தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு பல்கலை கழகமும் அதன் நிர்வாக சீர்கேடுகளும்


எனக்கு தெரிந்து தமிழகத்திலேயே மட்டமான பல்கலை கழகம் என ஒன்று இருந்தால் அது சேலத்தில் உள்ள ஒரு (?) பல்கலை கழகமே. (சமீபத்தில் அங்கு பயிற்றுவிக்க ஒரு பட்ட படிப்பிற்கு அங்கீகாரமே கிடையாது என டி.இ.டி அறிவித்து விட்டது படித்தவர்களுக்கு ஆண்டுகள், பணம், முயற்சி, உடலுளைப்பு என அணைத்தும் பட்டை நாமம்) அதற்கு பிறகு தாராளமாக சிதம்பரத்தில் உள்ள ஒரு (??) பல்கலை கழகத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம். அவர்களின் வேலை செய்யும் திறன் அப்படி.

அங்கு படிப்பவர்களின் எண்ணிக்கை, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் சமம் என்று ஒருவர் கிண்டலாக சொன்னார். சரி நல்லது தானே எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடியும் என நிணைத்தீர்கள் எனில் அது தான் தவறு.  அங்கு வேலை இல்லாதவர்களுக்கு அங்கு வெட்டி வேலைகள் “உருவாக்க படுகின்றன” போல. இன்னும் கணிணி மயமாக்க படாத ஒரே  பல்கலை கழகம் தமிழகத்திலேயே ”இது”வாக தான் இருக்கும். அங்கு சென்ற போது வேலை செய்பவர்கள் அணைவரும் பேப்பர் மலைகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த தகவல் களஞ்சியத்தை நிர்வகிப்பது தான் அவர்களுக்கு வேலை போல. ஒரு சிறந்த கணிணி மையம் 1 நிமிடத்தில் செய்ய கூடிய வேலைகளை 2 மாதம் செய்வது தான் அவர்களது ”சீரிய பணி”.

என் சோக கதைய கேளு தாய் குலமே :( !!

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இப்பல்கலைகழகத்தில் ஒரு பட்ட படிப்பை படித்து எல்லா பரிட்சைகளிலும் தேறினார். எல்லா கட்டணங்களும் கட்டிய பிறகும் சர்டிபிகெட் வரவில்லை. உள்ளூர் பயிற்சி மையத்தை பலமுறை அணுகிய பிறகும் அவர்களிடம் தேவையான தகவல் இல்லை. முதல் 6 மாதம் ”எங்க  பல்கலை கழக வழக்கமே 6 மாதத்திற்குள் சர்டிபிகெட் கொடுப்பது தான் பொறுமையா இருங்க” எனும் பதில் பெருமிதமாக வந்தது.

பிறகு ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்கு போன் செய்து தான் விசாரிப்பார்கள். ஒரு முறை மழை அதனால் சிதம்பரத்தில் இண்டெர்நெட் வேலை செய்யவில்லை என பதில். பிறகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என பதில் என ஒவ்வொரு முறையும் ஒரு சுவாரஸ்யமான, ஆனால் மட்டமான, காறி துப்ப கூடிய வகையில் ஒரு பதில்.

கடைசியாக அவர்களின் மாபெரும் தகவல் களஞ்சியத்தில் கண்டுபிடித்து 50 ரூபாய் கட்டணத்தில் நிலுவை என்று பதில் வந்தது. அது எப்படி ரூ 50 மட்டும் நிலுவை வருமாறு ஒரு பீஸ் இருக்கும் என புரியவில்லை. அதை பற்றி கேட்பதற்கும், திரும்ப பதில் வருவதற்கும் தகுந்த ஜந்துகள் இருக்கும் என நம்பிக்கையை இழந்து விட்டதால் கேள்வி ஏதுமின்றி 50 ரூ டிடி எடுத்து அனுப்பினேன்.

உடனே சர்டிபிகெட வந்திருக்குமே என நிணைத்தால் அது தான் தவறு. வழக்கமான பதில் “2 மாதத்திற்குள் கண்டிப்பாக வந்து விடும்”  என பொறுமை காக்க சொன்னார்கள். 2 மாதம் கழித்து டிசி மட்டும் வந்தது  டிகிரி சர்டிபெட் நஹி.

மறுபடியும் உள்ளூர் படிப்பு மையத்திற்கு படையெடுப்பு. மறுபடியும் தகவல் தோண்டல்கள். கடைசியாக ஒரு முடிவு செய்து ஒரு தீர்க்கமான பதில் சொன்னார்கள். “சார் எங்களுக்கு சரியா தெரியல. நீங்க நேரடியாக சிதம்பரம் போய் பாருங்க உடனேயே பிரச்சிணைகளை சரி செய்து சர்டிபிகெட் வாங்கி வந்து விடலாம்” என பெருமிதத்துடன் சொன்னார்கள்.

”நாயுக்கு வாழ்க்கை பட்டால் சேர்ந்து குலைச்சு தான் ஆகணும்” எனும் பழமொழியை நிணைவு படுத்தி கொண்டு மனதை திடப்படுத்தி கொண்டு சிதம்பரமும் சென்று பார்த்த அனுபவத்தின் போது தான் மேற்கண்ட ஒரு தெளிவான முடிவிற்கு வந்தேன்.

சரி போய் பார்த்த பிறகாவது பிரச்சிணை முடிவிற்கு வந்து விட்டது என நிணைத்தால் அது தான் இல்லை.

1. தகவல் மையத்தில் சேவைக்காக 5 பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் மட்டும் காத்திருக்கும் நூற்றுகணக்கானவரை  ஒரே வரிசையில் நிற்க வைத்து சிடுசிடுப்புடன் கண்ட படி எரிந்து விழுந்து சேவை செய்வார். மற்ற அணைவரும் அவரின் சேவையை பார்த்து வியந்து கொண்டும், நாளிதழ்கலின் செய்தியை வாசித்து கொண்டும் சேவை செய்வார்கள்.

2. உண்மையில் அவரிடம் பிரச்சிணைகளை தீர்க்க தேவையான எந்த தகவலும் இருக்காது. 1, 2ம் மாடியில் இருக்கும் காகித மேலாண்மை வாதிகளிடம் தான் இருக்கும். எழுதி வாங்கிய தகவல்களை மேலேயும் கீழேயும் கொண்டு சேர்க்க ஓட மட்டும் ஒருவர் இருக்கிறார். (இத்தணைக்கும் அவர்களுக்கு நடுவே இண்டர்காம் போன் வசதி உண்டு).

3. டிசி நிர்வாகம் செய்யும் குழு வேறு, டிகிரி சான்றிதல்  நிர்வாகம் செய்யும் குழு வேறு எனவே நீங்கள் பணம் கட்டியது எங்களுக்கு தெரியவில்லை என சொல்லி உடனேயே தற்காலிக டிகிரி சான்றிதல் அளிக்க பட்டது.

4. அதன் பிறகு நடந்தது தான் உச்ச கட்ட கொடூரம். கன்சாலிடேடட் மதிப்பெண் சான்றிதழ் கேட்ட போது உங்களின் மதிப்பெண் சான்றிதல்கள் அணைத்தையும் நகல் எடுத்து தறுமாறு கேட்டனர். ஏனெனில் அவர்களிடம் ஒரு மாணவர் அதே பல்கலைகழகத்தில் எடுத்த மதிப்பெண் தகவல்கள் கூட இல்லை போல. அல்லது எடுத்து கொடுக்க துப்பு இல்லை.

5. சரி போகட்டும் என கான்வகேசன் சான்றிதழ் கேட்ட போது அந்த மனுவை நேரடியாக வாங்க கூட மறுத்து விட்டனர். ஒரு பெட்டியில் போடுங்கள் தேவையான நடவடிக்கை “உடனே” எடுக்க படும் என பெருமிதமாக பதில் வந்தது.

6. ந”ம்ப்ப்”பி பணம் கட்டிய இரசீதையும் மனுவையும் பெட்டியில் போட்டு விட்டு வந்து இரண்டு வாரமாகிறது இன்னும் சான்றிதழ்  வரவில்லை. நேற்று சிதம்பரத்திற்கு நேரடியாக தொலைபேசியில் கேட்ட போது கிடைத்த பதில் “பெட்டியில் போட்டு இரண்டு வாரம் தானே ஆகிறது சான்றிதழ் வர இரண்டு மாதம் வரை ஆகும் பொறுமையாக இருங்க” என கடுகடுப்புடன் தொடர்பு துண்டிக்க பட்டது.

சுபமஸ்து...து..து...து...

கூடுதல் தகவல்
கான்வகேசன் சான்றிதழ் பணம் கட்ட வரிசையில் நின்ற போது, 25 வயதுள்ள சில மாணவர்கள் அதே பல்கலை கழகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பேராசியரை ஆபாசமாக வசை மொழியில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். விசாரித்த போது அம்மாணவர்கள் Phd படிக்கிறார்களாம் (எதிர்கால பேராசிரியர்கள் ?) ஃபீஸ் செமஸ்டருக்கு 1,10,000ருபாய். :(

தமிழர்களின் சுய பரிசோதணை

எவ்வளவு முக்கியமான பிரச்சிணைகள் நாட்டில் நடந்தாலும், அறிவாளிகளால் மொழியப்படும் பொன்மொழிகள் கீழே.

 

  1. நமக்கு பிரச்சிணை இல்லையெனில் எவன் செத்தாலும், பிழைத்தாலும் நாம் என்ன செய்ய இயலும் ? நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் பார்த்து கொண்டாலே போதும்
  2. கேள்வி கேட்க என்று எவனாவது கேணையன் வருவான். நாம் வெறும் வாயில் அவல் மென்றாலே போதும்
  3. பிரச்சிணை என்று வரும் போது ஓடி ஒழிபவனே புத்திசாலி.
  4. எல்லொருக்கும் நடப்பது தானே எனக்கும் நடக்கும் ? நம்முடைய உரிமைகளை நாம் கேட்க தேவையில்லை. எல்லோரும் எவ்வழியோ நானும் அவ்வழி
  5. அதிகாரமும் ஆளுமையும் படைத்தவர்களை எதிர்த்து ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இல்லாத நாம் என்ன செய்ய இயலும் ?
  6. நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்பவர்களை கேள்வி கேட்கும் தேவையும் நமக்கு இல்லை !
  7. தியாக புருசர்கள் என்று தனியாக தோன்றுவார்கள் அவர்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

 

”முதுகெழும்பற்ற கோழைத்தனம்” என்பதற்கு தான் நாட்டில் எவ்வளவு நயமான சமாதானங்கள் ?!! மேற்கண்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவையா ? இல்லை. தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான பிரச்சிணைகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டியது இல்லை என்ற அடிப்படை நாகரீகத்தின் மோசமான நீட்சிகள். ஆனால் இவை சாதாரணமாக இந்திய/தமிழக குடும்பத்தில் தாரக மந்திரமாக திரும்ப திரும்ப நிணைவூட்டப்படுகின்றன.

 

நாம் என்ன செய்கிறோம் ?

தோல்வி அடைந்தவர்களின் நிலைகளையும், வலிமையற்றவர்களின் செயல்களையும், நட்சத்திரங்களின் செய்திகளையும், வேறு நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், முச்சந்திக்கு முச்சந்தி நின்று விமர்சன அசை போடுவதில் மட்டும் நாம் வெட்கமடைவதேயில்லை.

தோல்வியடைந்தவனையும், வலிமையற்றவனையும் துன்புறுத்தி பார்ப்பது, சேடிசம் என்பது நமக்கு எப்போதேனும் உறைத்திருக்கிறதா? நம்மை விட குறைந்த வலிமையுள்ளவர்கள் நம்மை ஏதும் செய்து விட முடியாதெனும் திமிர் அச்செயலில் ஒளிந்திருக்கிறது. நட்சத்திரங்களை சொறிந்து விடும் செயல் முழுநிலவை நோக்கி நரிகள் ஊளையிடுவது போன்றதும், சூரியனை பார்த்து நாய் குறைப்பதை போன்றதும் தான் எனும் அல்பதனமும் உறைப்பதில்லை.

 

அமைப்புகளின் கோர அரசியல்

ஆனால் மேற்கூறிய பொன்மொழிகள், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை தேவைகளையுமே அசைத்து பார்க்கும் பிரச்சிணைகளுக்கு மட்டும் தெளிவாக பின்பற்ற படுவது எவ்வளவு கேவலமானது ? ஆயிரக்கணக்காணோரின் உயிரும், இலட்ச கணக்கானோரின் வாழ்வாதார பிரச்சிணகளும் கேள்விக்குறியாக ஆக்கபட்ட போதும், இன்னும் இருக்கும் போதும் கூட, நான் புத்திசாலி -நிலா மரம் மட்டையை பற்றி மட்டும் தான் சிலாகிப்போம் என்று இருப்பவர்களும் மனித உணர்ச்சி உள்ளவர்கள் தாமா ?

தனிப்பட்ட நபர்களின் தவறான செயல்களை விட அரசு, அமைப்புகளின் தவறான செயல்கள் மிக மோசமானவை தடுக்க பட வேண்டியவை. அவற்றிற்கு எதிராக குறைந்த பட்சமாக நாம் செயல்படுத்தும் நமது கருத்து சுதந்திரம் கூட மாற்றம் தரக்கூடிய வலிமை வாய்ந்தது. குறைந்த பட்சம், நமது சமூக எண்ணங்களை நமது குடுப்பத்தினரிடம் உரையாடுவதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த குடிமகன் தாம் என்பதை நமது குடுப்பத்தினரிடமாவது தெரியபடுத்துவோம். விழிப்புணர்வும், ஞானமுமே நம்மை அடிமை தளைகளிலுருந்து விடுவிக்கும்.

நமது தாய் தந்தை, மணைவி, குழந்தைகள் பொன்றோருக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது கூட ஒரு அழகான சமுதாயத்தை உருவாக்குவது தானே ?  போபால் விசவாயு விபத்து பற்றி என்றேனும் குறைந்த பட்சம் நமது குடுப்பத்தினருடனாவது விவாதித்து உள்ளோமா ? தமிழக அணு மின் உலை விபத்து ஏற்பட்டால் இதே போன்ற நிலை தான் நமக்கு ஏற்படும் என சிந்தித்தோமா ? கரையிலும், கடலிலும் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டது குறித்து அரற்றியிருக்கிறோமா ? இந்த அரசுகளுக்கு மக்கள் உயிரின் மேல் உள்ள மெத்தனம் நமது உணர்ச்சிகளை தூண்டியதே இல்லையா ?

அரசுகளின் தவறான கொள்கைகளும்,  சீமான்களின் சுரண்டலும் மறைமுகமாக தம்முடைய ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கி கொண்டிருக்கின்றன என்பதன் வீரியம் நமக்கு எப்போது புரியும் ?

அமைப்பு ரீதீயான வன்முறைகளும், கட்ட பஞ்சாயத்துகளும் நம்மை ஒவ்வொரு நொடியும் அடிமை தனத்தின் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றன என்பது எப்போது உணர போகிறோம் ?

 

ஏன் மறந்தோம் ?

பிற்போக்கு எண்ணங்களையே திரும்ப, திரும்ப விதைப்பதின் விளைவு ஒன்று தான். வலிமையுள்ளவனுக்கு ஜால்ரா அடித்து நக்கி பிழைக்கும் அடிமை பரம்பரையினரை தான் விட்டு செல்ல போகிறோம். அவர்கள் மனிதர்கள் என்பதற்கு உடல் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.

இந்தியாவில் இப்போது இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் கிடைத்தது கூட காந்தி, நேரு, நேதாஜி போன்ற சில உயர்குடி சீமான்களின் வழி காட்டல்கள் மட்டுமல்ல. அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியற்று இருந்த பாரதி, திருப்பூர் குமாரசாமி, காமராஜர் போன்ற கோடிக்கணக்கானோரின் வீரம் தான் என்பதை ஏன் மறந்தோம் ?

மாணவர்களை பிச்சைகாரர்களாக்கும் அரசுகள்

அவற்றில் ஒன்று யு.எஸ். ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்நாட்டில் சென்ற வருடம் மட்டும் 26.8 இலட்சம் மாணவர்கள் வங்கி முறிதல்(மஞ்சள்) அறிவிக்கை கொடுத்துள்ளனர் என்பது தெரியுமா ? http://www.pdviz.com/student-bankruptcy-in-america-0.

அமெரிக்க கலாசாரத்தின் படி பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதீத சொத்து எதுவும் விட்டு செல்வதில்லை. ஆனால் சராசரியாக ஒரு மாணவர் தன் கல்லூரி படிப்பை முடிக்க 20000டாலர் ஆகிறது. எனவே ஒவ்வொரு மாணவரும் தன் கல்லூரி படிப்பை தொடர வங்கிகளிலேயே கடன் வாங்க வேண்டியது அவசியம் ஆகிறது.

படிப்பை முடித்து நல்ல வருமானம் கிடைத்தால் மட்டுமே மாணவர் பிழைத்தார். இல்லையேல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுக்க வேண்டிய நிலை தான். கல்லூரி மாணவர்களில் 5ல் 1 பங்கினர்  படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நிற்கின்றனர் ! இவ்வாறு நின்றாலும் கல்விகடனை திருப்பி செலுத்த வேண்டியது அவசியமாகிறது !! வங்கி முறிதல் அறிவிக்கை கொடுப்பவர்களின் மொத்ததில் 19% பேர் மாணவர்கள்.

புதிய விதிகளின் படி யு.எஸ்இல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுத்தோருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த வித கடனும் வழங்கப்படாது. எனவே வேறு தொழில் சேய்யவும் வாய்ப்பு இல்லை. அதே சமயம் கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் யு.எஸ்இல் 3 மில்லியன் (30 இலட்சம்) தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை நிதிச்சுமையின் காரணமாக ஆரம்பிக்க விரும்ப மாட்டர் என கணக்கெடுக்க பட்டுள்ளது.

அமெரிக்காவின் திறந்த நிலை பொருளாதார கொள்கைகளே மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லை, கடன் தொகை இரத்து இல்லை போன்ற நிலையினை உருவாக்கி உள்ளது என்பது தனித்து சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.

--**--

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக தன்னை காண்பித்து கொள்ளும் நாட்டிலேயே இந்நிலை எனில் அந்த நாட்டிடம் பிச்சை எடுக்கும் நாடான இந்தியாவில் அதே போன்ற பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் மக்களின் கதி ?

அதிலும் தமிழகத்தில் ஆளும் அரசின் பொருளாதார &  கல்வி கொள்கைகள் மிக கேவலமானதாக இருக்கின்றன.

  1. உலக வங்கியிடம் அடிப்படை வசதிகளுக்கே பிச்சை எடுக்கும் நிலையிலுள்ள ஒரு அரசு

  2. அடிப்படை கட்டமைப்புகளை விரிவு படுத்தாத ஒரு அரசு (பெரும்பாலான கல்வி கூடங்கள் இன்றும் மரத்தடி நிழலின் உள்ளன)

  3. பொறியியல் கல்வியின் கட்டணத்தை கண்டபடி உயர்த்தியுள்ள ஒரு அரசு (அரசாங்க கணக்கில் மட்டும் 10 வருடங்களுக்கு முன்பு 5000 இப்போது 50000- )

  4. பெரும் முயற்சி செய்து உலக வங்கிகளிடம் கடன் பெற்று வண்ண தொலைக்காட்சிகளை அள்ளி வழங்கி வருகிறது.

வண்ண தொலைக்காட்சிகளின் அரசியல்

இத்திட்டமும் மக்களுக்கான திட்டமா ? கஞ்சிக்கும், கல்விக்கும் வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் வண்ண தொலைக்காட்சிகளுக்கான திட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது ?

சினிமா என்பது சரியான முறையில் செய்தால் பணம் கொடுக்கும் ஆமுத சுரபி என்ற மகத்துவம் தெரிந்தது தானே ஆள்பவர்களுக்கு இத்திட்டத்தின் அவசியம் ?

  • சினிமாவின் மூலம் கிடைக்கும் நேரடி வருமானம்

  • பாடல் காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • நகைச்சுவை காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • முழுப்படத்திற்கும் ஒரு அலைவரிசை,

  • இவற்றை கலந்து ஒரு பல்சுவை அலைவரிசை,

  • சினிமா நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்படும் தொலைக்காட்சி தொடர்கள்

  • சினிமாவை முன்னிறுத்தும் வானொலிகள் (எப் எம்)

  • சினிமாவை பற்றிய செய்திகளை முன்னிலை படுத்தும் பத்திரிக்கைகள்

என திரும்ப திரும்ப மக்களை திரை ஆளுமைகளுக்கும், திரைப்படத்திற்கும் அடிமையாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு தாம் வாழ மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, மக்களையே மொட்டை அடிக்கும் அரசாங்கங்களை நாம் என்ன செய்ய போகிறோம் ?

இப்போது இருக்கும் ஏழை பெற்றோர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதற்கான காசு கூட எவ்வளவு கடின சுமையை ஏற்படுத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 20/30 வருடங்கள் கழித்து நமது சந்ததியினர் படிக்க வழியில்லாமல் பாமரர்களாய் பரதேசிகளாய் அலையும் போது, எப்படி நேர்ந்தது என்று கேட்க, இப்போது வண்ண தொலைக்காட்சிகளை வழங்குபவர்களும் இருக்க மாட்டார்கள் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனுபவிக்கும் நம் தலைமுறையினரும் இருக்க மாட்டோம் என்பது வருந்த தக்க உண்மை.

இந்நிகழ்வுகள் மாற்ற முயற்சி செய்யவில்லை எனில் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தலைமுறையினராக நாம் இருப்போம் என்பது மட்டும் புரிகிறது  :(