அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூடங்குளம்

மின்சார உற்பத்தி முக்கியமான இக்கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சில பகுதிகளுடன் இணையத்தில் உள்ள சில் ஆதாரங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன்

நன்றி


இன்றைய சூழலில் அணுமின்நிலையம் அன்றி வேறு என்ன வழி இருக்கிறது?

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒப்பிட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.
இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் [World Resources Institute] கூறுகிறது. உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை

இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.

ஆதாரங்கள்
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://www.thehindubusinessline.in/2005/12/03/stories/2005120303300900.htm
http://industrytracker.wordpress.com/2010/08/26/td-losses-in-india-aggravate-the-power-problem/
http://cleantechindia.wordpress.com/2008/07/16/indias-electricity-transmission-and-distribution-losses/

 அணு உலைகளால் ஏற்படும் செலவீனங்கள்

அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால் அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை.

இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது  மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.


இந்தத் தொகை [ கூடங்குளம்] இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிடமுடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்கமுடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.



கூடங்குளம் அணுஉலையின் மோசமான நிலை
புக்குஷிமா அணுஉலை கூடங்குளம் அணுஉலையை விடப் பலமடங்கு ’பாதுகாப்பா’னது. மக்கள் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் கூடங்குளம் மக்கள் நெருக்கம் மிக்க கடற்கரையில் உள்ளது. அதே அளவுக்கு அபாய வாய்ப்புள்ள நிலநடுக்கப்பாதையில் உள்ளது.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணு உலை விபத்துக்குப்பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ருஷ்யா முடிவெடுத்தபோது அதில் ஒன்றை இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் விலைக்கு விற்றது.

2004ல் நடந்த சுனாமியின்போது கூடங்குளத்தில் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்தன. ஆகவேதான் இந்த அணுஉலையின் கட்டுமானங்கள் இவ்வளவு தாமதமாயின. பலபகுதிகளை மீண்டும் கட்டினார்கள் என்பது செயல்பாட்டாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.


இந்திய அரசின் மோசமான அணு உலை கொள்கைகள் 

இந்திய அரசின் அணு உலை கொள்கைகள் மோசமாக இருப்பதாக அணு மின்சாரத்தை ஆதரிக்கும் இணைய தளமே கருத்து கூறி இருக்கிறது. http://world-nuclear.org/info/inf53.html
On 10 September 2008 the government assured the USA that India "shall take all steps necessary to adhere to the Convention on Supplementary Compensation (CSC)". Under existing Indian legislation, foreign suppliers may face unlimited liability, which prevents them from taking insurance cover, though contracts for Kudankulam 1&2 exclude this supplier liability.

However, after compensation has been paid by the operator (or its insurers), the bill allows the operator to have legal recourse to the supplier for up to 80 years after the plant starts up if the "nuclear incident has resulted as a consequence of an act of supplier or his employee, which includes supply of equipment or material with patent or latent defects of (or?) sub-standard services." This clause giving recourse to the supplier for an operational plant is contrary to international conventions.


நாசாவின் விண்கலங்களில் உங்களது பெயரும், புகைப்படமும் இடம் பெற !!!

விண்வெளி வீரர்களுடன் பறக்க இருக்கும் விண்கலத்தில் உங்களது பெயரும், புகைப்படமும் இடம் பெற வேண்டுமா ? கீழே குறிப்பிட்டு இருக்கும் நாசா இணைய தளத்தில் உங்களது தகவல்களை பதியுங்கள்(இலவசமானது). இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் விண்கலம் விண்ணிற்கு சென்று திரும்பியதும், தலைமை அதிகாரியின் (Mission Commander) கையொப்பமிட்ட கௌரவ சான்றிதலும் (commemorative certificate) வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க தகுதி பங்கேற்பவருக்கு 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதாக இருக்க வேண்டும். மேஜராகாத குழந்தைகளுக்காக பெற்றோரோ பாதுகாவலரோ தகவல்களை அனுப்பலாம்.

http://faceinspace.nasa.gov/index.aspx

 

நாசா தன் விண்பயண ஆராய்ச்சிகளின் கடைசி இரண்டு திட்டங்களாக இவ்வாண்டு இருமுறை விண்கலங்களை (டிஸ்கவரி, எண்டோவர்) செலுத்த உள்ளது. இவ்விண்கலன்களில் ஏதேனும் ஒன்றில் உங்களது பெயரும் புகைப்படமும் இடம் பெறும். அவ்விண்கலன்களின் விவரங்கள் கீழே

Discovery's STS-133 mission

The STS-133 crew members are Commander Steven Lindsey, Pilot Eric Boe and Mission Specialists Alvin Drew, Michael Barratt, Tim Kopra and Nicole Stott. Discovery will deliver the Express Logistics Carrier 4 and critical spare components to the International Space Station. This will be the 35th shuttle mission to the station.

http://www.nasa.gov/mission_pages/shuttle/shuttlemissions/sts133/index.html

 

Endeavour's STS-134 mission

The STS-134 crew members are Commander Mark Kelly, Pilot Gregory H. Johnson and Mission Specialists Michael Fincke, Greg Chamitoff, Andrew Feustel and European Space Agency astronaut Roberto Vittori. Endeavour will deliver spare parts including two S-band communications antennas, a high-pressure gas tank, additional spare parts for Dextre and micrometeoroid debris shields. This will be the 36th shuttle mission to the International Space Station.

http://www.nasa.gov/mission_pages/shuttle/shuttlemissions/sts134/index.html

 

ஏன் இது போன்ற வசதி அளிக்கப்படுகிறது ?

"The Space Shuttle Program belongs to the public, and we are excited when we can provide an opportunity for people to share the adventure of our missions," said Space Shuttle Program Manager John Shannon. "This website will allow you to be a part of history and participate as we complete our final missions."

 

விண்பயண ஆராய்ச்சி செயலானது பொது மக்களுக்கு உரிமையுடையது. மேலும் நாங்கள் (நாசா அமைப்பினர்) பொது மக்களுக்கு ஆராய்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பதில் ஆர்வமுடன் உள்ளோம்.

இந்த இணையதளமானது (நாசா) உங்களை வரலாற்றில் ஒரு பகுதியாக இணைத்து கொள்ளவும் எங்களது செயலில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கிறது.

- செயல்திட்ட மேலாளர் திரு. ஜான் செனான்.

 

இதன் மூலம் என்ன பயன் ?

461782main_soi_690 

பொதுவாக அறிவியல் படிக்கும் போது மாணவர்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விசயத்தை கற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதன் மேலான ஆர்வத்தை குறைக்கிறது. ஆனால் இத்தளத்தில் இது தொடர்பான செயல் திட்டம், வீரர்கள், அறிவியல் தகவல்களை பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாய்ப்புக்கள் இன்றைய மாணவர்களிடம் அறிவியல், வானியல் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்கும் என்பது உறுதி.

 

மேலும் விவரங்களுக்கு,

http://www.nasa.gov/home/hqnews/2010/jun/M10-091_Face_in_Space.html

சோதிடம்-7 சந்திர சுழற்சியும், ராகு( Rahu), கேது (Kethu) வின் அவசியமும்?

ராகு( Rahu), கேது (Kethu) வின் அறிவியல் தன்மைகள்

ராகு கேதுக்கள் பற்றி தெரிந்து கொள்ள புவி, நிலவு, ரவி பற்றி அடிப்படைகள் அவசியமானது ஆகும்.

 

புவி சுழற்சி

globespin  axialtiltobliquity

 

  • கோள (உருண்டை) வடிவ பூமியானது தன்னையும், சூரியனையும் கடிகார எதிர் திசையில் சுற்றுகிறது. 
  • முதல் படத்தில் உள்ளது போல் புவி ஒரு குறிப்பிட்ட அச்சை (Rotation Axis) கொண்டு சுற்றினாலும் அவ்வச்சானது சூரியனுக்கு நேராக இல்லை.
  • அச்சின் மேல்பகுதி  வட துருவம் (North Celestial Pole) எனவும் கீழ் பகுதி தென் துருவம் (South Celestial Pole) எனவும் அழைக்கப்படும். புவி அச்சை கொண்டு பூமத்திய பகுதியை ஒரு கற்பனை கோடு வரைந்தால் கிடைப்பது பூமத்திய ரேகை (Celestial Equator) எனப்படும்.
  • புவி அச்சும் பூமத்திய ரேகையும் (Rotation Axis) சூரியனுக்கு 23 டிகிரி சாய்ந்துள்ளது. இந்த சாய்வானது Axis tilt or Obliquity என்று அழைக்கப்படுகிறது.

 

சந்திர சுழற்சி

lunar_perturbation

  • நிலா புவியையும், புவி சூரியனையும் நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன. அதாவது நிலா புவியை ஒரு குறிப்பிட்ட நாள்களில் அருகாமையில் இருக்கும். புவிக்கு நிலா மிக அருகில் இருக்கும் இடம் Perigee எனப்படும்[During perigee, the moon is at it's closest distance to the earth (about 375,200 km)]. இதே போல நிலா புவிக்கு மிக தொலைவில் இருக்கும் இடம் Apogee எனப்படும் (the moon is at it's greatest distance[about 405,800 km] from the earth)
  • நிலா ஒரு முறை புவியை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 29.5 நாள்கள். இது சினாடிக் மாதம் Synodic Month எனப்படும்
  • புவியும் சூரியனை சுற்றி வருவதால் ஒரு மாதத்தில் தோராயமாக 360 பாகையில் 12ல் ஒரு பங்கு சுற்றுகிறது.
  • எனவே நட்சத்திர மண்டல குறியீடாக கொண்ட வான் காட்சியில் அதே நட்சத்திரத்தில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 27.3 நாள்கள். இது சைடீரியல் மாதம் Sidereal Month எனப்படும. இதை கீழுள்ள வீடியோவின் மூலம் விளங்கி கொள்ளலாம்.
 
 

 

350px-Earth-Moon

மேலேயுள்ள படம் கிரகணங்கள் தோன்றுவதை புரிந்து கொள்ள முக்கியமானது ஆகும். இப்படத்தில் புவிசுற்றுபாதை நீல நிறத்திலும், நிலவின் பாதை சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளது.

  • சந்திர சுழற்சி படத்தில் குறிப்பிட்டபடி சூரியனது பாதையில் நிலவின் பாதை இரு இடங்களில் வெட்டும்.
  • சந்திரன் எதிர்கடிகாரதிசையில் சுற்றுவதால் முதலில் வெட்டும் இடம் Ascending  Node (AN) எனவும் அதன் எதிர்பகுதி Descending Node (DN)  எனவும் அழைக்கப்படும்.
  • இப்படத்தில் குறிப்பிட்டபடி சந்திரன் புவியை சுற்றும் பாதை பூமியின் சுற்றுபாதைக்கு சிறிதளவே மாறுபடுகிறது. வித்தியாசம் 5.14 பாகை மட்டுமே.
  • எனவே சூரிய சந்திர பாதைகள் வெட்டும் புள்ளிகளில் சந்திரனும் சூரியனும்  நேராக வரும் போது மட்டுமே கிரகணங்கள் தோன்ற முடியும் என்பது உணர தக்கதே.

 

மேலும் சில அறிவியல் துளிகள்

  • புவியின் விட்டம் (Actual diameter of the earth) ~12,756 km
  • நிலவின் விட்டம் (Actual diameter of the moon) ~3476 km
  • ரவியின் விட்டம் (Actual diameter of the sun) 1,390,000 km
  • புவி நிலவிற்கு இடையேயான தூரம் (Average distance between the earth & moon) ~384,000 km
  • புவி ரவிக்கு இடையேயான தூரம் (Average distance between the earth & sun) ~150,000,000 km
  •  

    அடுத்த பகுதி: சோதிடம்-8 கிரகணங்கள், ராகு( Rahu), கேது (Kethu) க்களால் ஏற்படுவது உண்மையா ?

    [தொடரும்]

    சோதிடம்-6 சந்திரன், ராகு( Rahu), கேது (Kethu) என்பவற்றின் அறிவியல் ஆதாரம் என்ன ?

    ராகு, கேது பார்ப்பதற்கு முன் சென்ற பகுதியின் தொடர்ச்சியாக அமாவாசை, பௌர்ணமி பற்றிய மேலும் சில அறிவியல் தன்மைகளை பார்த்து விடுவோம்.

     

    அறிவியல் உண்மைகள்

    • புவி, நிலவு ஆகியவை தன்னுடைய பாகங்களின் தோராயமாக 50% பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளியை பெறுகின்றன.
    • ஒவ்வொரு அமாவசையிலும் சூரியனும், மதியும் புவிக்கு ஒரே பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு மறுமுனையில் அமைந்த சூரியனின் வெளிச்சம் படாத பகுதி எனவே நிலவு தெரிவதில்லை
    • அமாவசையில் சூரிய உதயமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்
    • ஒவ்வொரு பௌர்ணமியிலும் சூரியனும், மதியும் புவிக்கு எதிரெதிர் பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு எதிராக அமைந்த, சூரியனின் வெளிச்சம் படும் பகுதி எனவே நிலவு முழுவதும் தெரிகிறது.
    • பௌர்ணமியில் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

     

    moon_phases_diagram

     

    ராகு, கேது

     

    ராகு கேது என்பவை கிரகங்கள் என்பதன் மூலம் சோதிடம் பொய் எனபதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.

     

    சாயா என்பதன் பொருள் என்ன ?

    நன்றாக கவனித்தால் சோதிடத்தில் ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்க பட்டுள்ளது விளங்கும். சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்கு புலனாகாத (கற்பனை - மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனை புள்ளிகள்.

     

    ராகு, கேது இல்லாத சோதிடம் உண்டா ?

    இந்திய விஞ்ஞானியான ஆர்யபட்டர் தன்னுடைய சூரிய சித்தாந்தத்தில் ராகு, கேது என்பவை சாதாரண கிரகங்கள் அல்ல என்பதை மறுத்துள்ளார். சூரிய சித்தாந்தத்தை கொண்டு சோதிட விளக்கங்கள் வடிவமைத்த வராக மிகிரர் தன்னுடைய நூலான பிருஹத் ஜாதகம் எனும் நூலில் ஆயிரக்கணக்கான சூத்திரங்களில் ராகு, கேது என்பதை குறிப்பிடாமலேயே  சாதகம் பார்க்கும் படி வடிவைத்துள்ளார்!

    Varahmihir, the father of astrology in his famous book Brihat Jataka did not recognise Rahu and Ketu but in his another book Brihat Samhita he devoted one chapter to Rahu and Ketu and considered them not any celestial physical body like other planets but as the nodes of the Moon, ie, points of intersection of orbits of the Moon and the Earth. The north point of this intersection is called Rahu (north node) while the south point of that is called Ketu (south node). In Surya Siddhanta (an antique book on Astronomy) they are also considered as nodal points which are now known as shadowy planets. Our learned astrologers found their significant role in judging horoscope for ups and down in one’s life, these nodes have been referred to the class of planets.

    --http://www.futurepointindia.com/articles/research-articles/rahu-ketu.aspx

     

    ராகு, கேது பிற்காலத்தில் ஏன் உருவாக்கபட்டது ?

    • பூமியின் முக்கிய நிகழ்வுகளான சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இரு குறிப்பிட்ட புள்ளிகள் நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த கிரகணங்கள் வருடம் ஒரு முறையாவது நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகளும் 18.6 வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திர மண்டலங்களை சுற்றி வந்து புவி சுற்றை நிறைவடைவதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகள் ஒன்றுக்கொன்று 180பாகையில் உள்ளதை கண்டறிந்தனர்.
    • இந்த கற்பனை புள்ளிகள் கொண்டு கிரகணங்கள் நிகழ்வதை தோராயமாக கணித்தனர். 

     

    எனவே இவற்றிற்கு பெயர் கொடுக்க முனைந்த அறிஞர்கள் கற்பனையான் மெய்நிகர் புள்ளிகள் எனும் பொருள் வாய்ந்த சாயா கிரகம் என்று கூறினர்.

    rahuketu_thumb[1]

     

    அறிவியல் ரீதியான விளக்கம் என்ன ?

     lunar_perturbation

     

     

    அடுத்த பகுதியில்…

     

    [தொடரும்]

    சோதிடம்-5 பௌர்ணமி, அமாவாசை

    சூரியோதயம், சந்திரோதயம்

    சென்ற பகுதியில் கிரகங்களின் உதயம் பற்றி பார்த்தோம். இப்போது பூமியில் அடிக்கடி நிகழும் கிரக உதயங்களான சூரியோதயம் மற்றும் சந்திரோதயம் பற்றியும் இவற்றால் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளான  பௌர்ணமி, அமாவாசை பற்றி பார்ப்போம்.

    300px-geometry_of_a_total_solar_eclipse.svg

    அமாவாசை

    சாதாரணமாக அமாவாசை என்பது சந்திரன் வராத நாள் என்றும், பௌர்ணமி என்பது முழு நிலவு வரும் நாள் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அமாவசையில் சந்திரன் உதிக்கிறது. ஆனால் சூரியன் உதிக்கும் அதே நேரம் உதிக்கிறது என்பது ஆச்சரியமூட்டும் விசயம் அல்லவா ? கீழேயுள்ள இம்மாத அமாவாசை நாளன்று ஏற்படும் உதய தகவல்களை காண்க.

    சூரிய உதயம் சந்திர உதயம் காண உதவும் பக்கம் http://aa.usno.navy.mil/data/docs/RS_OneDay.php

    தமிழக நகரங்களின் பூமியின் இருப்பிடம் காண உதவும் பக்கம்  Latitude and Longitude of Important locations in Tamilnadu

     

    Sun and Moon Data for One Day

    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):

            Saturday
            12 June 2010          Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:55                
            Sun transit               12:18                
            Sunset                    18:42                
            End civil twilight        19:05                

    MOON
            Moonset                   17:43 on preceding day
            Moonrise                  05:29                
            Moon transit              12:06                
            Moonset                   18:43                
            Moonrise                  06:31 on following day

    New Moon on 12 June 2010 at 16:44 (Universal Time + 5:30).

    அதாவது திருச்செங்கோட்டில் 12 தேதி சூரிய உதயம் 05:55 AM ஆனால் சந்திர உதயமும் 05:29 AM தான் நடைபெறும். எனவே சூரிய ஒளியில் சந்திரன் நமக்கு தெரிவதில்லை. சந்திரன் 18:43 PM மறைந்து விடுவதால்(அஸ்தமனமும்) நமக்கு சந்திர ஒளி இரவில் கிடைப்பதில்லை.


    பௌர்ணமி

    இதற்கு எதிர்மாறாக பௌர்ணமியில் சந்திரன் தோராயமாக சூரிய அஸ்தமனத்தின் போது உதிக்கிறது. கீழேயுள்ள இம்மாத பௌர்ணமியின் போது உதய தகவல்களை காண்க.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Saturday
            26 June 2010          Universal Time + 5:30         
    SUN
            Begin civil twilight      05:34                
            Sunrise                   05:57                
            Sun transit               12:21                
            Sunset                    18:45                
            End civil twilight        19:08                

    MOON
            Moonrise                  17:54 on preceding day
            Moon transit              23:44 on preceding day
            Moonset                   05:35                
            Moonrise                  18:46                
            Moonset                   06:29 on following day
    Full Moon on 26 June 2010 at 17:01 (Universal Time + 5:30).

     

    அதாவது திருச்செங்கோட்டில் 26 தேதி சூரிய அஸ்தமனம் 18:45 PM ஆனால் சந்திர உதயமும் 18:46PM தான் நடைபெறும். எனவே நமக்கு முழு சந்திர ஒளி இரவில் கிடைக்கும்.


    7ம் நாள் (சப்தமி) அன்று


    வளர்பிறை சப்தமி(18 ஜீன் 2010) அன்று நடுபகலில் சந்திர உதயம் ஏற்படும். தேய்பிறை சப்தமி (4 ஜுன் 2010) அன்று நடுஇரவில் சந்திர உதயம் ஏற்படும்.


    moonphasediagram.jpeg

    விளக்க குறிப்புகள்

    பூமியின் பகல் வெள்ளை நிறத்தில், இரவு கருமை நிறத்தில் உள்ளது. புவியின்  ஒரே இடம் வெவ்வேறு நிலைகளில்(உதய,அஸ்தமனம்) கொடியினால் குறிக்க பட்டுள்ளது.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Friday  
            4 June 2010           Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:54                
            Sun transit               12:17                
            Sunset                    18:39                
            End civil twilight        19:02                

    MOON
            Moonrise                  23:41 on preceding day
            Moon transit              05:44                
            Moonset                   11:49                
            Moonrise                  00:17 on following day
    Phase of the Moon on 4 June:   waning gibbous with 56% of the Moon's visible disk illuminated.

    Last quarter Moon on 5 June 2010 at 03:43 (Universal Time + 5:30).


    [தொடரும்]

    சோதிடம்-4 கிரகங்கள் தேவர்களா ?

    பூமிக்கு அருகிலுள்ள & பெரிய கிரகங்கள் வெறும் கண்களாலேயே பார்க்க பட கூடியவை. செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி. கடந்த ஏப்ரல் மாதங்களில் இவை வானில் காட்சி அளித்தன. இவற்றை கூர்மையாக கவனித்தே பலன்கள் கணிக்க பட்டிருக்க வேண்டும்.

    மனிதர்களுக்கு சக்திக்கு மீறிய பொருள்கள் “தேவர்” என்ற வார்த்தையாக குறிப்பது பழங்கால மரபு. எனவே தான் தேவன் என்ற சொல் பயன்பட்டிருக்க வேண்டும். அதை கொண்டு விஞ்ஞானத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத புராணங்கள் கூறுவது முற்றிலும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். புராணங்களே சமீப காலத்தில் தோன்றிய கதைகள் தான் என்பது இலக்கிய ரீதியாக ஆராயப்பட்டு வரும் கருத்தாகும்.

     

    கிரகணம் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் தேவன் வந்து நேரடியாக சோதிடர்களுக்கு உபதேசம் செய்து விட்டு போனதில்லை. அவை வானியலை ஆராய்வதாலேயெ கண்டு பிடிக்க பட்டன. சோதிடம் கற்று கொள்ளும் ஒவ்வொருவரும், விமர்சிப்பவர்களும் உண்மைகளை அறிய அதன் அடிப்படை அறிவியல் மூலாதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் விடயங்கள் மூட நம்பிக்கைகளை தவிர வேறெதயும் தரப்போவது இல்லை.

    இந்திய அறிவியலின் உலக கொடை -http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_31.html

     

    Watch 5 planets in the sky
    Another amazing feet can be seen in the sky for one week. Generally, we see Sun, Moon and stars in the sky with our naked eye. It is very rare to see the other planets. Only with the use of telescope we can see the other planets. But we can have the chance of seeing five planets without the aid of any telescope. Reason for it is, all of them are coming closer to the earth. From 4th April to 10th April, these five planets can be seen every night.

    Visible planets:
    The planets visible are Venus, Mercury, Mars, Saturn and Jupiter

    - http://www.bloggerspoint.com/watch-venus-mercury-mars-saturn-and-jupiter-with-naked-eye-how-to-recognize-the-planets-in-sky/

     

    Mars Venus Jupiter stars Pollux Castor together in night sky 20020522 over Norbiton London England 02 BRM.jpg

    planets-Mars-Venus-Jupiter-stars-Pollux-Castor-together-in-night-sky-20020522-over-Norbiton-London-England-02-BRM

     

    இன்னும் வானியலை அறிவியலுக்காக ஆராய்பவர்கள் இருக்கிறார்கள். சில இணைய தள முகவரிகள் கீழே ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

      1. http://www.thenightskyguy.com/
      2. http://www.bloggerspoint.com/watch-venus-mercury-mars-saturn-and-jupiter-with-naked-eye-how-to-recognize-the-planets-in-sky/
      3. http://mirror-us-ga1.gallery.hd.org/_c/natural-science/_more2002/_more05/planets-Mars-Venus-Jupiter-stars-Pollux-Castor-together-in-night-sky-20020522-over-Norbiton-London-England-02-BRM.jpg.html

     

    ST__LUCIA_T20_CRICK_115662e

     

     

     

    உதயம், மறைவு

    எந்த ஒரு வானியல் பொருளும், ஒரு கிரகத்தின் வானின் பார்வை பரப்பிலிருந்து தோன்ற ஆரம்பிக்கும் நேரம் உதயம் எனப்படும். வானின் பார்வை பரப்பிலிருந்து மறையும் தருணம் அஸ்தமணம் எனப்படும்.

    சூரியோதயம், சந்திரோதயம் மட்டுமள்ள செவ்வாய் உதயம் முதலான பல்வேறு உதயங்கள் ஏற்கனவே வழக்கில் உள்ளது. உதயம் எனும் வார்த்தை புவிக்கு மட்டும் பொருந்தாது மற்ற எல்லா கிரகங்களிலும் கூட ஏற்படும்

     

    சூரியோதயம், சந்திரோதயம்,… பூமியோதயம்

    Looking back on Earth from Mars from Mars, the planet in the red sky higher, the earth and the moon hanging in the air. October 3, 2007, the Mars orbiter random survey carried by high-resolution HiRISE camera on Mars in the operation, the 142 million kilometers from Mars took place this picture.

    - http://fenyu.org/the-best-photos-of-mars-sky/

     

    பூமியும், புவியின் சந்திரனும் ! செவ்வாயிலிருந்து ;)

    The_best_photos_of_Mars_sky_17 

    [தொடரும்]

    சோதிடம் – 3 அடிப்படைகள்

    சோதிடம் என்பதன் வரலாறு என்ன? (இது இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது ?)
    சோதிடம் என்பது கிமு 2000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே உலகின் வெவ்வேறு பகுதிகளில் (இந்தியா, சீனா, கிரேக்கம், தென் அமெரிக்க மாயன்) உருவாகி வந்த தத்துவம்.
    சோதிட வளர்ச்சிக்கு அலெக்சாண்டரின் உலக படையெடுப்பு மிக முக்கியமானது. இவர் பாபிலோன், கிரேக்கம், இந்தியா போன்ற பகுதிகள் வரை தன் ஆட்சியை விரிவாக்கியதன் விளைவாக கலாசார பரிவர்தணையும், சோதிடமும் பரவின. பாபிலோனியர்களின் சோதிட முறையானது ஏற்கனவே இந்நாடுகளில் இருந்த முறைகளில் கலந்து சோதிட வளர்ச்சிக்கு வித்திட்டது.
    440px-Map-alexander-empire
    இது இந்தியாவில் மட்டும்  கடைபிடிக்க படுகிறது
    தவறு.  இது பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாசார முறைகளில், கிரகங்களை கொண்டு பயன்படுத்த பட்டது.
    Listed below are some significant traditions of astrology. They include, but are not limited to, the following:
    • Babylonian astrology பாபிலேன்
    • Horoscopic astrology and its specific subsets:
      • Hellenistic astrology 
      • Jyotish or Vedic astrology இந்திய முறை
      • Persian-Arabic astrology பெர்சிய முறை
      • Medieval & Renaissance horoscopic astrology மறுமலர்ச்சி
      • Modern Western astrology with its specific subsets: நவீன சோதிடம் 
        • Modern Tropical and sidereal horoscopic astrology
        • Hamburg School of Astrology
          • Uranian astrology, subset of the Hamburg School
            • Cosmobiology
            • Psychological astrology or astropsychology
    • Chinese astrology சீனம்
    • Kabbalistic astrology 
    • Mesoamerican astrology
      • Nahuatl astrology
      • Maya astrology  மாயா
    • Tibetan astrology திபெத்
    • Celtic astrology

    தற்போது கடைபிடிக்க படும் முறைகள் Current traditions

    Traditions still practiced in modern times include:

    சோதிடம் என்பது பழமை மட்டும் தான், வளர்ச்சி நின்று விட்டது.
    தவறு. சோதிடம் வானவியலில் கண்டுபிடிக்கபடும் புது விடயங்களை கொண்டு அதன் விளைவுகளை புள்ளிவிவர அடிப்படையில் கணித்து கொண்டு உள்ளது.

    புதிய சோதிட முறைகள் Recent Western developments (நன்றி விகிபேடியா)

    Traditions which have arisen relatively recently in the West:


    சூரியனும், சந்திரனும் கிரகமா ?
    சோதிடத்தில் குறிப்பிடபடும் கிரகம் என்ற சொல்லின் அர்த்தமும், தற்போது அறிவியலில் பயன்படுத்தபடும் கிரகம் (planet) என்பதும் வேறு வேறானவை.
    1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை ஜீவர்களை பாதிக்கும் வானியல் பொருட்கள்/நிகழ்வுகளை குறிக்கும் பொருளில் பயன்பட்டு வந்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
    2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற போது புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
    மேலும் உதாரணங்கள் http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_30.html

    கிரகம் என்ற வார்த்தையின் அறிவியல் விளக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. நவீன விளக்கம்
    Technically, there has never been a scientific definition of the term Planet before 2006. When the Greeks observed the sky thousands of years ago, they discovered objects that acted differently then stars. These points of light seemed to wander around the sky throughout the year. We get the term "planet" from the Greek word "Planetes" - meaning wanderer. - http://missionscience.nasa.gov/nasascience/what_is_a_planet.html
     wiap_maincontent_img03
    ஒரு துறை தன் விதிகளை சரி செய்து கொள்வது பித்தலாட்டம் என்பது முட்டாள்தனம். அறிவியல் ஆயிரக்கணக்கான முறை இத்தவறை செய்துள்ளது ;)


    சூரியன் எனும் நட்சத்திரம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
    நாம் ஏற்கனவே சோதிடம் என்பது புவிக்கு மற்ற பொருள்களால் ஏற்படும் விளைவுகளை கணிக்க பயன்படுவது என பார்த்தோம். தாவரங்களின் ஸ்டார்ச் சேகரிப்பு பற்றி படித்துள்ளோம் அல்லவா ? அதாவது உயிரனங்களின் வாழ்க்கைக்கு சூரியனின் சக்தியானது இன்றியமையாதது. மற்ற நட்சத்திரங்கலால் இது நம் பூமியில் நிகழுமா ? சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்றா ? சூரியன் இல்லாமல் மற்ற நட்சத்திரங்களால் புவியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியுமா ? புவிக்கு தரும் பலன்களை வைத்து தான் சொற்களின் வித்தியாசம் இருக்கிறது.
    சூரியன் என்பதும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் வேறு வேறு என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? எனவே தான் சிறப்பு பலன்கள் கூறப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் பிறந்த நாயும், மனிதனும் ஒண்ணா? இல்லையென்றால் ஏன் ?
    கிரங்களால் மனிதனும் நாயும் பிறப்பதில்லை. மனிதனும் நாயும் பிறக்கும் போது கிரக நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். கிரக பலன்கள் உயிரினங்களை பொருத்து மாறுபடும்.

    ஆணுக்கும், பெண்ணுக்கும், திருநங்கைக்கும் கூட பலன்கள் வேறுபடுமா?
    ஆண், பெண் இருவருக்கும் உடல் உறுப்புகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? பெண்களுக்கு உள்ள சிறப்பு உருப்புக்களை & தன்மைகளை பொருத்து பலன்கள் மாறும்.

    1. கர்ப்ப பை.
    2. மாதவிலக்கு.
    3. மெனோபாஸ்.
    4. தாய்மை அடையும் நிலை.
    5. பாலூட்டும் நிலை.

    திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய குறிப்புகளும் சோதிடத்தில் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றம் ஜீன்களை பொறுத்தது எனில் பிறக்கும் போதே கண்டு பிடிக்க முடியுமா முடியாதா ? (இது சோதிடத்திற்கு நேரடியாக சம்பந்தமில்லை எனினும் பிரச்சிணையின் வேறு கோணத்தை உணர்த்த பயன் படுத்தி கொண்டேன்)
    இயற்கை பேரழிவு போன்ற நிகழ்வில் (சுனாமி..)  இறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஜாதகமா ?
    புவியில் ஏற்படும் நிகழ்வு அனைவரையும் பாதிக்கும். அதன் பிறகு நாடு, மாநிலம் இவை போன்று. இவற்றின் பலன் செயல்படும் போது தனிப்பட்ட மனிதர்களின் சாதகம் பயனற்றவை ஆகிவிடும்.
    பூமிக்கு ஏற்படும் பலன், நாட்டிற்கு ஏற்படும் பலன் முதலியவை ஆராய்ச்சி செய்யபடுகிறது. பிறகு தனிப்பட்ட மனிதர்களுக்கான பலன்கள் பார்க்க பட வேண்டும்.  உதா: சுனாமி, இந்தியா பற்றிய இடுகைகளை பார்த்து விடுங்கள்.
    [தொடரும்]

    சோதிடம் – 2 அடிப்படைகள்

    சோதிடம் ஒரு வானவியல் பிரிவில் ஒன்றா ?

    வானவியல் என்பது வானில் பல்வேறு பொருள்கள் இருக்கும் பௌதீகமான தன்மைகளை கண்டறிய்வும், குறிப்பிடவும் பயன்படுகிறது. சோதிடம் என்பது வானவியல் மாற்றங்கள் எவ்வாறு ஜீவராசிகளை அல்லது கிரகங்களை பாதிக்கின்றன என்பது பற்றியது. சோதிடம் கணக்கில் எடுத்து கொள்வது கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள் மட்டும் தான்.  இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றன.

    Astronomy deals with the study of the location, motion, and nature of objects in space. Astrology is the interpretation of the influence of the heavenly bodies on human affairs.

    சோதிடம் என்பதும் வானியல் என்பதும் வேறு வேறு. சோதிடம் என்பது வானியலின் மாற்று அல்ல. உண்மையில் சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது.  வானவியல் இல்லாமல் சோதிடம் இல்லை. 

    வானவியலில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. சோதிட விதிகளை ஏற்படுத்திய முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் அறிந்தவற்றில் உள்ள சரியானவற்றை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும். இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறப்படுகின்றன.

     

    சோதிடத்தின் அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன ?

    சோதிடத்தின் செயல்பாட்டை கிளஸ்டர் அனலைசிஸ் (Cluster analysis) முறைமை மூலம் விளக்கலாம். அதாவது மனிதர்கள் பிறந்த காலகட்டத்தில் இருந்த கிரக நிலைகளை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பலன்களை பதிவு செய்வது(observation).  பிறகு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புள்ளி விவர அடிப்படையில் மனிதர்களின் கிரக நிலைகள் மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்களை ஒப்பீடு செய்து (analysis) கிரகங்களின் பலன்கள் நிர்ணயம் செய்யபடுகிறது. இப்பலன்கள் மற்றவர்களுக்கு நிகழ கூடிய வாய்ப்பு சதவிகிதம் (output) தரப்படுகிறது.

    சிலர் சோதிடம் முடிவான முடிவுகளை தருவதில்லை என குறைபடுகின்றனர். சிலர் சோதிடர் சொல்வதையே முடிவு எனவும் கருதுகின்றனர். நன்றாக கற்றறிந்த சோதிடர் எதையும் முடிவாக சொல்ல கூடாது என்பது தான் சோதிடத்தின் அடிப்படையே. நிகழ்தகவு காசை சுண்டிவிட்டால் நிகழ கூடிய வாப்பு சதவிகிதம் என்பதை  சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ விழுவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறதே என்பது போன்றது. சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது.

    இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.
    இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோய் வருவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது.

     

     

    சோதிடம் புவியை மையமாக கொண்டு கிரகங்களின் பாகைகளை கணக்கிடுவது ஏன் ?


    சோதிடம் உயிரினங்கள் குறித்து சொல்ல படுவது. மனிதர்கள் இருப்பது பூமியில். எனவே தான் பூமியை சுற்றி பிற கிரகங்கள் உள்ள பாகையை வைத்து சோதிடம் சொல்கிறார்கள். சோதிடம் கணக்கிடப்படும் உயிரினம் எந்த கிரகத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தை மையமாக கொண்டு பலன்கள் சொல்ல வேண்டும். உதாரணமாக செவ்வாயில் இருக்கும் மனிதனுக்கு செவ்வாயை வைத்து சோதிடம் சொல்ல வேண்டும்.

    ஏன் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கே வரவில்லை ?

    சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தப் படுத்தி குழப்பி கொள்ள தேவையில்லை. புவிக்கு ஏற்படும் மாற்றங்களை காண புவியை பொருத்து மற்ற கிரகங்களின் நிலையை காண வேண்டும் என்பது எளிதில் புரிந்து கொள்ள கூடியதே. சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது & ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது.

     

    27 நட்சத்திரம் என்பது பொய் தானே ?

    வானில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முட்டாள் தனமானது என்பதும் பெரியோர் வாக்கு தானே ? பிறகு எப்படி 27 நட்சத்திரங்கள் என்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ?

    அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லே புவியின் வெவ்வேறு பாகைகளில் உள்ள நட்சத்திர தொகுதிகளை தான் குறிக்கிறது. தனித்த நட்சத்திரங்களை அல்ல.

     

     zodiac-sky-200X200zodiac-signs-1

     

    சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.
    டிகிரி என்னும் முறை கண்டு பிடிக்க படாத அக்காலத்தில் வெவ்வேரு இடங்களில் இருந்த நட்சத்திர தொகுதிகளை வைத்து 360 டிகிரியை வகைப்படுத்தினர் அவ்வளவு தான். அவை நாம் வானத்தில் காணும் நட்சத்திரங்களில் 27 மட்டுமே அல்ல. நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து மற்ற கிரகங்கள் வானில் இருக்கும் பாகையை அடையாளம் கண்டு கொண்டனர்.

    logo1

    நட்சத்திர பாதம் எனும் விளக்கத்தை அறிந்தால் ”சோதிட நட்சத்திரம்” தற்போது நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர பகுதிக்கு பாதங்கள் என்று பெயர்.

    360 டிகிரி = 27 நட்சத்திரங்கள்  = 108 பாதங்கள் (27 *4)

    சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது.  இச்சிறுபகுதி கலை எனப்படும்.

    1 பாகை = 60 கலை

    இதன் மூலம்
    1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
    30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள என அறியலாம்.

     

    CircularAstrologicalPosters-2

     

    http://en.wikipedia.org/wiki/Zodiac

    http://www.ehow.com/how_2136263_zodiac-sky.html

    [தொடரும்]

    வேற்றுகிரகிகளும், விஞ்ஞானிகளும் -1

    வேற்றுகிரகிகள் நம்முடைய விஞ்ஞானத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என்கிறார் ஒரு வல்லுனர். இவர் வல்லுனர் மட்டுமல்ல கனடா நாட்டின் மாஜி பாதுகாப்பு அமைச்சர் என்பது தான் முக்கியமான விசயம். திரு. பால் கெல்லர் (83 வயது) அளிக்கும் மேலும் சில தகவல்கள் தான்  இவ்விவாதத்தை கவனிக்க  முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

     

    roswellnewspaper

    Roswell Daily Record for July 8, 1947

     

    இணைப்புக்கள்

      1. Don’t talk to aliens, warns Stephen Hawking

      2. Alien technology the best hope to 'save our planet:' ex-defence boss

      3. We should thank aliens for our computer screens: Expert

     

    வல்லுனர்களின் விவாதங்கள்

     

    திரு. பால் கெல்லரின் கூற்றுக்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானியான திரு. ஸ்டீபன் காவ்கிங்கிற்கு எதிர்வினையாக அமைந்துள்ளது. ஸ்டீபன் காவ்கிங் என்பவர் ஐன்ஸ்டீனிற்கு பிறகு மதிப்பு மிக்க விஞ்ஞானியாக கருதப் படுபவர் என்பது குறிப்பிட தக்கது.

    220px-barack_obama_speaks_to_stephen_hawking "If they (aliens) wanted to use our solar system, for some super project, our complaints would be like an ant colony protesting the laying of a parking lot,'' Hawking has also said that though most extraterrestrial life could be only in the form of small animals, but there could also be "nomads, looking to conquer and colonize'' other planets.

    “If aliens ever visit us, I think the outcome would be much as when Christopher Columbus first landed in America, which didn’t turn out very well for the Native Americans.”

     

    ஸ்டீபன் காவ்கிங் (ஐன்ஸ்டீனிற்கு பிறகு புகழ் பெற்ற விஞ்ஞானியாக கருத படுபவர்) ”வேற்று கிரகிகள் உள்ளனர் ஆனால் அவர்களுடன் தொடர்பு கொள்வது ஆபத்தானதாகவே முடியும்” என சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் ”வேற்றுகிரகிகள் பூமியின் வளத்தை எடுத்து கொண்டு மனிதர்களுக்கு கேடு விளைவிக்க கூடுமெனவும்” அச்சம் தெரிவித்திருந்தார். இதற்கு உதாரணமாக ஐரோப்பியர்களின் அமெரிக்க கண்டுபிடிப்பிற்கு பிறகு செவ்விந்தியர்களுக்கு நேர்ந்த கொடுமையை உதாரணம் காண்பித்து இருந்தார். (எளிமையாக புரிய வேண்டுமானால் அவதார் படத்தின் பண்டோரா கிரகம் போல).

     

    ஆனால் பால் கெல்லர் கீழ்கண்ட காரணங்களை முன் வைத்து இக்கருத்துக்களை கடுமையாக மறுக்கிறார்.

    1. "The reality is that they (aliens) have been visiting earth for decades and probably millennia and have contributed considerably to our knowledge.''

    வேற்றுகிரகிகள் நம்முடைய கிரகத்திற்கு வெகு வருடங்களாகவே பூமிக்கு விஜயம் செய்வதாகவும் நம்முடைய கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

     

    2 ”Microchips, for example, fiber-optics, they are just two of the many things that allegedly - and probably for real - came from crashed vehicles,''

    அவர்களுடைய விண்கலத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இன்றைய நுண் மின்னணு கருவிகளும், தகவல் புரட்சியின் அடிப்படையாகவும் அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

     

    3. Paul Hellyer, 83, is calling for a public disclosure of alien technology obtained during alleged UFO crashes -- such as the mysterious 1947 incident in Roswell, New Mexico

    1947ல் (!) நியு மெக்ஸிகோவின் ரோஸ்வெல் நகரத்தில் விபத்துக்குள்ளான பறக்கும் தட்டில்(!!) கிடைக்க பெற்ற வேற்று கிரகிகளின் தொழில்நுட்பங்கள் (!!!) என்னென்ன என்பது விவரிக்க பட வேண்டும் என்கிறார்.

     

    4. "I'm not discouraging anyone from being green conscious, but I would like to see what (alien) technology there might be that could eliminate the burning of fossil fuels within a generation ... that could be a way to save our planet." "Some of us suspect they know quite a lot, and it might be enough to save our planet if applied quickly enough."

    வேற்று கிரகிகள் சுற்று சூழலை கெடுக்காத மாற்று எரிபொருளை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் இது நம்முடைய பூமியை சுற்றுபுற சூழல் அழிவிலிருந்து காப்பாற்ற முடியுமெனவும் வாதிடுகிறார். எனவே தான் கிடைக்க பெற்ற தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ள யுஸ் நாட்டை வற்புறுத்துகிறார்.

     

     

    கனடா, யுஎஸ் நாடுகள் அறிவியல் ரீதியாக மிகக்கடுமையாக போட்டியிடும் இரு வெவ்வேறு நாடுகள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்த விவாதத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்பதையும், அவர்கள் மனிதர்களை விட விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறி உள்ளனர் என்ற கருத்தையும் இரு அறிஞர்களும் ஒப்பு கொள்கின்றனர் என்பது தான். !!!

    [தொடரும்]

    பரிணாமமும் தமிழும் -3

    இப்பகுதியில் உள்ளம், மணம், புத்தி, சித்தம், அகங்காரம், சுரோத்திராதி ஞானேந்திரியம் மற்றும் பஞ்சவாயுக்கள் இவற்றிற்கான விளக்கமும், தன்மைகளும் அளிக்கப்படும்.

    பகுதி–1

    பகுதி-2

     

    இந்தச் சூக்ஷும பூதங்களினின்றும் சூக்ஷும சரீரங்களும் ஸ்தூல பூதங்களும் தோன்றும். அஃதெங்ஙனமெனின் –

    ஆகாச முதலான பஞ்சபூதங்களின் சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரையெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது அந்தக்கரணம். இந்த அந்தக்கரணத்தில் ஆகாசத்தின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் ஆகாசத்தைப்போலச் சகலமான கேள்விக்குங் இடங்கொடுத்துத் தரிக்கின்றது. இப்படித் தரிக்கின்ற விருத்திக்கு (விருத்தி-பரிமாணம்) உள்ளம் என்று பெயர். இந்த அந்தக் கரணத்தில் வாயுவின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் வாயுவைப் போல அலைகின்றது, இப்படி அலைகின்ற விருத்தி மனமென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அக்கினியன் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் அக்கினியைப்போல ஈது இன்னதென்று விளக்குவிக்கின்றது. இப்படி விளக்குவிக்கின்ற விருத்திக்குப் புத்தியென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அப்புவின் அம்சங் கூடிதனற்கு அடையாளம், இந்த அந்தக் கரணமும் அப்புவைப்போல விடயங்களில் பற்ற இழுக்கின்றது. இப்படி இழுக்கினற விருத்திக்குச் சித்தம் என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் பிருதிவியின் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் பிருதிவியைப்போலக் கடினமாக நின்று நானென்று அபிமானிக்கின்றது. இந்தஅபிமான விருத்திக்கு அகங்காரம் என்று பெயர்.m

    பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது அந்தகரணம். அந்தகரணம் பஞ்சபூதங்களின் தன்மையையும் கொண்டுள்ளது.

    • ஆகாயம் (வெளி) யின் அடையாளமாக அனைத்து கேள்விக்கும் இடமளிக்கிறது. இந்த பரிமாணத்திற்கு உள்ளம் என்று பெயர்.
    • வாயு (காற்று) அம்சத்தின் அடையாளமாக நகரும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு மணம் என்று பெயர்.
    • அக்னி (நெருப்பு) அம்சத்தின் அடையாளமாக சந்தேகங்களை தெளிவிக்க கூடியதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு புத்தி என்று பெயர்.
    • அப்பு(நீர்) அம்சத்தின் அடையாளமாக விசயங்களில் ஒட்டும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு சித்தம் என்று பெயர்.
    • பிருதிவி(நிலம்) அம்சத்தின் அடையாளமாக நிலைத்த தன்மையுடன் அபிமானத்துடன் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு அகங்காரம் என்று பெயர்.

    அதாவது அந்தகரணம் எனும் ஒரே தத்துவமே பல்வேறு வடிவுகளில் நிலைகளில் பல்வேறு செயல்களை செய்கிறது என விளக்க படுகிறது.

     

    இன்னும் ஆகாச முதலான பஞ்ச பூதங்களினுடைய சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்துத் தனித்தனியே வைத்தது சுரோத்திராதி ஞானேந்திரிய மென்று சொல்லப்படும். இவைகளில் சுரோத்திரம் ஆகாசத்தின் குணமான சத்த மாத்திரத்தை அன்றியும், துவக்கு வாயுவின் அம்சமானபடியால் வாயுவின் குணமான பரிச மாத்திரத்தை அறியும் சக்ஷு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியின் குணமான ரூப மாத்திரத்தை அறியும். சிங்ஙுவை அப்புவின் அம்சமானபடியால் அப்புவின் குணமான ரசமந்திரத்தை அறியும் ஆக்கிராணம் பிருதிவியின் அம்சமானபடியால் பிருதிவியின் குணமான கந்த மாத்திரத்தை அறியும் இப்படி ஐந்தும் ஒன்றோடொன்று கூடாதபடியால் ஒன்று மற்றொன்றின் குணத்தை கிரகிக்க அறியாது அந்தக்கரணத்தில் ஐந்து மாத்திரையும் ஒன்றாய்க் கூடினதுகொண்டு ஐந்திந்திரியங்களினாலும் ஐந்து விடயங்களையும் அறியும். இந்தச் சத்துவ குணத்திலுண்டான அந்தக்கரணம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தும் சத்துவாம்சமானபடியால் ஞான சாதனமாயின.

    பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  சுரோத்திராதி ஞானேந்திரியம் எனப்படும்.

    • ஆகாயத்தின் அம்சம் சுரோத்திரம்- சத்தம் மாத்திரத்தை அறியும்
    • வாயுவின் அம்சம் துவக்கு- பரிசம் மாத்திரத்தை அறியும்
    • அக்கினியின் அம்சம் சக்ஷு- ரூபம் மாத்திரத்தை அறியும்
    • அப்புவின் அம்சம் சிங்ஙு- ரசம் மாத்திரத்தை அறியும்
    • பிருதிவியின் அம்சம் கந்தம்- ஆக்கிராணம் மாத்திரத்தை அறியும்

     

    இன்னம் ஐந்து பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது வியானாதி பஞ்சவாயுக்கள். இவைகளில் வியான வாயு ஆகாசத்தின் அம்சமானபடியால் ஆகாசத்தைப் போலச் சர்வாங்கமும் வியாபித்திருக்கும். பிராண வாயு வாயுவின் அம்சமானபடியால் வாயுவைப்போல் இருதயத்திலிருந்து நாசியாதிபரியந்தம் அலையும். அபானவாயு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியைப்போலச் சடராக்கினியாக உஷ்ணத்துக் கொண்டு குதத்தைப்பற்றி நின்று உண்ட அன்னபானாதிகளை சீரணப்பிக்கும். சமானவாயு அப்புவின் அம்சமானபடியால் சரீர நடுவான நாபித் தானத்தினின்று உண்ட அன்ன ரஸங்களை அப்புவைப்போல இழுக்கும், உதான வாயு பிருதிவியின் அம்சமானபடியால் கண்டத்தைப் பற்றி பிருதிவியைப் போலக் கடினமான நின்று உண்ட அன்னபானாதிகளைக் கடையும், இந்தப் பஞ்ச வாயுக்களையு மல்லாமல் வாந்தி பண்ணுவிக்கின்றது நாகனென்றும், இமைத்து விழிப்பிக்கின்றது கூர்மமென்றும், குறு குறுத்துச் தும்மச் செய்கின்றது கிரிகரனென்றும், கொட்டாவி கொள்ளச் செய்கின்றது தேவதத்தனென்றும், வீங்கச் செய்கின்றது தனஞ்செயனென்றும் வேறே ஐந்து வாயுக்களுண்டென்று சிலர் சொல்லுவார். இவ்வைந்தும் பிராணணுடைய தொழிலானபடியால் வேறல்ல இன்னம் ஆகாச முதலிய பஞ்ச பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்துத் தனித்தனியே வைத்தது வாக்காதி கர்மேந்திரியமென்று சொல்லப்படும்.

    பஞ்சபூதங்களின் மத்திம(ரஜோ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது வியானாதி பஞ்சவாயுக்கள். 

    • ஆகாயத்தின் அம்சம் வியான வாயு- உடம்பின் அனைத்து பாகங்களையும் நிறைந்து இருக்கும்
    • வாயுவின் அம்சம் பிராண வாயு – இருதயத்திலிருந்து நாசி(மூக்கு) வரை செல்லும்
    • அக்கினியின் அம்சம் அபானவாயு – அக்னியை போல தகித்து குதபாகத்தில் சாப்பிட்ட உணவு பொருள்களை ஜீரணம் செய்யும்
    • அப்புவின் அம்சம் சமானவாயு – வயிற்று பகுதியிலிருந்து உணவு பொருள்களை சேகரம் செய்யும்.
    • பிருதிவியின் அம்சம் உதான வாயு – தொண்டையிலுருந்து உணவு பொருள்களை அரைக்கும்

     

    இவ்வாயுக்கள் அல்லாமல் உடலில் வேறு 5 வாயுக்கள் உள்ளதாக சொல்லபடும்.

    நாகன் – வாந்தியை உருவாக்குகிறது

    கூர்மம் – இமைத்தல்

    கிரிகரன் – தும்ம செய்தல்

    தேவதத்தன் – கொட்டாவி விடுதல்

    தனஞ்செயன் – வீங்க செய்தல்

     

    இவை பிராணனின் செயல்கள் என வகை படுத்த பட்டுள்ளன.

     

    பஞ்சபூதங்களின் ரஜோ அம்ச தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  வாக்காதி ஞானேந்திரியம் எனப்படும்.

    பரிணாமமும் தமிழும் -2

       பகுதி-1ல் பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை தத்துவம்(பரபிரம்மம்) எவ்வாறு 3 தன்மையுள்ள (குணங்கள்) தத்துவங்களாக உருமாற்றம் அடைந்தன என்று விளக்கப்பட்டது. இப்பகுதியில் மாயை, விஷ்ணு, பிரம்மா, ருத்ரன், மனிதர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் முக்தி எனும் தத்துவங்கள் எவ்வாறு குணங்களால் பகுக்க படுகின்றன என்பது விளக்கப்பெறும்.

    இந்த அகண்ட பரிபூரண சச்சிதாநந்தப் பிரமத்தினிடத்திலே (புருடனிடத்துச் சாமர்த்திய ரூபசக்தி போலப் பிரமதின்கண் அனாதிசித்தமாயிருக்கிற மூலப்பிரகிருதியென்னுஞ் சத்திக்குச் சுத்திரஜிதத்தை உபமானமாகச் சொன்னது அநிர்வசனியத் தன்மையென்னும் பொருள் தோன்ற என்க). சுத்தியில் ரஜிதம்போல் மூலப்பிரகிருதியுயென்னும் ஒரு சத்தி உண்டு. அந்த மூலப்பிரகிருதியும் விகிர்த குணமாகிய முக்குணத்தோடு கூடியுருக்கும் அந்தப் பிரகிருதியின் சத்துவ குணத்தை மாயையென்றும், சர்வக்ஞவுபாதியென்றும், ஈசுரகாரண சரீரமென்றுஞ் சொல்லப்படும். இந்த மாயையினிடத்திலே நிர்மல சலப்பிரதிபிம்பம் போலப் பிரமம் சுலட்சணமாகப் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியத்தைச் சர்வக்ஞனாகிய ஈசுரனென்று சொல்லப்படும்.

       ப்ரம்மம் சத் சித் ஆனந்தம் என பரிபூரணமாக நிறைந்து இருந்தது.  இத்தத்துவத்திற்கு மூல பிரகிருதி எனும் சக்தி உண்டு. மூலபிரகிருதி முக்குணங்களை கொண்டு உள்ளதால், ப்ரகிருதியின் சத்துவகுணம் மாயை [6] (சர்வக்ஞவுபாதி, ஈசுரகாரண சரீரம்) என்று அழைக்கபடும். மாயையில் மறைபொருளாக பிரம்மம் பிரதிபளிக்கும். இத்தத்துவம் ஈசுவரன் (கடவுள்) என்று அறியபடும்.

     

    இந்தச் சத்துவகுண மாயையினிடத்திலே சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் ரஜஸு, சத்துவத்தில் தமஸு என மூன்று குணங்கள் உண்டு. இவைகளில் சத்துவத்தில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை இரக்ஷிக்கையினால் விஷ்ணு வென்றும், சத்துவத்தில் ரஜஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை சிருஷ்டிக்கையினால் பிரமாவென்றும், சத்துவத்தில் தமஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை உபசம்மாரம் பண்ணுகையினால் உருத்திரனென்றும் சொல்லப்படுவன். இப்படி மூலப் பிரகிருதியின் சத்துவகுண கற்பனை சொல்லப்பட்டது.

    மாயை என்பது சத்துவ குணம் கொண்டது. இச்சத்துவ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

    1. மாயையின் பிரபஞ்சத்தை நிலை பெற செய்யும் தன்மை விஷ்ணு (சத்துவத்தில் சத்துவம் ) என்றும் [6.1],
    2. படைக்கும் தன்மை (சத்துவத்தில் ரஜஸு) பிரமா என்றும் [6.2], 
    3. மறு உருவாக்கும் தன்மை (சத்துவத்தில் தமஸு)  ருத்ரன்[6.3] என்றும் பெயர் பெறும்.

     

    இனி மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் அநேகரூபமாய்ப்பிரிந்து அவித்தைகளென்றும், ஜீவகாரண சரீரங்களென்றும் ஒன்றற்கொன்று தாரதம்மியமாகச் சொல்லப்படும். இந்த அவஸ்தைகளிடத்திலும் மலின சலப் பிரதி பிம்பம் போலப் பிரமசைதன்னியம் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியங்களை கிஞ்சிக்ஞரென்றும், சீவ சிதாபாசரென்றும், பிராக்ஞரென்றும் சொல்லப்படும். இந்த அவித்தைகளிடத்திலேயும் ரஜஸில் சத்துவம், ரஜசில் ரஜசு, ரஜசில் தமசு என மூன்று குணங்கள் உண்டு. இரஜஸில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் தத்துவக்ஞான நிஷ்டனாவன். இரஜஸில் ரஜசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் காமக்குரோதபரனாய்க் கர்மநிஷ்டனாவன் இரஜஸில் தமசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் சோம்பல் நித்திரை மயக்கம் ஆகிய இவைகளை யடைவன். இப்படி மூலப் பிரகிருதியின் இரஜோகுண கற்பனை சொல்லப்பட்டது.

       மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் பல்வேறு தத்துவங்களாக பிரிந்து அவித்தை, ஜீவ காரண சரீரம் [7] என்றும் பிரிக்க படுகின்றன. இத்தத்துவத்தின் பிம்பமான சைதன்யம்(படைப்புகள்) கிஞ்சிக்ஞர், சீவ சிதாபாசர், பிராக்ஞர் என்று பெயர் பெரும். இந்த ரஜோ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

    1. ”ரஜஸில் சத்துவம்” குணம் கொண்ட படைப்புகள் தத்துவம், ஞான நிஷ்டம் போன்ற தன்மைகள் பெறும் [7.1].
    2. ”இரஜஸில் ரஜசு” குணம் கொண்ட படைப்புகள் காமம், குரோதம், கர்மம்  போன்ற தன்மைகள் பெறும் [7.2].
    3. ”ரஜஸில் தமசு” குணம் கொண்ட படைப்புகள் சோம்பல், நித்திரை, மயக்கம் போன்ற தன்மைகள் பெறும் [7.3].

     

    இனி மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு. இவ்விரண்டில் ஆவரணசத்தியானது தத்துவ ஞானியையும் ஈசுரனையுந் தவிர மற்றைச் சீவருக்கெல்லாம் சரீரத்திரயம், சிதாபாசன், சாக்ஷி சைதன்னியம் என்னு மிவைகளின் ஒன்றற்கொன்றுள்ள பேதம் தெரியவொட்டாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட சீவர் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக நானென்று அபிமானிப்பர். இந்த அபிமானத்தை அகங்காரக் கிரந்தியென்றும், சம்சாரபந்தமென்று சொல்லப்படும். சற்குரு கடாக்ஷத்தினாலே இந்த ஆவரணம் நீங்கி இருபத்தொன்பது தத்துவங்களின் ஒன்றற்கொன்றுள்ள பேதந் தெரிகின்றதே முத்தி. இப்படி ஆவரண சத்தியின் காரியஞ் சொல்லப்பட்டது.

    இனி விக்ஷேபசத்தியினின்றும் சத்தகன் மாத்திரையான ஆகாசம் தோன்றிற்று. ஆகாசத்தினின்றும் பரிசதன் மாத்திரையான வாயு தோன்றிற்று. வாயுவினின்றும் ரூபதன்மாத்திரையான அக்கினி தோன்றிற்று, அக்கினியினின்றும் ரஸதன் மாத்திரையான அப்பு தோன்றிற்று, அப்புவினின்றும் கந்தகன் மாத்திரையான பிருதிவி தோன்றிற்று. இந்த சூக்ஷும பஞ்சபூதத்திற்குக் காரணமாயிருக்கின்ற விக்ஷேப சத்தியினிடத்திலே தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு என்னுமிவை அற்பங் கருவாக விருந்தபடியால் அதன் காரியமாகிய இந்தத் தன்மாத்திரைகளான பஞ்சபூதங்களும் முக்குணங்களுடனே பிறந்தன. இந்தப் பஞ்சபூதங்கட்குத் தன் மாத்திரைகளென்றும், அபஞ்சீகிருத பூதங்களென்றும், சூக்ஷுமபூதங்களென்றும், முக்குண பூதங்களென்றும் சாஸ்திரங்களில் நாமஞ் சொல்லப்படும்.

     

    மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு.

    1. ஆவரணம் [8]

       ஆவரண சக்தியானது எல்லா சீவர்களுக்கும் (கடவுளையும், முக்தியடைந்தவர்களையும் தவிர) தன்மையாக உள்ளது. இத்தன்மை மூலபொருள், சாட்சி, விளைவு இவற்றிற்கிடையேயான வித்தியாசம் தெரிய விடாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட மனிதர்கள் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக “நான்” என்று கற்பனை செய்து கொள்வர். இதற்கு அகங்கார கிரந்தி என்றும் சம்சார பந்தம் என்றும் சொல்ல படும்.

       முக்தி என்பது இந்த 29 தத்துவங்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரிவது.

     

    2. விக்ஷேபம் [9]

       அடிப்படை இயற்கையான பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி விளக்க பெறும். ஆகாயம் => வாயு => அக்னி => அப்பு => நிலம். பஞ்ச பூதங்கள் விக்ஷேபம்(முல பிரகிருதியின் தமோ குணம்- தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு) இருந்து பிறந்ததால், பஞ்ச பூதங்களும் முக்குணங்களுடன் உள்ளன.  பஞ்ச பூதங்களுக்கு தன் மாத்திரைகள், அபஞ்சீகிருத பூதங்கள், சூக்ஷுமபூதங்கள், முக்குண பூதங்கள் என்று வேறு பெயர்களும் உள்ளன.

     

    [தொடரும்]

    பரிணாமமும், தமிழும்

    இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் உயிரியல் தோற்றத்திற்கு பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்ற கொள்கை வலுவடைந்து வருகிறது. பழைய சித்தர் பாடல்களை படிக்கும் போது  சேஷாத்திரி சிவனார் அருளிய நாநாசீவவாதக் கட்டளை எனும் நூலின்  “ஒரு பொருளில்/தத்துவத்தில் இருந்தே பிரபஞ்சம் தோன்றி இருக்க முடியும்” என்ற கருத்தொற்றுமையுடன் கூடிய ஒரு கட்டுரையை படித்தேன்.

    இந்நூல் இறைவன் எனும் பொருள்/தத்துவம் மற்ற படைப்புகளை உருவாக்கியது எனும் மேலை தத்துவத்தை நிராகரிக்கிறது. மாறாக அனைத்து படைப்புகளும் ஒரே தத்துவத்தின் பரிணாம வளர்ச்சியே எனும் அத்வைத தத்துவத்தை முன் வைக்கின்றன.

     

    இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட இக்கருத்துக்கள் ஆரம்ப நிலையில் உள்ளது என்பது எளிதில் உணர தக்கதே. இருந்த போதிலும் இந்நூலின் தொன்மையை பார்க்கும் போது இந்திய தத்துவங்களும் ஆன்மீக மரபும் மற்ற தத்துவங்களுடன் ஒப்பிட அக்காலத்தில் அடைந்திருந்த சிறப்பை அறிய முடியும்.

     

    இந்நூலை அனைவரும் அறியும் பொருட்டு மின்னாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறேன். என்னுடைய விளக்கங்களையும் அருகே அளித்திருக்கிறேன். ஆக்கத்தில் உள்ள குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

     

     

    சேஷாத்திரி சிவனார் அருளிய

    நாநாசீவவாதக் கட்டளை

    •••••••

    சாற்றுக்கவி

    இப்பியினிடையே யெழுமி சதம்போ

    லென்றுமா யிலகியின்யாகி

    யொப்பிபடவேது மின்றியபிரமத்

    துற்றிடுங் பகுதிமுன்னாய்

    வப்பிரபஞ்ச முறைமையைத்தூல

    வருந்ததி நியாயமேயென்னச்

    செப்பினன்யாருந் தெளிவுறச்சேஷாத்

    திரிசிவ னென்னுமாதவனே.

    காப்பு

    ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன்

    ஞானகுரு வாணிகையு ணாடு

     

    சாற்று கவி விளக்கம் (ஆசிரியர் குறிப்பு)

    இப் புவியினிடையே எழுமி சதம்போல் என்றுமாயிலகி இன்யாகி  ஒப்பிபடவேதும் இன்றிய பிரமத்து உற்றிடுங் பகுதி முன்னாய் அப்பிரபஞ்ச முறைமையை தூலவருந்த அதி நியாயமே என்ன செப்பினன் யாரும் தெளிவுறச் சேஷாத்திரி சிவன் என்னும் ஆதவனே.

     

    நூல்

    சுத்தப் பிரமமாயிருக்கின்ற சர்வசாக்ஷீயினிடத்திலே அக்கினியிற் சூடுபோல அபின்னமாக ஒரு சத்தி உண்டு; அந்தச் சத்தி அவ்வதீதப் பிரமத்தில் அடங்கியிருக்கும் போது அதற்குச் சுத்தப்பிரமமென்று பெயர். இந்தச் சத்தி விசிரிம்பித்துச் சுத்தப்பிரமத்தை வியாபிக்கும் போது அப்பிரமம் பரைவியாபகத்துள் இருந்தபடியினாலே அதற்குப் பரப்பிரமமென்று பெயராம்.

    பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு தத்துவம் இருந்தது. அனைத்தையும் அறிந்த ஒரே சாட்சி அதுவே (ஒன்றே ஒன்று இருந்ததால் ).  இப்பிரமத்தின் உள்ளார்ந்த தன்மையாக சக்தி இருந்தது. (உவமை:நெருப்பினுடைய சூடு போல)  ஆரம்பத்தில் அதன் சக்தி வெளிப்படாமல் அடங்கி இருந்தது. அதன் பெயர் சுத்த பிரமம்.(1)

    இரண்டாம் நிலையாக சக்தியானது ப்ரமத்தை முழுவதும் நிரம்பி இருக்கும் போது அப்பிரமத்தின் பெயர் பர பிரமம்.(2)

     

    இலக்ஷண சூன்யமாயிருக்கின்ற இந்தச் சத்திக்குப் பிரயத்தினுடைய சந்நிதானத்தில் புருடசமுகத்திலே ஸ்திரீக்கு இன்பஞ் சனித்தாற் போல அவிகிர்த சத்துவ ரஜஸ் தமோ குணங்கள் உண்டாயின. அவற்றில் சுத்த சத்துவத்திற்கு ஆனந்தரூபசத்தி என்று பெயர். சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி என்று பெயர். சுத்த தமஸிற்குச் சத்ரூப சத்தி என்று பெயர்.

    ஆரம்பத்தில் இச்சக்தியின் இலட்சணம் (தன்மை) ஏதும் இல்லாமல் இருந்தது. பின்பு இச்சக்தியிலிருந்து இயல்பாகவே சத்வம், ரஜஸ், தமோ குணங்கள் உண்டாயின. (உவமை: ஆணினால் பெண்ணிற்கு சுகம் கிடைப்பது போல) சுத்தமான (கலப்பில்லாத) சத்துவம் ஆனந்தரூபசத்தி எனவும், சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி எனவும், சுத்த தமஸிற்குச் சத்ரூபசத்தி எனவும் பெயர்

     

    இவற்றில் காரணமான ஆனந்தரூப சத்தியுடனே பரப்பிரம்மம் கூடிச் சர்வானந்த மென்னும் சுழுத்தியவஸ்தையை யடைகின்றபோது பரப்பிரமமென்கின்ற பெயர்போய்ப் பரமானந்தரென்கிற பெயர்வந்தது. இந்தப் பரமானந்தர் சித்ரூப சக்தியுடனேகூடிச் சர்வப் பிரகாசமென்னுஞ் சொப்பனாவஸ்தையை யடைகின்ற போது பரமானந்தரென்னும் பெயர் போய்த் தேசோமயரென்னும் பெயர் வந்தது. இந்தத் தேசோமயர் சத்ரூப சத்தியுடனே கூடிச் சர்வ வியாபகமென்னுஞ் சாக்கிராவஸ்தையை யடைகின்றபோது தேசோமயமென்னுஞ் பெயர் போய்ப் பரிபூரணமென்னும் பெயர் வந்தது.

    பரபிரமம் ஆனந்தரூபசத்தியுடன் (கலப்பில்லாத சத்துவம்) சேர்ந்து சர்வானந்தம் (சுழுத்தியவஸ்தை) நிலையை அடைகிறது. பரமானந்தர் எனும் பெயரால் அழைக்க படுகிறது.(3)

    பரமானந்தர் சித்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத ரஜஸ்) சேர்ந்து சர்வப் பிரகாசம் (சொப்பனாவஸ்தை) நிலையை அடைகிறது. தேசோமயர் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (4)

    தேசோமயர் சத்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத தமஸ்) சேர்ந்து வியாபகம் (சாக்கிராவஸ்தை) நிலையை அடைகிறது. பரிபூரணம் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (5)

     

    [தொடரும்]

    இந்திய அறிவியலின் உலக கொடை

    [விவாதங்களின் தொடர்ச்சி 1, 2]

    கிரகணம் போன்ற அரிய சோதிட அறிவியல் கண்டுபிடிப்புகள் கடவுள் நேரடியாக வந்து சோதிடர்களுக்கு உபதேசம் செய்து விட்டு போனதில்லை. சோதிடம் கற்று கொள்ளும் ஒவ்வொருவரும், விமர்சிப்பவர்களும் உண்மைகளை அறிய அதன் அடிப்படை அறிவியல் மூலாதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் விடயங்கள் மூட நம்பிக்கைகளை தவிர வேறெதயும் தரப்போவது இல்லை.

    zero,  π = 3.1416, ட்ரிக்னாமெண்ட்ரி (sin, cos etc), square and cubic roots, புவி சுழற்சி,  கிரகணங்கள், கிரகங்கள் சூரிய சக்தியை எதிரொளிப்பது இவற்றை கண்டுபிடித்தது யார் ? இவர்களாலேயே சோதிடமும் வடிவமைக்க பட்டது.

    With Kala-kriya Aryabhata turned to astronomy—in particular, treating planetary motion along the ecliptic. The topics include definitions of various units of time, eccentric and epicyclic models of planetary motion (see Hipparchus for earlier Greek models), planetary longitude corrections for different terrestrial locations, and a theory of “lords of the hours and days” (an astrological concept used for determining propitious times for action).

    ஆர்யபட்டா, Bhāskara II கண்டுபிடித்த, பயன்படுத்திய கணித, அறிவியலின் தொகுப்பை பார்த்தால் உண்மையில் அதிர்ந்து போய் விடுவீர்கள். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு

     

    பாஸ்கரரின் சூத்திரம்

    image

    In English, the multiples of 1000 are termed as thousand, million, billion, trillion, quadrillion etc. These terms were named recently in English, but Bhaskaracharya gave the terms for Numbers in multiples of ten, which are as follows:

    Eka (1), dasha (10), shata (100), sahastra (1000),
    ayuta (10000), laksha (100000), prayuta (10^6 = million), koti (10^7),
    arbuda (10^8), abja (10^9=billion), kharva (10^10), nikharva (10^11),
    mahapadma (10^12=trillion), Shankh (10^12), Jaladhi (10^14),
    antya (10^15=quadrillion), Madhya (10^16) and parardha (10^17).

     

    நன்றிகள் (References)

    ஆர்யபட்டா -http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE

    பிரம்மகுப்தர் - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D

    Bhāskara II - http://en.wikipedia.org/wiki/Bh%C4%81skara_II,
    http://scientistsinformation.blogspot.com/2009/09/bhaskara-ii-1114-1185.html

     

    சகோதரி Mrs. The Analyst போன்றோருக்காக,

    "Aryabhata I." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/37461/Aryabhata-I>.

    "Brahmagupta." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/77073/Brahmagupta>.

    "Bhāskara II." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/64067/Bhaskara-II>.

     

    மேலும் பல விடயங்களை தெரிந்து கொள்ள தூண்டிய சகோதரி Mrs. The Analyst, தருமி ஆகியோரின் கேள்விகளுக்கு நன்றி.