ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)

ரஜினி தமிழ் சினிமா உலகிற்கு என்ன செய்தார் ?

aishwarya-rai-robot-06 தங்களை அறிவு ஜீவிகளாக கருதி கொள்ளும் விமர்சகர்கள் ரஜினி பட வெளியீட்டின் போதும் எழுப்பும் கேள்வி ரஜினி தமிழ் பட உலகிற்கு என்ன செய்தார் என்பதே.

இவ்வினாவிற்கு விடை அளிக்கும் முன்பு தமிழ் பட உலகை பற்றியும், தமிழர்களை பற்றியும் வட நாட்டிலும், வெளி உலகிற்கும், எந்திரன் படத்திற்கு முன் பரப்பபட்டிருந்த அறிமுகம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

 

எந்திரனுக்கு முன் – 1

தமிழ் என்பது ஒரு பிராந்திய மொழி. அசிங்கமான திராவிட உருவத்தையும், தமிழர்களின் ஆழமான சினிமா அறிவின்மையையும் அடையாளமாக கொண்டிருப்பதால் தான் ரஜினிக்கு புகழடைந்திருக்கிறார்.

கருப்பு மந்தை கூட்டத்தின் முட்டாள்தனத்தை சமாளிக்கும் வார்த்தை தான் போனமேனன்.

- மனு ஜோசப், பத்திரிக்கையாளர். (பெயரை கொண்டு இவர் எந்த மாகாண அறிவாளி என எளிதில் புரிந்து கொண்டிருக்கலாம்.)

Tamil is merely a regional language once spoken by Rekha. And they decide that his fame is a consequence of his reassuring Dravidian ugliness, and of the deep cinematic insanity of Tamilians. This is rubbish.

There was something intellectual in calibrating the folly of the dark masses and renaming it ‘phenomenon’.

Manu Joseph http://www.openthemagazine.com/article/voices/the-revenge-of-rajnikanth

 

எந்திரனுக்கு முன் – 2

ரஜினிகாந்த் இந்தி பட உலகின் ஏழை(?) சகோதரியான தமிழ் பட உட உலகின் நடிகர்.

இந்திய தளங்கள் ரஜினிகாந்த்தை பொதுவாக ஜோக்கரை போல சித்தரித்து நகைச்சுவை எழுதுவது வழக்கம்.

பைத்தியத்தனமான அறிமுக பாடலும், சைகைகளும், டிஸ்யும் டிஸ்யும் குத்துக்களும் இல்லாதது ரஜினிகாந்த் படமே அல்ல.

He works in the Tamil film industry, Bollywood's poorer Southern cousin, best-known for its ace cinematographers and gritty crime dramas.

Indian message boards are alight with Rajinikanth jokes, the equivalent of Chuck Norris jokes. ("Rajinikanth was bitten by a cobra. After four days of intense suffering, the snake died.") Onscreen, when Rajinikanth points his finger, it's accompanied by the sound of a whip cracking.

A Rajinikanth movie without his "SUPERSTAR Rajinikanth!" billing, without his crazy-making opening number, without his fingers pointing like whips, without the world's most complicated plot, without the dshoom dshoom of him punching giant thugs into exploding electrical lines—that's just not a Rajinikanth movie at all.

- Grady Hendrix http://www.slate.com/id/2267820/

 

என்ன காரணம் ?

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் தமிழர்களை பற்றிய இத்தகைய தவறான அறிமுகம் ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல. இவை சாருக்கான் போன்ற இந்தி சினிமா பிரமுகர்களால் திட்டம் போட்டு நிறைவேற்றப்பட்டது.

ஓம் சாந்தி ஓம்

சாரூக்கானின் Om Shanti Om படத்தில் ஆரம்பித்தது இது. சங்கர் சாரூக்கானை Robot படத்திலிருந்து நிராகரித்து வெளியேற்றிய பிறகு தமிழர்களை பற்றிய தவறான தகவல்கள் அவரின் அடிவருடி ஊடகங்கள் வழியாக டிவி நாடகங்கள், சினிமாங்கள், பத்திரிக்கைகள் மூலம் பரப்ப பட்டது. (உதாரணத்திற்கு மேற்குறிய செய்திகளே போதும். மேற்கூறியவை சரியாக படம் வெளியாவதறகு சில நாட்களுக்கு முன் வெளியிட்டு விளம்பரப்படுத்த பட்டன.)

இது, இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம், இந்தி சினிமா மட்டும் இந்திய சினிமாவின் அடையாளம் என அறியப்பட செய்யும் கலாசார படையெடுப்பு. அவ்வாறு நிறுவப்பட்டால் தான் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள இந்திய சினிமா உலகை மும்பை தாதாக்கள் மூலம் குறிப்பிட்ட சிலர் மட்டும் சுரண்ட இயலும்.

இந்த அறிமுகங்கள் எவ்வாறு அவர்களுக்கே ஆப்படிக்க பட்டது என்பதை ஆதாரங்களுடன் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

2 கருத்துகள்:

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)