நாராயணா பீத்த பதிவர்கள் தொல்லை தாங்க முடியலடா

விமர்சனங்கள் பற்றிய விமர்சனங்கள்!!!

 

வலையுலகின் பட விமர்சனங்கள் பற்றி ”உன்னை போல் ஒருவன்” வெளியீட்டின் போதே எழுத நினைத்திருந்தேன். ஆனால் ஆயிரத்தில் ஒருவனுக்கு எழும் நேர்மையற்ற விமர்சனங்கள் இதை எழுத தூண்டியது.

 

”ஆயிரத்தில் ஒருவன்” மேல் சிலருக்கு என்ன காண்டு என்று தெரியவில்லை. ஒரு வேளை வேட்டைகாரன் எனும் மாணம் கெட்ட படம் தியேட்டரில் இருந்தே ஓடி விடும் 50 நாள் கூட தாங்காது என்ற பயமோ தெரியவில்லை. என்ன எரிச்சல் என்றால் ”1. இப்படத்திற்கே போக வேண்டாம். 2. குப்பை” எனும் கேண தனமான விமர்சனங்கள் தான். படங்களை குறைந்த பட்சம் கீழ்கண்ட வாறு வகைப்படுத்துங்கள் சாமிகளா

  1. பார்த்து பாராட்ட பட வேண்டிய படங்கள் (அருமை: பசங்க போன்று)
  2. பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டிய படங்கள் (சிந்திக்க தூண்டுபவை: ”உன்னை போல் ஒருவன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்று)
  3. பார்த்து இரசித்து விட்டு மறந்து விட வேண்டிய படங்கள் (மசாலா: சிவாஜி, கில்லி, பில்லா போன்று)
  4. பார்க்காமலேயே புறக்கணிக்க வேண்டிய படங்கள் (மொக்கை: வேட்டைகாரன், வில்லு, ஆழ்வார் போன்று)

 

சரி விடுங்கள் ”ஆயிரத்தில் ஒருவன்”ல் மக்கள் இரசிக்க வேண்டிய விசயங்கள்.

மூல கதை

 1. 1000 வருடங்களுக்கு முட்பட்ட மக்களின் கதையை சொல்ல தேர்ந்தெடுத்திருக்கும் தைரியம்.
 2. இதன் மூலம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று புதினங்கள் பல பகுதிகளாக எடுக்க முடியும் என்ற தைரியத்தை நமக்கு கொடுத்திருப்பது
 3. தெலுங்கு படங்களின் கதை & காட்சி அமைப்பு சீன் பை சீன் காப்பி அடித்து தமிழிற்கும், (அதையும் ஒழுங்காக செய்யாமல்) தெலுங்கிற்கும் ஒரே சமயத்தில் பாதகம் செய்யாமல், தமிழர்களின் கதையை கொடுத்திருப்பது
  snapshot20100119085757

 

பார்த்தினின் உடல் மொழி செதுக்க பட்டிருக்கும் விதம்.

 1. ஒரு மறைந்திருக்கும் மன்னன் மக்களுக்கு எதும் செய்ய இயலாத நிலையில் தன் இயலாமையை நினைத்து உருகும் முதல் காட்சி
  snapshot20100119085545
 2. சிருங்கார இரசம் கொஞ்சும் பெண்ணிடம் கூட ஆவேச நடனம் இட்டு தன் மக்களிடம் தான் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தும் காட்சி
  snapshot20100119085429
 3. ஊருக்கு செல்வதாக மக்களுக்கு அறிவித்து விட்டு அவர்களின் சந்தோசத்தை பார்த்து ஆனந்த படும் காட்சியும் ஆனந்த நடனமும்

  snapshot20100119090048 

  snapshot20100119085811 
    
 4. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னரும் வரும் வீரச்சிரிப்பு
 5. தன் கண் முன்னே தன் மனைவியும், மகளும் கொடுமை படுத்த படுவதை பார்த்து விட்டு மனம் ஒடியும் கடைசி காட்சி

 

 • மக்களின் பஞ்சம் சித்தரிக்க பட்டிருக்கும் விதம். பஞ்சத்தினால் மக்கள் தங்கள் அடிப்படை நாகரீகங்களை மீறும் காட்சிகள்
 • மறந்து விட்ட நம் அடிப்படை தமிழ் வரலாற்றை & உணர்ச்சியை நம் கண் முன்னே நிறுத்தி இருப்பது
 • பழம் பெரும் பாடகர் PB Srinivasன் குரலை திரையில் கேட்கும் வாய்ப்பை அளித்திருப்பது

 

[விமர்சனங்களை ஏகாம்பரங்கள் பதிவில் பார்த்து கொள்ளவும்]

 

என்னை பொறுத்த வரையில் முக்கியமான கதை இரண்டாவது பகுதியில் தான் வருகிறது. பார்த்திபன் நடிக்க வில்லை; வாழ்ந்து விட்டார். இயக்கமும் அருமை. இதை விமர்சனம் செய்த முண்டங்களுக்கு தமிழர்களை/தமிழை புரிந்து கொள்ளும் உலக அறிவு(?) இன்னும் வரவில்லை போல. நல்ல வேளை இம்மக்களை புரிந்து கொண்டு சில் சீன்களை செல்வராகவன் முன் பகுதியில் வைத்தார். இல்லாவிடில் இது போன்ற தமிழ் தற்குறிகள் மூலம் படம் தோல்வி அடைவது நிச்சயம்.

 

நம்முடைய ஆட்கள் மசாலா படங்கள் எல்லாவற்றையும் இது தமிழ் படம் எனும் ஒற்றை வரியில் தாண்டி செல்கின்றனர். (அதாவது தமிழ் படம் என்றாலே கேவலமாக இருப்பது வழக்கமாம்) ஆனால் இது போன்ற புது முயற்சிகளுக்கு ஆங்கில படத்தின் உச்ச கட்ட காட்சிகளை ஒப்புவமை செய்து தங்களது சுய சொறிதலை வெளிப்படுத்துவர். ஐயா நீங்கள் எல்லாம் தெரிந்த பீட்டர் ஏகாம்பரம் தான் ஒப்பு கொள்கிறோம். தள்ளி நில்லுங்கள் தமிழ் காற்று வரட்டும். 

 

ஒருவர் கூறுகிறார். “விசய் நடிக்கிறது உலகப்படம் அல்ல,மசாலா படம்... அதுல விசய் அம்பது அடி அல்ல, இமயமலைல இருந்து குதிச்சு கன்யாகுமரியை ரீச் பண்ணுவாரு. ஆனா தமிழ் படத்த அடுத்த கட்டத்துக்கு நகட்ரோம்னு சொல்றவங்க ஒழுங்கா படம் எடுக்கணுமா வேண்டாமா..”

 

அதாவது ஊரறிந்த ?? தொண்டர்கள் உத்தமியின் சேலை நழுவியதை பார்த்து கமெண்ட் அடிப்பது போல (வேண்டாம் நான் இதற்கு மேல் எழுதினால் இன்னும் கடுமையாகி விடும்).

 

43 கருத்துகள்:

 1. நான் படித்த விமர்ச்சனங்களில் உங்கள் விமர்ச்சனம் நச்...

  பதிலளிநீக்கு
 2. @கிள்ளிவளவன், @Sangkavi, @செந்தழல் ரவி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. உங்கள் விமர்ச்சனம் நச்....

  பதிலளிநீக்கு
 4. @ஜெட்லி, @சிவன்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. நேர்மையான விமர்சனம்

  பதிலளிநீக்கு
 6. பதிவில் கடுமை இருந்தாலும் , நீங்கள் சொல்ல வந்தது சரியே.
  இது போன்ற படங்கள் தோல்வி அடைய கூடாது.

  பதிலளிநீக்கு
 7. நியாயமான அறச்சீற்றம். உங்கள் கருத்தையொட்டிய எனது பதிவு.

  சோழன் செல்வராகவனும் பதிவுலக பாண்டியர்களும்.....
  http://rajasabai.blogspot.com/2010/01/blog-post_16.html

  பதிலளிநீக்கு
 8. சபரிநாதன்..

  தலைப்பில் கவனம் தேவை.. கொஞ்சம் நாகரிகமும் தேவை..

  பீத்த என்பதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்காவது தெரியுமா..?

  எல்லாருக்கும், எல்லாருடைய படமும் பிடிக்கும் என்பது கட்டாயமில்லை. பிடிக்கவில்லையெனில் அவரவர் கருத்தை சொல்லத்தான் செய்வார்கள்..!

  உங்களது கருத்துடன் ஒன்றுகூடவில்லை என்றால் உடனேயே அவர்களை இழிவுபடுத்தி பேசுவது நாகரிகமான செயலல்ல..!

  வருந்துகிறேன்..!

  பதிலளிநீக்கு
 9. @sarvan, @அஹோரி, @யூர்கன் க்ருகியர், @துபாய் ராஜா, @Karthikeyan G, @Kamal
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 10. @துபாய் ராஜா
  உங்களது பதிவு பார்த்தேன். நன்று

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா19/1/10 5:37 பிற்பகல்

  சபரி,

  சொல்ல வந்ததை நேர்மையான யாரையும் புண்படுத்தாத வார்த்தைகளில் சொல்லப் பழகுங்கள்.

  உங்கள் பதிவின் கருத்துடன் உடன்பட்டாலும் வார்த்தைகள அநாகரீகமாக இருக்கின்றன எனபதால் உடன்பட முடியவில்லை.

  குறிப்பாகப் பதிவுத் தலைப்பு. வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. @உண்மைத் தமிழன், @வடகரை வேலன்

  வாங்க அண்ணே!

  ஒரு குறிப்பிட்ட உள் நோக்கத்திற்காக இப்படத்தை ஒழிக்கும் நோக்கில் இடப்பட்ட கருத்து திணிப்புகளுக்கு மட்டுமே எதிரான பதிவு. இதை இடுகையிலேயெ சொல்லி உள்ளேன்.

  ஆயிரத்தில் ஒருவனை பிடிக்காதவர்களுக்கு எதிரான பதிவல்ல. உண்மையில் விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். பார்க்க http://sabaritamil.blogspot.com/2010/01/blog-post.html

  “ஆயிரத்தில் ஒருவன் ஒரு குப்பை அந்த படத்திற்கு போக வேண்டாம் எனும் பிரச்சாரம் நடந்ததே அதற்கு மட்டுமே எதிரானது”

  @வடகரை வேலன்: இது உங்கள் பதிவிலேயே நடந்தது அல்லவா?

  இவர்களுக்கு பயன்படுத்த ஒரு நல்ல பெயரை எனக்கு பரிந்துரை செய்யுங்கள் மாற்ற தயாராக இருக்கிறேன் :)

  நன்றி

  பதிலளிநீக்கு
 13. சுய எள்ளல் பதிவுகளில் முதலிடம் இதற்குதான். சூப்பர் தலைவரே

  பதிலளிநீக்கு
 14. நாங்க கொஞ்சம் மென்மையாக சொன்னோம். நீங்க கடுமையாக சொல்லி இருக்கிங்க!

  பதிலளிநீக்கு
 15. @கார்க்கி, @குட்டிபிசாசு, @கிரி
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  @கார்க்கி
  அவரவர் கவலை அவரவர்க்கு போல ?! :) ஆனாலும் உங்களை மிஞ்ச முடியாது

  பதிலளிநீக்கு
 16. சொல்ல வந்த விடயம் சரி என்றாலும் கொஞ்சம் கடுமையாக இருக்கோ

  பதிலளிநீக்கு
 17. நண்பர்களே,

  பீத்த என்ற சொல்லையே எல்லோரும் சுட்டி காட்டுவது ஏன் என்று புரியவில்லை. கொங்கு வட்டார வழக்கில் பீத்த என்பது தற்பெருமையை / உபயோகமற்ற என்பதை குறிக்கிறது. (நான் இப்பகுதியை சேர்ந்தவன்)
  http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_26.html

  வேறு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா ? என்ன ?

  பதிலளிநீக்கு
 18. @தர்ஷன், @Tamilmoviecenter
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 19. நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை.

  அன்பரசு செல்வராசு

  பதிலளிநீக்கு
 20. //நாங்க கொஞ்சம் மென்மையாக சொன்னோம். நீங்க கடுமையாக சொல்லி இருக்கிங்க//

  அதே!
  http://cdjm.blogspot.com/2010/01/blog-post.html

  பதிலளிநீக்கு
 21. @Anbarasu Selvarasu, @ஜோ/Joe
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 22. சபரி

  சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பதிவுலகில் தமிழினத்தை அழிப்பதை தேசீயத்தின் பெயரால் நியாயப்படுத்துகிற அயோக்கியத்தனத்தை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்வதைக்கூட "கருத்து" என்று சொல்பவர்கள் -
  அறவான்-களாக உங்களுக்கு உபதேசம் செய்ய வந்தால் அதைப் புறந்தள்ளுங்கள்.

  தொடர்க உங்கள் பணி :)

  பதிலளிநீக்கு
 23. இந்த பதிவிலிருந்து என்ன புரிகிறது என்றால் படத்தில் பார்த்திபன் நன்றாக நடித்துள்ளார் என்பதே.
  மற்ற படி ஒன்றும் சொல்வதர்க்கு இல்லை.
  முரளி.

  பதிலளிநீக்கு
 24. @நியோ / neo, @K.MURALI
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  @நியோ / neo: புரியலிங்க

  @K.MURALI
  இப்பதிவின் படங்களை பார்த்ததோடு படம் பற்றிய கருத்துக்களையும் படித்தீர்கள் என்றே நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. well said sir this is the correct review thank you for this type of review to boost the people to make film like that and this is the starting point of new face of tamil cinema

  பதிலளிநீக்கு
 26. தங்களுடைய ஆ.ஒ. பற்றிய இரண்டு பதிவுகளையும் பார்த்தேன். பொதுவாகப் பேசாமல், சில விசயங்களைக் குறிப்பிட்டு, அழகாக, நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
  அருமை.

  பதிலளிநீக்கு
 27. There are many spelling mistakes ... please take care of that in the next posts

  பதிலளிநீக்கு
 28. அந்த படங்கள் எல்லாம் குறுந்தகடிலிருந்து எடுக்கப்பட்டவையா..?

  பதிலளிநீக்கு
 29. @resh, @அதி பிரதாபன், @madu, @TBCD
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  @madu: சர்ரிங்ணா

  @TBCD : நக்கீரன் போட்டோ போடரதுக்கு முன்னாடி கடை கடையா (சைட்) ஏறி இரங்கி போட்டோ போட்ட பதிவுங்ணா.

  பதிலளிநீக்கு
 30. நல்ல பதிவு சபரி. பார்த்திபனின் முகபாவனைகள் அருமை!!

  பதிலளிநீக்கு
 31. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச.செந்தில்வேலன்

  பதிலளிநீக்கு
 32. Well said Sabari...I have not seen the movie yet, but i appreciate Selvaraghavan's guts to make a movie of this type...

  பதிலளிநீக்கு
 33. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அது சரி

  பதிலளிநீக்கு
 34. தங்களது பதிவைப் பற்றி - மிக நன்று.

  ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி விமர்சிப்பவர்கள் முதலில்
  சோழ மற்றும் பாண்டியர்களின் வரலாறை அறிந்தப் பிறகு விமர்சித்தால் நன்றாய் இருக்கும். அதிலும் குறிப்பாக பாண்டிய அரசவம்சத்தின் வழியான பாத்திரமான ரீமாசென்னின் படைப்பைப் பற்றி விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் அமரர் திரு.கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தை படித்தப் பிறகாவது அதில் படைக்கப்பட்ட நந்தினியின் படைப்பில் பாண்டியர்களின் பகைமை உணர்வை அறிந்துக் கொள்ளட்டும்.

  பதிலளிநீக்கு
 35. @VijayaSamundeeswari
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  இப்படம் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதல்ல. இருந்த போதிலும் மன்னர்களுக்குள் இருந்த பகையுணர்ச்சி பழந்தமிழ் பாடல்களிலேயே அறிவிக்க பட்டது தான்

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)