சோதிடம் ஒரு வானவியல் பிரிவில் ஒன்றா ?
வானவியல் என்பது வானில் பல்வேறு பொருள்கள் இருக்கும் பௌதீகமான தன்மைகளை கண்டறிய்வும், குறிப்பிடவும் பயன்படுகிறது. சோதிடம் என்பது வானவியல் மாற்றங்கள் எவ்வாறு ஜீவராசிகளை அல்லது கிரகங்களை பாதிக்கின்றன என்பது பற்றியது. சோதிடம் கணக்கில் எடுத்து கொள்வது கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள் மட்டும் தான். இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றன.
Astronomy deals with the study of the location, motion, and nature of objects in space. Astrology is the interpretation of the influence of the heavenly bodies on human affairs.
சோதிடம் என்பதும் வானியல் என்பதும் வேறு வேறு. சோதிடம் என்பது வானியலின் மாற்று அல்ல. உண்மையில் சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது. வானவியல் இல்லாமல் சோதிடம் இல்லை.
வானவியலில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. சோதிட விதிகளை ஏற்படுத்திய முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் அறிந்தவற்றில் உள்ள சரியானவற்றை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும். இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறப்படுகின்றன.
சோதிடத்தின் அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன ?
சோதிடத்தின் செயல்பாட்டை கிளஸ்டர் அனலைசிஸ் (Cluster analysis) முறைமை மூலம் விளக்கலாம். அதாவது மனிதர்கள் பிறந்த காலகட்டத்தில் இருந்த கிரக நிலைகளை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பலன்களை பதிவு செய்வது(observation). பிறகு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புள்ளி விவர அடிப்படையில் மனிதர்களின் கிரக நிலைகள் மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்களை ஒப்பீடு செய்து (analysis) கிரகங்களின் பலன்கள் நிர்ணயம் செய்யபடுகிறது. இப்பலன்கள் மற்றவர்களுக்கு நிகழ கூடிய வாய்ப்பு சதவிகிதம் (output) தரப்படுகிறது.
சிலர் சோதிடம் முடிவான முடிவுகளை தருவதில்லை என குறைபடுகின்றனர். சிலர் சோதிடர் சொல்வதையே முடிவு எனவும் கருதுகின்றனர். நன்றாக கற்றறிந்த சோதிடர் எதையும் முடிவாக சொல்ல கூடாது என்பது தான் சோதிடத்தின் அடிப்படையே. நிகழ்தகவு காசை சுண்டிவிட்டால் நிகழ கூடிய வாப்பு சதவிகிதம் என்பதை சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ விழுவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறதே என்பது போன்றது. சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது.
இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.
இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோய் வருவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது.
சோதிடம் புவியை மையமாக கொண்டு கிரகங்களின் பாகைகளை கணக்கிடுவது ஏன் ?
சோதிடம் உயிரினங்கள் குறித்து சொல்ல படுவது. மனிதர்கள் இருப்பது பூமியில். எனவே தான் பூமியை சுற்றி பிற கிரகங்கள் உள்ள பாகையை வைத்து சோதிடம் சொல்கிறார்கள். சோதிடம் கணக்கிடப்படும் உயிரினம் எந்த கிரகத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தை மையமாக கொண்டு பலன்கள் சொல்ல வேண்டும். உதாரணமாக செவ்வாயில் இருக்கும் மனிதனுக்கு செவ்வாயை வைத்து சோதிடம் சொல்ல வேண்டும்.ஏன் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கே வரவில்லை ?
சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தப் படுத்தி குழப்பி கொள்ள தேவையில்லை. புவிக்கு ஏற்படும் மாற்றங்களை காண புவியை பொருத்து மற்ற கிரகங்களின் நிலையை காண வேண்டும் என்பது எளிதில் புரிந்து கொள்ள கூடியதே. சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது & ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது.
27 நட்சத்திரம் என்பது பொய் தானே ?
வானில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முட்டாள் தனமானது என்பதும் பெரியோர் வாக்கு தானே ? பிறகு எப்படி 27 நட்சத்திரங்கள் என்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ?
அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லே புவியின் வெவ்வேறு பாகைகளில் உள்ள நட்சத்திர தொகுதிகளை தான் குறிக்கிறது. தனித்த நட்சத்திரங்களை அல்ல.
சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.
டிகிரி என்னும் முறை கண்டு பிடிக்க படாத அக்காலத்தில் வெவ்வேரு இடங்களில் இருந்த நட்சத்திர தொகுதிகளை வைத்து 360 டிகிரியை வகைப்படுத்தினர் அவ்வளவு தான். அவை நாம் வானத்தில் காணும் நட்சத்திரங்களில் 27 மட்டுமே அல்ல. நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து மற்ற கிரகங்கள் வானில் இருக்கும் பாகையை அடையாளம் கண்டு கொண்டனர்.நட்சத்திர பாதம் எனும் விளக்கத்தை அறிந்தால் ”சோதிட நட்சத்திரம்” தற்போது நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர பகுதிக்கு பாதங்கள் என்று பெயர்.
360 டிகிரி = 27 நட்சத்திரங்கள் = 108 பாதங்கள் (27 *4)
சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது. இச்சிறுபகுதி கலை எனப்படும்.
1 பாகை = 60 கலை
இதன் மூலம்
1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள என அறியலாம்.
http://en.wikipedia.org/wiki/Zodiac
http://www.ehow.com/how_2136263_zodiac-sky.html
[தொடரும்]