சோதிடம்-6 சந்திரன், ராகு( Rahu), கேது (Kethu) என்பவற்றின் அறிவியல் ஆதாரம் என்ன ?

ராகு, கேது பார்ப்பதற்கு முன் சென்ற பகுதியின் தொடர்ச்சியாக அமாவாசை, பௌர்ணமி பற்றிய மேலும் சில அறிவியல் தன்மைகளை பார்த்து விடுவோம்.

 

அறிவியல் உண்மைகள்

  • புவி, நிலவு ஆகியவை தன்னுடைய பாகங்களின் தோராயமாக 50% பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளியை பெறுகின்றன.
  • ஒவ்வொரு அமாவசையிலும் சூரியனும், மதியும் புவிக்கு ஒரே பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு மறுமுனையில் அமைந்த சூரியனின் வெளிச்சம் படாத பகுதி எனவே நிலவு தெரிவதில்லை
  • அமாவசையில் சூரிய உதயமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்
  • ஒவ்வொரு பௌர்ணமியிலும் சூரியனும், மதியும் புவிக்கு எதிரெதிர் பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு எதிராக அமைந்த, சூரியனின் வெளிச்சம் படும் பகுதி எனவே நிலவு முழுவதும் தெரிகிறது.
  • பௌர்ணமியில் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

 

moon_phases_diagram

 

ராகு, கேது

 

ராகு கேது என்பவை கிரகங்கள் என்பதன் மூலம் சோதிடம் பொய் எனபதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.

 

சாயா என்பதன் பொருள் என்ன ?

நன்றாக கவனித்தால் சோதிடத்தில் ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்க பட்டுள்ளது விளங்கும். சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்கு புலனாகாத (கற்பனை - மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனை புள்ளிகள்.

 

ராகு, கேது இல்லாத சோதிடம் உண்டா ?

இந்திய விஞ்ஞானியான ஆர்யபட்டர் தன்னுடைய சூரிய சித்தாந்தத்தில் ராகு, கேது என்பவை சாதாரண கிரகங்கள் அல்ல என்பதை மறுத்துள்ளார். சூரிய சித்தாந்தத்தை கொண்டு சோதிட விளக்கங்கள் வடிவமைத்த வராக மிகிரர் தன்னுடைய நூலான பிருஹத் ஜாதகம் எனும் நூலில் ஆயிரக்கணக்கான சூத்திரங்களில் ராகு, கேது என்பதை குறிப்பிடாமலேயே  சாதகம் பார்க்கும் படி வடிவைத்துள்ளார்!

Varahmihir, the father of astrology in his famous book Brihat Jataka did not recognise Rahu and Ketu but in his another book Brihat Samhita he devoted one chapter to Rahu and Ketu and considered them not any celestial physical body like other planets but as the nodes of the Moon, ie, points of intersection of orbits of the Moon and the Earth. The north point of this intersection is called Rahu (north node) while the south point of that is called Ketu (south node). In Surya Siddhanta (an antique book on Astronomy) they are also considered as nodal points which are now known as shadowy planets. Our learned astrologers found their significant role in judging horoscope for ups and down in one’s life, these nodes have been referred to the class of planets.

--http://www.futurepointindia.com/articles/research-articles/rahu-ketu.aspx

 

ராகு, கேது பிற்காலத்தில் ஏன் உருவாக்கபட்டது ?

  • பூமியின் முக்கிய நிகழ்வுகளான சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இரு குறிப்பிட்ட புள்ளிகள் நிகழ்வதை கண்டறிந்தனர்.
  • இந்த கிரகணங்கள் வருடம் ஒரு முறையாவது நிகழ்வதை கண்டறிந்தனர்.
  • இந்த புள்ளிகளும் 18.6 வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திர மண்டலங்களை சுற்றி வந்து புவி சுற்றை நிறைவடைவதை கண்டறிந்தனர்.
  • இந்த புள்ளிகள் ஒன்றுக்கொன்று 180பாகையில் உள்ளதை கண்டறிந்தனர்.
  • இந்த கற்பனை புள்ளிகள் கொண்டு கிரகணங்கள் நிகழ்வதை தோராயமாக கணித்தனர். 

 

எனவே இவற்றிற்கு பெயர் கொடுக்க முனைந்த அறிஞர்கள் கற்பனையான் மெய்நிகர் புள்ளிகள் எனும் பொருள் வாய்ந்த சாயா கிரகம் என்று கூறினர்.

rahuketu_thumb[1]

 

அறிவியல் ரீதியான விளக்கம் என்ன ?

 lunar_perturbation

 

 

அடுத்த பகுதியில்…

 

[தொடரும்]

8 கருத்துகள்:

  1. பெயரில்லா5/6/10 3:03 PM

    ஆஹா,மிக முக்கியமான பதிவு.அடுத்தபதிவு எப்போது வரும் என்ற ஆவலில் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. @venkatesan,siva வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. @அஹோரிவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

    பதிலளிநீக்கு
  5. நண்பரே,
    மிக அழகாய் ,எளிமையாய் அறிவியலையும்,சோதிடத்தையும் விளக்கிவிட்டீர்கள்,அருமை.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் ஜோதிட பாடம் துவங்கியதை இன்று தான் கண்டேன்.

    அருமை. திகழட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  7. @ஸ்வாமி ஓம்கார் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)