ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் – 3 Updated)

முந்தைய பகுதிகள்

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)
எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினி தமிழ் பட உலகிற்கும் இந்திய சினிமாவிற்கும்  செய்தது என்ன ?

எந்திரன் தமிழ், ஆங்கில, இந்தி பட உலகம் என்று தனித்தனியாக இயங்கி வந்த சினிமா துறைகளை, ஒரு உலகமயமாக்க பட்ட ஒரே துறையாக மாற்றி உள்ளது. உலகமெங்கும் உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் ஒன்று கூடி ஒரு படத்தில் இணைந்து செயல் படுவதற்கான வழிமுறைகளின் சிறந்த ஆரம்ப கட்டமாக உள்ளது.

 

தமிழ் பட உலகம் என்று ஒன்று இருப்பதே ரஜினி படம் வரும் போது தான் பரவலான அந்நிய மொழி பேசும் மக்களுக்கு தெரிய வருகிறது.

 • முத்து படம் ஜப்பானில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. முதன் முறையாக ஜப்பானிஸுக்கு மொழி பெயர்க்க பட்ட தமிழ் படம் எந்திரன் தான்.
 • சந்திரமுகி, சிவாஜி போன்றவை தெலுங்கில் தமிழ் படங்களுக்கு வலுவான மார்க்கெட் ஏற்படுத்தி கொடுத்தன.
 • எந்திரனுக்கு இப்போது வட இந்தியாவில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் மட்ட ரகமான படம் எடுத்து, மோசமான படத்தையும் கொடுத்து, தயாரிப்பாளரையும் நட்ட படுத்தி, துறையையும் முடங்க செய்பவர்கள் ரஜினியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது ?

 

வெள்ளைகாரர்கள் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கும் போது வாயை மூடிக்கொண்டு ரசிப்பவர்கள் ஓர் இந்தியர் நடித்தால் நக்கல் செய்வது அடிமை தனத்தையும், நிற வெறியையும் தவிர எதை காட்டுகிறது ?

 

1. Reshaping global film industry

Tu_22406 Endhiran cleverly blends Eastern talent with Western expertise to co-create a seamless viewing experience that no single region could have concocted on its own, say Dr Simone Ahuja and Navi Radjou.

By 2020, the global creative industry will be organised, and operate, as polycentric innovation networks in which all hubs operate in parity and creative ideas seamlessly flow from one hub to another -- very similar to how the high-tech sector operates today.
http://business.rediff.com/slide-show/2010/oct/01/slide-show-1-special-how-india-is-reshaping-global-film-industry.htm

2. For the first time, a movie from India will be dubbed in Japanese.

http://sify.com/finance/Rajini-fells-all-records-with-sci-fi-entertainer-Endhiran-imagegallery-others-kkdldrjaghh.html

3. Existance of Tamil Film industry

http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html 

People who live outside of South India (rest of India and the world at large) know that an industry called the Tamil Film industry exists only when Superstar Rajinikanth releases a film.

Since 1999, Rajini has acted in 5 full length feature films (Kuselan was a cameo) and four of them have gone on to re-write box office history and take Tamil Cinema and Indian Cinema to unchartered territories. 

4. ”The arrival and the subsequent success of Robot has changed equations in the industry."

Rajinikanth beats the Khans  http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html

SRK’s status as the man who had the biggest opening weekend collections in the US for an Indian movie came to an end when Endhiran entered the land… When taking into account both Endhiran and Robot, the film’s opening weekend collections in the US were US$ 2,001,788 from 100 screens giving it a per screen collection of US$ 20,017. 

Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!

5. Undisputed Hero

Trade analyst Taran Adarsh - “Robot has put him on an unmatchable level. His demand is growing both in North India and internationally.”

It’s not just multiplexes that are raking in the moolah. Vishek Chauhan, owner of Roopbani theatre in Purnia, Bihar, insists that both the classes and the masses seem to love the actor in his latest avatar. “We’ve never witnessed something like this earlier. The shows remain full even on Mondays.”
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx 

Robot is repeating the success story like never before. “It’s not Batman or Superman, no blonde-haired, white-skinned super hero saving the world… he is our very own Chitti — one we can all relate to,” says film critic Anupama Chopra.
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx

சும்மா அதிருதுல்ல :) தொடரும்…

எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினியும் தமிழ் பட உலகமும் எவ்வாறெல்லாம் தவறாக கேவலப்படுத்த பட்டனர் என்பதை முதல் பகுதியில் பார்த்தோம். இந்தி பட பிரமுகர்கள் நிறுவ முயன்றது கீழ் கண்டவற்றை தான்.

 1. தமிழ் பட உலகம் என்பது தொழில் நுட்ப ரீதியாக பின்னடைந்த நிறுவனங்களை கொண்டுள்ளது.
 2. பிராந்திய மொழியான தமிழில் தேசத்தை கவரும் பிரம்மாண்ட படம் எடுக்க இயலாது.
 3. ரஜினி போன்ற தென்னிந்திய நடிகர்கள் நடிக்கவே தெரியாத, முட்டாள் தனமான சைகைகளை மட்டுமே கொண்டு படம் அளிப்பவர்கள்.

 

விமர்சனங்கள் அவர்களுக்கே ஆப்பாக மாறியது எப்படி ?

இதற்கு ரஜினியின் தரப்பில் அப்போது எந்த எதிர்வினையும் நிகழ்த்த படாதது மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்தது. ரஜினி தன் எதிர் வினையை பேச்சில் காட்டாமல் தன் அடுத்த படமான எந்திரன் மூலமாக தந்துள்ளார். எந்திரன் நிறூபித்து காட்டி உள்ளது இவை தான்.

 1. தமிழ் பட உலகமானது இந்தியாவின் தலை சிறந்த தொழில் நுட்பத்தையும் கலைஞர்களையும் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் சினிமாவின் எல்லா தொழில் நுட்ப துறைகளிலும் தென் இந்திய கலைஞர்கள் இந்தி கலைஞர்களை விஞ்சியுள்ளனர். சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலி கோப்பாளர், நடன இயக்குனர், சண்டை இயக்குனர் மற்றும் நகைச்சுவை கலைஞர் வரை மிகச்சிறப்பானவர்கள் இங்கேயே உள்ளனர்.
 2. எந்திரனின் இந்தி பதிப்பின் மூலம் இந்தி பட உலகிற்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தேதியில் பிகார், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் அணைத்து பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கும் படம் எந்திரன் தான்.
  Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films
  emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!
  http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html
 3. படத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ள இயலும் என்பதை ரஜினி காட்டி உள்ளார். ஆரம்ப பாடல் காட்சி இல்லாத, ரோபோவிற்கு பயப்படக்கூடிய, தன்னுடைய படத்தில் சாதாரண மனிதருக்கு பயப்படும் வேடத்தில் சராசரி விஞ்ஞானியாகவும் தன்முணைப்பு  இல்லாமல் தன்னால் நடிக்க இயலும் என்பதையும் ரஜினி காட்டி உள்ளார்.

  Black Sheep காட்சி ஒன்று போதும் ரஜினியின் நடிப்பு திறமையை புரிந்து கொள்ள. அதே காட்சியில் MGR, சிவாஜி, கமல் என மூவரையும் இமிடேட் செய்து நடித்ததை எத்தணை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

  ரஜினியின் வழக்கமான மசாலா படமாக இது அமையும், எல்லோரும் சேர்ந்து அசிங்க படுத்தாலாம் என்று நிணைத்தவர்களின் நிணைப்பிற்கு ஆப்பு வைத்துள்ளார்.

 

சவால்

இந்த படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம் “இது முழுக்க முழுக்க தமிழ் பட உலகில் சென்னையை மையமாக கொண்டு தயாரான இந்திய படம். இந்தி சினிமா உலகிற்கு எந்திரனில் நேரடி சம்பந்தமில்லை. எந்திரன் இந்தி சினிமா உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான சவால்.”

 

எந்திரனும் ரஜினியும், சாருக்கானையும், ஹிரித்திக் ரோசைனையும் படுத்தும் பாடு :)

Rajni_thumb57கீழ்காணும் செய்திகளெல்லாம் எப்போதும் வெளிவரும் கிசு கிசு செய்திகள் போன்று மிகைப்படுத்த பட்டவை அல்ல. சம்பந்த பட்டவர்களிடம் நேரடியாகவே பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். “Robot SRK” என்று Google Search செய்து பாருங்கள் உண்மை தெரியும். http://www.google.co.in/search?q=robot+SRK&qscrl=1

 

இப்போது இவ்விரு நடிகர்களும் எவ்வாறு எந்திரனை விட சிறப்பாக  படம் செய்வது என இரவேல்லாம் தூங்காமால் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.

ஹிரித்திக் ரோசைன் ரோபோவின் தொழில் நுட்பங்களுடன் போட்டி போட முடியாமல் தன்னுடைய அடுத்த படமான் கிரிஷ் – 2 வின் படப்பிடிப்பையே தள்ளி வைத்துள்ளார்.

 

King Kong SRK (எழுத்து பிழை அல்ல)

http://entertainment.oneindia.in/tamil/exclusive/2010/rajinikanth-endhiran-shahrukh-ra-one-071010.html

According to reports, King Khan, director Anubhav Sinha, sound engineer Resul Pookutty had a lengthy meeting at SRK's house on last Sunday. They had a brainstorming session, discussing about the movie, especially about the quality of the film and its climax.

Hrithik Roshan

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/SRK-Hrithiks-Robot-phobia/articleshow/6711037.cms

Rajnikanth starrer Robot pushed the panic buttons in Shah Rukh Khan's office. It is now doing the same in Rakesh Roshan's office.

We then asked him if Krrish 2 was taking time since he wanted to raise it to the highest standards possible. To this he replied, "No, not correct. I might start Krrish; wait for the announcement."

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Hrithik-wants-to-beat-Rajnikanth/articleshow/6672271.cms

Hrithik Roshan is neck deep in meetings with his father, Rakesh Roshan's team of writers. Now everyone knows that scripts involving Indian super-heroes will need plenty of brain-storming, espe-cially after Rajnikanth's latest film. The SFX and the canvas of the Rajni-Ash bilingual is making Bollywood nervous. All those dealing with super-heroes in their projects know they will have to take things to the next level if they want to surpass what Rajni Sir has already done.

 

வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு இன்னும் எரிய [BBC Review]

  1. Smart lines, diabolical characters, high-voltage action and impressive special effects make this a promising Indian popcorn movie.
  2. The movie is also the product of an industry which is fast becoming globalised, despite its unique brand of cinema.
  3. As so often, Rajinikanth steals the show.
   http://www.bbc.co.uk/news/world-south-asia-11498630

எந்திரன் அணைத்து வசூல் சாதணைகளையும் முறியடித்த விவரம் [Rs 117cr in just 7 days, 'Robot' Rajini smashes all records]

http://timesofindia.indiatimes.com/india/Rs-117cr-in-just-7-days-Robot-Rajini-smashes-all-records/articleshow/6716660.cms

The Hindi version of the film Robot too has done a business of nearly Rs 30 crore in the first week. Amod Mehra said, ''Robot has broken all the norms of a dubbed film. I don't remember any dubbed film crossing even the one crore mark."

[ இன்னும் வரும்…;) ]

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)

ரஜினி தமிழ் சினிமா உலகிற்கு என்ன செய்தார் ?

aishwarya-rai-robot-06 தங்களை அறிவு ஜீவிகளாக கருதி கொள்ளும் விமர்சகர்கள் ரஜினி பட வெளியீட்டின் போதும் எழுப்பும் கேள்வி ரஜினி தமிழ் பட உலகிற்கு என்ன செய்தார் என்பதே.

இவ்வினாவிற்கு விடை அளிக்கும் முன்பு தமிழ் பட உலகை பற்றியும், தமிழர்களை பற்றியும் வட நாட்டிலும், வெளி உலகிற்கும், எந்திரன் படத்திற்கு முன் பரப்பபட்டிருந்த அறிமுகம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

 

எந்திரனுக்கு முன் – 1

தமிழ் என்பது ஒரு பிராந்திய மொழி. அசிங்கமான திராவிட உருவத்தையும், தமிழர்களின் ஆழமான சினிமா அறிவின்மையையும் அடையாளமாக கொண்டிருப்பதால் தான் ரஜினிக்கு புகழடைந்திருக்கிறார்.

கருப்பு மந்தை கூட்டத்தின் முட்டாள்தனத்தை சமாளிக்கும் வார்த்தை தான் போனமேனன்.

- மனு ஜோசப், பத்திரிக்கையாளர். (பெயரை கொண்டு இவர் எந்த மாகாண அறிவாளி என எளிதில் புரிந்து கொண்டிருக்கலாம்.)

Tamil is merely a regional language once spoken by Rekha. And they decide that his fame is a consequence of his reassuring Dravidian ugliness, and of the deep cinematic insanity of Tamilians. This is rubbish.

There was something intellectual in calibrating the folly of the dark masses and renaming it ‘phenomenon’.

Manu Joseph http://www.openthemagazine.com/article/voices/the-revenge-of-rajnikanth

 

எந்திரனுக்கு முன் – 2

ரஜினிகாந்த் இந்தி பட உலகின் ஏழை(?) சகோதரியான தமிழ் பட உட உலகின் நடிகர்.

இந்திய தளங்கள் ரஜினிகாந்த்தை பொதுவாக ஜோக்கரை போல சித்தரித்து நகைச்சுவை எழுதுவது வழக்கம்.

பைத்தியத்தனமான அறிமுக பாடலும், சைகைகளும், டிஸ்யும் டிஸ்யும் குத்துக்களும் இல்லாதது ரஜினிகாந்த் படமே அல்ல.

He works in the Tamil film industry, Bollywood's poorer Southern cousin, best-known for its ace cinematographers and gritty crime dramas.

Indian message boards are alight with Rajinikanth jokes, the equivalent of Chuck Norris jokes. ("Rajinikanth was bitten by a cobra. After four days of intense suffering, the snake died.") Onscreen, when Rajinikanth points his finger, it's accompanied by the sound of a whip cracking.

A Rajinikanth movie without his "SUPERSTAR Rajinikanth!" billing, without his crazy-making opening number, without his fingers pointing like whips, without the world's most complicated plot, without the dshoom dshoom of him punching giant thugs into exploding electrical lines—that's just not a Rajinikanth movie at all.

- Grady Hendrix http://www.slate.com/id/2267820/

 

என்ன காரணம் ?

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் தமிழர்களை பற்றிய இத்தகைய தவறான அறிமுகம் ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல. இவை சாருக்கான் போன்ற இந்தி சினிமா பிரமுகர்களால் திட்டம் போட்டு நிறைவேற்றப்பட்டது.

ஓம் சாந்தி ஓம்

சாரூக்கானின் Om Shanti Om படத்தில் ஆரம்பித்தது இது. சங்கர் சாரூக்கானை Robot படத்திலிருந்து நிராகரித்து வெளியேற்றிய பிறகு தமிழர்களை பற்றிய தவறான தகவல்கள் அவரின் அடிவருடி ஊடகங்கள் வழியாக டிவி நாடகங்கள், சினிமாங்கள், பத்திரிக்கைகள் மூலம் பரப்ப பட்டது. (உதாரணத்திற்கு மேற்குறிய செய்திகளே போதும். மேற்கூறியவை சரியாக படம் வெளியாவதறகு சில நாட்களுக்கு முன் வெளியிட்டு விளம்பரப்படுத்த பட்டன.)

இது, இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம், இந்தி சினிமா மட்டும் இந்திய சினிமாவின் அடையாளம் என அறியப்பட செய்யும் கலாசார படையெடுப்பு. அவ்வாறு நிறுவப்பட்டால் தான் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள இந்திய சினிமா உலகை மும்பை தாதாக்கள் மூலம் குறிப்பிட்ட சிலர் மட்டும் சுரண்ட இயலும்.

இந்த அறிமுகங்கள் எவ்வாறு அவர்களுக்கே ஆப்படிக்க பட்டது என்பதை ஆதாரங்களுடன் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.