சோதிடம் – 2 அடிப்படைகள்

சோதிடம் ஒரு வானவியல் பிரிவில் ஒன்றா ?

வானவியல் என்பது வானில் பல்வேறு பொருள்கள் இருக்கும் பௌதீகமான தன்மைகளை கண்டறிய்வும், குறிப்பிடவும் பயன்படுகிறது. சோதிடம் என்பது வானவியல் மாற்றங்கள் எவ்வாறு ஜீவராசிகளை அல்லது கிரகங்களை பாதிக்கின்றன என்பது பற்றியது. சோதிடம் கணக்கில் எடுத்து கொள்வது கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள் மட்டும் தான்.  இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றன.

Astronomy deals with the study of the location, motion, and nature of objects in space. Astrology is the interpretation of the influence of the heavenly bodies on human affairs.

சோதிடம் என்பதும் வானியல் என்பதும் வேறு வேறு. சோதிடம் என்பது வானியலின் மாற்று அல்ல. உண்மையில் சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது.  வானவியல் இல்லாமல் சோதிடம் இல்லை. 

வானவியலில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. சோதிட விதிகளை ஏற்படுத்திய முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் அறிந்தவற்றில் உள்ள சரியானவற்றை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும். இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறப்படுகின்றன.

 

சோதிடத்தின் அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன ?

சோதிடத்தின் செயல்பாட்டை கிளஸ்டர் அனலைசிஸ் (Cluster analysis) முறைமை மூலம் விளக்கலாம். அதாவது மனிதர்கள் பிறந்த காலகட்டத்தில் இருந்த கிரக நிலைகளை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பலன்களை பதிவு செய்வது(observation).  பிறகு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புள்ளி விவர அடிப்படையில் மனிதர்களின் கிரக நிலைகள் மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்களை ஒப்பீடு செய்து (analysis) கிரகங்களின் பலன்கள் நிர்ணயம் செய்யபடுகிறது. இப்பலன்கள் மற்றவர்களுக்கு நிகழ கூடிய வாய்ப்பு சதவிகிதம் (output) தரப்படுகிறது.

சிலர் சோதிடம் முடிவான முடிவுகளை தருவதில்லை என குறைபடுகின்றனர். சிலர் சோதிடர் சொல்வதையே முடிவு எனவும் கருதுகின்றனர். நன்றாக கற்றறிந்த சோதிடர் எதையும் முடிவாக சொல்ல கூடாது என்பது தான் சோதிடத்தின் அடிப்படையே. நிகழ்தகவு காசை சுண்டிவிட்டால் நிகழ கூடிய வாப்பு சதவிகிதம் என்பதை  சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ விழுவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறதே என்பது போன்றது. சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது.

இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.
இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோய் வருவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது.

 

 

சோதிடம் புவியை மையமாக கொண்டு கிரகங்களின் பாகைகளை கணக்கிடுவது ஏன் ?


சோதிடம் உயிரினங்கள் குறித்து சொல்ல படுவது. மனிதர்கள் இருப்பது பூமியில். எனவே தான் பூமியை சுற்றி பிற கிரகங்கள் உள்ள பாகையை வைத்து சோதிடம் சொல்கிறார்கள். சோதிடம் கணக்கிடப்படும் உயிரினம் எந்த கிரகத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தை மையமாக கொண்டு பலன்கள் சொல்ல வேண்டும். உதாரணமாக செவ்வாயில் இருக்கும் மனிதனுக்கு செவ்வாயை வைத்து சோதிடம் சொல்ல வேண்டும்.

ஏன் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கே வரவில்லை ?

சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தப் படுத்தி குழப்பி கொள்ள தேவையில்லை. புவிக்கு ஏற்படும் மாற்றங்களை காண புவியை பொருத்து மற்ற கிரகங்களின் நிலையை காண வேண்டும் என்பது எளிதில் புரிந்து கொள்ள கூடியதே. சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது & ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது.

 

27 நட்சத்திரம் என்பது பொய் தானே ?

வானில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முட்டாள் தனமானது என்பதும் பெரியோர் வாக்கு தானே ? பிறகு எப்படி 27 நட்சத்திரங்கள் என்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ?

அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லே புவியின் வெவ்வேறு பாகைகளில் உள்ள நட்சத்திர தொகுதிகளை தான் குறிக்கிறது. தனித்த நட்சத்திரங்களை அல்ல.

 

 zodiac-sky-200X200zodiac-signs-1

 

சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.
டிகிரி என்னும் முறை கண்டு பிடிக்க படாத அக்காலத்தில் வெவ்வேரு இடங்களில் இருந்த நட்சத்திர தொகுதிகளை வைத்து 360 டிகிரியை வகைப்படுத்தினர் அவ்வளவு தான். அவை நாம் வானத்தில் காணும் நட்சத்திரங்களில் 27 மட்டுமே அல்ல. நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து மற்ற கிரகங்கள் வானில் இருக்கும் பாகையை அடையாளம் கண்டு கொண்டனர்.

logo1

நட்சத்திர பாதம் எனும் விளக்கத்தை அறிந்தால் ”சோதிட நட்சத்திரம்” தற்போது நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர பகுதிக்கு பாதங்கள் என்று பெயர்.

360 டிகிரி = 27 நட்சத்திரங்கள்  = 108 பாதங்கள் (27 *4)

சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது.  இச்சிறுபகுதி கலை எனப்படும்.

1 பாகை = 60 கலை

இதன் மூலம்
1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள என அறியலாம்.

 

CircularAstrologicalPosters-2

 

http://en.wikipedia.org/wiki/Zodiac

http://www.ehow.com/how_2136263_zodiac-sky.html

[தொடரும்]

68 கருத்துகள்:

  1. சூரியனிலிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்களையும், அண்டவெளியில் சுற்றி திரியும் காஸ்மிக் கதிர்களையும் , பூமியை சுற்றி இருக்கும் மின் காந்த வெப்ப சக்தி உள்நுழைய விடுவதில்லை, அப்படி நுழைந்தால் உயிரினங்கள் முதலில் கண் பார்வை இழக்கும், பின் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழக்கும்னு அறிவியல்(தமிழ் இல்ல) சொல்லது! ஆனா சோதிடம் எதிர்மறையா சொல்லுது!

    என்ன பண்ணலாம்!
    விஞ்ஞானிகள் எல்லாம் டுபாக்கூர், அறிவியல் தமிழ் தான் உண்மைன்னு சொல்லிரலாமா!?

    பதிலளிநீக்கு
  2. @வால்பையன்
    //ஆனா சோதிடம் எதிர்மறையா சொல்லுது!//

    ஆதாரம் குடுங்க வால்பையன்

    பதிலளிநீக்கு
  3. மற்ற கிரகங்களில் இருந்து வரும் கதிர்கள் தானே உயிர்களின் மனநிலையை பாதிக்குதுன்னு ஜோதிடம் சொல்லுது, அப்ப இல்லையா!?

    பதிலளிநீக்கு
  4. @வால்பையன்
    //சூரியனிலிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்களையும், அண்டவெளியில் சுற்றி திரியும் காஸ்மிக் கதிர்களை//

    இவைகள் மட்டும் தான் சக்திகளா ? இவற்றை பொருத்து தான் மன நிலை பாதிக்குதுன்னு சோதிடம் எந்த இடத்தில் சொன்னது ? ஆதாரம் இருக்கா ?

    பதிலளிநீக்கு
  5. //
    இவைகள் மட்டும் தான் சக்திகளா ? இவற்றை பொருத்து தான் மன நிலை பாதிக்குதுன்னு சோதிடம் எந்த இடத்தில் சொன்னது ? ஆதாரம் இருக்கா ? //


    இவ்வளவு சக்திவாய்ந்த கதிர்களே உள்லே வரமுடியவில்லை! சக்தியற்ற கோள்களிலிருந்து வரும் கதிர்கள் எப்படி உள்ளே வரும்!, மனநிலையோ, உடல்நிலையோ அங்கே இருக்கும் கிரகம் இங்கே மாற்றம் நிகழ்த்த நீங்க என்ன காரணம் சொல்றிங்களோ அதயே வச்சுகோங்க!

    நீங்க ஒரு ஆதாரம் கொடுத்தா நானும் தெரிஞ்சிகுவேன்!

    பதிலளிநீக்கு
  6. @வால்பையன்

    Natural Disasters, Prof. Stephen A. Nelson, Tulane University. இவர் ஒரு அறிவியல் அறிஞர். சந்திரனின் சஞ்சாரத்திற்கும், கடல் நீரோட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பற்றி எழுதி உள்ளார்.

    http://sabaritamil.blogspot.com/2009/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் தெரியும்

    low tide, hige tide வரக்காரணம் சந்திரனின் ஈர்ப்பு தான்! அதே போல மற்றொரு விஞ்ஞானி சந்திரன் பூமியில் இருந்து பிய்த்து எறியபட்ட கல்துண்டு தான் என்று சொல்லியிருக்கிறார்!

    பூமியில் இருந்து வெளியே எரியபட்ட மற்றொரு கல் எப்படி மனிதர்கள் மேல் பாதிப்பு ஏற்படுத்தும்!, அந்த கல் தான் இங்கேயே இருக்கே!

    பதிலளிநீக்கு
  8. @வால்பையன்
    //சக்தியற்ற கோள்களிலிருந்து வரும் கதிர்கள் எப்படி உள்ளே வரும்!

    low tide, hige tide வரக்காரணம் சந்திரனின் ஈர்ப்பு தான்!

    பூமியில் இருந்து வெளியே எரியபட்ட மற்றொரு கல் எப்படி மனிதர்கள் மேல் பாதிப்பு ஏற்படுத்தும்!,
    //
    ha ha ha :))

    சந்திரனுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கா இல்லையா? அது பூமிக்கு வந்து அதன் நிலையை பாதிக்குதா இல்லையா ?

    The average person is about 70% water by weight! If you are 200 pounds, that means 140 pounds of your body is made up of water.

    Water is critical for all body functions - from moving vitamins around your system to helping your brain think more quickly. It is critical that you have as much water as you can in you (at a healthy level, of course) so that your body can do what it needs to do - including losing the fat.

    (சுருக்கமாக) மூளையின் சிந்திக்கும் திறன் உடலில் உள்ள நீரின் அளவை, ஓட்டத்தை பொருத்து இருக்கிறது.

    Although it is present in all parts of the body, it is more in organs such as lungs and brain and fluids such as blood, lymph, saliva and secretions by the organs of the digestive system.
    http://members.rediff.com/sumitjaitly/water.htm

    //For your body to work properly, the conditions inside it, such as water, pH and salt levels, need to be kept constant//
    http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=1&ved=0CBUQFjAA&url=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Fscience%2Fhumanbody%2Fbody%2Ffactfiles%2Fkidneys%2Fkidneys.shtml&ei=rzvyS8yPNYm0rAegsN2jDQ&usg=AFQjCNG9atH2qimJ7IS1L-dy6tLR8ZPrlw&sig2=uJWh9EUG0XyTY3BU9V_ZPg
    மிகப்பெரிய சமுத்திரத்தை பாதிக்கும் போது மற்ற உயிரினங்களின் மன நிலையை பாதிக்கிறதா இல்லையா ?

    பதிலளிநீக்கு
  9. //மூளையின் சிந்திக்கும் திறன் உடலில் உள்ள நீரின் அளவை, ஓட்டத்தை பொருத்து இருக்கிறது.//


    இங்க தான் உதைக்குது!
    சிந்திக்கும் திறனுக்கும் சந்திரனின் ஈர்ப்புக்கும் எந்த வித அறிவியல் சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை, உங்களை போல் அறிவியல் தமிழில் வேண்டுமானால் இது சாத்தியமாகலாம்!

    உடலில் இருக்கும் 70% நீர் சந்திரனால் பாதிப்பு அடையும் என்பது சாத்தியமில்லாத ஒன்று, அவை பல மூலகூறுகளால் ஒன்றினைந்து கட்டமைக்கபட்டுள்ளது!

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு . தகவல்கள் கிடைத்தது ... கடவுள் உருவாகியதே விண்வெளி மீதான நீண்ட கால பார்வையின் பின்னரே .அப்படி இருக்கும் பொது யோசியம் எவளவு என்று தெரியவில்லை . ஆனால் யோசியம் ஒரு நிகழ்தகவு என்பது மட்டும் சரி . வால்ப்பையன் கேள்விகள் நியாயமானதாக இருந்தது . தேடி பார்க்க வேண்டும் . முதலில் இருவருக்கும் நன்றி . இவ்வாறான பதிவுகள் பதிவுலகில் குறைவு . வால்ப்பையன் , வளாகம் , நீங்கள் தான் எனக்கு தெரிந்தவரை எழுதுகிறீர்கள் . கடவுளுக்கும் யோசியத்துக்கும் சம்மந்தம் உண்டு அதை பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என இருக்கிறேன் .
    ஓட்டு போட்டச்சு..
    இன்று தான் உங்கள் பதிவுகள் வாசிக்க கிடைத்தது ,தொடர்ந்து ஊக்கமளிப்பேன் ..

    பதிலளிநீக்கு
  11. @வால்பையன்

    //உடலில் இருக்கும் 70% நீர் சந்திரனால் பாதிப்பு அடையும் என்பது சாத்தியமில்லாத ஒன்று//

    சந்திரனுக்கு சக்தி இல்லை என்பதிலிருந்து, ஈர்ப்பு சக்தி கடல் அலைகளையே மாற்றுகிறது என்பது வரை வந்தாயிற்று அல்லவா ?

    இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்தவாறு உள்ளது. பார்ப்போம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்க படலாம்.

    பதிலளிநீக்கு
  12. @S.Sudharshan
    //யோசியம் ஒரு நிகழ்தகவு என்பது மட்டும் சரி//

    //ஓட்டு போட்டச்சு..
    இன்று தான் உங்கள் பதிவுகள் வாசிக்க கிடைத்தது ,தொடர்ந்து ஊக்கமளிப்பேன் ..//

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  13. //சந்திரனுக்கு சக்தி இல்லை என்பதிலிருந்து, ஈர்ப்பு சக்தி கடல் அலைகளையே மாற்றுகிறது என்பது வரை வந்தாயிற்று அல்லவா ?//


    சந்திரனுடன் சேர்ந்து பூமியின் வினையே low tide, high tide
    அதில் எவ்வாறு மனித உடலை சேர்க்க முடியும்!, பூமியை சுற்றும் சந்திரன் பல லட்சம் ஆண்டுகளில் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலாக நம்மை விட்டு விலகி சென்றுள்ளது!, வருடா வருடம் விலகுக்கிறது, சில நேரங்களில் அவை அருகிலும் சில நேரங்களில் தொலைவிலும் உள்ளது(நீள்வட்ட பாதை), அவைகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்!

    மனித இனம் தோன்றும் முன்னர் இருந்தே இது நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது! என்பதையும் கொஞ்சம் கருத்தில் கொள்க! நாம் மட்டும் தான் உருப்படியா யோசிக்கீரதை விட்டுட்டு இன்னும் நிலாச்சோறு தின்னுகிட்டு இருக்கோம்!, நம் அறிவியல் தமிழ் இங்க இருந்துகிட்டே ப்ளூட்டோ வரைக்கும் கதிர்வீச்சை பாய வைப்பது கொஞ்சம் பெருமை தான்! ஆனால் அவையெல்லாம் உண்மையாக இருந்தாலல்லவா நல்லா இருக்கும்!

    பதிலளிநீக்கு
  14. @வால்பையன்

    //வினையே low tide, high tide//
    low tide, high tide எப்படி வருகிறது ? நீரின் மீது செலுத்தும் ஈர்ப்பு விசையின் ஆதிக்கம். (நிரூபிக்க பட்டது)

    மனிதனின் மூளையின் செயல் பாட்டுக்கு முக்கியமானது நீர். (நிரூபிக்க பட்டது)

    மூளையிலுள்ள நீரின் செயல்பாட்டுக்கு சந்திரனின் ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    http://www.skepdic.com/fullmoon.html
    அளவிற்கு அதிகமான குடிப்பது 12, 26 நாட்களில் என்பது புள்ளிவிவர அடிப்படையில் நீரூபிக்க பட்டுள்ளது. 12,26 நாட்கள் (திரயோதசி திதி - பிரதோசம்)

    day drunks drinkers, including drunks
    0 145 551
    1 160 528
    ...
    12 173 563
    13 150 545
    14 150 523
    15 149 498
    ...
    25 158 536
    26 175 582
    27 176 581
    28 169 590
    ---------------------
    4437 15553
    missing 75 274

    பதிலளிநீக்கு
  15. மூளையின் செயல்பாடு ஆக்சிசன் மூலகூறுகளால் ஏற்படுகிறது, அதை தக்க வைத்த கொள்ள நீர்ம பொருள்கள் தேவைபடலாம், ஆனால் ஹைட்ரஜனால் மூளைக்கு ஒரு தேவையும் இல்லை!

    பதிலளிநீக்கு
  16. @வால்பையன்

    ஏங்க அறிவியல் அறிஞர்கள் சொன்னாலும் ஒப்பு கொள்ள மாட்டிங்களா ?
    www.bbc.co.ukன்னு முன்னாடி நான் கொடுத்த சுட்டில அறிவியல் பிரிவில் மூளையின் சரியான செயல் பாட்டுக்கு நீரின் செயல் இன்றிமையாததுன்னு சொல்லி இருக்காங்க. ;)

    பதிலளிநீக்கு
  17. நீர் இன்றியமையாத செயல்னு பொதுவா தாங்க சொல்லியிருக்காங்க, நீரை வச்சிகிட்டு மூளை என்ன பண்ணுதுன்னு பாருங்க, மூளைக்கு முக்கிய உணவு ஆக்சிசன் தான், அதுவும் ஹைட்ரஜனும் சேர்ந்து நீராக இருக்கு, h2o ன்னா என்னா என்னை விட திகமாக படிச்ச உங்களுக்கு நிச்சயமா தெரியும்!

    ஆக்சிசன் மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் அது தான் ஆதாரம், அது இல்லைனா பரிணாமம் நிச்சயமா சாத்தியமில்லை!

    அது நீர்ல இருக்குன்னு அந்த கிரிடிட்டை நீருக்கு பொண்டு போகாதிங்க!

    பதிலளிநீக்கு
  18. @வால்பையன்
    //அதுவும் ஹைட்ரஜனும் சேர்ந்து நீராக இருக்கு//

    இல்லைங்க விட்டமின்களை மூளைக்கு கொண்டு செல்வதில் நீர் முக்கிய பங்கு வகிப்பதால் தண்ணீர் தான் இன்றிமையாதது.

    இது தான் ரிடிப் தளத்தில் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட விசயம். (மேலே உள்ளது)

    இரண்டாவது உங்க வழிக்கே பார்த்தாலும் நீரில் இருக்கும் ஆக்சிஜன் பயன்படுதா இல்லையா ? :)

    பதிலளிநீக்கு
  19. @Sabarinathan Arthanari
    தண்ணீரும் தான் இன்றிமையாதது என வாசிக்கவும்

    பதிலளிநீக்கு
  20. கடல் நீரிலும் ஆக்சிசன் இருக்கு, ஆனா தை குடிக்ககூட முடியாது, மற்ற தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால் அதன் அடர்த்தி அதிகம், அவைகளால் திடபொருளுக்கு சமமாம எதிர்வினையை ஈர்ப்பு சக்தியின் போது காட்டமுடிகிறது, அதனை எந்த ஒரு பெரிய ஏரி நீரும் செய்யாது! அதே போல் உடலில் இருக்கும் நீர் சந்திரனின் ஈர்ப்புக்கு தலை சாய்க்காது! அவைகளால் உடல் இயங்குவதற்கும், சந்திரனுக்கும் சம்பந்தமில்லை! உலகில் உள்ல அனைத்து உயிர்களுக்கும் ஆக்சிசன் ஆதாரம், அதற்கு நீரும் அவசியம் உயிரனங்களில் தாவரத்தையும் சேர்த்து கொள்ளுங்கள் இங்கே!

    ஆனா மனிதனுக்கு மட்டும் தான் ஜோதிடம், அறிவியல் தமிழ் போன்ற அதிமேதாவிதங்கள் எல்லாம்!

    பதிலளிநீக்கு
  21. @Sabarinathan Arthanari

    ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்று மறுபடியும் ஒரு திசை திருப்பலா? அது நீங்க தான் சொன்னது :)

    அறிஞர்கள் சொன்ன விட்டமின் விசயத்தை மறந்துட்டிங்களே ?

    மனிதர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய வியாதி மூடிய மனதும், திசை திருப்பலும் தான் ;)

    பதிலளிநீக்கு
  22. //அறிஞர்கள் சொன்ன விட்டமின் விசயத்தை மறந்துட்டிங்களே ?

    மனிதர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய வியாதி மூடிய மனதும், திசை திருப்பலும் தான் ;) //


    விட்டமின்கள் உணவின் மூலமாக எடுத்து செறித்து உடல் உறிஞ்சிகள் மூலம் கிரகிக்கபட்டு, ரத்தத்தில் கலந்து ஆக்சிசனுடன் மூளைக்கு எடுத்து செல்லப்படுகிறது!, சம்பந்தமில்லாமல் மூளையின் உணவுக்கும், நீருக்கும் இழுத்துவிடுவது நீங்கள் தான்!

    மூளைக்கு உணவை காது வழியாவா ஊத்துறிங்க!, உணவு செறித்தல் முறையை பாருங்க, அங்கே வேலை ரத்தத்திற்கு தான்!

    பதிலளிநீக்கு
  23. @வால்பையன்
    //மூளைக்கு உணவை காது வழியாவா ஊத்துறிங்க!, உணவு செறித்தல் முறையை பாருங்க, அங்கே வேலை ரத்தத்திற்கு தான்!//

    ஏங்க இது நான் கேட்க வேண்டிய கேள்வி :))

    மூளைக்கு உணவை காது வழியாவா ஊத்துறிங்க ?? அப்ப இரத்ததில தண்ணி இல்லைங்கறிங்க :)

    பதிலளிநீக்கு
  24. அடகொன்னியா திருப்பியும் தண்ணியில வந்து நிக்கிறிங்க, மூளைக்கு உணவு ஆக்சிசன், தண்ணியில்ல,

    நாம உட்கொள்ளும் நீரில் இருந்தும் தேவையான மினரல்ஸை மட்டும் எடுத்துக்கிட்டு மீதி நீரை வேர்வையாகவும், சிறுநீராகவும் வெளியிடுறோம், வாசல்லயே நிக்காதிங்க, தண்ணிரில் இருக்கும் விசயத்துக்கு வாங்க!

    பதிலளிநீக்கு
  25. @வால்பையன்

    அடகொன்னியா திருப்பியும் ஆக்சிஜனா? கண்ணை கட்டுதுங்க.

    //நாம உட்கொள்ளும் நீரில் இருந்தும் தேவையான மினரல்ஸை மட்டும் எடுத்துக்கிட்டு மீதி நீரை வேர்வையாகவும், சிறுநீராகவும் வெளியிடுறோம்//

    உடம்புல இருக்கறதே 80 சதவிகிதம் தண்ணி தான். உங்க உடம்புல இருக்கிற எல்லா தண்ணியயும் வெளியேத்திரதினால தான் இப்படியெல்லாம் கேட்க தோணுது பொல :)))))

    இதுக்கு மேல் தண்ணி பத்தி விளக்க முடியாது பாஸ். அறிவியல் படிச்சுட்டு வாங்க பிறகு பேசிக்கலாம்.

    ஆமா ஆக்சி’ஜ’ன எப்ப தனித்தமிழில் சேர்த்திங்க தல ?
    நேத்து தனித்தமிழ் தனிதமிழ் ஒருத்தர் முழங்கினாரு அவர ஆள காணோம். தேடணும் :)))

    பதிலளிநீக்கு
  26. //
    உடம்புல இருக்கறதே 80 சதவிகிதம் தண்ணி தான். உங்க உடம்புல இருக்கிற எல்லா தண்ணியயும் வெளியேத்திரதினால தான் இப்படியெல்லாம் கேட்க தோணுது பொல :))))) //


    70% தான்!

    விஞ்ஞானிகள் சொல்ரதை அப்படியே எடுத்துகுவிங்கன்னு தெரிஞ்சா அவுங்க இப்படி சொல்லியிருக்கவே மாட்டாங்க!

    ஆப்பிளில் தண்ணி இருக்கு, ஆரஞ்சில் தண்ணி இருக்கு ஆனா அவையெல்லாம் என்ன வடிவில் என்ன வகையான மூலகூறுகளுடனான கலவையில் இருக்குன்னு முக்கியம், அது மாதிரி தான் உடலில் இருக்கும் தண்ணீரும்!

    திடபொருளான கல்லுக்கும் இலகு பொருளான அதைக்கும் உள்ல வித்தியாசமே அதிலுள்ள நீர் சத்து, நீர் என்றவுடன் பிஸ்லரி வாட்டர் ரேஞ்சுக்கு நினைத்து கொள்வீர்கள் என்று எந்த விஞ்ஞானியும் எதிர்பார்த்திருக்க மாட்டான்!

    மூலகூறுகளின் கூட்டமைப்பே ஒரு பொருள், அதை இலகு பொருளாக்க அதில் இடைவெளியும், அசைந்து கொடுக்க நீர்தன்மையும் உண்டு!.

    உங்களுக்கு பாடம் எடுக்க யாராவது சயின்ஸ் வாத்தியாரை தான் கூப்பிடனும்!

    ஆக்சிசனுக்கு பிராணவாயு என்று அழைப்பார்கள்!, ஆனால் அது தமிழ் அல்ல! அப்பட்டமான சமஸ்கிருதம்

    பதிலளிநீக்கு
  27. @வால்பையன்

    //அதிலுள்ள நீர் சத்து, நீர் என்றவுடன் பிஸ்லரி வாட்டர் ரேஞ்சுக்கு நினைத்து கொள்வீர்கள் என்று எந்த விஞ்ஞானியும் எதிர்பார்த்திருக்க மாட்டான்!//

    திரும்பவும் என்னுடைய டயலாக்
    நீங்க பயன்படுத்தறிங்க

    நீர் என்றவுடன் பிஸ்லரி வாட்டர் ரேஞ்சுக்கு நினைத்து கொள்வீர்கள் என்று எந்த விஞ்ஞானியும் எதிர்பார்த்திருக்க மாட்டான்! நானும் எதிர் பார்க்கவில்லை.

    //blood, lymph, saliva and secretions by the organs of the digestive system//

    பிஸ்லரி வாட்டர் மட்டும் தான் சந்திரன் பாதிக்குமா என்ன ? இரத்தம் திரவம் தானே அதில் நீர் இல்லை போல :)))

    23 பின்னூட்டங்களில் ஆக்சிஜன் ஆக இருந்தது ஆக்சிசன் ஆனதின் மர்மம் என்ன? மத்தவங்க சொன்னாதான் தனித்தமிழ் வரும் போல :))))

    பதிலளிநீக்கு
  28. @வால்பையன்

    ஆமா தல ”ரேஞ்சுக்கு” என்பது தனிதமிழா ? ;)))

    பதிலளிநீக்கு
  29. யார் சொல்லியும் ஆக்சிஜன் ஆகவில்லை, எனக்கு வசதிபடும் வழியில் தான் அடித்து கொண்டிருக்கிறேன்!


    ஜெல்லி மீனில் 99% நீர் தான், அவை தான் உங்கள் பார்வையில் அதிகமாக சந்திரனால் பாதிக்கப்பட வேண்டும்! உடலில் கலந்து இருக்கும் நீர் குடத்தில் மூடி வைக்கப்பட்ட நீர் போல, அவைகளை சந்திரன் அல்ல, எந்த கோளும் ஒன்றும் செய்ய முடியாது!

    சந்திரனின் ஈர்ப்பு சக்தி மனிதனை பாதிக்கும் என்பதற்க்கு உங்களிடம் இந்த ஆதாரம் மட்டும் தான் இருக்கிறதா!? ஆங்கிலம் தெரியாததால் நண்பர் ஒருவரை இதை பற்றி தேடச்சொல்லியிருக்கேன்!

    பதிலளிநீக்கு
  30. நான் தனிதமிழ் சண்டை போடுகிறேன் என்று யார் சொன்னது!

    தனிதமிழ் பேசுபவர்கள் என்னை மாதிரி அரைகுறை படிப்பில் இருந்திருக்க மாட்டார்கள்! நானெல்லாம் அதை வேடிக்கை தான் பார்க்கனும்!

    அறிவியல் தமிழ் என்ற பெயரில் நீங்கள் வைத்திருக்கும் ப்ளாக்கில் தமிழுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஜோதிடத்தை பற்றி எழுதுகிறீர்களே என்று தான் கேட்டேன் போன பதிவில்!

    பதிலளிநீக்கு
  31. தமிழுக்கும் சோதிடத்துக்கும் சம்பந்தம் இல்லையா? தமிழ் கடவுள் முருகன் தான் சோதிடதுக்கே அதிபதி என்பது தமிழர்கள் நம்பிக்கை

    blog என்பது தமிழா?

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  32. அமாவாசை பௌர்ணமி நாட்களில் மன நலம் சரியில்லாதவர்களின் முரட்டுத்தனம் அதிகரிப்பதாக பலர் சொல்லிக் கேள்வி ( கழுகு style ). இது பற்றி உங்கள் கருத்து என்ன ?

    பதிலளிநீக்கு
  33. //அறிவியல் தமிழ் என்ற பெயரில் நீங்கள் வைத்திருக்கும் ப்ளாக்கில் தமிழுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஜோதிடத்தை பற்றி எழுதுகிறீர்களே என்று தான்...//

    இதைத்தான் நான் கேட்கணும்னு நினச்சேன். பி.ஜே.பி. ஆண்ட காலத்தில் ஜோதிடத்தைப் பல்கலை கழகங்களில் சொல்லிக் கொடுக்க முயற்சித்த போது ஜோதிடத்தைப் பற்றி ஒரு பரந்த விவாதம் நடந்தது. ஜோதிடம் ஒரு pseudoscience என்றுதான் அதிகக் கருத்து வந்ததாக நினைவு.

    அறிவியல் என்றால் ஆய்ந்து முடிந்த விதயங்கள். ஜோதிடம் ஒரு அறிவியல் என்று முடிவு செய்துவிட்டு அறிவியல் தமிழில் பேசலாமே. அதுக்கு ஒரு வழி: நம் பதிவ-ஜோதிடர்கள் மட்டுமே கூட ஒரு வழி செய்யலாம். 2010 முடிவுக்குள் என்னென்ன உலகில், இல்லை, ஒரு தனி மனிதனுக்கு என்ன நடக்கும் என்று தனித்தனியே ரகசியமாக எழுதி, ஆண்டு முடிவில் பிரித்துச் சரி பார்க்கலாமே .. எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமே. அப்படி இருந்தால் நானும் ஒரு ஜோதிட அறிவியல் ப்ளாக் ஒண்ணு ஆரம்பிச்சிர்ரேனே....

    பதிலளிநீக்கு
  34. @தருமி
    கண்டுபிடிக்கபட்ட விசயங்கள் மட்டும் தான் பேசப்பட வேண்டும் என்பது இல்லை. இதற்கு பெயர் அடிமை கல்வி என்று தான் நினைக்கிறேன். நம் சமூகத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் நீண்ட கால அடிமைதனத்தின் விளைவாக ஆராய்ச்சி செய்யபடாமலே புறம் தள்ள படுவது சரியானது அல்ல.

    நன்மைகளை எடுத்து கொண்டு தீமைகளை விட்டு விட வேண்டியது தான்.


    //ஜோதிடம் ஒரு அறிவியல் என்று முடிவு செய்துவிட்டு அறிவியல் தமிழில் பேசலாமே.//
    Probability வகை கணித முறையில் கூறலாம் என்கிறேன் இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

    பதிலளிநீக்கு
  35. @வால்பையன்
    //அறிவியல் தமிழ் என்ற பெயரில் நீங்கள் வைத்திருக்கும் ப்ளாக்கில் தமிழுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஜோதிடத்தை பற்றி எழுதுகிறீர்களே என்று தான் கேட்டேன் போன பதிவில்!//
    ஜோதிடத்திற்கும் தமிழிற்கும் சம்பந்தம் இல்லையா ? :))

    தயவு செய்து சோதிடம் பற்றி பழம் தமிழ் மரபில் இருக்கும் டன் கணக்கிலான கருத்துக்களை பற்றி படியுங்கள் முதலில். :)))

    //தனிதமிழ் பேசுபவர்கள் என்னை மாதிரி அரைகுறை படிப்பில் இருந்திருக்க மாட்டார்கள்! //
    இப்போது தனிதமிழ் மட்டும் தன் வாழ்வில் பேசும் ஒரு ஆளை மட்டுமாவது காண்பிக்க முடியுமா தல ?

    //ஆங்கிலம் தெரியாததால் நண்பர் ஒருவரை இதை பற்றி தேடச்சொல்லியிருக்கேன்!//
    நானே தருகிறேன் தல. பாருங்க.
    http://www.scientificamerican.com/article.cfm?id=lunacy-and-the-full-moon
    http://www.armageddononline.org/Lunacy-and-the-Full-Moon.html

    இவற்றில் கூறப்படுவது என்னவெனில் சந்திரன் வெட்டவெளியிலான நீர் (கடல் போன்றவை) நிலைகள் மட்டுமே பாதிப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது. மூடிய நீர் நிலைகளை பாதிப்பது (மனித உடல்) நிரூபிக்க படவில்லை.

    நன்றாக கவனியுங்கள் இன்னும் நிரூபிக்க படவில்லை அவ்வளவு தான். பாதிப்பதற்கான சாத்திய கூறுகள் இன்னும் மறுக்க படவில்லை/அறியபடவில்லை.

    பதிலளிநீக்கு
  36. //அறிவியல் என்றால் ஆய்ந்து முடிந்த விதயங்கள்.//

    ஜோதிடத்தில் Probability என்றால் என்ன?
    பிறக்கும் பிள்ளை ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம் என்பதா???

    பதிலளிநீக்கு
  37. ஏற்கெனவே கேட்ட கேள்விதான்;பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை' கேள்வி: சிசேரியனில் - நாளும் நேரமும் பார்த்து செய்யப்படும் சிசேரியனில் - பிறக்கும் குழந்தையின் 'ஜென்ம நேரம்" என்ன?

    பதிலளிநீக்கு
  38. //நம் சமூகத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் நீண்ட கால அடிமைதனத்தின் விளைவாக ஆராய்ச்சி செய்யபடாமலே புறம் தள்ள படுவது சரியானது அல்ல.//

    ரொம்ப ரொம்ப சரி ..

    அதுனாலதான் நான் சொல்றேன்://நம் பதிவ-ஜோதிடர்கள் மட்டுமே கூட ஒரு வழி செய்யலாம். 2010 முடிவுக்குள் என்னென்ன உலகில், இல்லை, ஒரு தனி மனிதனுக்கு என்ன நடக்கும் என்று தனித்தனியே ரகசியமாக எழுதி, ஆண்டு முடிவில் பிரித்துச் சரி பார்க்கலாமே .. எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமே...//

    எதிர்ப்புகள் இவ்வளவு இருக்கும்போது நம்பிக்கையாளர்கள் ஆராய்ச்சி செய்து உண்மைகளை எங்களுக்கு அறியத் தரலாமே ...

    ஏன் இதுவரை ஒரு ஜோதிடரும் இந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை?

    பதிலளிநீக்கு
  39. எனக்குத் தெரிந்து நடந்த சில டி.வி. நிகழ்ச்சிகளில் ஜோதிடத்தின் மேலுள்ள நம்பிக்கைகளை முறியடுக்கும் நிகழ்வுகளாகவே இருந்து வந்துள்ளன.

    பிளாட்டினம் வாங்கச்சொல்லி வரும் ஒரு 'பெரிய' ஜோதிடர் ரொம்ப 'பாவமானார்'!!

    பதிலளிநீக்கு
  40. //தயவு செய்து சோதிடம் பற்றி பழம் தமிழ் மரபில் இருக்கும் டன் கணக்கிலான கருத்துக்களை பற்றி படியுங்கள் முதலில். //


    உங்களை போல் எதாவது அறிவியல்தமிழ் மேதாவி எழுதியிருக்கிறார் போல!

    சமஸ்கிருத வேதத்தில் ஆயகலைகள் 64ல் ஜுறிபிடபட்டிருக்கும் ஒரு கலை தான் ஜோதிடமும்!, நம்மிடமும் இருந்திருக்கலாம், நாடார் தெய்வங்கள் சாமி வந்து ஆடி குறி சொல்வது போல, கோள்கள் நட்சத்திரங்கள் என்று நாம் என்றுமே கதை கட்டியதில்லை!


    //சந்திரன் வெட்டவெளியிலான நீர் (கடல் போன்றவை) நிலைகள் மட்டுமே பாதிப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது. மூடிய நீர் நிலைகளை பாதிப்பது (மனித உடல்) நிரூபிக்க படவில்லை.//


    இம்புட்டு நேரமா நானும் இதை தான் சொல்லிகிட்டு இருக்கேன்!, தற்பொழுது இருக்கும் விஞ்ஞான முன்னேற்றத்தில் இம்மாதிரி தேவைகளை ஒரு மணி நேரத்தில் பரிசோதித்து பார்க்க முடியும், நிருபிக்கபடவில்லை என்பதை விட அவ்வாறு நடக்க சாத்தியமேயில்லை என்பதே உண்மை!

    பூமியின் ஈர்ப்பு விசையை விட சந்திரனின் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு!, மூடி வைத்த பாத்திரத்தில் உள்ள நீரை அவற்றால் ஒன்றும் செய்யவியலாது!

    பதிலளிநீக்கு
  41. @வால்பையன்
    //சமஸ்கிருத வேதத்தில் ஆயகலைகள் 64ல் ஜுறிபிடபட்டிருக்கும் ஒரு கலை தான் ஜோதிடமும்!//
    ஏன் தமிழில் சோதிட நூல்கள் இல்லையா ? :)))

    அதுல சிற்பம், ஓவியம், நடனம் போல 64 கலைகள் கூட தான் இருக்கு
    அப்ப அதுவெல்லாம் தமிழர்கள் கலை இல்லை பொல

    நல்ல நகைச்சுவை வால் :))
    இப்படியே போச்சுனா தமிழர்கள் காட்டிமிராண்டிகள்ன்னு சொல்லுவிங்க போல.
    கொஞ்சம் வரலாறும் படிங்க தல.

    பார்க்க போனா திருவள்ளுவருக்கு பிறகு தமிழர்னு சொல்ல போனா வால் மட்டும் தானா ? (ஆமா திருவள்ளுவரையாவது தமிழர்னு ஒத்து கொள்வீர்களா ? அவரும் பல விசயங்கள் சொல்லி இருக்கிறார்.)

    பதிலளிநீக்கு
  42. @வால்பையன்
    //இம்புட்டு நேரமா நானும் இதை தான் சொல்லிகிட்டு இருக்கேன்!, //
    உடம்புல நீரே இல்லைனு யாரோ மேல சொல்லி இருக்காங்க. :))

    உடலில் நீர் இல்லாததற்கும், நீரின் மேல் மதி(சந்திரனின் தூய தமிழ் வடிவம்) ஆதிக்கம் செலுத்துவதற்கும், நீரின் மேல் மதி ஆதிக்கம் நிரூபிக்க படாததற்கும் முழுதும் வித்தியாசம் இருக்கு வால்

    பதிலளிநீக்கு
  43. //ஏன் தமிழில் சோதிட நூல்கள் இல்லையா ? :)))//


    எப்படியண்ணே ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க!

    ஆரியர்களின் ஊடுருவளுக்கு பின்னர் தான் மனித உருவ வழிபாடு, சடங்கு சம்பிரதாயம் எல்லாம் திராவிடர்களுக்கு தொற்றியது, அதுனுடன் தொற்றிய வியாதியில் ஜோதிடமும் ஒன்று, எழுதி வச்சதெல்லாம் உண்மைன்னா எல்லாம் கற்காலத்துலயே இருக்க வேண்டியது தான்!



    //நல்ல நகைச்சுவை வால் :))
    இப்படியே போச்சுனா தமிழர்கள் காட்டிமிராண்டிகள்ன்னு சொல்லுவிங்க போல. //


    அனைவரும் காட்டுமிராண்டியா இருந்து நாகரிகம் அடைந்தவர்கள் தான். இதில் என்ன நகைச்சுவை கிடக்கு, ஆரியர்கள் நம்மை விட கொஞ்சம் அட்வான்ஸாக இருந்தது உண்மை தான், குதிரைகளை பயன்படுத்தி இடம்பெயர்ந்ததிலேயே அதை அறியலாம், அதற்காக அவர்கள் விடும் டாவையெல்லாம் நம்புனுமா என்ன!?


    //திருவள்ளுவரையாவது தமிழர்னு ஒத்து கொள்வீர்களா ? அவரும் பல விசயங்கள் சொல்லி இருக்கிறார்//


    திராவிட மொழியின் ஆரம்பம் அது, அதிலிருந்து பிரிந்த மொழிகள் அனைத்தும் திராவிட மொழிகள் தான், அதை தமிழ் மொழி என்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் திருவள்ளுவர் சொன்னதெல்லாம் சரியன கருத்துக்கள் என்பதில் எனக்கு முரண்பாடு உண்டு, முதலில் அதை முடிப்போம், பிறகு வள்ளுவரை கிழிப்போம்!

    பதிலளிநீக்கு
  44. @தருமி
    //சிசேரியனில் - நாளும் நேரமும் பார்த்து செய்யப்படும் சிசேரியனில் - பிறக்கும் குழந்தையின் 'ஜென்ம நேரம்" என்ன?//

    1. //நாளும் நேரமும் பார்த்து செய்யப்படும்//
    தாயுக்கும் சேயுக்கும் கேடு விளைவிக்கும் முற்றிலும் மனித நேயம் அற்ற செயல். இது சோதிடத்தில் இல்லை. அப்படி சொல்லும் மனிதர் / சோதிடர் போலி & முட்டாள். இது பெரும்பாலும் கணவர் அவர் தம் குடுப்பத்தால் செய்ய படுகிறது என நினைக்கிறேன்.

    2. இவர்கள் ஒன்றும் பிரசவத்தை அதிக நேரம் மாற்ற இயலாது; சில மணி நேரங்கள் மட்டுமே மாற்ற இயலும் என நினைக்கிறேன். குழந்தைக்கு தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும் நேரம் கணக்கில் எடுத்து கொள்ளலாம்.

    3. சிசேரியனால் எந்த பலனும் இல்லை. பெரும்பாலும் நட்சத்திரம் மட்டும் பார்த்து எடுப்பர். அது எந்த அளவிற்கு முட்டாள் தனமானது என்பது சோதிடம் அடிப்படை மட்டும் தெரிந்தவர்களுக்கு கூட புரியும் ;)

    பதிலளிநீக்கு
  45. //உடம்புல நீரே இல்லைனு யாரோ மேல சொல்லி இருக்காங்க. :))//


    அது யாரு அப்படி சொன்னது!
    நான் 70% இருக்குன்னு தானே சொன்னேன்!, அதன் வடிவத்தை நீர் என்று பொதுபுத்தியில் அறியபட்ட வடிவமாக பார்க்க வேண்டாம் என்று தானே சொன்னேன்!


    //உடலில் நீர் இல்லாததற்கும், நீரின் மேல் மதி(சந்திரனின் தூய தமிழ் வடிவம்) ஆதிக்கம் செலுத்துவதற்கும், நீரின் மேல் மதி ஆதிக்கம் நிரூபிக்க படாததற்கும் முழுதும் வித்தியாசம் இருக்கு வால் //



    உங்கள் குழம்ப்பத்தற்கும் விளக்கம் கொடுக்க நான் விஞ்ஞானி இல்ல! நீர் இல்லைன்னு சொன்னதா சொல்றிங்க, உங்களுக்கும் எனக்கும் புரிதலில் சிக்கல் இருக்குன்னு நினைக்கிறேன்!, அறிவியல் தமிழ்னு பேர் வைக்கிறது தப்பில்ல, ஆனால் இருக்குற அறிவியலை கொலை செய்யாமல் இருந்தால் சரி!

    பதிலளிநீக்கு
  46. //எதிர்ப்புகள் இவ்வளவு இருக்கும்போது நம்பிக்கையாளர்கள் ஆராய்ச்சி செய்து உண்மைகளை எங்களுக்கு அறியத் தரலாமே ...//
    கவனிக்க பட வேண்டிய தருணம்: சூரிய திசை ராகு புத்தி (10/2010 முதல் 09/2011 வரை) ஒவ்வொரு ராகு திசை/புத்தி நடந்த போதும் இந்தியா சகிக்க முடியாத பல்வேறு கொடுமைகளுக்கும் போர்களுக்கும் உட்படுத்த பட்டதை எப்போதும் பார்த்து உள்ளோம். இக்காலகட்டத்திலும் இந்தியா ஒரு போரில் ஈடுபடும் அல்லது அந்நிய சக்திகள் கேடு விளைவிக்கும்.

    கவனியுங்கள் இது முற்றிலும் Statistics & Probability வைத்து தான் சொல்கிறேன்.
    http://sabaritamil.blogspot.com/2009/01/blog-post.html ல் குறிப்பிட்ட படி ஏற்கனவே நடந்த 3 ராகு புத்திகளில் 2 முறை போர் 1 முறை எமர்ஜென்சி ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  47. @தருமி
    //ஜோதிடத்தின் மேலுள்ள நம்பிக்கைகளை முறியடுக்கும் நிகழ்வுகளாகவே இருந்து வந்துள்ளன.//
    டிவியில் வரும் மருத்துவர்களை பார்த்து மருத்துவத்தின் மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்தால் சரி ஐயா ;)

    பதிலளிநீக்கு
  48. //சூரிய திசை ராகு புத்தி (10/2010 முதல் 09/2011 வரை) ஒவ்வொரு ராகு திசை/புத்தி நடந்த போதும் இந்தியா சகிக்க முடியாத பல்வேறு கொடுமைகளுக்கும் போர்களுக்கும் உட்படுத்த பட்டதை எப்போதும் பார்த்து உள்ளோம். //


    முதல்ல இந்தியாவுக்கு எதை வச்சு ஜாதகம் குறிச்சிக்கன்னு சொல்லுங்க!, பிறகு உங்கள் கதைகளை கேட்போம்!


    //டிவியில் வரும் மருத்துவர்களை பார்த்து மருத்துவத்தின் மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்தால் சரி ஐயா ;) //


    நீங்கள் அறிவியல் தமிழ் வளர்ப்பது போல், சிவராஜ் சித்த வைத்தியர் அறிவியல் மருத்துவம் வளர்க்கிறார்! எப்படி நம்பாம இருக்க முடியும்!

    பதிலளிநீக்கு
  49. //இவர்கள் ஒன்றும் பிரசவத்தை அதிக நேரம் மாற்ற இயலாது; சில மணி நேரங்கள் மட்டுமே மாற்ற இயலும் என நினைக்கிறேன். குழந்தைக்கு தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும் நேரம் கணக்கில் எடுத்து கொள்ளலாம்.//


    சில மணிநேர மாற்றம் ஒன்றும் பாதிபில்லை என்றால், இரட்டை குழந்தைகள் சில நொடி அல்லது நிமிட வித்தியாசத்தில் தானே பிறக்கின்றன, அவர்கள் ஒரே மாதிரி அல்லவா வாழ வேண்டும்!

    பதிலளிநீக்கு
  50. @வால்பையன்
    //ஆரியர்களின் ஊடுருவளுக்கு பின்னர் தான் மனித உருவ வழிபாடு, சடங்கு சம்பிரதாயம் எல்லாம் திராவிடர்களுக்கு தொற்றியது//

    1. “ஜ” => "j" எனும் ஒலி => சம்ஸ்கிருதம் => தமிழில் எழுத்து இல்லை (ஆங்கிலமும் இல்லை போல) => ஆக்சிஜன் => ஆக்சிசன்

    2. சோதிடம் => தமிழ் இல்லை => இடைக்கால தமிழர்கள் பயன்படுத்தியது => ஆரியர்கள் நம்மை விட கொஞ்சம் அட்வான்ஸ் => கற்காலம்

    3. நீர் இல்லை => நீர் பிஸ்லெரியாக இல்லை => நீர் சத்து => சந்திரனால் பாதிக்காது => பாதிப்பதற்கு ஆதாரம் கண்டுபிடிக்கபடவில்லை.

    இப்படியேல்லாம் விவாதம் பண்ணினா சிரிப்பு வராதா தல :))))

    பதிலளிநீக்கு
  51. @வால்பையன்
    //பிறகு வள்ளுவரை கிழிப்போம்!//
    ரைட்டு அவரையுமா தமிழ் பாவம் விட்டுருங்க பிழைச்சு போகட்டும்.

    முடிவா தமிழன் என்று ஒரு கலாசாரம் இல்லை அது முற்றிலும் கடன் வாங்க பட்டதுன்னு சொல்றிங்க :(

    திராவிட இயக்கத்திலுருந்த கடன் வாங்க பட்ட அறிவை கொஞ்ச நேரம் விலக்கி வைத்து விட்டு உண்மையான வரலாறை படிக்க முயற்சி செய்யுங்க வால்.

    //அனைவரும் காட்டுமிராண்டியா இருந்து நாகரிகம் அடைந்தவர்கள் தான்//
    ”நாகரிகம் அடைந்தவர்கள்” என்பதை மறந்து விட கூடாது.

    ஆரிய திராவிட டுபாக்கூர் கதைகள்னு எழுதினா வேணா நீங்க சொல்றதெல்லாம் ஒத்துக்கலாம்.

    தயவு செய்து திராவிட மொழி வளர்ச்சியடைந்த அரசுகளான களப்பிரரகள் (சமணம் பௌத்தம்), பல்லவர்கள் (சமணம் பௌத்தம்) இவர்கள் வரலாறு தமிழிற்கு செய்தது படித்து விட்டு அலாவுதின் கில்ஜி படையெடுப்பு அதற்கு பிற்கு உருவான விஜய நகரம் (ஒரே ஒரு முழுமையான திராவிட அரசாங்கம்) இத படிச்சுட்டு சொல்லுங்க. இது தெரியாமா மசாலா அரைச்சா இப்படி தான் :))))

    என்ன கொடுமைங்க வால் இது.

    பதிலளிநீக்கு
  52. உங்களுக்கு சிரிப்பு வரலைனா தான் ஆச்சர்யம், எங்களுக்கு தான் ரத்த கண்ணிரே வருது!

    பதிலளிநீக்கு
  53. @வால்பையன்
    //முதல்ல இந்தியாவுக்கு எதை வச்சு ஜாதகம் குறிச்சிக்கன்னு சொல்லுங்க!, பிறகு உங்கள் கதைகளை கேட்போம்!//
    கேள்வி கேட்பதற்கு முன் லிங்க் கொடுத்தா ஒழுங்கா படிக்கணும் :))

    பதிலளிநீக்கு
  54. //இரட்டை குழந்தைகள்//
    ஒரே மாதிரி சோதிடம் கிடையாது. வெவ்வேறாக பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  55. //நீங்கள் அறிவியல் தமிழ் வளர்ப்பது போல், சிவராஜ் சித்த வைத்தியர் அறிவியல் மருத்துவம் வளர்க்கிறார்!//

    நீங்க தமிழர்கள் காட்டிமிராண்டின்னு தனித்தமிழை வளர்ப்பதை விடவா கண்ணை கட்டுதே.

    பதிலளிநீக்கு
  56. //முடிவா தமிழன் என்று ஒரு கலாசாரம் இல்லை அது முற்றிலும் கடன் வாங்க பட்டதுன்னு சொல்றிங்க :(//


    அறிவியல் தமிழால் தமிழன் கலாச்சாரம் அழிச்சி போயிருச்சுன்னு சொன்னா நம்பவா போறிங்க!?
    செவ்விந்திய மக்கள் இன்னும் இருக்காங்க, அது மாதிரியா ட்ரெஸ் பண்ணிகிட்டு இருக்காங்க, எல்லாம் கலந்து போச்சு


    //திராவிட இயக்கத்திலுருந்த கடன் வாங்க பட்ட அறிவை கொஞ்ச நேரம் விலக்கி வைத்து விட்டு உண்மையான வரலாறை படிக்க முயற்சி செய்யுங்க வால்.//


    அது என்ன உண்மையான வரலாறு!?
    நீங்க தான் கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன், தெரிஞ்சிகிறேன்!


    //அலாவுதின் கில்ஜி படையெடுப்பு அதற்கு பிற்கு உருவான விஜய நகரம் (ஒரே ஒரு முழுமையான திராவிட அரசாங்கம்) //

    அலாவிதின் கில்ஜி, கு.மு 5000 திலா விஜயநகரத்தை முற்றுகையிட்டார்! உங்க வரலாறு அதுக்கு மேல போகாதா!?, சிந்து சமவெளியில் திராவிட நாகரிகம் தோன்றி வாழ்ந்ததற்கான ஆராய்ச்சி உலகில் எல்லா நாடுகளாலும் ஏற்றுகொள்ளப்பட்டது!, நீங்க சொல்ற வரலாறெல்லாம் இம்சை அரசன் மாதிரி வரலாறு முக்கியம் அமைச்சரே என திரிக்கப்பட்டது, அதை படிச்சா நானும் பார்பன சொம்பு தூக்கியா தான் திரியனும்! நான் நானாவே இருந்துட்டு போறேன்!

    பதிலளிநீக்கு
  57. பார்பன என்பதை பார்பனீய என மாற்றி படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  58. //http://sabaritamil.blogspot.com/2009/01/blog-post.html//


    ஸாரிங்க, இந்த லிங்க் அறிவியல் தமிழ் விஞ்ஞானியின் லிங்க் என்பதை மறந்து வேற லிங்க் எதுவும் இருக்கான்னு தேடிட்டு போயிட்டேன்!

    பதிலளிநீக்கு
  59. //நீங்க தமிழர்கள் காட்டிமிராண்டின்னு தனித்தமிழை வளர்ப்பதை விடவா கண்ணை கட்டுதே. //


    ஹிஹிஹிஹி!

    அப்புறம் வேற என்னவெல்லாம் திரிக்கமுடியும்!? அதையும் செஞ்சுருங்க, சமஸ்கிருத பாசகாரருக்கு எம்புட்டு அநியாய பாசமா இருக்கே தமிழ் மேல!

    எல்லாருமே காட்டுமிராண்டியா இருந்தவங்கன்னு தானே சொன்னேன்! தமிழை மட்டும் குறிப்பிடக்காரணம், அப்படி ஒரு எண்ணம் உங்கள் மனதில் உள்ளதா!?

    பதிலளிநீக்கு
  60. @Sabarinathan Arthanari
    //சமஸ்கிருத பாசகாரருக்கு எம்புட்டு அநியாய பாசமா இருக்கே தமிழ் மேல!//

    தனித்தமிழ் என்று முழங்கி விட்டு தம் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழியில் ஆங்கிலமும், ஹிந்தியும் கற்று தரும் சுய வஞ்சகர்களை விட பற்று இருக்கிறது.

    //ஆரியர்கள் நம்மை விட கொஞ்சம் அட்வான்ஸ் //
    //எல்லாருமே காட்டுமிராண்டியா இருந்தவங்கன்னு தானே சொன்னேன்!//
    யார் தாழ்வு மனப்பான்மையால் பீடிக்க பட்டு இருக்கிறார்கள். யார் சொம்பு தூக்குவது :))

    மறைமுகமா சொம்பு தூக்கிட்டு அடுத்தவனை திட்டுவது தான் நீங்க கத்துகிட்ட பகுத்தறிவா ? :(

    //நானும் பார்பன சொம்பு தூக்கியா தான் திரியனும்//
    இல்லை பிரிவிணை வாத சொம்பு தூக்கியா இருந்தா பெருமையா ?

    //தமிழன் கலாச்சாரம் அழிச்சி போயிருச்சு//
    ஆமா இப்ப இருக்கறவங்க எல்லாம் தமிழர்கள் இல்லை. அவர்கள் கலாசாரம் அழிஞ்சு போச்சு. என்ன கொடுமைங்க இது

    //சிந்து சமவெளியில் திராவிட நாகரிகம் தோன்றி வாழ்ந்ததற்கான ஆராய்ச்சி உலகில் எல்லா நாடுகளாலும் ஏற்றுகொள்ளப்பட்டது//

    ஆதாரம் ப்ளீஸ்

    சிந்து சமவெளியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கபட்டுருக்குதாமே ????? ha ha ha

    பதிலளிநீக்கு
  61. //பார்பன என்பதை பார்பனீய என மாற்றி படிக்கவும்! //
    எதுக்கு பாஸ் முக்காடு போட்டு மனதில் இருக்கிற பிரிவினை வாதத்தை மறைக்கணும்.

    பதிலளிநீக்கு
  62. //ஆரியர்கள் நம்மை விட கொஞ்சம் அட்வான்ஸ் //


    குதிரைகள் பயன்படுத்த தெரிந்தவர்கள் என விளக்கமும் கொடுத்திருக்கேன், அட்வான்ஸாக இருப்பதால் ஜப்பானை தூக்கி தலையிலா வச்சுக்க முடியும், இல்லை அந்த அட்வான்ஸால் தான் நீங்க சமஸ்கிருதத்துக்கும், பார்பனியத்திற்கும் சொம்படிக்கிறிங்களா!?

    நீங்கள் பார்பனர் இல்லை என்று சொன்னதாக நியாபகம்!


    //மறைமுகமா சொம்பு தூக்கிட்டு அடுத்தவனை திட்டுவது தான் நீங்க கத்துகிட்ட பகுத்தறிவா ? :(//


    40 பேர் படிக்கும் வகுப்பில் , அவன் என்னை விட கொஞ்சம் நல்லா படித்தான் என்பது சொம்பு தூக்குவதா!? என்றென்றும் அவன் புகழ் பாடி கொண்டிருப்பது சொம்பு தூக்குவதா!? ஆரியன் அட்வான்ஸ் தான், அதனாலேயே அவனால் திராவிடனை கதை சொல்லி ஏமாற்ற முடிந்தது, ஏமாற்றுதல் நல்ல விசயமா என்ன!? இல்லை இதுவும் நான் தூக்கும் சொம்பா!?


    //பிரிவிணை வாத சொம்பு தூக்கியா இருந்தா பெருமையா?//


    யாரும் பார்பனர்களை நாடு கடத்தனும்னு சொல்லல! மக்களை முட்டாளாக வேணாம்னு தான் சொன்னாங்க!


    //தமிழன் கலாச்சாரம் அழிச்சி போயிருச்சு//
    ஆமா இப்ப இருக்கறவங்க எல்லாம் தமிழர்கள் இல்லை. அவர்கள் கலாசாரம் அழிஞ்சு போச்சு. என்ன கொடுமைங்க இது//


    சொல்லிக்க வேண்டியது தான்!, விடப்பட்டவைகளும் சேர்த்துக்கோங்க, அறிவியல்தமிழால் தான் அழிச்சிருச்சுன்னு சொன்னேன்! அறிவியல் தமிழை வளர்ப்பவர் யார்ன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை!


    //ஆதாரம் ப்ளீஸ்

    சிந்து சமவெளியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கபட்டுருக்குதாமே ????? ha ha ha //


    நம்மிடம் குதிரைகள் இல்லை, எருமைகள் மட்டுமே!, குதிரைகள் ஆரியர்கள் கொண்டு வந்தது!


    சிவலிங்கம் மாதிரி கல்லு ஒன்னு கிடைச்சா அது உங்களுக்கு சிவலிங்கம் தான்!, அதுக்காக அந்த கல்லு என்ன பண்ணும் பாவம்!

    பதிலளிநீக்கு
  63. //எதுக்கு பாஸ் முக்காடு போட்டு மனதில் இருக்கிற பிரிவினை வாதத்தை மறைக்கணும். //


    இதுல முக்காடு போட என்ன இருக்கு!
    பார்பனீயம் கடைபடிப்பவன் பார்பனன் என்று தானே சொல்லி கொண்டிருக்கிறேன்!, நான் என்னவோ பொந்து மதத்தை மட்டும் எதிர்த்து குல்லாவையும்,பல்லேலக்காவையும் ஆதரிச்ச மாதிரி பேசுறிங்க!

    பதிலளிநீக்கு
  64. @வால்பையன்
    //நீங்க சமஸ்கிருதத்துக்கும், பார்பனியத்திற்கும் சொம்படிக்கிறிங்களா!?//

    சோதிடம் என்பது பற்றி பேசினால் பார்பனியமா ? சோதிடம் முதலில் பயன்படுத்த பட்டது கிரேக்கத்தில் என்று தெரியுமா ? சோதிடம் எத்தணை நாடுகளில் பயன்படுத்த படுகிறது தெரியுமா ?

    மூர்க்கத்தனம் இப்படி தான் அறிவை குறைக்கும். காழ்ப்பு உணர்ச்சியை குறையுங்க வால் மன சம நிலைக்கு நல்லதல்ல.


    ///நீங்கள் பார்பனர் இல்லை என்று சொன்னதாக நியாபகம்!//
    இதை எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள். :( எவனை பார்த்தாலும் இனம் (சாதி) என்ன எனும் கேட்கும் வெறி தான் நீங்க கத்துகிட்ட பகுத்தறிவா ?

    நான் பொதுவில் எந்த சாதி அடையாளத்தையும் தந்ததும் இல்லை தர போவதும் இல்லை.
    நான் ஒப்பு கொள்ளாத சாதி முறைமையை வெளிப்படுத்த போவதும் இல்லை.

    //பார்பனீயம் கடைபடிப்பவன் பார்பனன் என்று தானே சொல்லி கொண்டிருக்கிறேன்!//
    இதுல இப்படி வேற ஒரு கூத்து.


    //நான் என்னவோ பொந்து மதத்தை மட்டும் எதிர்த்து குல்லாவையும்,பல்லேலக்காவையும் ஆதரிச்ச மாதிரி பேசுறிங்க!//
    இப்ப மத பிரச்சிணையுமா ?

    விவாதம் எதை பத்தி பண்ணினா என்ன ? சரியான கருத்து இருந்தா ஆதரிப்பேன். இல்லா விட்டால் எதிர்ப்பேன் அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
  65. @வால்பையன்
    இந்த இடுகையில் சாதி, மதம் சம்பந்தமான கருத்து ஏதேனும் வருகிறதா ? இதை ஆரம்பித்தது யார் ?

    வால் இன்றைய விவாதத்தில் நீங்கள் ஏதோ ஒரு உள் காரணம் கொண்டு பின்னூட்டங்கள் போடுவதாக உணர்கிறேன்.

    விவாதம் இடுகையின் கருத்துக்களை பற்றி இல்லாமல் தேவையற்ற தனி மனித தாக்குதலும், சாதி, மதம் போன்றவையும் வருகிறது.

    என்னுடைய வலைப்பூவையும், பின்னூடங்களையும் முழுதும் படிப்பவர்களுக்கு என்னை பற்றியும் தெரியும், அதிலுள்ள கருத்து திரிப்பு பின்னூட்டங்களை பற்றியும் தெரியும்

    இதற்கு மேல் இத்தகைய கருத்திற்கு பின்னூட்டம் அளிக்க மாட்டேன்.

    சோதிடம், அறிவியல், தமிழ் பற்றி மட்டும் பேசலாம்.

    பதிலளிநீக்கு
  66. @Sabarinathan Arthanari

    உண்மையாக வரலாறு தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக

    //தமிழ்//
    http://www.statemaster.com/encyclopedia/Tamizh


    //Indus Valley Civilization//
    http://www.statemaster.com/encyclopedia/Indus-Valley-Civilization

    http://www.fact-archive.com/encyclopedia/Indus_Valley_Culture

    http://www.encyclopedia.com/topic/Indus_valley_civilization.aspx

    http://www.newworldencyclopedia.org/entry/Indus_Valley_Civilization

    http://pubweb.cc.u-tokai.ac.jp/indus/english/index.html


    In view of the large number of figurines[50] found in the Indus valley, it has been widely suggested that the Harappan people worshipped a Mother goddess symbolizing fertility. However, this view has now been disputed by S. Clark.[51] Some Indus valley seals show swastikas which are found in other later religions and mythologies, especially in Indian religions such as Hinduism. The earliest evidence for elements of Hinduism are present before and during the early Harappan period[52][53]. The Hindu Siva lingam has been found in the Harappan remains[54]. In the earlier phases of their culture, the Harappans buried their dead; however, later, especially in the Cemetery H culture of the late Harrapan period, they also cremated their dead and buried the ashes in burial urns. Many Indus valley seals show animals; for example, a seal showing a figure seated in what has been compared to yoga postures and surrounded by animals which has been likened to the post-Harappan, Vedic "lord of creatures", Pashupati. The Pashupati seal seems to resemble the Trimurti (Triple Form) of Brahma-Vishnu-Shiva (Creator-Sustainer-Destroyer) in contemporary Hinduism, and if nothing else, intimate the continuity of religious traditions that have morphed into Hinduism as we know it today from periods as far back as five thousand years ago. However, a similar configuration, representing the Celtic god Cernunnos, has also been found at Gundestrup (Denmark).[55]


    //Vijayanagara Empire//

    http://www.newworldencyclopedia.org/entry/Vijayanagara_Empire

    http://www.statemaster.com/encyclopedia/Vijayanagara-Empire-Literature

    http://www.absoluteastronomy.com/topics/Vijayanagara_Empire

    பதிலளிநீக்கு
  67. இதையும் கொஞ்சம் பாருங்க.
    The evidence of science now points to two basic conclusions: first, there was no Aryan invasion, and second, the Rigvedic people were already established in India no later than 4000 BCE. How are we then to account for the continued presence of the Aryan invasion version of history in history books and encyclopedias even today?

    for details :
    http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html
    ஆர்யர்கள் வெளியில் இருந்து வந்து இங்கே ஊடுருவியதாக நமக்கு ஆங்கிலக் கல்வி சொல்லி தந்ததாலேயே நாம் இன்னும் அதையே சொல்லிக் கொண்டு நம் இந்திய பாரம்பரியத்தையே வெளியில் இருந்து கற்பிக்கப் பட்டதான தவறான கண்ணோட்டம் கொண்டு நம்மையே நாம் தாழ்த்திக் கொள்ளுகிறோம். ஒருவேளை வெளியில் இருந்து தான் இந்த 64 கலைகள் எல்லாம் வந்தது என்றால், நமது கணிதம் முதல் மொழி வரை நமக்கு கற்பிக்கப் பட்டது என்பதை நாமே ஒப்புக் கொள்கிறோம். அப்படி என்றால் இந்தியர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  68. @virutcham

    //http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html//

    ஏற்கனவே பார்த்தேங்க விருட்சம். நடுநிலையான சைட் அட்ரஸ் மட்டும் கொடுக்க விரும்பியதாலேயே இதை தவிர்த்தேன்.

    தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)