பதிவுலகிற்கு ஒரு வேண்டுகோள்

 

யாரை ஆதரிப்பது / எதிர்ப்பது ?

தமிழ் பதிவுலகில் மனதிற்கு வருத்தமளிக்கும் நிகழ்வு நடைபெற்றதாக அறிகிறேன். எப்போதெல்லாம் பதிவின்/பின்னூட்டத்தின் கருத்துக்களை விட்டுவிட்டு பதிவரின் மேல் சொற்கணைகள் வீசப்படுகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுவதை என் வாசிப்பு அனுபவத்தில் உணர்கிறேன். இரு தனிப்பட்ட நண்பர்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு இப்போது ஆண்/பெண், மேல்சாதி/கீழ்சாதி பிரச்சிணை போன்ற பல்வேறு வடிவங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நான் விரும்பும் ஒரு பதிவர் மனதால் காயமுற்று இருக்கிறார். மற்றொரு நண்பரோ பதிவுலகில் இருந்து தற்காலிகமாகவேனும் வெளியேறுவதாக சொல்லி இருக்கிறார். இது ஒரு loss & loss  நிலைமை. அதாவது இருதரப்பினருமே காயம் பட்டு இருக்கின்றனர்.

நர்சிம் அவருடைய இடுகையை நீக்கி விட்ட நிலையில் இருவரின் மனப்புண்ணையும் நோண்டி நோண்டி பெரிதாக்குவதை விட்டு விட்டு இது அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விடயமாக கருதி அனைவரும் விலகி நிற்பதே நல்லது என தோன்றுகிறது. (மற்றவர்களின் பதிவை படித்தே பிரச்சிணையை பெரும்பாலானோர் தெரிந்து கொண்டதாக உணர்கிறேன்)

 

 

வேண்டுகோள்

 

விளையாட்டாக ஆரம்பிக்கும் விசயங்கள் தான் எப்போதும் மிகமோசமான நிலைமைக்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். நமக்கு நகைச்சுவையாக இருக்கும் கருத்து அடுத்தவர் மனதை புண்படுத்தி விடுமா என்பதை எழுதும் முன் சீர் தூக்கி பாருங்கள்.

எப்போதும் கோபத்தில் பதிவு எழுதாதீர்கள். அதிலும் அடுத்தவர்களை பற்றியது எனில் பதிவு செய்து ஒரு நாள் பொறுமையாக இருந்து விசயங்களை மனதில் ஆராய்ந்து மனதிற்கு உகந்ததாக இருந்தால் மட்டும் பதியுங்கள். பின்பு அதை நீக்க வேண்டிய தேவை இருக்காது.

இந்த நிகழ்விலும் நடந்தது அதுவே. எனவே எப்போதும் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வினை செய்யுங்கள். தனிப்பட்ட பதிவர்களின் சொந்த விசயங்களுக்கு அல்ல.

 

எது நம்மை இணைக்கிறது ?

நண்பர்களே உலகமெல்லாம் இருக்கும் நம் உள்ளங்களை இணைக்கும் ஒரே சொல் அது “தமிழ்”. அது நம்மை இணைக்கவே செய்கிறது. நாமே நம்முள் பிரிந்து கொள்கிறோம். அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. ஒருவருக்கொருவரின் முகம் தெரியாமல் மனம் அறியாமல் தமிழன் என்ற ஒரே உணர்வே நம்மை இணைக்கிறது.

நரசிம்மின் இராமாயண விளக்கங்களை விரும்பும் நான், சந்தணமுல்லையின் கம்யூனிச கருத்துக்களையும் விரும்பி படிக்கிறேன். இது இரண்டும் முரணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை இரண்டுமே தமிழிற்கு அழகு சேர்ப்பவையே. இவற்றில் எதை இழந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு பகுதியை இழப்பது தான்.

 

[பி.கு. நண்பர்கள் இருவரையும் நான் சந்தித்தது கூட இல்லை. இதில் இருக்கும் கருத்து, நன்மையை எதிர் நோக்கியே எழுதப் பட்டது.]

9 கருத்துகள்:

  1. வழி மொழிகிறேன் தோழர் சபரி !
    நன்றி !

    பதிலளிநீக்கு
  2. @நியோ
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் வருத்தமளிக்கிறது நண்பரே,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. @கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
    நண்பரே எந்த அரசியல் நடக்க கூடாதென வேண்டுகோள் விடுத்தேனோ அதுவே நடந்து கொண்டு இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. I totally agree with your views, we should try to play win win game.

    பதிலளிநீக்கு
  6. @ராம்ஜி_யாஹூஇவ்விசயம் அரசியலாக்கபடுவதற்கு முன்னால் எழுதியது இவ்விடுகை. அப்போது அதுபற்றி சில நூறு பேருக்கு மட்டும் தான் தெரியும்.

    கற்பழித்த பெண்ணின் புகைப்படத்தை ஊடகங்களில் போட்டு மாமா வேலை செய்யும் சிலரை போல இவ்விசயம் தோண்டி துருவப்பட்டு அப்பெண்ணை / பெண்மையை அவமானப்படுத்த படுவது யாருக்கும் பெரிய விசயமாகவே தெரியவில்லை.

    ஒரு திரைப்படத்தில் பாதிக்கப்படும் ரேவதி பேசுவதாக வரும் வசனம். “அப்பெண் கற்பழிக்க பட்டது ஒரு முறை தான். ஆனால் அதை சொல்லி சொல்லியே தங்களுடைய அரிப்பை தீர்த்து கொண்டவர் ஆயிரம் பேர்” இது தான் இப்போது ஞாபகம் வருகிறது.

    இந்நிகழ்ச்சியை காரணமாக கொண்டு தங்களை முன் நிறுத்தியவர்களும், சுய அரசியல் செய்தவர்களும் மனித தன்மையற்ற மிருகங்கள்.

    இவ்விசயம் win win சூழ்நிலையை நோக்கி செல்வதாக தெரியவில்லை. :(

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @LK இவ்விசயத்தில் நடுநிலையாளர்களும் குறி வைத்து தாக்கப்பட்டனர்.

    நடுநிலைமை என்பது என்ன ?
    1. தார்மீக ரீதியாக தண்டனை தர வேண்டிய முடிவு பாதிக்கபட்டவரை பொருத்தது.
    2. அல்லது அவர் விரும்பினால் அவர் சட்ட பூர்வமான வழிமுறைகளை செயல்படுத்தலாம்.
    3. திரட்டிகளுக்கு இம்மாதிரியான பதிவுகளை நீக்க கோரி செய்தி அனுப்பலாம்.
    4. இவ்வாறான எந்த செயலுக்கும் மற்றவர்கள் ஆதரவு அளிக்கலாம்.

    பாசிச ஆதிக்க வெறி கொண்ட சிலர்கள் தாங்கள் சொல்லும் தண்டனையை தான் தர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    10/100 பேர் கொண்ட கூட்டம் காட்டு மிராண்டி தனமான நடவடிக்கையில் ஈடுபட முடியுமானால், நாளை பதிவுலகம் விரிவடையும் போது நம் நாட்டு அரசியல் கட்சிகள் என்ன தான் செய்ய இயலாது ?!!

    இது போன்ற நடவடிக்கைகளை பதிவுலகில் இருந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. @LK வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)