ஜனநாயகமும், இந்தியாவும்

 

கருத்து சுதந்திரமும், பாசிசமற்ற நிலையும் தான் ஜனநாயம் ஒரு நாட்டில் சிறப்பாக நடைபெறுவதற்கான எடுத்துகாட்டுகள். தன் நாட்டின் ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் ஒரு யுஎஸ் குடிமகன் கீழே. அவரது தனிப்பட்ட அரசியல் நிலையை விட்டு விடலாம். ஆனால் அந்நாட்டின் கருத்து சுதந்திரம் தான் நாம் கவனிக்க வேண்டியது.

 

t-shirt-give-tiger-a-breakThanks http://www.stevenhumour.com/2010/07/24/t-shirt-give-tiger-a-break/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+StevenHumour+%28Steven+Humour%29&utm_content=Google+Reader

 

இது இந்தியாவில்/தமிழகத்தில் சாத்தியமா ? ஆளுபவர்களை சிறிய அளவில விமர்சனம் செய்து தன் கருத்தை வெளியிடுபவர்களை கூட என்ன செய்து கொண்டிருக்குறது இந்த அரசாங்கங்கள் ? எந்த குடிமகனாவது அரசியலவாதிகளின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்து விட்டு சுமூகமாக வீடு திரும்புவோம்  என்ற நம்பிக்கையுடன் உள்ளனரா ?  இல்லையெனில இங்கு நடைபெறுவது ஜனநாயகமா ?

 

ஆள்பவர்களுக்கு பயந்து கொண்டு வாழ்வதும் ஒரு சுதந்திர வாழ்க்கையா ? பாரதியும், பகத்சிங்கும், நேதாஜியும் விடுதலைக்காக பாடுபட்டது மக்கள் பயந்து, பயந்து கோழைகளாக வாழ்வதற்கா ? ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமை வாழ்க்கை நம் மக்களை மந்தைகளாக மட்டுமே ஆக்கியிருக்கிறது.

 

சமீப காலங்களில் நிகழும் பாசிச செயல்கள் இந்திய ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி தோல்வியுற்ற நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையை நினைத்து பெருமை பட முடியுமா ? “Proud to be an Indian/Tamilian” புத்தகங்களில் மட்டும் :(

6 கருத்துகள்:

 1. நண்பரே அருமையாக எழுதியிருக்கிறீர்கள்,அந்த டைகருக்கும் ஒபாமாவுக்கும் என்ன பிரச்சனை என்பதை சிறிய குறிப்பாய் எழுதினால் அது பற்றி தெரியாதவர்கள் புரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.நன்றி.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் தமிழ் மணம் பட்டையை மீண்டும் நிறுவி பாருங்கள்,எதோ கோளாறு உள்ளது.

  பதிலளிநீக்கு
 3. @|கீதப்ப்ரியன்|Geethappriyan| டைகர் வுட்ஸுக்கு கொடுக்கும் அதீத விளம்பரத்திற்கு பதிலாக நாட்டின் அதிபரின் நடவடிக்கைகளை கவனிக்குமாறு மீடியாக்களை கேட்டு கொள்கிறார் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. @|கீதப்ப்ரியன்|Geethappriyan| //தமிழ் மணம் பட்டையை மீண்டும் நிறுவி பாருங்கள்// மறுபடியும் அதே பிரச்சிணை தான் நண்பரே. எனவே ஓட்டு பட்டையையே எடுத்து விட்டேன். [தமிழ் மணத்தில் நடைபெறும் ஓட்டு அரசியலில் ஏற்கனவே வெறுப்புடன் இருந்தேன்.]

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. @virutcham வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)