அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூன்றாம் இந்திய விடுதலை போர்

யார் இந்த அன்னா ? anna

அன்னா ஒரு 71 வயது காந்தியவாதி இளைஞர். ஒரு முன்னாள் இராணுவ வீரர். தற்போது இலஞ்ச ஒழிப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

புதிதாக எங்கிருந்து வந்தார் ? இவரது சாதணைகள் என்ன ?

இவர் பல வருடங்களாகவே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். 2000ம் வருடம் மஹாராஷ்டிர அரசுக்கு எதிராக போராடி தகவல் அறியும் உரிமை சட்டத்தை மாநில அளவில் எற்படுத்தினார். அது பிறகு இந்தியா முழுவதும் அமுல் படுத்த பட்டது Right to Information Act 2005 (RTI).

மேலும் விவரங்களுக்கு :

http://www.annahazare.org/anticorruption-movement.html

http://en.wikipedia.org/wiki/Anna_Hazare

 

போராட்டத்தின் பின்புலம் என்ன?

அன்னா இலஞ்சத்தை கட்டுபடுத்த கூடிய சட்ட வடிவத்தை இந்தியாவில் அமுல் படுத்த முயற்சிக்கிறார். ஆனால் எப்போதும் போல இலஞ்சவாதிகள் அதை நீர்த்து போக செய்ய, அச்சட்டத்தில் ஓட்டைகளை திணிக்க முயற்சி செய்கின்றனர். 2010ல் சரத்பவார் போன்ற ஊழல் அரசியல்வாதிகள் சேர்ந்து ஒரு முடமான சட்டத்தை வடிவமாக்கினர். அவற்றின் வித்தியாசங்கள் பின்வருமாறு:

அன்னா கேட்பது ”மக்களிடம் இருந்து தாமாகவே புகாரை பதிவு சேய்து, அவற்றை விசாரித்து, தண்டனையும் அளிக்கும், தன்னிச்சையாக செயல்பட கூடிய அமைப்பு.  CBIன் இலஞ்ச ஒழிப்பு பிரிவு அரசியல் வாதிகளின் கைப்பிடியில் இல்லாமல் இவ்வமைப்பின் கீழ் இருக்கும்.

இலஞ்சவாதிகள் தர நிணைப்பது புகாரை ஏற்க முடியாத, விசாரணை செய்ய இயலாத, தன்னிச்சையாக செயல் பட இயலாத ஒரு முடமான அமைப்பு. இவ்வமைப்பு போலிசுக்கு கூட கட்டளை பிறப்பிக்க இயலாது.

 

Draft Lokpal Bill 2010 (ஊழல்வாதிகளின் தரப்பு)

Jan Lokpal Bill (அன்னாவின் தரப்பு)

Lokpal will have no power to initiate suo moto action or receive complaints of corruption from the general public. It can only probe complaints forwarded by LS Speaker or RS Chairman.

Lokpal will have powers to initiate suo moto action or receive complaints of corruption from the general public.

Lokpal will only be an Advisory Body. Its part is only limited to forwarding its report to the "Competent Authority"

Lokpal will be much more than an Advisory Body. It should be granted powers to initiate Prosecution against anyone found guilty.

Lokpal will not have any police powers. It can not register FIRs or proceed with criminal investigations.

Lokpal will have police powers. To say that it will be able to register FIRs.

CBI and Lokpal will have no connection with each other.

Lokpal and anti corruption wing of CBI will be one Independent body.

Punishment for corruption will be minimum 6 months and maximum up-to 7 years.

The punishment should be minimum 7 years and maximum up-to life imprisonment.

 

Lokpal will not be a monopoly for particular area

 

மூன்றாம் இந்திய விடுதலை போர்

கஞ்சிக்கு வழியில்லாதோர் பெரும்பாண்மையாக இருக்கும் நாட்டில் இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெறுவது, இலஞ்சத்திற்கும், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களே இந்தியாவின் மூன்றாவது சுதந்திர போராக இருக்கப்போவதை உறுதி செய்கிறது.

 

கிரிக்கெட்டில் மட்டுமே தேசபக்தியா ?

மக்களாகிய நாம் அலட்சிய படுத்த இது ஒன்றும் 3 மணி நேர உண்ணாவிரத போராட்ட நாடகம் அல்ல. அவரது போராட்டம் இன்றுடன் 4வது நாளாக தொடர்கிறது. தன்னால் 10 நாட்கள் வரை தாக்கு பிடிக்க முடியும் என அறிவித்துள்ளார்.

அன்னாவின் இச்சட்டம் நடைமுறைபடுத்த பட்டால் இலஞ்சம் பெருமளவு குறையும் என்பது வெளிப்படையான உண்மை. இச்செய்தி அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டியது முக்கியம். குறைந்த பட்சம் ஒரு 71 வயது இளைஞர் நமக்காக தன் உயிரை பணயம் வைத்து போராட்டம் செய்கிறார் என்பதை தெரிந்து வைத்திருப்பதாவது நம் குறைந்த பட்ச கடமை ஆகும்.

கிரிக்கெட்டை பற்றி எங்கும் எப்போதும் விவாதிக்கும் நண்பர்கள், இலஞ்ச ஒழிப்பு மசோதா பற்றியும் அலுவலகம், வீடு முதலான அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தன் தேசபக்தியை வெளிப்படுத்தலாம்.

 

காந்தியை கோட்சேவால் மட்டுமல்ல, நம் அலட்சியத்தாலேயே இழந்து விட நேரிடுகிறது !!

 

GpmIndia Against Corruption

We have designed a Jan Lokpal Bill which has strong measures to bring all corrupt people to book.Our fight is to force politicians to implement this powerful bill as an act in the parliament. Learn More

தமிழர்களின் சுய பரிசோதணை

எவ்வளவு முக்கியமான பிரச்சிணைகள் நாட்டில் நடந்தாலும், அறிவாளிகளால் மொழியப்படும் பொன்மொழிகள் கீழே.

 

  1. நமக்கு பிரச்சிணை இல்லையெனில் எவன் செத்தாலும், பிழைத்தாலும் நாம் என்ன செய்ய இயலும் ? நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் பார்த்து கொண்டாலே போதும்
  2. கேள்வி கேட்க என்று எவனாவது கேணையன் வருவான். நாம் வெறும் வாயில் அவல் மென்றாலே போதும்
  3. பிரச்சிணை என்று வரும் போது ஓடி ஒழிபவனே புத்திசாலி.
  4. எல்லொருக்கும் நடப்பது தானே எனக்கும் நடக்கும் ? நம்முடைய உரிமைகளை நாம் கேட்க தேவையில்லை. எல்லோரும் எவ்வழியோ நானும் அவ்வழி
  5. அதிகாரமும் ஆளுமையும் படைத்தவர்களை எதிர்த்து ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இல்லாத நாம் என்ன செய்ய இயலும் ?
  6. நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்பவர்களை கேள்வி கேட்கும் தேவையும் நமக்கு இல்லை !
  7. தியாக புருசர்கள் என்று தனியாக தோன்றுவார்கள் அவர்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

 

”முதுகெழும்பற்ற கோழைத்தனம்” என்பதற்கு தான் நாட்டில் எவ்வளவு நயமான சமாதானங்கள் ?!! மேற்கண்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவையா ? இல்லை. தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான பிரச்சிணைகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டியது இல்லை என்ற அடிப்படை நாகரீகத்தின் மோசமான நீட்சிகள். ஆனால் இவை சாதாரணமாக இந்திய/தமிழக குடும்பத்தில் தாரக மந்திரமாக திரும்ப திரும்ப நிணைவூட்டப்படுகின்றன.

 

நாம் என்ன செய்கிறோம் ?

தோல்வி அடைந்தவர்களின் நிலைகளையும், வலிமையற்றவர்களின் செயல்களையும், நட்சத்திரங்களின் செய்திகளையும், வேறு நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், முச்சந்திக்கு முச்சந்தி நின்று விமர்சன அசை போடுவதில் மட்டும் நாம் வெட்கமடைவதேயில்லை.

தோல்வியடைந்தவனையும், வலிமையற்றவனையும் துன்புறுத்தி பார்ப்பது, சேடிசம் என்பது நமக்கு எப்போதேனும் உறைத்திருக்கிறதா? நம்மை விட குறைந்த வலிமையுள்ளவர்கள் நம்மை ஏதும் செய்து விட முடியாதெனும் திமிர் அச்செயலில் ஒளிந்திருக்கிறது. நட்சத்திரங்களை சொறிந்து விடும் செயல் முழுநிலவை நோக்கி நரிகள் ஊளையிடுவது போன்றதும், சூரியனை பார்த்து நாய் குறைப்பதை போன்றதும் தான் எனும் அல்பதனமும் உறைப்பதில்லை.

 

அமைப்புகளின் கோர அரசியல்

ஆனால் மேற்கூறிய பொன்மொழிகள், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை தேவைகளையுமே அசைத்து பார்க்கும் பிரச்சிணைகளுக்கு மட்டும் தெளிவாக பின்பற்ற படுவது எவ்வளவு கேவலமானது ? ஆயிரக்கணக்காணோரின் உயிரும், இலட்ச கணக்கானோரின் வாழ்வாதார பிரச்சிணகளும் கேள்விக்குறியாக ஆக்கபட்ட போதும், இன்னும் இருக்கும் போதும் கூட, நான் புத்திசாலி -நிலா மரம் மட்டையை பற்றி மட்டும் தான் சிலாகிப்போம் என்று இருப்பவர்களும் மனித உணர்ச்சி உள்ளவர்கள் தாமா ?

தனிப்பட்ட நபர்களின் தவறான செயல்களை விட அரசு, அமைப்புகளின் தவறான செயல்கள் மிக மோசமானவை தடுக்க பட வேண்டியவை. அவற்றிற்கு எதிராக குறைந்த பட்சமாக நாம் செயல்படுத்தும் நமது கருத்து சுதந்திரம் கூட மாற்றம் தரக்கூடிய வலிமை வாய்ந்தது. குறைந்த பட்சம், நமது சமூக எண்ணங்களை நமது குடுப்பத்தினரிடம் உரையாடுவதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த குடிமகன் தாம் என்பதை நமது குடுப்பத்தினரிடமாவது தெரியபடுத்துவோம். விழிப்புணர்வும், ஞானமுமே நம்மை அடிமை தளைகளிலுருந்து விடுவிக்கும்.

நமது தாய் தந்தை, மணைவி, குழந்தைகள் பொன்றோருக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது கூட ஒரு அழகான சமுதாயத்தை உருவாக்குவது தானே ?  போபால் விசவாயு விபத்து பற்றி என்றேனும் குறைந்த பட்சம் நமது குடுப்பத்தினருடனாவது விவாதித்து உள்ளோமா ? தமிழக அணு மின் உலை விபத்து ஏற்பட்டால் இதே போன்ற நிலை தான் நமக்கு ஏற்படும் என சிந்தித்தோமா ? கரையிலும், கடலிலும் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டது குறித்து அரற்றியிருக்கிறோமா ? இந்த அரசுகளுக்கு மக்கள் உயிரின் மேல் உள்ள மெத்தனம் நமது உணர்ச்சிகளை தூண்டியதே இல்லையா ?

அரசுகளின் தவறான கொள்கைகளும்,  சீமான்களின் சுரண்டலும் மறைமுகமாக தம்முடைய ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கி கொண்டிருக்கின்றன என்பதன் வீரியம் நமக்கு எப்போது புரியும் ?

அமைப்பு ரீதீயான வன்முறைகளும், கட்ட பஞ்சாயத்துகளும் நம்மை ஒவ்வொரு நொடியும் அடிமை தனத்தின் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றன என்பது எப்போது உணர போகிறோம் ?

 

ஏன் மறந்தோம் ?

பிற்போக்கு எண்ணங்களையே திரும்ப, திரும்ப விதைப்பதின் விளைவு ஒன்று தான். வலிமையுள்ளவனுக்கு ஜால்ரா அடித்து நக்கி பிழைக்கும் அடிமை பரம்பரையினரை தான் விட்டு செல்ல போகிறோம். அவர்கள் மனிதர்கள் என்பதற்கு உடல் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.

இந்தியாவில் இப்போது இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் கிடைத்தது கூட காந்தி, நேரு, நேதாஜி போன்ற சில உயர்குடி சீமான்களின் வழி காட்டல்கள் மட்டுமல்ல. அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியற்று இருந்த பாரதி, திருப்பூர் குமாரசாமி, காமராஜர் போன்ற கோடிக்கணக்கானோரின் வீரம் தான் என்பதை ஏன் மறந்தோம் ?

ஜனநாயகமும், இந்தியாவும்

 

கருத்து சுதந்திரமும், பாசிசமற்ற நிலையும் தான் ஜனநாயம் ஒரு நாட்டில் சிறப்பாக நடைபெறுவதற்கான எடுத்துகாட்டுகள். தன் நாட்டின் ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் ஒரு யுஎஸ் குடிமகன் கீழே. அவரது தனிப்பட்ட அரசியல் நிலையை விட்டு விடலாம். ஆனால் அந்நாட்டின் கருத்து சுதந்திரம் தான் நாம் கவனிக்க வேண்டியது.

 

t-shirt-give-tiger-a-breakThanks http://www.stevenhumour.com/2010/07/24/t-shirt-give-tiger-a-break/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+StevenHumour+%28Steven+Humour%29&utm_content=Google+Reader

 

இது இந்தியாவில்/தமிழகத்தில் சாத்தியமா ? ஆளுபவர்களை சிறிய அளவில விமர்சனம் செய்து தன் கருத்தை வெளியிடுபவர்களை கூட என்ன செய்து கொண்டிருக்குறது இந்த அரசாங்கங்கள் ? எந்த குடிமகனாவது அரசியலவாதிகளின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்து விட்டு சுமூகமாக வீடு திரும்புவோம்  என்ற நம்பிக்கையுடன் உள்ளனரா ?  இல்லையெனில இங்கு நடைபெறுவது ஜனநாயகமா ?

 

ஆள்பவர்களுக்கு பயந்து கொண்டு வாழ்வதும் ஒரு சுதந்திர வாழ்க்கையா ? பாரதியும், பகத்சிங்கும், நேதாஜியும் விடுதலைக்காக பாடுபட்டது மக்கள் பயந்து, பயந்து கோழைகளாக வாழ்வதற்கா ? ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமை வாழ்க்கை நம் மக்களை மந்தைகளாக மட்டுமே ஆக்கியிருக்கிறது.

 

சமீப காலங்களில் நிகழும் பாசிச செயல்கள் இந்திய ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி தோல்வியுற்ற நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையை நினைத்து பெருமை பட முடியுமா ? “Proud to be an Indian/Tamilian” புத்தகங்களில் மட்டும் :(

மாணவர்களை பிச்சைகாரர்களாக்கும் அரசுகள்

அவற்றில் ஒன்று யு.எஸ். ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்நாட்டில் சென்ற வருடம் மட்டும் 26.8 இலட்சம் மாணவர்கள் வங்கி முறிதல்(மஞ்சள்) அறிவிக்கை கொடுத்துள்ளனர் என்பது தெரியுமா ? http://www.pdviz.com/student-bankruptcy-in-america-0.

அமெரிக்க கலாசாரத்தின் படி பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதீத சொத்து எதுவும் விட்டு செல்வதில்லை. ஆனால் சராசரியாக ஒரு மாணவர் தன் கல்லூரி படிப்பை முடிக்க 20000டாலர் ஆகிறது. எனவே ஒவ்வொரு மாணவரும் தன் கல்லூரி படிப்பை தொடர வங்கிகளிலேயே கடன் வாங்க வேண்டியது அவசியம் ஆகிறது.

படிப்பை முடித்து நல்ல வருமானம் கிடைத்தால் மட்டுமே மாணவர் பிழைத்தார். இல்லையேல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுக்க வேண்டிய நிலை தான். கல்லூரி மாணவர்களில் 5ல் 1 பங்கினர்  படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நிற்கின்றனர் ! இவ்வாறு நின்றாலும் கல்விகடனை திருப்பி செலுத்த வேண்டியது அவசியமாகிறது !! வங்கி முறிதல் அறிவிக்கை கொடுப்பவர்களின் மொத்ததில் 19% பேர் மாணவர்கள்.

புதிய விதிகளின் படி யு.எஸ்இல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுத்தோருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த வித கடனும் வழங்கப்படாது. எனவே வேறு தொழில் சேய்யவும் வாய்ப்பு இல்லை. அதே சமயம் கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் யு.எஸ்இல் 3 மில்லியன் (30 இலட்சம்) தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை நிதிச்சுமையின் காரணமாக ஆரம்பிக்க விரும்ப மாட்டர் என கணக்கெடுக்க பட்டுள்ளது.

அமெரிக்காவின் திறந்த நிலை பொருளாதார கொள்கைகளே மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லை, கடன் தொகை இரத்து இல்லை போன்ற நிலையினை உருவாக்கி உள்ளது என்பது தனித்து சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.

--**--

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக தன்னை காண்பித்து கொள்ளும் நாட்டிலேயே இந்நிலை எனில் அந்த நாட்டிடம் பிச்சை எடுக்கும் நாடான இந்தியாவில் அதே போன்ற பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் மக்களின் கதி ?

அதிலும் தமிழகத்தில் ஆளும் அரசின் பொருளாதார &  கல்வி கொள்கைகள் மிக கேவலமானதாக இருக்கின்றன.

  1. உலக வங்கியிடம் அடிப்படை வசதிகளுக்கே பிச்சை எடுக்கும் நிலையிலுள்ள ஒரு அரசு

  2. அடிப்படை கட்டமைப்புகளை விரிவு படுத்தாத ஒரு அரசு (பெரும்பாலான கல்வி கூடங்கள் இன்றும் மரத்தடி நிழலின் உள்ளன)

  3. பொறியியல் கல்வியின் கட்டணத்தை கண்டபடி உயர்த்தியுள்ள ஒரு அரசு (அரசாங்க கணக்கில் மட்டும் 10 வருடங்களுக்கு முன்பு 5000 இப்போது 50000- )

  4. பெரும் முயற்சி செய்து உலக வங்கிகளிடம் கடன் பெற்று வண்ண தொலைக்காட்சிகளை அள்ளி வழங்கி வருகிறது.

வண்ண தொலைக்காட்சிகளின் அரசியல்

இத்திட்டமும் மக்களுக்கான திட்டமா ? கஞ்சிக்கும், கல்விக்கும் வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் வண்ண தொலைக்காட்சிகளுக்கான திட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது ?

சினிமா என்பது சரியான முறையில் செய்தால் பணம் கொடுக்கும் ஆமுத சுரபி என்ற மகத்துவம் தெரிந்தது தானே ஆள்பவர்களுக்கு இத்திட்டத்தின் அவசியம் ?

  • சினிமாவின் மூலம் கிடைக்கும் நேரடி வருமானம்

  • பாடல் காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • நகைச்சுவை காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • முழுப்படத்திற்கும் ஒரு அலைவரிசை,

  • இவற்றை கலந்து ஒரு பல்சுவை அலைவரிசை,

  • சினிமா நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்படும் தொலைக்காட்சி தொடர்கள்

  • சினிமாவை முன்னிறுத்தும் வானொலிகள் (எப் எம்)

  • சினிமாவை பற்றிய செய்திகளை முன்னிலை படுத்தும் பத்திரிக்கைகள்

என திரும்ப திரும்ப மக்களை திரை ஆளுமைகளுக்கும், திரைப்படத்திற்கும் அடிமையாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு தாம் வாழ மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, மக்களையே மொட்டை அடிக்கும் அரசாங்கங்களை நாம் என்ன செய்ய போகிறோம் ?

இப்போது இருக்கும் ஏழை பெற்றோர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதற்கான காசு கூட எவ்வளவு கடின சுமையை ஏற்படுத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 20/30 வருடங்கள் கழித்து நமது சந்ததியினர் படிக்க வழியில்லாமல் பாமரர்களாய் பரதேசிகளாய் அலையும் போது, எப்படி நேர்ந்தது என்று கேட்க, இப்போது வண்ண தொலைக்காட்சிகளை வழங்குபவர்களும் இருக்க மாட்டார்கள் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனுபவிக்கும் நம் தலைமுறையினரும் இருக்க மாட்டோம் என்பது வருந்த தக்க உண்மை.

இந்நிகழ்வுகள் மாற்ற முயற்சி செய்யவில்லை எனில் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தலைமுறையினராக நாம் இருப்போம் என்பது மட்டும் புரிகிறது  :(

மங்களூர் விபத்து: நாம் (இந்தியர்கள்) என்று துயில் களைவோம் ?

 

இன்று காலை மங்களூரில் விமான விபத்து. பயணம் செய்த (தோராயமாக) 170 பேரில் இதுவரை  காப்பாற்ற பட வாய்ப்பு உள்ளவர்கள் 6 பேர் .

மங்களூர் – வாணூர்தி சாலையில் பறக்கும் அவசர ஊர்திகள், காவல் வாகனங்கள், உறவினர் வாகனங்கள், தொலைகாட்சியில் அடிபட்ட குழந்தையை தூக்கி கொண்டு ஓடும் காவலர் போன்றவை ஒன்று தான் ஞாபகப்படுத்துகிறது மரணபயம்.இறந்தவர்களுக்கு அஞ்சலிகள் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

g-cvr-100521-indiaCrash-802p.hmedium

இந்த சம்பவம்  ஒரு விபத்து மட்டுமா ?

1. பெங்களூர் விமான நிலையம் மற்ற நிலையங்களை விட குறைவான நீளம் உள்ளதாக கூறப்படுகிறது.

2. போயிங் 737-800 அதிக விபத்து நடக்கும் விமான வகைகளில் ஒன்று. கீழுள்ள பக்கங்களை பாருங்கள் 

Check this out  Boeing 737-600/700/800/900 Crash rate of 0.13 per million one of the highest among many.

Fatal Plane Crash Rates for Selected Airliner Models http://www.airsafe.com/events/models/rate_mod.htm 

Airlines with No Fatal Plane Crashes Since 1970 http://www.airsafe.com/events/nofatals.htm

 

கடும் கண்டனங்கள்

அரசாங்கம் கொடுக்கும் சில இலட்சங்கள் உயிரின் மதிப்பை பெறுமா ? சில லட்சங்கள் கொடுத்தால் இந்த அடிமைகளின் உயிரை வேண்டுமானாலும் எடுக்கலாம் அதுவரை கோடிகளில் சம்பாரிக்கலாம் எனும் அரசாங்கம் & கனவாண்களின் எண்ணம் ஒடுக்க பட வேண்டியது.

இந்த அரசில் உயர்குடி மக்களாக பொற்றபடும் பணக்காரர்களுக்கே இந்த கதி எனில் இந்நாட்டின் அன்றாடம் காய்ச்சிகளை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் அருவெறுக்க தக்கது.

அரசாங்கத்திலுள்ள முட்டாள்களினாலும் சுயநலமிகளாலும் எத்தணை உயிர்களை இழக்க போகிறோம் ?

 

[கடும் மன நெருக்கடியினால் அதிகம் எழுத இயலவில்லை.]