சோதிடம்
அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு உருவானதே சோதிடம் ஆகும்
சோதிடம் பார்பதன் பலன் என்ன ?
எல்லாமும் ஏற்கனவே நிர்ணயிக்க பட்டு இருந்தால் (விதி) சோதிடம் பார்ப்பதனால் மட்டும் என்ன பயன் ? எனும் கேள்வி எழும் போது மதி (பகுத்தறியும் திறன்) பற்றிய தெளிவை ஔவையார் நமக்கு அளிக்கிறார்.
சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
- ஔவையார்
”சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு” என்ற பதத்தை “அன்பே சிவம்” எனும் பதத்தின் மூலம் பொருள் விளங்கி கொள்ளலாம். அதாவது மனித வாழ்வின் அடிப்படையான அன்பை மனதில் இருத்தி தூய வழியில் செல்வோர்க்கும், தூய அறிவின் மூலம் தம்மை பாதுகாத்து கொள்வோர்க்கும் விதி என்பதை அவர்களின் மதி(பகுத்தறியும் திறன்) வென்று விடும் என்பதாகும்.
அதாவது இறைவன் மனிதர்களுக்கு அளித்த கொடை மதி (பகுத்தறியும் திறன்) என்பதாகும். இது விதிக்கு கட்டு படாதது. இதை கொண்டு தன்னுடைய மதியை மாற்றி கொள்ள இயலும் என்று தெளிவிக்கிறார். இங்கு பகுத்தறியும் திறன் என்பது அறிவுத்திறனை மட்டும் குறிக்கவில்லை. அதை கொண்டு எது வாழ்க்கைக்கு சரியான பாதை என்று அறிதல் ஆகும்.
சோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்கள்
சோதிடம் என்பது பழைய வானவியல் அறிஞர்களால் வானவியல் நிகழ்வுகளால், புவியில் இருக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்களை அறிவதற்கு பயன்படுத்த பட்ட முறை ஆகும். இதனை தனி சாஸ்திரமாக அறிவித்தனர். இதன் மூல நூல் ஆசிரியர்களாக பின்வருவோர் குறிக்க படுகின்றனர்.
1. சூரியன்
2. பிரமன்
3. சேதவியாசர்
4. பராசரர்
5. அத்திரி
6. உரோமர்
7. வசிட்டர்
8, மரிசி
9. பௌலகர்
10. யவனர்
11. சௌனகர்
12. மநு
13. பிருகு
14. ஜனகர்
15. அங்கீரசர்
16. காசிபர்
17. கார்த்திபர்
18. நாரதன்
நூல்கள்
கீழ்காணும் நூல்கள் மூல நூல்களாக அறிய படுகின்றன.
1. ஹோராசாரம்
2. சாராவளி
3. பாராசாரியம்
4. சந்தான தீபிகை
5. பிருகத் ஜாதகம்
6. சர்வார்த்த சிந்தாமணி
7. கேரளம்
8. சம்பு
மொத்தம் 4,50,000 ஸ்லோகங்கள் உள்ளதாக இந்நூல்கள் அறிவிக்கின்றன.
சொல்லப்பட்டவை
இந்நூல்களில் பாலாரிஷ்டம், நன்மை & தீமை, இராஜயோகம், நவாம்ச சக்கரம், நட்பு, ஆட்சி, உச்சம், நீசம், பகைகள், திரைக்காண சக்கரம் ஆகியவற்றுடன் மூலத்திரிகோணம் தாமத, சாத்வீக, இராஜத முக்குணவேளை, ஹோரா சக்கரம், மகாதிசை, கால சக்கர திசை, துவாத, சாமிச, திரிமிசாமிச சக்கரங்களையும் இலக்கினம் முதலான பன்னிரண்டு பாவங்கள் சொல்லும் உப பாவங்களின் பலன் போன்றவை பொதுவாக குறிப்பிட பட்டுள்ளன.
[தொடரும்]