மின்சார உற்பத்தி முக்கியமான இக்கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சில பகுதிகளுடன் இணையத்தில் உள்ள சில் ஆதாரங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன் …
நன்றி
இன்றைய சூழலில் அணுமின்நிலையம் அன்றி வேறு என்ன வழி இருக்கிறது?
நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒப்பிட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.
இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் [World Resources Institute] கூறுகிறது. உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை
இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.
ஆதாரங்கள்
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://www.thehindubusinessline.in/2005/12/03/stories/2005120303300900.htm
http://industrytracker.wordpress.com/2010/08/26/td-losses-in-india-aggravate-the-power-problem/
http://cleantechindia.wordpress.com/2008/07/16/indias-electricity-transmission-and-distribution-losses/
அணு உலைகளால் ஏற்படும் செலவீனங்கள்
அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால் அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை.
இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.
இந்தத் தொகை [ கூடங்குளம்] இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிடமுடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்கமுடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.
கூடங்குளம் அணுஉலையின் மோசமான நிலை
புக்குஷிமா அணுஉலை கூடங்குளம் அணுஉலையை விடப் பலமடங்கு ’பாதுகாப்பா’னது. மக்கள் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் கூடங்குளம் மக்கள் நெருக்கம் மிக்க கடற்கரையில் உள்ளது. அதே அளவுக்கு அபாய வாய்ப்புள்ள நிலநடுக்கப்பாதையில் உள்ளது.
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணு உலை விபத்துக்குப்பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ருஷ்யா முடிவெடுத்தபோது அதில் ஒன்றை இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் விலைக்கு விற்றது.
2004ல் நடந்த சுனாமியின்போது கூடங்குளத்தில் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்தன. ஆகவேதான் இந்த அணுஉலையின் கட்டுமானங்கள் இவ்வளவு தாமதமாயின. பலபகுதிகளை மீண்டும் கட்டினார்கள் என்பது செயல்பாட்டாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.
இந்திய அரசின் மோசமான அணு உலை கொள்கைகள்
இந்திய அரசின் அணு உலை கொள்கைகள் மோசமாக இருப்பதாக அணு மின்சாரத்தை ஆதரிக்கும் இணைய தளமே கருத்து கூறி இருக்கிறது. http://world-nuclear.org/info/inf53.html
On 10 September 2008 the government assured the USA that India "shall take all steps necessary to adhere to the Convention on Supplementary Compensation (CSC)". Under existing Indian legislation, foreign suppliers may face unlimited liability, which prevents them from taking insurance cover, though contracts for Kudankulam 1&2 exclude this supplier liability.
However, after compensation has been paid by the operator (or its insurers), the bill allows the operator to have legal recourse to the supplier for up to 80 years after the plant starts up if the "nuclear incident has resulted as a consequence of an act of supplier or his employee, which includes supply of equipment or material with patent or latent defects of (or?) sub-standard services." This clause giving recourse to the supplier for an operational plant is contrary to international conventions.
1. https://jayabarathan.wordpress.com/2012/01/07/kudungulam-vver/
பதிலளிநீக்கு2. https://jayabarathan.wordpress.com/2017/06/29/kudangulam-second-unit/
3. https://jayabarathan.wordpress.com/2012/03/16/kudungulam-opposition/
-- ஒரு சைக்கிள் கம்பேனி 100 பேருக்கு வேலை கொடுக்கும்.
-- ஒரு மோட்டார் கார் கம்பேனி 1000 பேருக்கு வேலை கொடுக்கும்.
-- ஒரு ராக்கெட் விண்சிமிழை பூமியைச் சுற்ற ஏவினால் 10,000 பேருக்கு வேலை கிடைக்கிறது.
-- கூடங்குளம் போன்ற அணுமின் நிலையம் 40 வருடங்களுக்கு மின்சக்தி அளிப்பதோடு 100,000 பேருக்கு வேலை கொடுக்கிறது.
++++++++++++++++
இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++
2017 மார்ச் 31 தேதி முதல் இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முழுத்திறன் 1000 MWe ஆற்றலில் சிறப்பாக இயங்கி வருகிறது. கட்டட அமைப்புகள், யந்திரச் சாதனங்கள் இணைக்கப்பட்டு, அணுக்கரு எரிக்கோல்கள் நிரப்பப்பட்டுப் பாதுகாப்பு இயக்கங்கள் நிறைவேறி அணு உலை 2016 ஜூலை 10 ஆம் தேதி பூரண இயக்க நிலை [First Criticality] அடைந்தது. அதற்குப் பிறகு மேனிலை ஆற்றல் பாதுகாப்புச் சோதனைகள் பூர்த்தியாகி முதன்முதல் 245 MWe ஆற்றல் மின்சாரம் 2016 ஆகஸ்டு 29 இல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி தென்னக மின்வடங்களில் பரிமாறப் பட்டது. இந்த அரியபெரும் சாதனைக்கு ரஷ்ய உதவி பயன்பட்டாலும், இந்திய விஞ்ஞானப் பொறியியல் நிபுணருக்கே பேரளவு பங்கு மதிப்பு நாம் தரவேண்டும். இந்த இரண்டு ரஷ்ய அணுமின்சக்தி நிலைய இயக்கங்களும் இந்திய அணுசக்தி நெறிப்பாடு ஆணையகத்தின் [Atomic Energy Regulatory Board (AERB)] நேரடிக் கண்காணிப்பில்)தான் நிகழ்ந்துள்ளன. செர்நோபிள், புகுஷிமா அணு உலை விபத்துக்களுக்குப் பிறகு, கூடங்குள ரஷ்ய அணுமின்சக்தி நிலையங்களின் [VVER-1000] இயக்கப் பாதுகாப்பு முறைகள் ஆழ்ந்து மீளாய்வுகள் செய்யப்பட்டு, அணு உலை, இயக்குநர், பொது மக்கள், சூழ்வெளி ஆகியவற்றுக்குக் கதிரியக்கப் பாதகம் நேராதபடிச் சாதனங்கள், இயக்கப் பண்பாடுகள் மாறப்பட்டுப் புதுப்பிக்கப் பட்டவை.
இரண்டாவது ரஷ்ய அணுசக்தி யூனிட் அனுப்பும் முழுத்திறன் ஆற்றல் 1000 MWe சேர்ந்து இப்போது இந்தியாவின் அணுமின் சக்தி ஆக்கத்திறன் 6780 மெகாவாட் ஆகியுள்ளது. இரட்டை 1000 மெகாவாட் கூடங்குளம் அணுமின்சக்தி நிலையம் சைனா, ஜப்பானுக்கு அடுத்தபடி ஆசியப் பெரும் இயக்க அணுமின்சக்தி நிலையமாகக் கருதப்படுகிறது. அடுத்து இரண்டு VVER -1000 மெகாவாட் யூனிட்டுகளின் கட்டுமான வேலைப்பாடுகள் துவங்கிவிட்டன. அவை இரண்டும் இயங்கத் துவங்கினால் ஒரே இடத்தில் 4000 மெகாவாட் ஆக்கும் நான்கு பெரிய அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கும் கூடங்குளம் உலகப் பெரும் தளங்களில் ஒன்றாக மதிக்கப்படும். 2016 – 2017 இல் முதல் யூனிட் 189 நாட்களாகத் தொடர்ந்து 100% நெருங்கிய திறனில் இயங்கி வருவதாய் இந்திய அணுமின்சக்தி ஆணையகம் [Nuclear Power Corporation of India, Limited] [NPCIL] அறிவித்துள்ளது. முதல் கூடங்குள நிலையம், 2013 அக்டோபர் முதல் சுமார் 11269 மில்லியன் யூனிட் மின்சாரம் பரிமாறியுள்ளது. தற்போது அதன் யூனிட் மின்சாரம் ரூ. 3.89 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Image result for www.npcil
முதலாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் உச்சத் திறனில் இயங்குகிறது.
2014 ஜூன் 7 ஆம் தேதி கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முதன்முதல் 1000 MWe உச்ச நிலை ஆற்றலில் வெற்றிகரமாக இயங்கி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மின்வடங்களில் அனுப்பி வருகிறது. இந்த முதல் அணுமின் உலை ஆரம்பநிலை இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, பூரணத்துவம் அடைந்த தேதி : 2013 ஜூலை 14. மின்னாற்றல் திறன் ஏற்றமாகி 400 மெகாவாட் மேல்நிலை எட்டிய போது முதன்முதல் மின்வடங்களில் இணைப்பாகி, அனுப்பியது. முதல் யூனிட் அடித்தளம் 2001 இல் போடப்பட்டு, கட்டி முடிந்த பிறகு, கூடங்குள ஊர்ப்புற எதிர்ப்பாளர் போராட்ட நிறுத்தத்தால் அணு உலை இயக்கம் இரண்டு வருடங்கள் தாமதமானது. அடுத்த இரண்டாம் யூனிட் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, மேலும் 1000 MW மின்சக்தி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கலாம்..