வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலவசமாக பாஸ்கரா ஜோதிடம்: 250க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள்

பாஸ்கரா ஜோதிடம்

சமீபத்தில் லக்‌ஷ்மனனின் முகநூல் பதிவை பார்க்க நேர்ந்தது.

அவர் தன்னை அறிவியல் முறைப்படி சோதிடம் பார்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கிறார்.

பொதுவாக பல சோதிடரும் பயண்படுத்துவது பாரம்பரிய முறை ஆகும். காலத்திற்கேற்ற  பாரம்பரியத்தில் இருந்த பல முரண்பாடுகளை கலைந்து முதலில் KP முறை உருவாக்கப்பட்டது. அதில் இருந்து பல முரண்பாடுகளை கலையப்பட்டு உருவாக்கப்பட்டது தான்பாஸ்கரா ஜோதிட முறை என்னும் அவர், மேலும்

  • இதில் கிரகங்கள் நிற்கும் இடம் குறிப்பிட்ட degree / minute / seconds வரை கணக்கில் எடுக்கப்படுகிறது. கிரகம் நின்ற நட்சத்திரம் அதனுடைய உபநட்சத்திரம் வரை துள்ளியாமாக பகுத்து எடுக்கப்படுகிறது.
  •  பாஸ்கரா ஜோதிடம் சரியான பாதைக்கான மிகச்சிறந்த ஆரம்பம். பாஸ்கரா ஜோதிடம் முற்றும் முழுமை என்பதல்ல. இதை மருத்துவத்துறைக்கு ( ஆங்கில மருத்தவத்திற்கும் சேர்த்து ) உதவும் படி இதை மாற்ற வேண்டும் என்பதே அவரது தனிபட்ட விருப்பம்.  
என குறிப்பிட்டுள்ளார். 

இது பாஸ்கரா சோதிட முறை குறித்து அறிய ஆர்வத்தை தூண்டியது. இம்முறையை கண்டுபிடித்துள்ள சோதிடர் பாஸ்கர் 250க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள் வழியாக அணைவரும் எளிய முறையில் இலவசமாக சோதிடத்தை கற்க வழி செய்துள்ளார்.

ஆர்வமுள்ள நண்பர்கள் அவரது வீடியோக்களை யூடியுபில் காணலாம் https://www.youtube.com/channel/UCDY_F_2GOYzYdXM3pBAD7hQ/videos


பிரிவு துயரம் – பத்மஸ்ரீ வாலியின் வைரவரிகள்

காதலன் தன் பிரிவு துயரை தன் கண்மணிக்கு தெரியப்படுத்தும் ஒரு அருமையான பாடல், சமீபத்தில் இசை வெளியீடு நடைபெற்ற ‘சிக்கு புக்கு’ படத்தில் கேட்க நேர்ந்தது.

 

பத்மஸ்ரீ வாலி அவர்கள் முதல் வரியின் கவித்துவ உவமையிலிருந்தே மனம் கவர்கிறார். சூபி இசையில் அமைந்த தமிழ் காதல் பாடல் ஒரு வித்தியாசமான அனுபவம் அளிக்கிறது. இசையமைப்பாளர் பாடகர்களின் மொழி உச்சரிப்பை மெருகூட்டி இருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.

 

பாடல்: தூரல் நின்றாலும்

பாடல் வரிகள்: பத்மஸ்ரீ வாலி

பாடகர்கள்: ஹரிஹரன், வடாலி சகோதரர்கள்

இசை: ஹரிஹரன் & லெஸ்லி

 

உன்னை, உன்னிடம் தந்து விட்டேன்

நீ, என்னை என்னிடம் தந்து விடு

போதும், போதும், எனை போக விடு

கண்மணி எனை போக விடு

கண்மணி கண்மணி

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

உயிரே உயிரே

 

உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே! [ எனை போக விடு கண்மணி]

    விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உள் சென்றதே !!

இனியும் உன் பெயரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா ?

    எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா ?!

 

விடைகள் இல்ல வினாக்கள் தானடி

 

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

 

Thanks: http://tamilyrics.wordpress.com/2010/09/11/thooral-nindralum-chikku-bukku-lyrics/

Unnai unnidam thanthu vitten
nee ennai ennidam thanthu vidu
podhum podhum enai poga vidu

kanmani enai poga vidu
kanmani kanmani

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

uyire uyire

unnai ketkamal ennai ketkamal kadhal undanathey

enai poga vidu kanmani

vizhigal engindra vaasal vazhiyaga kadhal ulsendrathey

iniyum un perai en nenjodu otti vaipadhaa

enadhu porul alla neethaan endru etti vaippadha

vidaigal illa vinakkal thaanadi

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile

 

Thanks http://blog.mp3hava.com/download-mp3-sogns-chikku-bukku-chikku-bukku-songs-wallpapers-photos-images-posters-gallery-trailer-blog-mp3hava-com/2010

Cast : Arya, Shriya, Preetika Rao (Sister of Bollywood Actress Amrita Rao)
Camera : R.B. Gurudev
Dialogues written by : S. Ramakrishnan
Lyrics : Padmashree Valee, Pa. Vijay
Music : Hariharan and Leslie
Choreographers : Rekha Chinni Prakash and Dinesh
Director: Manikandan
Producer: Metro Films

நான் ஒரு சுதந்திர பிறவி – மாயா (MIA) [18+]

MIA மாயா (M.I.A.) எனும் ஆங்கில பாடகியை தெரியுமா ? மாதங்கி 'மாயா' அருள்ப்ரகாசம் http://en.wikipedia.org/wiki/M.I.A._%28artist%29. முக்கியமானது இவர் தமிழினத்திற்காக தொடர்ந்து பாடும் ஒரே பாடகி என்பது தான். பாரதிக்கு பிறகு புரட்சி பாடும் ஒரே தமிழர் இவர் தான் [ஆனால் ஆங்கிலத்தில்] இவரின் Sunshowers வீடியோ மிகவும் பிரச்சித்தமானது.

 

சமீபத்தில் மாயாவின்(MIA) வின் “Born Free” வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதில் அரச வன்முறை இன பாகுபாட்டுடன் இளைஞர்களின் மேல் செயல்படும் விவரத்தை தோலுரித்து காட்டி இருந்தார். இப்படத்தில் மனிதர்களின் தனிப்பட்ட அந்தரங்கங்கள் மோசமான முறையில் மீறப்படுவதும், மனிதர்கள் மிருகங்கள் போல் நடத்தப்படுவதும் சித்தரிக்கப்படுகிறது.  இவ்வீடியோவை யுஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது. YouTube இருந்தும் நீக்கபட்டுள்ளது. ஏனெனில் சித்தரிக்க பட்டுள்ளது, யுஸ் வீரர்கள் அந்நாட்டின் சிறுபான்மையினரை துன்புறுத்துவது போல.

”இம்மலத்தை நின்முகத்தில் வீசுவேன், உனை காணும்போது

ஏனெனில் நான்மொழிய சிலஉண்டு.

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”

 

”தலைவனே நீ யாரேனும், எங்கிருப்பினும் வெளியாகி
இவர்களிடம் சொல்

சுதந்திரமானவனாகவே பிறந்தேன்

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”

 

சிலருக்கு வீடியோவின் சில காட்சிகள் ஆபாசமாகவும், வன்முறையாக தோன்றலாம். [குழந்தைகள் பார்க்க வேண்டாம். அலுவலகத்தில் பார்க்க வேண்டாம்] ஆனால் நாமெல்லாம் சக இனத்தவர்கள் தலையில் சுட்டதையும், பிணங்களை கற்பழித்ததையும், ஆனந்தர்களின் வீடியோக்களையும் கூசாமல் நடுவீட்டில் அமைதியாக பார்த்தவர்களாயிற்றே ?! சலன படத்தில் உள்ள கருத்தை முன்னிட்டு இதையும் பார்க்கலாம் தப்பில்லை.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

 

என்ன நடந்தாலும் தங்களின் பண வருவாயை மட்டுமே குறியாக இருக்கும் தமிழக கலைஞர்கள் தங்களது சூடு சொரணையை சோதித்து கொள்ள செய்யும் அளவிற்கு இச்சலனப்படம் உள்ளது தான் சிறப்பு. இவ்வீடியோ வெளிவந்தது ஏப்ரல் மாதம்!!! இசை விமர்சகர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கூட இதைப்பற்றி அதிகம் எழுதாதது வியப்பிற்குறியது. 

 

இப்பாடலை தனியாக கேட்கும் போது இசை மிகவும் ஏமாற்றம் அளித்தது போல இருந்தது. ஆனால் சலனப்படம் பாடலின் உயிரோட்டத்தை நமக்கு உணர்த்துகிறது.

 

ஆங்கில விமர்சனங்கள்

http://latimesblogs.latimes.com/music_blog/2010/04/mia-makes-her-stance-utterly-clear-with-born-free-video-1.html

"Born Free" is a heavy concentrating agent that fully shows M.I.A.'s intention to say radical and aligned with her own vision of what's real. Considering the strong track record of this still-young artist, that's not shocking.

 

http://www.refinedhype.com/hyped/entry/meaning-behind-m.i.a.-born-free-video/

However before I can discuss a meaning, I need to give a small background on MIA. ”One Man’s Freedom Fighter is Another Man’s Terrorist”

http://globalcomment.com/2010/m-i-a-s-born-free-a-statement-we-need-to-hear/

it’s awful to watching such terrible things happen to someone like you. Getting outraged is the whole point. Racial and ethnic distinctions are often as arbitrary as hair color, but it’s easy for people to ignore that fact when physical characteristics are our first test of otherness.


http://trueslant.com/leorgalil/2010/04/26/finding-meaning-in-m-i-a-s-born-free-video/

the great thing about the video is it really reflects one’s thoughts on pop music and culture. It can be as vapid and pointless as you want it to be, but if you really want to give it a chance, the second viewing can be so much more rewarding.

 

பாடல் Thanks http://www.metrolyrics.com/born-free-lyrics-mia.html

Whooo!
Yeah man made powers
Stood like a tower higher and higher hello
And the higher you go you feel lower, oh
I was close to the end staying undercover
Staying undercover


With a nose to the ground I found my sound
Got myself an interview tomorrow
I got myself a jacket for a dolla
And the car doesn't work so I'm stuck here
Yeah I don't wanna live for tomorrow
I push my life today
I throw this in your face when I see ya
I got something to say
I throw this shit in your face when I see ya
Cause I got something to say


I was born free (born free)
I was born free (born free)

bo-bo-born free


You could try to find ways to be happier
You might end up somewhere in Ethiopia
You can think big with your idea
You ain't never gonna find utopia
Take a bite out of life make it snappier yeah

Ordinary gon super trippyer
So I check shit cause I'm lippyer
And split a cheque like Slovakia
Yeah I don't wanna live for tomorrow
I push my life today
I throw this in your face when I see you
I got something to say
I throw this shit in your face when I see you
Cause I got something to say


I was born free (born free)
I was born free (born free)
I was born free (born free)
bo-bo-born free
Ooooh


I don't wanna talk about money, 'cause I got it
And I don't wanna talk about hoochies, 'cause I been it
And I don't wanna be that fake?, but you can do it
And imitators, yeah, speak it
Oh Lord? whoever you are, yeah come out wherever you are
Oh Lord? whoever you are, yeah come out wherever you are
And tell em!


Born free (born free)
I was born free (born free)
I was born free (born free)
bo-bo-born free

வாழ்க்கையின் நாடோடி பயணம்

சகீராவின் டென்னீஸ் வீரர் ரபேல் நடாலுடனான ஒரு புகழ்பெற்ற பாடல்

 

பாதையில் மனதுடைத்தேன் நான்

மனசில்லுகளை ஒன்றிணைப்பதில்

வார இறுதிகளை கழித்தேன்

 

 

நண்பர்களும் நினைவுகளும் கடந்து செல்கிறேன்

பறக்க கற்று கொள்ளும் போது

நடப்பதும் சலிப்பானதுதான்

 

 

’வீடு’ திரும்புதல் நினைவில்லையே

சிகரங்களே நோக்கமல்லவா

என்ன கிடைக்குமென யாருக்கு தெரியும் ?

 

எல்லா தவறுகளை நான் ஒப்பு கொள்ள போவதில்லை

நான் முயற்சிப்பேனென நீ பந்தயமிடலாம்

ஆனால் நான் எல்லா நேரமும் வெற்றியடைவதில்லை

 

 

ஏனெனில் நான் ஒரு நாடோடி நீ என் வழிதுணையா?

எனக்கு பொருந்தும் போது

உன்னுடைய ஆடைகளை திருடும் வாய்ப்பிருக்கிறது

நான் ஒப்பந்தமிடுவதேயில்லை ஒரு நாடோடியை போல

நான் பின்னடைவதில்லை ஏனெனில் வாழ்க்கை என்னை ஸ்வீகரித்து விட்டது

 

நீ என்னை விலகினும்

நான் கதற போவதில்லை

மரணிக்கும் வயதில்லை எனக்கு

ஏனெனில் நான் ஒரு நாடோடி

ஏனெனில் நான் ஒரு நாடோடி

 

 

மறைக்க முடிவதில்லை நான் செய்தவைகளை

தழும்புகள் நினைவிக்கின்றன கடந்த பாதையின் தூரத்தை

யாருக்கு தேவையாயிருப்பினும்

காயம்பட விரும்பும் போது மட்டுமே

ஆயுதத்துடன் ஓட விரும்புங்கள்

 

 

ஹாய் என அழைக்கும் போதும்

மறுதலித்தால் மட்டுமே நீ

முட்டாளாக மாட்டாய்

இம்முறையில் தானே வாழ்க்கை செல்கிறது.

மக்கள் அறியாமைகளை பார்த்தே பயப்படுகிறார்கள்

வழிதுணையாக என்னுடன் வா ஆம்

வழிதுணையாக என்னுடன் வா

Aaromale (Malayalam) ஆருயுரே (தமிழில்)

 

மாமாலையேறி வரும் தென்றல்
புது மணவாளனின் தென்றல்
பள்ளி மேடையை தொட்டு தள்ளாடி பாதம் தொழுது வரும் போது
வரவேற்று மலையாளதமிழ் மனசம்மதம் சொரியும்

ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...

 

 

சுகம் சுகம் தரும் சுபவேளை
சுமங்கலி ஆகிய மணமகளே (2)

மகிழ் இரவு தன் அந்தரத்தில்
விலகி சென்றிடும் தாரகையே

பனி கண்டிட்ட கதிரொளியாய்
அகற்றி நின்றிடும் பெண்மணமே

வளைந்து நிற்கும் கிளையில் நீ கூக்கூவெனும் பூங்குயிலோ ? 
அகல்விளக்கின் பரம்சோதியை தேடியதுவோ பூரணமே ?

சுகம் சுகம் தரும் சுபவேளை
சுமங்கலி ஆகிய மணமகளே

 

ஆருயுரே...ஆருயுரே...

கரையருகே கடலோடிணையும் நதிபோல் ஸ்நேகமுண்டோ ?
மெழுகதுருகுவதுபோல் கரையும் காதல் மனதில் உண்டோ ?

ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...
ஆருயுரே...

 

இக்கவிதை விண்ணை தாண்டி வருவாயா பட மலையாள பாடலின்(http://www.youtube.com/watch?v=GO6fQFjhcSk) மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

காதலர்களின் ஏகாந்த தனிமை-கவிதை(Dating)

[காதலர்களின் ஏகாந்த தனிமை. மூல ஒளிப்பதிவு காணவும்.]

நிஜமாக நான் தானா? இங்கு உன் இடம் உள்ளேனா?
இதன் பெயர் தான் காதலா? ஏதோ விந்தையை பார்க்கின்றேன்
எவரோ எங்கோ நுழைந்து எல்லாம் செய்கின்றாரா?
பின்னால் பின்னால் வந்து என்னை தள்ளுகின்றாரா?

ஹரேஹரே ஹரேஹரே ராமா !
இங்கே எங்கே வந்தது இத்துணிவு
எவ்வளவு உஷாராக இருந்ததே இம்மனது ஏம்மா ?   [2 தடவை]

[நிஜமாக]

இவ்வயதினில் ஒவ்வொர் கணமும் ஒவ்வோர் வசந்தம்
என்மனதுக்கு ஒவ்வோர் க்‌ஷணமும் நீயே பிரபஞ்சம்
சமுத்திரமாய் அனுதினமும் பொங்கும் சந்தோசம்

அருகினில் சென்று கரங்களை கோர்த்து நடந்திட்ட தூரம் எவ்வளவு உண்டே
களைப்போ இன்றி கடந்திட்ட காலம் இவ்வளவு என நம்புவமோ ?

[நிஜமாக]

என் கனவு இங்கே நிஜமாக நிற்கின்றதே
என் பழமை இங்கே வெட்கமதை தருகின்றதே
உன் அருகாமை உல்லாசத்தை கொடுக்கின்றதே
கன்னத்தின் அருகே சென்றிற்ற உதடு நம் பரவசம் தொடங்கட்டுமே
பகலே எனினும் வின்மீனெல்லாம் உதயம் காணட்டுமே

[நிஜமாக]

[ஹரேஹரே 2 தடவை]

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=xA0sSwB3wyU) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

புதிய பொன்னுலகம் அழைத்தால்

[தலைவியின் காதல் சுற்றத்தாரால் புரிந்து கொள்ளப் படாத போது தலைவனுக்கான அழைப்பு. மூல ஒளிப்பதிவு காணவும்.]

 

நீயெனவும் நானெனவும் வேறுவெறி  ல்லையே

                   செப்பினாலும் கேட்பரோ ஒருவரேனும்

நானே உன் நிழலல்லவா நீயே என் நிஜமல்லவா

                   ஒப்பு கொள்வரோ எப்போ தேனும்

விழிகள் மறை க்கின்ற சொப்(ப)னம், இப்போ தெதிரான நிஜமாய் தெரிந்தால்

அடக்க முடியாத அன்பு புதிய பொன் உலகாக அழைத்தால்

 

 

தடையை தாண்டி இதயம் சேர்ந்து மனதை எழுப்பிய உதயமே

வயதை காட்டி வணக்கம் கூறி பழக்கமாகிய காதலே

இது உண்மையே மறு ஜென்மமே இது புரியுமா இனியும் உன் மாயமா ?

[நீயெனவே ...]

வார்த்தை எனது; லயம் உனது; பாடலாகி வா பிரி யமே

போர் எனது வீரம் உனது எனை வெல்ல வா என்வீரனே

நீயே முடி வல்லவா உனை சேரவா? எனை காண வா என்னை சேர வா

[நீயெனவே ...]

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=6_JUt73Q8mY) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

வீடியோ பதிவுகளை வெளியிட தேவைப்படும் இலவச மென் பொருள்கள்

வீடியோ பதிவுகளை வெளியிட தேவைப்படும் பொருள்கள் பற்றிய இடுகை

 தமிழில் வீடியோ பதிவுகள் குறித்த முந்தய இடுகை

 

மென் பொருள்கள் இணைப்புகள்

வீடியோக்களை எடிட் செய்ய

விரிச்சுவல்டப்-

VirtualDub is a video capture/processing utility for 32-bit and 64-bit Windows platforms (98/ME/NT4/2000/XP/Vista/7), licensed under the GNU General Public License (GPL).

ஏவிஐடிமல்டிபிளக்சர்

Avidemux is a free open-source program designed for multi-purpose video editing and processing.

 

வீடியோ வகையை மாற்ற

ப்ரிஸ்ம்

Prism Video Converter Software (Convert AVI, MP4, WMV, MOV, MPEG, FLV and other video file formats)

Prism is one of the most stable and comprehensive multi format video converters available, is very easy to use and is completely free.

 

அனைத்து வீடியோ & ஒலி கோப்புகளையும் இயக்க  

கே கொடக்

The K-Lite Codec Pack is a collection of  codecs and tools. Codecs and DirectShow filters are needed for encoding and decoding audio and video formats.

 

Vlog

 

 

நண்பர்களே என்னுடைய இப்பதிவு முயற்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது. எனவே இப்பதிவில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தாலும், வீடியோ பதிவை மேம்படுத்த வழிகள் இருந்தாலும் தயங்காமல் தெரிய படுத்த வேண்டுகிறேன்.

தமிழில் வீடியோ பதிவுகள் (Vlog) -1

 

சமீபத்தில் ஒரு நல்ல ஆங்கில வீடியோ பதிவை காண நேர்ந்தது.  தமிழிலும் பல நல்ல சமூக மற்றும் பொழுது போக்கு  வீடியோ இடுகைகள் உருவாக வேண்டும் என்பது என் ஆவல். உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

பட நேரம் 1:25 (1400kb, 13 நொடிகள் [1mbps] 01:45 நிமிடங்கள்[128kbps])

 

பின்குறிப்பு ;-)

பிரபல பதிவர்கள் வால்பையன், பழமைபேசி, ப்ரியா, அமித்து அம்மா இவர்களுக்கான அழைப்பு. 

பட நேரம் 1:43 (1700kb, 15 நொடிகள் [1mbps], 2:07 நிமிடங்கள்[128kbps])

 

நண்பர்களே இப்பதிவு என்னுடைய முதற் முயற்சியாகும். எனவே இப்பதிவில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தாலும், வீடியோ பதிவை மேம்படுத்த வழிகள் இருந்தாலும் தயங்காமல் தெரிய படுத்த வேண்டுகிறேன்.