ஆயிரத்தில் ஒருவன் - படக்கதையை எப்படி அணுகுவது ?

 1. ஒரு பெண் தன் குழந்தைக்கு கொடுக்கும் முலையில் இருந்து இரத்தம் வருவதை(பஞ்சத்தினால்) தன் மன்னனுக்கு காட்டும் சித்தரிப்பு எந்த நவீன கதையிலாவது வந்திருக்கிறதா ?
 2. Time machineல் ஏறி 1000 வருடங்கள் பின்னோக்கி பயணித்து சோழர்களிடம் செல்லுவதை போன்ற அனுபவம் வேண்டுமா?
 3. இலங்கையில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கு காட்சியாக விளக்கப்பட வேண்டுமா ?

- அது தான் ஆயிரத்தில் ஒருவனின் கதை.

படக்கதையை எப்படி அணுகுவது ?

இக்கதை சரித்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதை. சோழர்களின் வரலாறு தெரிந்திந்தால் தான் கதையையே புரிந்து கொள்ள முடியும்.

தமிழன் என்று ஒரு வீரமிக்க இனம் இருந்தது.;)  அவர்களிடம் கொள்கை பிடிப்பும், மான உணர்ச்சியும் மிகுந்து இருந்தது. அவர்கள் ஒரு கால கட்டத்தில் தெற்காசியாவின் பெரும்பான்மையான இடங்களை தங்கள் அரசின் கீழ் ஆட்சி செய்தனர். அழிந்து போன அவ்வின மக்களின் உணர்ச்சிகளை திரும்ப பெறுவதற்கான ஒரு சிறு முயற்சி தான் இப்படம்!!!!

 

தமிழகம் + ஈழம் சரித்திரம்

இராஜேந்திர சோழனின் ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழ் அரசாங்கம் !!! wiki: Chola's empire and influence at the height of its power (c. 1050)

250px-rajendra_map_new

 

இப்படத்தில்

நாயகன்(பார்த்திபன்) - ? (Guess)

சோழ மக்கள் - ஈழ மக்கள்

பாண்டியர்கள்- இலங்கை அரசு

பாண்டிய படை - இராணுவம்

 

படம் பார்த்த பின் வரும் சந்தேகங்களும் விளக்கங்களும்

 1. நன்றாக இருக்கிறதா ? இல்லையா ?
  கார்த்தி, ரீமா, ஆண்டிரியா விற்காக செல்பவர்கள் படத்தின் முதல் பாதியிலும், தமிழிற்காக செல்பவர்கள் இரண்டாம் பாதியிலும் தங்களது டிக்கெட் விலையின் ஒவ்வொரு பைசாவிற்கான பலனையும் அனுபவிப்பது நிச்சயம். போதுமா ?
   
 2. சோழர்கள் அவ்வளவு தூரம் செல்ல இயலுமா?
  அக்கால சோழர்கள் கடற்போரில் & பயணத்தில் வல்லவர்கள் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொண்டு இருந்திருப்பீர்கள். எனவே இளவரசன் உயிர் தப்ப தொலைதூர தீவிற்கு செல்லுதல் பிரச்சினையே இல்லை.
 3. ஹெலிகாப்டர் பயணம் ஏன் முதலில் இல்லை ?
  சோழ மக்கள் அடர்ந்த குகை பகுதியில் வசிப்பதாக காண்பிக்க படுகிறது. அவர்களுடைய இருப்பிடம் கண்டு பிடிக்க மற்றவர்களுக்கு ஓலைசுவடியை தவிர வேறு வழி இல்லை. ஒருமுறை கண்டு பிடித்தவுடன் அறிவியல் யுக மனிதர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருதல் எளிது.
 4. கிராபிக்ஸ் மட்டம் ?
  1000  கோடி ஆங்கிலப்படம் பார்த்து விட்டு கிராபிக்ஸ் பற்றிய விமர்சனம் எழுப்புபவர்கள் தயவு செய்து 300 கோடி கூட வேண்டாம் இன்னும் 30 கோடி கொடுத்தால் போதும் செல்வராகவன் மிகச்சிறப்பாக எடுப்பார் என்பதில் ஐயமில்லை. ;)
 5. ஆபாசம் ?
  இப்படத்தை பார்க்க குடும்பத்தவர்க்கும் சொல்லுங்கள்(13 வயதிற்கு மேல்). கண்டிப்பாக ”இராணி 6 இராஜா யாரு?”ல் வருவதை விட குறைவாகவே ஆபாசமான காட்சி அமைப்புகள் உள்ளன.
   
 6. விமர்சனம் செய்ய கூடாதா ?
  தாராளாமாக இப்படத்தை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தமிழர்கள் நாம் எல்லோரும் ஒரு முறை படத்தை பார்த்து விட்டு, வெற்றியடைய வைத்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.

 

இப்படம் தோற்கின் தமிழ் சினிமா உலகத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்விற்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நாம் இன்னும் குருவி, வேட்டைகாரன், வில்லு, பரமசிவன், வரலாறு போன்ற மக்கள் விரும்பும் (?) படங்களை பார்க்க நேரிடும் என்பதை நினைத்து பாருங்கள்.

அண்ணன் கேபிளார் தன்னுடைய கருத்தை வேறுவிதமாக ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், இப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனி இடுகை இட கேட்டு கொள்கிறேன். சுருக்கமாக சொல்வதெனில் பார்த்திபனுக்கும், செல்வராகவனுக்கும் தமிழக விருது நிச்சயம்; தேசிய விருதுக்கு மிகபிரகாசமான வாய்ப்பு உள்ளது.

 

இன்னுமா படத்தை பார்க்க கிளம்பவில்லை ?

19 கருத்துகள்:

 1. நல்லதோர் பகிர்வு, நன்றி :)

  பதிலளிநீக்கு
 2. நல்லா அணுகிருக்கீங்களே..!
  Good One.

  பதிலளிநீக்கு
 3. வாங்க D.R.Ashok, ♠ ராஜு ♠

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 4. நானும் இந்த படம் பார்த்தேன்,ஆரம்பத்தில் இந்த படத்தை பற்றி வந்த அரைவேக்காடு தனமான விமர்சனம் என்னை கோபப்படுத்தியது, இப்போது திருப்தி.....சகோதரா...

  பதிலளிநீக்கு
 5. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் பாண்டிய குல தோன்றலை ஒரு வேசியை போல வசனம் பேச வைத்ததையும் (ரீமா சென் பேசும் ஒரு வசனம் - "எனக்கு என் உடல் மூலதனம்... அதனை எப்படி உபயோகப்படுத்தி காரியம் சாதிக்க வேண்டும் என்று என் தாய் எனக்கு கற்று கொடுத்திருக்கிறாள்...", சைவம் பேசி திரிந்த சோழர்களை ஒரு கொள்ளை கூட்டம் (பார்த்திபனின் அறிமுக காட்சியில், சிலரை இழுத்து வந்து தேர்க்காலில் பலி கொடுத்து அந்த ரத்தத்தின் மீது சோழ இளவல் நடந்து வருவதாக காண்பிக்கிறார்களே...) போல காண்பித்ததையும் பற்றி ஏனப்பா யாரும் எழுத மாட்டேன் என்கிறீர்களே...

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Kaipulla!!

  //ஒரு வேசியை போல வசனம் பேச வைத்ததையும்//
  எல்லோரையும் சொல்லவில்லையே ? குறிப்பிட்ட பரம்பரை விரோதம் தானே காட்டபடுகிறது?
  அரசர்களுக்குள் இருந்த பரம்பரை பகைமை பற்றி சங்க இலக்கியங்கள் படித்து பாருங்கள் தெரியும் !!! பகைமை உணர்ச்சி எந்த அளவிற்கு வேறூண்றி இருந்தது என்பதை காட்டுவதற்கு நல்ல வாய்ப்பில் இதுவும் ஒன்று

  //சோழர்களை ஒரு கொள்ளை கூட்டம் //
  7 எச்சரிக்கைகளையும் தாண்டி வந்து ஒற்று வேலை செய்பவர்களை அரசர்கள் என்ன கொஞ்சுவரா ?!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Mighty Maverick!!

  பதிலளிநீக்கு
 7. //ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை //

  எனது விமர்சனத்தையும் பார்க்கவும். மிக்க நன்றி

  http://bala-balamurugan.blogspot.com/2010/01/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 8. பார்த்து ஓட்டும் போட்டாயிற்று

  நன்றி கே.பாலமுருகன்

  பதிலளிநீக்கு
 9. உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. :)))

  பதிலளிநீக்கு
 10. பகிர்வுக்கு நன்றி !
  சிறந்த விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் .

  பதிலளிநீக்கு
 11. நீங்க சொல்றதுல உடன்பாடு இல்லை. எனக்கு படம் சுத்தமா பிடிக்கலை.

  பதிலளிநீக்கு
 12. @வெற்றி, @சங்கர் @SurveySan, @Suja: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 13. வரலாறு தெரியாத பதிவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. @துபாய் ராஜா: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 15. கலக்கல் பதிவு. படம் காட்டியிருப்பது அழகு. அதன் படி பார்த்தால் வியட்னாம் வருகிறதே..

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச.செந்தில்வேலன்!

  Rajendra Chola also successfully invaded kingdoms of the Malay Archipelago as well as expanding the empire from coastal Burma to Vietnam.[5,6]. தேடி பார்த்ததில் சிதைந்த தமிழ் கோவில்கள் சில வியட்நாமில் இன்னும் உள்ளதாக அறிகிறோம். என்னுடைய ஒரு வியட்நாமிய நண்பரும் உறுதி படுத்தினர்.

  பதிலளிநீக்கு
 17. அருமை .. நல்ல மனதோடு அணுகி இருக்கிறீர்கள்.
  என் மனவோட்டத்தொடு ஒத்துப் போகிறது உங்கள் கருத்துக்கள்.

  //ஆபாசம் ?
  இப்படத்தை பார்க்க குடும்பத்தவர்க்கும் சொல்லுங்கள்(13 வயதிற்கு மேல்). கண்டிப்பாக ”இராணி 6 இராஜா யாரு?”ல் வருவதை விட குறைவாகவே ஆபாசமான காட்சி அமைப்புகள் உள்ளன.
  //
  நெத்தியடி.. நோட்டை நொள்ளை சொல்லுபவர்கள் ஓடிப் போங்க..

  //
  விமர்சனம் செய்ய கூடாதா ?
  தாராளாமாக இப்படத்தை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தமிழர்கள் நாம் எல்லோரும் ஒரு முறை படத்தை பார்த்து விட்டு, வெற்றியடைய வைத்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.
  //  :)

  வரவேற்கிறேன்..

  பதிலளிநீக்கு
 18. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி LOSHAN!

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)