04/blog-post.html

  பதிலளிநீக்கு
 16. @முரளி

  நண்பரே சரஸ்வதியோ முகமதியரோ கலையின் நோக்கமும், அதன் விளைவும் சரியான வகையிலும் மக்களுக்கு நன்மை தருவதாகவும் (கவனிக்க மகிழ்ச்சி கூட அல்ல) இருக்க வேண்டும். அதை நாம் எல்லோரும் வரவேற்கலாம்.

  பிறரை மட்டம் தட்டுவதற்காகவும் அதோடு கூட வியாபாரத்திற்கெனவும் படம் வரைந்தால் என்ன சொல்வது ?

  பதிலளிநீக்கு
 17. nalla pathivu sabari, ungalathu pala pathivugalai padithu irukiren. aanal ippoluthuthan comment podugiren

  பதிலளிநீக்கு
 18. @முரளி, @LK

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)