அங்காடி தெரு - அடித்தட்டு மக்களின் பிம்பம்

1227005292ஒரு திரைப்படத்தினுடைய வெற்றியின் அளவுகோல் ”தன்னையும் பார்வையாளனையும் ஒன்றிணைத்து எவ்வளவு தூரம் அவனது உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது” எனில் அங்காடி தெரு என்பது மிகப்பெரிய வெற்றிபடம் என்பதில் ஐயமில்லை. படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் அடித்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதால் எளிமையுடன் ஒன்றி விட முடிகிறது.

 

அங்காடி தெரு படம் பார்க்கும் போது எதிர்பாராத சில நேர்மறை சிந்தணைகளை உடைய மனிதர்களை உணர முடிந்தது, படமானது சில எதிர்மறை குணாதிசயங்களை காண்பிப்பதாக பல வலையுலக விமர்சனங்கள் மூலம் படித்திருந்த போதிலும். ஒரு வேளை அதிகமாக விமர்சனங்களை படித்ததன் காரணமாக அப்படிபட்ட காட்சிகளின் மேல் ஏற்பட்ட சுவாரஸ்ய குறைபாடு காரணமாக இருக்கலாம்.

 

 

 உண்மையான ஹீரோயிசம்

 • எளிய மனிதர்களின் இனிய காதல் உணர்வில் ஆரம்பிக்கிறது படம்.
 • தான் கட்டடம் கட்டும் தொழில் செய்தாலும் தன் மகனை பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் தந்தை.
 • ”பொறியியல் படிக்க வைத்தாலும் என்னை என்ன ஃபாரினிலா படிக்க வைத்தாய்” என்று கேட்கும் மேல்குடி இளைஞர்கள் நிறைந்த நாட்டில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி அடிமை தொழிலுக்கு சென்றாவது குடும்பத்தை காக்க நினைக்கும் பொருப்பு மிக்க இளைஞன் பாத்திரம்.
 • தன் நண்பனுக்காக அவனுடன் செல்லும் விடலை தனமான ஆனால் நம் இளம் வயதில் சந்தித்த நேர்மையான நண்பர்கள்.
 • எப்படிபட்ட சூழ்நிலையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற துடிக்கும் அங்காடி தெருவின் கடின உழைப்பாளிகள்
 • வேலை வெட்டி இல்லையெனிலும் அழகான பெண்ணை பார்த்தவுடன் மயங்கி விடுவதாக காட்டும் படங்கள் மத்தியில் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என பழகி பார்த்து ஆன்மாவை காதலிக்கும் எதார்த்த நாயகன்/நாயகி
 • ”யானை வாழும் காட்டில் தான் எறும்பும் வாழ்கிறது” என சீறும் நாயகன்
 • தன் இரு கால்களையும் இழந்து தன் எதிர்காலத்தை முழுதும் தொலைத்த நாயகியிடம் “நாம் இப்பவே கல்யாணம் செய்துக்கலாம் கனி” என்னும் ஒற்றை வாக்கியத்தில் ஒரு முழு வாழ்வின் காதலையும் வெளிப்படுத்தும் காதலன்.
 • என்றாவது முன்னேறி விடுவோம் என்பதன் அடிப்படையில் உழைத்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை படத்தின் முடிவு

 

எந்த ஒரு கடின சூழ்நிலையையும் தங்களால் முடிந்த அளவு நேர்மையாக எதிர்க்கும் சுய மரியாதை உணர்வு தான் படத்தின் அடி நாதம். காதல் தோல்வியில் தற்கொலை, பரிட்சை தோல்வி தற்கொலை,  பஞ்சு முட்டாய் தரவில்லை என தற்கொலை முதலிய நிரம்பிய சமூகத்தில் போராடும் உணர்வை வாழ்வின் அடி நாதமாக வெளிப்படுத்தும் இயக்குனர் & கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

 1. அங்காடி தெரு திரைப்படம் சீக்கிரம் பாக்கனும்.

  பதிலளிநீக்கு
 2. @Ramesh

  கண்டிப்பாக பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)