தாந்திரிகம், காந்தி, காமம்- விளக்கங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

தங்களுடைய காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகள் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு சில நண்பர்களின் எதிர் வினைகள் மிக மன வேதனையை ஏற்படுத்தியது.  தியானம், மனவலிமை, பிரம்மச்சரியம், புலனடக்கம் பற்றிய தவறான பரப்புரைகள் மூலம் விளக்கங்கள் குறைவான  இன்றைய காலகட்டத்தில் உள்ளோம் . அந்நண்பர்கள் புரிந்து கொண்டது இவ்வாறு தான் என எண்ணுகிறேன்.


1. தாந்திரீகம் உடலுறவை ஊக்க படுத்த கூடியது
2. காந்தி தனது பேத்தியுடன் உடலுறவு கொண்டார்
3. பிரேமானந்தாவை போன்ற போலி சாமியார்

 

எனக்கு தெரிந்த வகையில் விளக்க முற்படுகிறேன். உண்மை என்ன என்பதை மேலும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் போது காந்தி ஒரு பிரம்மச்சாரி என்பதையும், உடலுறவை முற்றிலும் தவிர்த்தவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். தியானம் & தாந்திரிகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்நிகழ்வை எதிர்க்கும் நண்பர்களுக்கு விளக்க வேண்டி ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.

 

 • தாந்திரீகத்தில் ஒரு வழி எல்லா பெண்களையும் தாயாக காணுதல். அதன் மூலம் உடலிச்சையை அகற்றுதல். (தாந்திரிகத்தில் மேலும் பல வழிகள் உள்ளன. காந்தி கடைபிடித்தது அவை அல்ல. அவை இங்கே பொருந்தி வரக் கூடியவை அல்ல.)
 • ஒரு மனிதன் தன் தாயின் உடலை முழு நிர்வாணமாக காண நேர்ந்தால் அது உடலிச்சையை தூண்டுமா ? அல்லது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா ? அல்லது பக்தியுடன் தொழ தோன்றுமா ?
 • காந்தியின் தாயார் உயிருடன் இருந்திருந்தால் தன் தாயுடனும் இதே வகையான சோதனையை மேற் கொண்டிருப்பார். உண்மையில் மற்ற பெண்களிலும் தாயையே கண்டார் என்பது தான் இங்கு அடிப்படையே

 

மேலும் மேற்கண்ட நிகழ்வை சரியான வகையில் புரிந்து கொண்டால், 

 1. தாந்திரிகம் எனபது ஒரு கருவி. அது உடலுறவை இயற்கையின் ஒரு பகுதி என தியானத்தின் கருவியாக உபயோக படுத்துகிறது. உடலுறவை வளர்ப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கொள்வதும் இல்லை. 
 2. காந்தி ஈடுபடுத்தி கொண்டது அக்னி பரிட்சை கூட இல்லை. நெருப்பாற்றில் நீந்துவது. தனது பேத்தியுடன் இவ்வாறு இருந்தது (ஆடையின்றி தாயின் அரவணைப்பில் இருந்தது போல) உடலுறவிற்காக இல்லை. காந்தி என்பதே ஒரு உடல் இல்லை. உடலை துறந்தவன் என்பதை உணர்த்துவதற்கு ஏற்படுத்திய வழி.
 3. காந்தி ஒரு மகாத்மா 

என்பது யாவரும் ஒப்பு கொள்வர்.

 

தாந்திரிகம் என்பது மேல் நிலை தியானம். அது தியானம் பற்றி அடிப்படை கூட அறியாத பொது மக்களுக்கு அறிவிக்க படுதல் இது போன்ற எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே தான் இந்நிகழ்வுகள் பெரும்பான்மை மக்களுக்கு அறிவிக்க படுவதில்லை. தாந்திரிகத்தில் விருப்பப்படுபவர்கள் மட்டுமே அறிந்து கொண்டுள்ளனர்.

காந்தியின் மேல் சுமத்தபடும் அரசியல் குற்றசாட்டு    இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்ட பட்டனர் என்பது. இவ்வகை குற்றசாட்டுகளுக்கு வரலாற்று அறிவு பெற்ற நீங்கள் விளக்குவதே சிறப்பானதாக இருக்கும்.

காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியமும், தாந்திரிகமும் பயிற்றுவிக்க பட்டதா ? இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் தாந்திரிகம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களா ?

 

தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.

பழந்தமிழ் அறிவியல் (http://www.tamilscience.co.cc/)

இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

இப்பதிவு எழுத தூண்டிய  பழமைபேசி பதிவிற்கு நன்றிகள். சாதி பற்றிய முந்தய பதிவையும் பார்த்து விடுங்கள்.

இப்பதிவில் சில முக்கிய விசயங்களை விவாதிக்கலாம் என்று உள்ளேன்.

 

 1. இன்று தமிழகத்தில் சாதி பெயரால் மக்கள் கொடுமை படுத்த படுவது நகரத்திலா ? கிராமத்திலா ?
 2. சமீப காலங்களில் சில பிரிவு மக்கள் தமிழகத்தின் தனி பகுதிகளில் கொடுமை படுத்த படுவது மத ரீதியானதா? பொருளாதார ரீதியிலா?

 

இன்றைய சாதியின் நிலை

எப்போதுமே சாதி என்பது பொருளாதார ரீதியானது தான். விவாசயத்தை மட்டுமே பெரிதும் நம்பி வாழும் அனைத்து கிராம நண்பர்களுக்கும் இது தெரியும். ஒரு கிராமத்தில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆதிக்க சாதியினர். (உதாரணமாக கொங்கு பகுதியில் கவுண்டர், திருநெல்வேலியில் தேவர் இப்படி.) மற்ற பிரிவினர் இவர்களை நம்பியே வாழ வேண்டும். கூலி தொழிலாளிகளும், கீழ் நிலை தொழிலாளிகளும் மிக மோசமாக நடத்த படுகின்றனர்.

 

கிராமங்களில் தொழில் வாய்ப்புகளும் மிகக்குறைவு. எனவே ஒரு பிரிவு மக்கள் இன்னொரு தொழிலை ஆரம்பிக்கும் போது போட்டியாக இல்லாமல் பொறாமையாக மாறி மிகப்பெரிய கலவரங்களில் முடிகிறது. எனவே குறிப்பிட்ட சந்ததியினர் குறிப்பிட்ட தொழில் மட்டுமே செய்ய வேண்டுமென வற்புறுத்த படுகின்றனர். (சாதி வலியுறுத்த படுகிறது)

 

தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள நகரங்களில் (சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு) போன்ற நகரங்களில்  (மற்ற பகுதிகளை ஒப்பிட) சாதி வெறி குறைவாக உள்ளதையும், வாய்ப்புக்கள் குறைவாக உள்ள (மதுரை, திருநெல்வேலி) போன்ற நகரங்களில் சாதி பதற்றம் அதிகமாக உள்ளதையும் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

 

 

மத அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உண்டா எனில் அதுவும் கிடையாது. (முந்தய பதிவு பார்க்க). இன்றைய சாதிக்கு மனு தர்மம் எனும் கூச்சல் பொய்யே தவிர வேறொன்றும் இல்லை. எந்த ஆதிக்க சாதியினர் மனு தர்மத்தை படித்து விட்டு அதனால் தான் சாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ? அதே போல மதமாற்றம் செய்யப்பட்ட மக்களும் சாதி கொடுமையிலிருந்து தப்பி விட்டார்களா ? இல்லை எனும் பதிலே கிடைக்கிறது !!! அங்கேயும் அதே கொடுமை.

 

திராவிடர் கழகங்களும் சாதி ஒழிப்பு வேலை செய்யாமல் மற்ற பிரிவு மக்களை தூண்டி விட்டதால் தான் இன்று தமிழர்கள் கூறு பட்டு கிடக்கின்றனர். ஏகப்பட்ட சாதி சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. அவற்றை வைத்து ஓயாமல் சாதி அரசியலும் நடைபெறுகிறது. இல்லக்கில்லாமல் அம்பு எய்வதால் தான் சாதி ஒழிப்பு நடைபெறவே இல்லை. மாறாக சாதி சங்கங்கள் பெருகி உள்ளன. மராட்டியர்களும், கன்னடர்களும் போன்ற பிற மாநிலத்தவர் மொழியால் ஒன்று படும் போது தமிழர்கள் ஒன்று பட முடியாமல் செய்வது இது போன்ற அமைப்புகள் தான். இவ்வகை பிரிவினை ஏற்படுத்தியதற்கு திராவிட கழங்களே முழு பொறுப்பு ஏற்றாக வேண்டும்.

 

சாதி ஒழிய என்ன செய்ய வெண்டும் ?

 1. கிராமங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பட வேண்டும்.
 2. அனைத்து பிரிவு மக்களுக்கும் சமமான முறையில் கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் வழங்க பட வேண்டும்,
 3. முதலில் அனைத்து சா(ச)தி சங்ககளும் கலைக்க பட வேண்டும். (மேல் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும், கீழ் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும்)
 4. ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரின் போட்டியையும் ஏற்று கொள்ள பழக வேண்டும்.

 

இவை இல்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமாகாது.

சாதி இழிவு முறைமை தேவையா ?

வெளிப்படையான விவாதத்திற்கு தயார். சாதி உண்டு என்பவர்களிடமும் சரி. வர்ணம் தவறு என்பவர்களிடமும் சரி.
இன்றைய தினங்களில் வலைப்பதிவுகளில் வெளிப்படும் சாதி ரீதியான கருத்துக்கள் நாம் இன்னும் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது சாதி அழிக்கபட வேண்டும் என் நினைப்போரும் பார்பனியம் என்று எழுதுவதும் நான் ஒரு பார்ப்பனர் என்று தங்களை கூறி கொள்வோரும் பயத்தையே ஏற்படுத்துகின்றனர். பிரிவுகள் எல்ல மதத்திலும் உள்ளன. இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உட்பட. இவர்களுக்குள்ளும் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை ஏற்காத மன நிலையும் உள்ளது. சில சமயங்கள் வன்முறையும் நடக்கின்றன.
ஆனால் இந்தியர்களிடம் உள்ள சாதி எனும் விசத்தை கழுவினால், நம் நாட்டில் 70% மக்கள் (70 கோடி மக்கள்) எழுச்சி பெறுவார்கள். சரி மத ரீதியான விளக்கம் என்பதை பகவத் கீதையில் பார்ப்போம். [கவனிக்க இது கீதையை பற்றி பல ஞானிகள் முன்னமே எழுதிய கருத்துக்களின் அடிப்படையில்  என் தனிப்பட்ட புரிதல் மற்றும் செயல்முறை ஆகும்]

கீதை ”நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [ சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ ] என்று வகுத்துரைக்கிறது.

 • சத்வ குணம் [செம்மைத்தன்மை] கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும்

 • ராஜஸ குணம் [ செயலூக்கம்] கொண்டவர்கள் ஷத்ரியர்கள் என்றும்

 • தாமஸகுணம் [ ஒடுங்கும்தன்மை] கொண்டவர்கள் சூத்திரர்கள் என்றும்

 • ராஜஸ தாமஸ குணங்களின் கலவை வைசியர்கள் என்றெல்லாம் இந்நூல்களில் நாம் காண்கிறோம்.
கீதை சொல்வது இதை தான்:

 1. எவன் உண்மையை சத்தியத்தை, புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிவிக்கிறானோ அவனே பிராமணன்.

 2. எவன் மக்களை காக்க இராணுவ வீரனாகவோ, காவல் துறையிலோ, அரசிலோ வாழ்க்கையை அர்பணிக்கிறாணோ அவனே சத்ரியன்.

 3. எவன் எல்லா பொருள்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க பாடுபடுகிறானோ அவனே வைசியன்.

 4. எவன் தன் உதிரத்தை வியர்வையாக சிந்தி மக்களுக்கு உழைக்கிறானோ அவனே சூத்ரன்.

  உண்மையில் இவர்களுக்குள் ஏற்ற தாழ்வு என்பதே கிடையாது. (இவர்கள் எந்த நாடாலும், மதமானாலும், இப்போது கூறப்படும் சாதியானாலும்). கவனிக்க: பஞ்சமர்கள் எனும் பிரிவே ஆரம்பத்தில் இல்லை என்பது வெளிப்படை.  மோசடியாக ஒரு பிரிவை சேர்த்தது எப்படி ? அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது எப்படி ?
பகவத் கீதையின் அடிப்படையில் உதாரணமாக  காட்ட வெண்டுமானால் பிரம்மத்தை (அறிவை, உண்மையை, சத்தியத்தை) வெளிப்படுத்தும் ஐன்ஸ்டீன், அப்துல் கலாம், அண்ணாதுரை போன்ற அறிவாளிகள் தான் பிராமணர்கள். தன் மக்களை காக்க போரில் ஈடுபட்ட இந்திய வீரர்களானாலும் சரி, ஈராக்கிய வீரர்களானுலும் சரி, அமெரிக்க வீரர்களானலும் சரி (ஜார்ஜ் வாசிங்டன், காந்தி, மண்டேலா) சத்ரியர்கள் தான்.
[கவனிக்க: பகவத் கீதையில் மதம் என்ற வார்த்தையே இல்லை. இந்த இந்திய மக்களுக்கானது மட்டும் எனவும் இல்லை. அனைத்து மனிதர்களுக்குமாகவே வழங்கப்பட்டது.]
வர்ணமும் சாதியும் அடிக்கடியும் குழப்பிக்கொள்ளப்படும் கருத்துக்களாகும். சாதி, பிறப்பு அடிப்படையில் அமைந்தது; வர்ணமோ தொழிலை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகளை வர்ணத்தில் வகைப்படுத்தும்போது, வர்ணமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறதே தவிர, தன்னளவில் அது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இதை தவிர ”என் தந்தை இவர், என் பிறப்பால் எனக்கு இது வந்தது” எனக் கூறுபவர்கள் அறியாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பகவத் கீதையையே மாற்றுபவர்கள். பகவத் கீதை தத்துவம் இன்றும் ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. 

 1. அறிவியல் அறிஞர்கள் (பௌதீக, மனோ)-பிராமணர்கள்,

 2. வீரர்கள் & ஆட்சியர்கள் (இராணுவம்,உள்துறை)-சத்ரியர்கள்,

 3. தொழிலதிபர்கள்-வணிகர்,

 4. உழைப்பாளிகள்-சூத்ரர்
எனவே ஒவ்வொரு நாட்டிலும் படி நிலை உள்ளது.
பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பது என்ன ? ஒருவனின் பிறக்கும் போதே இருக்கும் மனநிலைக்கு ஏற்பவே தொழிலை ஏற்படுத்தி கொள்கிறார்கள். எனவே செயல்களின் அடிப்படையில் வர்ணம் கற்பிக்க பட வேண்டும் என்பது தானே ? இதைக் குழைத்து முன்னோர்களின் அடிப்படையில் சாதியை அமைத்தது தானே மிகப்பெரிய தவறு ? இது தானே இன்று இத்தர்மமே அழியக்கூடிய நிலையில் இருப்பதற்கு காரணம்? இன்றைய் சூழ்நிலையில் இத்தர்மம் இரு தாக்குதல்களை எதிர் நோக்குகிறது.

 1. கண்மூடி தனமாக வெறும் உயிரற்ற சடங்குகளை பின்பற்றி மதத்தின் பெயராலேயே அதை அழிப்போர்.

 2. குருட்டுதனமான சடங்குகளை வைத்து அதன் பின் உள்ள அறிவியலையும் பகுத்தறிவின் பெயரால் ஏற்க மறுப்போர்.
இவ்விருவகை பிரிவினரால் இந்தியர்களுக்கு எவ்வகை நட்டமும் இல்லை. ஆனால் இந்தியர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னே கண்டுபிடித்த  அற்புதமான செயல்முறைகளை உலகத்தினர் இழந்து விடுவர். அவ்வளவு தான்.

நண்பர்களே பின்னூட்ட மட்டறுப்பு நீக்கபட்டுள்ளது. கருத்துக்கள் பரிமாறுவதற்கு முன் தயவு செய்து பகவத் கீதை, வர்ணம், சாதி என்பவை பற்றி தயவு செய்து தேடி படித்து கொள்ளுங்கள். ஏனெனில் நம் மனமாகிய கோப்பை ஏற்கனவே நிரம்பி இருந்தால் அவற்றில் பகிரவதற்கு ஏதுமில்லை.

கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -ஜெயமோகன்
கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2-ஜெயமோகன்