சோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்

ஆதித்ய ஹ்ருதயம் என்பது என்ன ?

  • ஆதித்யா என்றால் சூரியன். ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். குறிப்பாக இதயத்திற்கும் மனதிற்கும் ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை
  • உலக நாயகனான ஆதித்யனின் இருதயமாகவும் போற்றப்படுகிறது. 

ஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரம்

  • சூட்சுமமான பல கருத்துக்கள் அடங்கிய இந்த ஸ்தோத்திரத்தை வெவ்வேறு அறிஞர்களின் கருத்தை ஆய்ந்து தொகுத்து பகிர்ந்துள்ளேன். மந்திரங்களும், விரிவான அர்த்தங்களும் கூகிள் டாக்ஸில் இச்சுட்டியில் உள்ளது.  மந்திரம் மட்டும் இங்கே உள்ளது.
  • பாடலை இங்கே கேட்கலாம். இந்த ஆடியோவில் ஆரம்ப துதியில் இருந்து முடிவு துதி வரை முழுமையாக உள்ளது.
  • “இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார். சூரிய பகவானின் பல்வேறு பெயர்களின் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன். 

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். ஹிந்து சூரிய வழிபாட்டு முறைகளில் முக்கியமானது அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம்.

இரகசியம் -1 


எல்லா வேத வரிகளும் இருவித அர்த்தங்களை கொண்டுள்ளன. 

  1. வெளிப்படையானது - சடங்குகள் சார்ந்தது, 
  2. உட்கருத்து - ஆத்ம போதத்திற்கானது
உதாரணமாக சூரியனை போற்றும் ஸப்த ஸப்தி எனும், சூரியனின் பதம் 7 குதிரைகள், 7 கதிர்கள் (VIBGYOR) மட்டும் குறிப்பதல்ல, மனித உடலில் உள்ள 7 மூலாதார சக்கரங்களையும் குறிக்கிறது.

அது போலவே,
  • அண்டத்தை படைத்து, காத்து, ஒடுக்கும் பரம்பொருள் பரமாத்மன். (மனித உடலிலும் அதுவே உள்ளது.)
  • அப்பரம்பொருளின் பிரகாச வடிவமே இவ்வுலகில் சூரியனாக வெளிப்படுகிறது. 
  • பரம்பொருளின் முழு வடிவையும் மனிதர்களால் பார்க்க இயலாததால் அகஸ்தியர் இராமரை சூரியனை வழிபட சொல்கிறார். 
  • எனவே இம்மந்திரம் சூரியனை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பரமாத்மனையும் வழிபடுகிறது.
ஆயுர்வேதம் உடம்பில் முதுகு தண்டில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகவும் அவை ஆன்மீக மையங்களாக செயல்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நவீன் ஆயுர்வேத மருத்துவர்கள் அவற்றை ஒவ்வொரு நிறத்தோடும், உறுப்போடும் தொடர்பு படுத்துகின்றனர். நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பை குணப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

A New Age conceptualisation of the chakras of Indian body culture and their positions in the human body
ColorChakraChakra locationAlleged function
RedFirst
Muladhara
Base of the spine, முதுகு தண்டின் அடிப்பகுதிGrounding and Survival
OrangeSecond
Svadhishthana
Lower abdomen, genitals, குறிEmotions, sexuality
YellowThird
Manipura
Solar plexus, நாபிPower, ego
The “accounting mind” that categorizes everything, assesses the pluses and minuses in life
GreenFourth
Anahata
Heart, இருதயம்Love, sense of responsibility
BlueFifth
Vishuddha
Throat, தொண்டைPhysical and spiritual communication
IndigoSixth
Vishuddha
Just above the center of the brow, middle of forehead
புருவ மத்தி
Forgiveness, compassion, understanding
VioletSeventh
Sahasrara
Crown of the head, உச்சிConnection with universal energies, transmission of ideas and information

புராணம்


தனித்தன்மை மிக்கவர் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.

மகத்தான மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால், அகிலமே பயனடையும் என்று கருதினார். அவர் தேர்வு செய்தது தான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.

ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது.

வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் உள்ளது.


இரகசியம் -2


ராம ராவண யுத்தம் மனித மனதிற்குள் உள்ள நல்ல மற்றும் தீய எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் ஆகும்.
  • ராமன் சிறந்த உள்ளத்திற்கான அடையாளம். 
  • இராவணன் என்பது பெண்களை தவறாக நடத்தும் எண்ணம்.

    தர்ம சாஸ்திரப்படி இத்தகைய பெரும் கொடிய செயல்களுக்கு தீர்வு இல்லை. தீய எண்ணங்களால் உருவாகும் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும்.

    மகிமைகள்

    ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
    1. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
    2. ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும்  அழிக்க வல்லது)
    3. ஜயாவஹம் (வெற்றி தருவது)
    4. ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
    5. அக்ஷயம் - அழிவற்றது பொங்கி பெருக கூடியது. Akṣayaṁ is the most important quality of the sun.
    6. பரமம் - மிகப்பெருமை கொண்டது
    7. சிவம் - மங்களம் தருவது
    8. ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது) blessing of all blessings
    9. ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
    10. சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
    11. ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
    12. உத்தமம் - சிறந்தது

    பலன்கள்

    • மனச்சோர்வையும். நோய்களையும் தீர்த்து, உடலை வச்ரம் போல் மாற்றும். 
    • எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள். மூன்று வேளை பாடம் செய்தார் என்றால் – எங்கேயும் அவருக்கு தோல்வியே ஆகாது. எந்த காரியத்திலும் தோல்வியாகாது. லௌகீக-சத்ருக்களும் நாசமாகி விடுவார்கள். அதோடு ஆன்மீக மார்க்கத்தில் வரும் சத்ருக்கள் – காமம், குரோதம், இத்தியாதி – அவைகளும் நாசமாகி விடும். 
    • கிரகபீடைகள் நீங்கும். ஆபத்துக் காலங்களிலும்எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும்.துன்பங்கள் தூள் தூளாகும். 
    • நினைத்த காரியம் நடந்து முடியும். தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும்.


    ஜோதிட ரீதியான பலன்கள்

    1. இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும். சூரிய தோஷம் நீங்கும். தொழுநோய் குணமாகும்
    2. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.
    3. கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
    4. ஆண் புத்திர பிராப்தி கிடைக்கும்.
    5. நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும். 
    6. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். அரசாங்க ஆதரவு உண்டாகும். அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும்.   பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும்.  ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.
    7. அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும். 
    8. அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும். 
    9. எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    வழிமுறை

    • அதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 
    • இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்! 
    • விரதமாக இருந்து சொல்வது மேலும் பயன் தரும். 
    • நீர் நிலைகள் சூரிய சக்தியை மென்மேலும் பிரதிபலிப்பதால், அவற்றின் அருகில் இருந்து நமஸ்கரிப்பது நல்ல பலன் தரும். 
    • ஆதித்ய ஹ்ருதயம் இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. 
    • இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. 
    • ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்! 
    • ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். 
    • அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும். 
    • முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும். பின்பு கணபதியை வணங்கவும். பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும். பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும். 
    • இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும். கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும். பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும். எனவே அதனை விலக்க வேண்டும். எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.

    வேறு வடிவிலான ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரங்கள்

    தமிழ்

    மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும்.

    சமஸ்கிருத்தில் படிக்க இயலாதவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும்.


    ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி!

    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
    இருள் நீக்கும் தந்தாய் போற்றி!


    தாயினும் பரிந்து சாலச்
    சகலரை அணைப்பாய் போற்றி!

    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
    துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

    தூயவர் இதயம் போலத்
    துலங்கிடும் ஒளியே போற்றி!

    தூரத்தே நெருப்பை வைத்து
    சாரத்தைத் தருவாய் போற்றி!


    – கண்ணதாசன்


    பவிஷ்யோத்தர புராணம்

    இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைவதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

    சுட்டிகள்

    இப்பதிவின் அணைத்து தகவல்களும், கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
    1. https://en.wikipedia.org/wiki/Adityahridayam 
    2. https://www.youtube.com/watch?v=-SakTUHIxek
    3. http://sthothramaalaa.blogspot.in
    4. http://www.manblunder.com/articlesview/aditya-hrudayam-introduction 
    5. https://www.hindugallery.com/devotional-songs/aditya-hrudayam/tamil/ 
    6. http://www.sanskritweb.net/sansdocs/aditya-hridayam.pdf 
    7. https://templesinindiainfo.com/aditya-hridayam-lyrics-in-tamil-and-english-with-meaning/ 
    8. http://stotraratna.sathyasaibababrotherhood.org/n3.htm
    9. http://rightmantra.com/?p=2646
    10. http://www.mazhalaigal.com/2010/february/20100229nbs_aditya-hrudayam.php#.Wnn5xyVuaaE 
    11. சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்
    12. ஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம்
    13. சூரிய வணக்கம்
    14. ஆதித்ய ஹ்ருதயம்.
    15. https://siththanarul.blogspot.in/2011/08/ 
    16. http://aanmeegachudar.blogspot.in/2013/12/blog-post_15.html 
    17. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1312 
    18. http://www.chakras.info/7-chakras/ 
    19. https://en.wikipedia.org/wiki/Chromotherapy
    20. https://docs.google.com/document/d/1fxDkseqRrSs2XqTTuSUBVvyN1hJTI5NqvwCTpC6zLVA/edit?usp=sharing

    பித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்


    இப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பித்ரு தோஷம்தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும்.



    • http://rameswaram-jothidam1.blogspot.in/2015/09/blog-post.html
    • https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2017/07/23112700/1098057/pitru-dosha-pitru-tarpanam-dosham-reason.vpf
    • http://www.adityaguruji.in/2015/08/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/
    • http://www.yourastrology.co.in/news/pithruthoshamvilaga-jothidam.html


    பித்ருக்கள்

    பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

    நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். 



    சிரார்த்தம்

    பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். 

    நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.  இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.


    பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்
    1. பிதா - தகப்பனார்
    2. பிதாமஹர் - பாட்டனார்
    3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
    4. மாதா - தாயார்
    5. பிதாமஹி - பாட்டி
    6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
    7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
    8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
    9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
    10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
    11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
    12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி
    மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.


    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    சூரியனும் சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படுகிறார்கள். தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம்.

    நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் ஒளி இழந்த இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.

    சூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல ராகுபகவான் தந்தையின் முன்னோர்களையும் கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது முதன்மையான தோஷமானது.

    ராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகுபகவான் சூரியனின் வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா? வேறுவகைகளில் அந்த ராகு கேதுக்களுக்கோ சூரிய சந்திரர்களுக்கோ சுபர்பார்வை தொடர்பு ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.
    • ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. 
    • ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். 
    • ஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், அரசாங்க அதிகாரத்தை கொண்ட உயர்நிலையில் இருப்பவர்களையும் என்னால் காட்ட முடியும். 
    • உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம். 
    • ஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது. 
    • இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் காட்டுகிறது. 
    • தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண்-பெண் இருபலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். 
    • 6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.
    • சந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 
    • சூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது 
    • சூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.
    • கடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும். 
    • குருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.

     பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

    • தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்- தந்தையர் காலமாகிவிட்டால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை (இறுதிச் சடங்கு) பிள்ளைகள் செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும். 
    • கூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் (ஆண்-பெண் இருவரும்) வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருப்பது.
    • இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தும் சொத்துச் சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமகிரியைகளைச் செய்யாமல் உதாசீனப்படுத்துவது. 
    • (வெளிமாநிலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் பயணத்தடை காரணமாக தாமதமாக வந்து இறுதிச் சடங்கு செய்யத் தவறிவிடுவார்கள். இவர்களை பித்ரு தோஷம் பாதிக்காது)
    • ஸ்ரீ ராமபிரான் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டிற்குச் செல்கிறார். அப்போது அவர் தந்தை இறந்த செய்தி அவருக்குக் கிடைக்கிறது. இறைவன் அவதாரமான ஸ்ரீராமபிரான், ஆஞ்சனேயரை வைத்து தர்ப்பணம் செய்து புண்ணியம் பெற்றதாகப் புராணக் கதைகள் வாயிலாகத் தெரிய வருகிறது. 
    • பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது. 
    • ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 
    • ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 
    • ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது. 
    • ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 
    • ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது. 
    • கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். 
    • பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். 
    • ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். 
    • ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். 
    • துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். 
    • நமது முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும். அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத் தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.

    பரிகாரம்

    அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

    மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு 'பித்ரு பூஜை' செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்

    பரிகாரம் – 1

    நூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும். உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும்.) அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.

    பரிகாரம் – 2

    சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் நூறு கிராம் பச்சரிசி, ஐந்து ரூபாய்க்கு அகத்திக்கீரை 50 கிராம் கருப்பு எள், 100கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

    பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை


    இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன

    பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்!

    ராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.

    பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்

    காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும். 


    ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய! 
    வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா 

    இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்

    ஆதித்ய ஹ்ருதய மந்திரம் சூரியனை வழிபடும் மிகச்சிறந்த மந்திரம் ஆகும். அது பற்றிய முழுவிளக்கத்தை இங்கு காணலாம்.

    ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..? 

    இந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும் கோயில- ராமேஸ்வரம் கோவில்

    யாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். 

    குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங்களால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.


    இலவசமாக பாஸ்கரா ஜோதிடம்: 250க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள்

    பாஸ்கரா ஜோதிடம்

    சமீபத்தில் லக்‌ஷ்மனனின் முகநூல் பதிவை பார்க்க நேர்ந்தது.

    அவர் தன்னை அறிவியல் முறைப்படி சோதிடம் பார்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கிறார்.

    பொதுவாக பல சோதிடரும் பயண்படுத்துவது பாரம்பரிய முறை ஆகும். காலத்திற்கேற்ற  பாரம்பரியத்தில் இருந்த பல முரண்பாடுகளை கலைந்து முதலில் KP முறை உருவாக்கப்பட்டது. அதில் இருந்து பல முரண்பாடுகளை கலையப்பட்டு உருவாக்கப்பட்டது தான்பாஸ்கரா ஜோதிட முறை என்னும் அவர், மேலும்

    • இதில் கிரகங்கள் நிற்கும் இடம் குறிப்பிட்ட degree / minute / seconds வரை கணக்கில் எடுக்கப்படுகிறது. கிரகம் நின்ற நட்சத்திரம் அதனுடைய உபநட்சத்திரம் வரை துள்ளியாமாக பகுத்து எடுக்கப்படுகிறது.
    •  பாஸ்கரா ஜோதிடம் சரியான பாதைக்கான மிகச்சிறந்த ஆரம்பம். பாஸ்கரா ஜோதிடம் முற்றும் முழுமை என்பதல்ல. இதை மருத்துவத்துறைக்கு ( ஆங்கில மருத்தவத்திற்கும் சேர்த்து ) உதவும் படி இதை மாற்ற வேண்டும் என்பதே அவரது தனிபட்ட விருப்பம்.  
    என குறிப்பிட்டுள்ளார். 

    இது பாஸ்கரா சோதிட முறை குறித்து அறிய ஆர்வத்தை தூண்டியது. இம்முறையை கண்டுபிடித்துள்ள சோதிடர் பாஸ்கர் 250க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள் வழியாக அணைவரும் எளிய முறையில் இலவசமாக சோதிடத்தை கற்க வழி செய்துள்ளார்.

    ஆர்வமுள்ள நண்பர்கள் அவரது வீடியோக்களை யூடியுபில் காணலாம் https://www.youtube.com/channel/UCDY_F_2GOYzYdXM3pBAD7hQ/videos


    சோதிடம்-7 சந்திர சுழற்சியும், ராகு( Rahu), கேது (Kethu) வின் அவசியமும்?

    ராகு( Rahu), கேது (Kethu) வின் அறிவியல் தன்மைகள்

    ராகு கேதுக்கள் பற்றி தெரிந்து கொள்ள புவி, நிலவு, ரவி பற்றி அடிப்படைகள் அவசியமானது ஆகும்.

     

    புவி சுழற்சி

    globespin  axialtiltobliquity

     

    • கோள (உருண்டை) வடிவ பூமியானது தன்னையும், சூரியனையும் கடிகார எதிர் திசையில் சுற்றுகிறது. 
    • முதல் படத்தில் உள்ளது போல் புவி ஒரு குறிப்பிட்ட அச்சை (Rotation Axis) கொண்டு சுற்றினாலும் அவ்வச்சானது சூரியனுக்கு நேராக இல்லை.
    • அச்சின் மேல்பகுதி  வட துருவம் (North Celestial Pole) எனவும் கீழ் பகுதி தென் துருவம் (South Celestial Pole) எனவும் அழைக்கப்படும். புவி அச்சை கொண்டு பூமத்திய பகுதியை ஒரு கற்பனை கோடு வரைந்தால் கிடைப்பது பூமத்திய ரேகை (Celestial Equator) எனப்படும்.
    • புவி அச்சும் பூமத்திய ரேகையும் (Rotation Axis) சூரியனுக்கு 23 டிகிரி சாய்ந்துள்ளது. இந்த சாய்வானது Axis tilt or Obliquity என்று அழைக்கப்படுகிறது.

     

    சந்திர சுழற்சி

    lunar_perturbation

    • நிலா புவியையும், புவி சூரியனையும் நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன. அதாவது நிலா புவியை ஒரு குறிப்பிட்ட நாள்களில் அருகாமையில் இருக்கும். புவிக்கு நிலா மிக அருகில் இருக்கும் இடம் Perigee எனப்படும்[During perigee, the moon is at it's closest distance to the earth (about 375,200 km)]. இதே போல நிலா புவிக்கு மிக தொலைவில் இருக்கும் இடம் Apogee எனப்படும் (the moon is at it's greatest distance[about 405,800 km] from the earth)
    • நிலா ஒரு முறை புவியை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 29.5 நாள்கள். இது சினாடிக் மாதம் Synodic Month எனப்படும்
    • புவியும் சூரியனை சுற்றி வருவதால் ஒரு மாதத்தில் தோராயமாக 360 பாகையில் 12ல் ஒரு பங்கு சுற்றுகிறது.
    • எனவே நட்சத்திர மண்டல குறியீடாக கொண்ட வான் காட்சியில் அதே நட்சத்திரத்தில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 27.3 நாள்கள். இது சைடீரியல் மாதம் Sidereal Month எனப்படும. இதை கீழுள்ள வீடியோவின் மூலம் விளங்கி கொள்ளலாம்.
     
     

     

    350px-Earth-Moon

    மேலேயுள்ள படம் கிரகணங்கள் தோன்றுவதை புரிந்து கொள்ள முக்கியமானது ஆகும். இப்படத்தில் புவிசுற்றுபாதை நீல நிறத்திலும், நிலவின் பாதை சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளது.

    • சந்திர சுழற்சி படத்தில் குறிப்பிட்டபடி சூரியனது பாதையில் நிலவின் பாதை இரு இடங்களில் வெட்டும்.
    • சந்திரன் எதிர்கடிகாரதிசையில் சுற்றுவதால் முதலில் வெட்டும் இடம் Ascending  Node (AN) எனவும் அதன் எதிர்பகுதி Descending Node (DN)  எனவும் அழைக்கப்படும்.
    • இப்படத்தில் குறிப்பிட்டபடி சந்திரன் புவியை சுற்றும் பாதை பூமியின் சுற்றுபாதைக்கு சிறிதளவே மாறுபடுகிறது. வித்தியாசம் 5.14 பாகை மட்டுமே.
    • எனவே சூரிய சந்திர பாதைகள் வெட்டும் புள்ளிகளில் சந்திரனும் சூரியனும்  நேராக வரும் போது மட்டுமே கிரகணங்கள் தோன்ற முடியும் என்பது உணர தக்கதே.

     

    மேலும் சில அறிவியல் துளிகள்

  • புவியின் விட்டம் (Actual diameter of the earth) ~12,756 km
  • நிலவின் விட்டம் (Actual diameter of the moon) ~3476 km
  • ரவியின் விட்டம் (Actual diameter of the sun) 1,390,000 km
  • புவி நிலவிற்கு இடையேயான தூரம் (Average distance between the earth & moon) ~384,000 km
  • புவி ரவிக்கு இடையேயான தூரம் (Average distance between the earth & sun) ~150,000,000 km
  •  

    அடுத்த பகுதி: சோதிடம்-8 கிரகணங்கள், ராகு( Rahu), கேது (Kethu) க்களால் ஏற்படுவது உண்மையா ?

    [தொடரும்]

    சோதிடம்-6 சந்திரன், ராகு( Rahu), கேது (Kethu) என்பவற்றின் அறிவியல் ஆதாரம் என்ன ?

    ராகு, கேது பார்ப்பதற்கு முன் சென்ற பகுதியின் தொடர்ச்சியாக அமாவாசை, பௌர்ணமி பற்றிய மேலும் சில அறிவியல் தன்மைகளை பார்த்து விடுவோம்.

     

    அறிவியல் உண்மைகள்

    • புவி, நிலவு ஆகியவை தன்னுடைய பாகங்களின் தோராயமாக 50% பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளியை பெறுகின்றன.
    • ஒவ்வொரு அமாவசையிலும் சூரியனும், மதியும் புவிக்கு ஒரே பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு மறுமுனையில் அமைந்த சூரியனின் வெளிச்சம் படாத பகுதி எனவே நிலவு தெரிவதில்லை
    • அமாவசையில் சூரிய உதயமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்
    • ஒவ்வொரு பௌர்ணமியிலும் சூரியனும், மதியும் புவிக்கு எதிரெதிர் பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு எதிராக அமைந்த, சூரியனின் வெளிச்சம் படும் பகுதி எனவே நிலவு முழுவதும் தெரிகிறது.
    • பௌர்ணமியில் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

     

    moon_phases_diagram

     

    ராகு, கேது

     

    ராகு கேது என்பவை கிரகங்கள் என்பதன் மூலம் சோதிடம் பொய் எனபதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.

     

    சாயா என்பதன் பொருள் என்ன ?

    நன்றாக கவனித்தால் சோதிடத்தில் ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்க பட்டுள்ளது விளங்கும். சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்கு புலனாகாத (கற்பனை - மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனை புள்ளிகள்.

     

    ராகு, கேது இல்லாத சோதிடம் உண்டா ?

    இந்திய விஞ்ஞானியான ஆர்யபட்டர் தன்னுடைய சூரிய சித்தாந்தத்தில் ராகு, கேது என்பவை சாதாரண கிரகங்கள் அல்ல என்பதை மறுத்துள்ளார். சூரிய சித்தாந்தத்தை கொண்டு சோதிட விளக்கங்கள் வடிவமைத்த வராக மிகிரர் தன்னுடைய நூலான பிருஹத் ஜாதகம் எனும் நூலில் ஆயிரக்கணக்கான சூத்திரங்களில் ராகு, கேது என்பதை குறிப்பிடாமலேயே  சாதகம் பார்க்கும் படி வடிவைத்துள்ளார்!

    Varahmihir, the father of astrology in his famous book Brihat Jataka did not recognise Rahu and Ketu but in his another book Brihat Samhita he devoted one chapter to Rahu and Ketu and considered them not any celestial physical body like other planets but as the nodes of the Moon, ie, points of intersection of orbits of the Moon and the Earth. The north point of this intersection is called Rahu (north node) while the south point of that is called Ketu (south node). In Surya Siddhanta (an antique book on Astronomy) they are also considered as nodal points which are now known as shadowy planets. Our learned astrologers found their significant role in judging horoscope for ups and down in one’s life, these nodes have been referred to the class of planets.

    --http://www.futurepointindia.com/articles/research-articles/rahu-ketu.aspx

     

    ராகு, கேது பிற்காலத்தில் ஏன் உருவாக்கபட்டது ?

    • பூமியின் முக்கிய நிகழ்வுகளான சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இரு குறிப்பிட்ட புள்ளிகள் நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த கிரகணங்கள் வருடம் ஒரு முறையாவது நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகளும் 18.6 வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திர மண்டலங்களை சுற்றி வந்து புவி சுற்றை நிறைவடைவதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகள் ஒன்றுக்கொன்று 180பாகையில் உள்ளதை கண்டறிந்தனர்.
    • இந்த கற்பனை புள்ளிகள் கொண்டு கிரகணங்கள் நிகழ்வதை தோராயமாக கணித்தனர். 

     

    எனவே இவற்றிற்கு பெயர் கொடுக்க முனைந்த அறிஞர்கள் கற்பனையான் மெய்நிகர் புள்ளிகள் எனும் பொருள் வாய்ந்த சாயா கிரகம் என்று கூறினர்.

    rahuketu_thumb[1]

     

    அறிவியல் ரீதியான விளக்கம் என்ன ?

     lunar_perturbation

     

     

    அடுத்த பகுதியில்…

     

    [தொடரும்]

    சோதிடம்-5 பௌர்ணமி, அமாவாசை

    சூரியோதயம், சந்திரோதயம்

    சென்ற பகுதியில் கிரகங்களின் உதயம் பற்றி பார்த்தோம். இப்போது பூமியில் அடிக்கடி நிகழும் கிரக உதயங்களான சூரியோதயம் மற்றும் சந்திரோதயம் பற்றியும் இவற்றால் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளான  பௌர்ணமி, அமாவாசை பற்றி பார்ப்போம்.

    300px-geometry_of_a_total_solar_eclipse.svg

    அமாவாசை

    சாதாரணமாக அமாவாசை என்பது சந்திரன் வராத நாள் என்றும், பௌர்ணமி என்பது முழு நிலவு வரும் நாள் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அமாவசையில் சந்திரன் உதிக்கிறது. ஆனால் சூரியன் உதிக்கும் அதே நேரம் உதிக்கிறது என்பது ஆச்சரியமூட்டும் விசயம் அல்லவா ? கீழேயுள்ள இம்மாத அமாவாசை நாளன்று ஏற்படும் உதய தகவல்களை காண்க.

    சூரிய உதயம் சந்திர உதயம் காண உதவும் பக்கம் http://aa.usno.navy.mil/data/docs/RS_OneDay.php

    தமிழக நகரங்களின் பூமியின் இருப்பிடம் காண உதவும் பக்கம்  Latitude and Longitude of Important locations in Tamilnadu

     

    Sun and Moon Data for One Day

    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):

            Saturday
            12 June 2010          Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:55                
            Sun transit               12:18                
            Sunset                    18:42                
            End civil twilight        19:05                

    MOON
            Moonset                   17:43 on preceding day
            Moonrise                  05:29                
            Moon transit              12:06                
            Moonset                   18:43                
            Moonrise                  06:31 on following day

    New Moon on 12 June 2010 at 16:44 (Universal Time + 5:30).

    அதாவது திருச்செங்கோட்டில் 12 தேதி சூரிய உதயம் 05:55 AM ஆனால் சந்திர உதயமும் 05:29 AM தான் நடைபெறும். எனவே சூரிய ஒளியில் சந்திரன் நமக்கு தெரிவதில்லை. சந்திரன் 18:43 PM மறைந்து விடுவதால்(அஸ்தமனமும்) நமக்கு சந்திர ஒளி இரவில் கிடைப்பதில்லை.


    பௌர்ணமி

    இதற்கு எதிர்மாறாக பௌர்ணமியில் சந்திரன் தோராயமாக சூரிய அஸ்தமனத்தின் போது உதிக்கிறது. கீழேயுள்ள இம்மாத பௌர்ணமியின் போது உதய தகவல்களை காண்க.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Saturday
            26 June 2010          Universal Time + 5:30         
    SUN
            Begin civil twilight      05:34                
            Sunrise                   05:57                
            Sun transit               12:21                
            Sunset                    18:45                
            End civil twilight        19:08                

    MOON
            Moonrise                  17:54 on preceding day
            Moon transit              23:44 on preceding day
            Moonset                   05:35                
            Moonrise                  18:46                
            Moonset                   06:29 on following day
    Full Moon on 26 June 2010 at 17:01 (Universal Time + 5:30).

     

    அதாவது திருச்செங்கோட்டில் 26 தேதி சூரிய அஸ்தமனம் 18:45 PM ஆனால் சந்திர உதயமும் 18:46PM தான் நடைபெறும். எனவே நமக்கு முழு சந்திர ஒளி இரவில் கிடைக்கும்.


    7ம் நாள் (சப்தமி) அன்று


    வளர்பிறை சப்தமி(18 ஜீன் 2010) அன்று நடுபகலில் சந்திர உதயம் ஏற்படும். தேய்பிறை சப்தமி (4 ஜுன் 2010) அன்று நடுஇரவில் சந்திர உதயம் ஏற்படும்.


    moonphasediagram.jpeg

    விளக்க குறிப்புகள்

    பூமியின் பகல் வெள்ளை நிறத்தில், இரவு கருமை நிறத்தில் உள்ளது. புவியின்  ஒரே இடம் வெவ்வேறு நிலைகளில்(உதய,அஸ்தமனம்) கொடியினால் குறிக்க பட்டுள்ளது.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Friday  
            4 June 2010           Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:54                
            Sun transit               12:17                
            Sunset                    18:39                
            End civil twilight        19:02                

    MOON
            Moonrise                  23:41 on preceding day
            Moon transit              05:44                
            Moonset                   11:49                
            Moonrise                  00:17 on following day
    Phase of the Moon on 4 June:   waning gibbous with 56% of the Moon's visible disk illuminated.

    Last quarter Moon on 5 June 2010 at 03:43 (Universal Time + 5:30).


    [தொடரும்]

    சோதிடம்-4 கிரகங்கள் தேவர்களா ?

    பூமிக்கு அருகிலுள்ள & பெரிய கிரகங்கள் வெறும் கண்களாலேயே பார்க்க பட கூடியவை. செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி. கடந்த ஏப்ரல் மாதங்களில் இவை வானில் காட்சி அளித்தன. இவற்றை கூர்மையாக கவனித்தே பலன்கள் கணிக்க பட்டிருக்க வேண்டும்.

    மனிதர்களுக்கு சக்திக்கு மீறிய பொருள்கள் “தேவர்” என்ற வார்த்தையாக குறிப்பது பழங்கால மரபு. எனவே தான் தேவன் என்ற சொல் பயன்பட்டிருக்க வேண்டும். அதை கொண்டு விஞ்ஞானத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத புராணங்கள் கூறுவது முற்றிலும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். புராணங்களே சமீப காலத்தில் தோன்றிய கதைகள் தான் என்பது இலக்கிய ரீதியாக ஆராயப்பட்டு வரும் கருத்தாகும்.

     

    கிரகணம் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் தேவன் வந்து நேரடியாக சோதிடர்களுக்கு உபதேசம் செய்து விட்டு போனதில்லை. அவை வானியலை ஆராய்வதாலேயெ கண்டு பிடிக்க பட்டன. சோதிடம் கற்று கொள்ளும் ஒவ்வொருவரும், விமர்சிப்பவர்களும் உண்மைகளை அறிய அதன் அடிப்படை அறிவியல் மூலாதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் விடயங்கள் மூட நம்பிக்கைகளை தவிர வேறெதயும் தரப்போவது இல்லை.

    இந்திய அறிவியலின் உலக கொடை -http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_31.html

     

    Watch 5 planets in the sky
    Another amazing feet can be seen in the sky for one week. Generally, we see Sun, Moon and stars in the sky with our naked eye. It is very rare to see the other planets. Only with the use of telescope we can see the other planets. But we can have the chance of seeing five planets without the aid of any telescope. Reason for it is, all of them are coming closer to the earth. From 4th April to 10th April, these five planets can be seen every night.

    Visible planets:
    The planets visible are Venus, Mercury, Mars, Saturn and Jupiter

    - http://www.bloggerspoint.com/watch-venus-mercury-mars-saturn-and-jupiter-with-naked-eye-how-to-recognize-the-planets-in-sky/

     

    Mars Venus Jupiter stars Pollux Castor together in night sky 20020522 over Norbiton London England 02 BRM.jpg

    planets-Mars-Venus-Jupiter-stars-Pollux-Castor-together-in-night-sky-20020522-over-Norbiton-London-England-02-BRM

     

    இன்னும் வானியலை அறிவியலுக்காக ஆராய்பவர்கள் இருக்கிறார்கள். சில இணைய தள முகவரிகள் கீழே ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

      1. http://www.thenightskyguy.com/
      2. http://www.bloggerspoint.com/watch-venus-mercury-mars-saturn-and-jupiter-with-naked-eye-how-to-recognize-the-planets-in-sky/
      3. http://mirror-us-ga1.gallery.hd.org/_c/natural-science/_more2002/_more05/planets-Mars-Venus-Jupiter-stars-Pollux-Castor-together-in-night-sky-20020522-over-Norbiton-London-England-02-BRM.jpg.html

     

    ST__LUCIA_T20_CRICK_115662e

     

     

     

    உதயம், மறைவு

    எந்த ஒரு வானியல் பொருளும், ஒரு கிரகத்தின் வானின் பார்வை பரப்பிலிருந்து தோன்ற ஆரம்பிக்கும் நேரம் உதயம் எனப்படும். வானின் பார்வை பரப்பிலிருந்து மறையும் தருணம் அஸ்தமணம் எனப்படும்.

    சூரியோதயம், சந்திரோதயம் மட்டுமள்ள செவ்வாய் உதயம் முதலான பல்வேறு உதயங்கள் ஏற்கனவே வழக்கில் உள்ளது. உதயம் எனும் வார்த்தை புவிக்கு மட்டும் பொருந்தாது மற்ற எல்லா கிரகங்களிலும் கூட ஏற்படும்

     

    சூரியோதயம், சந்திரோதயம்,… பூமியோதயம்

    Looking back on Earth from Mars from Mars, the planet in the red sky higher, the earth and the moon hanging in the air. October 3, 2007, the Mars orbiter random survey carried by high-resolution HiRISE camera on Mars in the operation, the 142 million kilometers from Mars took place this picture.

    - http://fenyu.org/the-best-photos-of-mars-sky/

     

    பூமியும், புவியின் சந்திரனும் ! செவ்வாயிலிருந்து ;)

    The_best_photos_of_Mars_sky_17 

    [தொடரும்]

    சோதிடம் – 3 அடிப்படைகள்

    சோதிடம் என்பதன் வரலாறு என்ன? (இது இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது ?)
    சோதிடம் என்பது கிமு 2000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே உலகின் வெவ்வேறு பகுதிகளில் (இந்தியா, சீனா, கிரேக்கம், தென் அமெரிக்க மாயன்) உருவாகி வந்த தத்துவம்.
    சோதிட வளர்ச்சிக்கு அலெக்சாண்டரின் உலக படையெடுப்பு மிக முக்கியமானது. இவர் பாபிலோன், கிரேக்கம், இந்தியா போன்ற பகுதிகள் வரை தன் ஆட்சியை விரிவாக்கியதன் விளைவாக கலாசார பரிவர்தணையும், சோதிடமும் பரவின. பாபிலோனியர்களின் சோதிட முறையானது ஏற்கனவே இந்நாடுகளில் இருந்த முறைகளில் கலந்து சோதிட வளர்ச்சிக்கு வித்திட்டது.
    440px-Map-alexander-empire
    இது இந்தியாவில் மட்டும்  கடைபிடிக்க படுகிறது
    தவறு.  இது பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாசார முறைகளில், கிரகங்களை கொண்டு பயன்படுத்த பட்டது.
    Listed below are some significant traditions of astrology. They include, but are not limited to, the following:
    • Babylonian astrology பாபிலேன்
    • Horoscopic astrology and its specific subsets:
      • Hellenistic astrology 
      • Jyotish or Vedic astrology இந்திய முறை
      • Persian-Arabic astrology பெர்சிய முறை
      • Medieval & Renaissance horoscopic astrology மறுமலர்ச்சி
      • Modern Western astrology with its specific subsets: நவீன சோதிடம் 
        • Modern Tropical and sidereal horoscopic astrology
        • Hamburg School of Astrology
          • Uranian astrology, subset of the Hamburg School
            • Cosmobiology
            • Psychological astrology or astropsychology
    • Chinese astrology சீனம்
    • Kabbalistic astrology 
    • Mesoamerican astrology
      • Nahuatl astrology
      • Maya astrology  மாயா
    • Tibetan astrology திபெத்
    • Celtic astrology

    தற்போது கடைபிடிக்க படும் முறைகள் Current traditions

    Traditions still practiced in modern times include:

    சோதிடம் என்பது பழமை மட்டும் தான், வளர்ச்சி நின்று விட்டது.
    தவறு. சோதிடம் வானவியலில் கண்டுபிடிக்கபடும் புது விடயங்களை கொண்டு அதன் விளைவுகளை புள்ளிவிவர அடிப்படையில் கணித்து கொண்டு உள்ளது.

    புதிய சோதிட முறைகள் Recent Western developments (நன்றி விகிபேடியா)

    Traditions which have arisen relatively recently in the West:


    சூரியனும், சந்திரனும் கிரகமா ?
    சோதிடத்தில் குறிப்பிடபடும் கிரகம் என்ற சொல்லின் அர்த்தமும், தற்போது அறிவியலில் பயன்படுத்தபடும் கிரகம் (planet) என்பதும் வேறு வேறானவை.
    1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை ஜீவர்களை பாதிக்கும் வானியல் பொருட்கள்/நிகழ்வுகளை குறிக்கும் பொருளில் பயன்பட்டு வந்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
    2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற போது புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
    மேலும் உதாரணங்கள் http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_30.html

    கிரகம் என்ற வார்த்தையின் அறிவியல் விளக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. நவீன விளக்கம்
    Technically, there has never been a scientific definition of the term Planet before 2006. When the Greeks observed the sky thousands of years ago, they discovered objects that acted differently then stars. These points of light seemed to wander around the sky throughout the year. We get the term "planet" from the Greek word "Planetes" - meaning wanderer. - http://missionscience.nasa.gov/nasascience/what_is_a_planet.html
     wiap_maincontent_img03
    ஒரு துறை தன் விதிகளை சரி செய்து கொள்வது பித்தலாட்டம் என்பது முட்டாள்தனம். அறிவியல் ஆயிரக்கணக்கான முறை இத்தவறை செய்துள்ளது ;)


    சூரியன் எனும் நட்சத்திரம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
    நாம் ஏற்கனவே சோதிடம் என்பது புவிக்கு மற்ற பொருள்களால் ஏற்படும் விளைவுகளை கணிக்க பயன்படுவது என பார்த்தோம். தாவரங்களின் ஸ்டார்ச் சேகரிப்பு பற்றி படித்துள்ளோம் அல்லவா ? அதாவது உயிரனங்களின் வாழ்க்கைக்கு சூரியனின் சக்தியானது இன்றியமையாதது. மற்ற நட்சத்திரங்கலால் இது நம் பூமியில் நிகழுமா ? சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்றா ? சூரியன் இல்லாமல் மற்ற நட்சத்திரங்களால் புவியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியுமா ? புவிக்கு தரும் பலன்களை வைத்து தான் சொற்களின் வித்தியாசம் இருக்கிறது.
    சூரியன் என்பதும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் வேறு வேறு என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? எனவே தான் சிறப்பு பலன்கள் கூறப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் பிறந்த நாயும், மனிதனும் ஒண்ணா? இல்லையென்றால் ஏன் ?
    கிரங்களால் மனிதனும் நாயும் பிறப்பதில்லை. மனிதனும் நாயும் பிறக்கும் போது கிரக நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். கிரக பலன்கள் உயிரினங்களை பொருத்து மாறுபடும்.

    ஆணுக்கும், பெண்ணுக்கும், திருநங்கைக்கும் கூட பலன்கள் வேறுபடுமா?
    ஆண், பெண் இருவருக்கும் உடல் உறுப்புகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? பெண்களுக்கு உள்ள சிறப்பு உருப்புக்களை & தன்மைகளை பொருத்து பலன்கள் மாறும்.

    1. கர்ப்ப பை.
    2. மாதவிலக்கு.
    3. மெனோபாஸ்.
    4. தாய்மை அடையும் நிலை.
    5. பாலூட்டும் நிலை.

    திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய குறிப்புகளும் சோதிடத்தில் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றம் ஜீன்களை பொறுத்தது எனில் பிறக்கும் போதே கண்டு பிடிக்க முடியுமா முடியாதா ? (இது சோதிடத்திற்கு நேரடியாக சம்பந்தமில்லை எனினும் பிரச்சிணையின் வேறு கோணத்தை உணர்த்த பயன் படுத்தி கொண்டேன்)
    இயற்கை பேரழிவு போன்ற நிகழ்வில் (சுனாமி..)  இறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஜாதகமா ?
    புவியில் ஏற்படும் நிகழ்வு அனைவரையும் பாதிக்கும். அதன் பிறகு நாடு, மாநிலம் இவை போன்று. இவற்றின் பலன் செயல்படும் போது தனிப்பட்ட மனிதர்களின் சாதகம் பயனற்றவை ஆகிவிடும்.
    பூமிக்கு ஏற்படும் பலன், நாட்டிற்கு ஏற்படும் பலன் முதலியவை ஆராய்ச்சி செய்யபடுகிறது. பிறகு தனிப்பட்ட மனிதர்களுக்கான பலன்கள் பார்க்க பட வேண்டும்.  உதா: சுனாமி, இந்தியா பற்றிய இடுகைகளை பார்த்து விடுங்கள்.
    [தொடரும்]

    சோதிடம் – 2 அடிப்படைகள்

    சோதிடம் ஒரு வானவியல் பிரிவில் ஒன்றா ?

    வானவியல் என்பது வானில் பல்வேறு பொருள்கள் இருக்கும் பௌதீகமான தன்மைகளை கண்டறிய்வும், குறிப்பிடவும் பயன்படுகிறது. சோதிடம் என்பது வானவியல் மாற்றங்கள் எவ்வாறு ஜீவராசிகளை அல்லது கிரகங்களை பாதிக்கின்றன என்பது பற்றியது. சோதிடம் கணக்கில் எடுத்து கொள்வது கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள் மட்டும் தான்.  இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றன.

    Astronomy deals with the study of the location, motion, and nature of objects in space. Astrology is the interpretation of the influence of the heavenly bodies on human affairs.

    சோதிடம் என்பதும் வானியல் என்பதும் வேறு வேறு. சோதிடம் என்பது வானியலின் மாற்று அல்ல. உண்மையில் சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது.  வானவியல் இல்லாமல் சோதிடம் இல்லை. 

    வானவியலில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. சோதிட விதிகளை ஏற்படுத்திய முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் அறிந்தவற்றில் உள்ள சரியானவற்றை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும். இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறப்படுகின்றன.

     

    சோதிடத்தின் அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன ?

    சோதிடத்தின் செயல்பாட்டை கிளஸ்டர் அனலைசிஸ் (Cluster analysis) முறைமை மூலம் விளக்கலாம். அதாவது மனிதர்கள் பிறந்த காலகட்டத்தில் இருந்த கிரக நிலைகளை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பலன்களை பதிவு செய்வது(observation).  பிறகு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புள்ளி விவர அடிப்படையில் மனிதர்களின் கிரக நிலைகள் மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்களை ஒப்பீடு செய்து (analysis) கிரகங்களின் பலன்கள் நிர்ணயம் செய்யபடுகிறது. இப்பலன்கள் மற்றவர்களுக்கு நிகழ கூடிய வாய்ப்பு சதவிகிதம் (output) தரப்படுகிறது.

    சிலர் சோதிடம் முடிவான முடிவுகளை தருவதில்லை என குறைபடுகின்றனர். சிலர் சோதிடர் சொல்வதையே முடிவு எனவும் கருதுகின்றனர். நன்றாக கற்றறிந்த சோதிடர் எதையும் முடிவாக சொல்ல கூடாது என்பது தான் சோதிடத்தின் அடிப்படையே. நிகழ்தகவு காசை சுண்டிவிட்டால் நிகழ கூடிய வாப்பு சதவிகிதம் என்பதை  சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ விழுவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறதே என்பது போன்றது. சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது.

    இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.
    இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோய் வருவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது.

     

     

    சோதிடம் புவியை மையமாக கொண்டு கிரகங்களின் பாகைகளை கணக்கிடுவது ஏன் ?


    சோதிடம் உயிரினங்கள் குறித்து சொல்ல படுவது. மனிதர்கள் இருப்பது பூமியில். எனவே தான் பூமியை சுற்றி பிற கிரகங்கள் உள்ள பாகையை வைத்து சோதிடம் சொல்கிறார்கள். சோதிடம் கணக்கிடப்படும் உயிரினம் எந்த கிரகத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தை மையமாக கொண்டு பலன்கள் சொல்ல வேண்டும். உதாரணமாக செவ்வாயில் இருக்கும் மனிதனுக்கு செவ்வாயை வைத்து சோதிடம் சொல்ல வேண்டும்.

    ஏன் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கே வரவில்லை ?

    சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தப் படுத்தி குழப்பி கொள்ள தேவையில்லை. புவிக்கு ஏற்படும் மாற்றங்களை காண புவியை பொருத்து மற்ற கிரகங்களின் நிலையை காண வேண்டும் என்பது எளிதில் புரிந்து கொள்ள கூடியதே. சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது & ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது.

     

    27 நட்சத்திரம் என்பது பொய் தானே ?

    வானில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முட்டாள் தனமானது என்பதும் பெரியோர் வாக்கு தானே ? பிறகு எப்படி 27 நட்சத்திரங்கள் என்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ?

    அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லே புவியின் வெவ்வேறு பாகைகளில் உள்ள நட்சத்திர தொகுதிகளை தான் குறிக்கிறது. தனித்த நட்சத்திரங்களை அல்ல.

     

     zodiac-sky-200X200zodiac-signs-1

     

    சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.
    டிகிரி என்னும் முறை கண்டு பிடிக்க படாத அக்காலத்தில் வெவ்வேரு இடங்களில் இருந்த நட்சத்திர தொகுதிகளை வைத்து 360 டிகிரியை வகைப்படுத்தினர் அவ்வளவு தான். அவை நாம் வானத்தில் காணும் நட்சத்திரங்களில் 27 மட்டுமே அல்ல. நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து மற்ற கிரகங்கள் வானில் இருக்கும் பாகையை அடையாளம் கண்டு கொண்டனர்.

    logo1

    நட்சத்திர பாதம் எனும் விளக்கத்தை அறிந்தால் ”சோதிட நட்சத்திரம்” தற்போது நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர பகுதிக்கு பாதங்கள் என்று பெயர்.

    360 டிகிரி = 27 நட்சத்திரங்கள்  = 108 பாதங்கள் (27 *4)

    சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது.  இச்சிறுபகுதி கலை எனப்படும்.

    1 பாகை = 60 கலை

    இதன் மூலம்
    1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
    30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள என அறியலாம்.

     

    CircularAstrologicalPosters-2

     

    http://en.wikipedia.org/wiki/Zodiac

    http://www.ehow.com/how_2136263_zodiac-sky.html

    [தொடரும்]