சோதிடம்-7 சந்திர சுழற்சியும், ராகு( Rahu), கேது (Kethu) வின் அவசியமும்?

ராகு( Rahu), கேது (Kethu) வின் அறிவியல் தன்மைகள்

ராகு கேதுக்கள் பற்றி தெரிந்து கொள்ள புவி, நிலவு, ரவி பற்றி அடிப்படைகள் அவசியமானது ஆகும்.

 

புவி சுழற்சி

globespin  axialtiltobliquity

 

 • கோள (உருண்டை) வடிவ பூமியானது தன்னையும், சூரியனையும் கடிகார எதிர் திசையில் சுற்றுகிறது. 
 • முதல் படத்தில் உள்ளது போல் புவி ஒரு குறிப்பிட்ட அச்சை (Rotation Axis) கொண்டு சுற்றினாலும் அவ்வச்சானது சூரியனுக்கு நேராக இல்லை.
 • அச்சின் மேல்பகுதி  வட துருவம் (North Celestial Pole) எனவும் கீழ் பகுதி தென் துருவம் (South Celestial Pole) எனவும் அழைக்கப்படும். புவி அச்சை கொண்டு பூமத்திய பகுதியை ஒரு கற்பனை கோடு வரைந்தால் கிடைப்பது பூமத்திய ரேகை (Celestial Equator) எனப்படும்.
 • புவி அச்சும் பூமத்திய ரேகையும் (Rotation Axis) சூரியனுக்கு 23 டிகிரி சாய்ந்துள்ளது. இந்த சாய்வானது Axis tilt or Obliquity என்று அழைக்கப்படுகிறது.

 

சந்திர சுழற்சி

lunar_perturbation

 • நிலா புவியையும், புவி சூரியனையும் நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன. அதாவது நிலா புவியை ஒரு குறிப்பிட்ட நாள்களில் அருகாமையில் இருக்கும். புவிக்கு நிலா மிக அருகில் இருக்கும் இடம் Perigee எனப்படும்[During perigee, the moon is at it's closest distance to the earth (about 375,200 km)]. இதே போல நிலா புவிக்கு மிக தொலைவில் இருக்கும் இடம் Apogee எனப்படும் (the moon is at it's greatest distance[about 405,800 km] from the earth)
 • நிலா ஒரு முறை புவியை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 29.5 நாள்கள். இது சினாடிக் மாதம் Synodic Month எனப்படும்
 • புவியும் சூரியனை சுற்றி வருவதால் ஒரு மாதத்தில் தோராயமாக 360 பாகையில் 12ல் ஒரு பங்கு சுற்றுகிறது.
 • எனவே நட்சத்திர மண்டல குறியீடாக கொண்ட வான் காட்சியில் அதே நட்சத்திரத்தில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 27.3 நாள்கள். இது சைடீரியல் மாதம் Sidereal Month எனப்படும. இதை கீழுள்ள வீடியோவின் மூலம் விளங்கி கொள்ளலாம்.
 
 

 

350px-Earth-Moon

மேலேயுள்ள படம் கிரகணங்கள் தோன்றுவதை புரிந்து கொள்ள முக்கியமானது ஆகும். இப்படத்தில் புவிசுற்றுபாதை நீல நிறத்திலும், நிலவின் பாதை சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளது.

 • சந்திர சுழற்சி படத்தில் குறிப்பிட்டபடி சூரியனது பாதையில் நிலவின் பாதை இரு இடங்களில் வெட்டும்.
 • சந்திரன் எதிர்கடிகாரதிசையில் சுற்றுவதால் முதலில் வெட்டும் இடம் Ascending  Node (AN) எனவும் அதன் எதிர்பகுதி Descending Node (DN)  எனவும் அழைக்கப்படும்.
 • இப்படத்தில் குறிப்பிட்டபடி சந்திரன் புவியை சுற்றும் பாதை பூமியின் சுற்றுபாதைக்கு சிறிதளவே மாறுபடுகிறது. வித்தியாசம் 5.14 பாகை மட்டுமே.
 • எனவே சூரிய சந்திர பாதைகள் வெட்டும் புள்ளிகளில் சந்திரனும் சூரியனும்  நேராக வரும் போது மட்டுமே கிரகணங்கள் தோன்ற முடியும் என்பது உணர தக்கதே.

 

மேலும் சில அறிவியல் துளிகள்

 • புவியின் விட்டம் (Actual diameter of the earth) ~12,756 km
 • நிலவின் விட்டம் (Actual diameter of the moon) ~3476 km
 • ரவியின் விட்டம் (Actual diameter of the sun) 1,390,000 km
 • புவி நிலவிற்கு இடையேயான தூரம் (Average distance between the earth & moon) ~384,000 km
 • புவி ரவிக்கு இடையேயான தூரம் (Average distance between the earth & sun) ~150,000,000 km
 •  

  அடுத்த பகுதி: சோதிடம்-8 கிரகணங்கள், ராகு( Rahu), கேது (Kethu) க்களால் ஏற்படுவது உண்மையா ?

  [தொடரும்]

  2 கருத்துகள்:

  1. பெயரில்லா8/6/10 8:01 பிற்பகல்

   கிரகணங்கள் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

   பதிலளிநீக்கு
  2. @venkatesan,siva வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

   பதிலளிநீக்கு

  எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)