மங்களூர் விபத்து: நாம் (இந்தியர்கள்) என்று துயில் களைவோம் ?

 

இன்று காலை மங்களூரில் விமான விபத்து. பயணம் செய்த (தோராயமாக) 170 பேரில் இதுவரை  காப்பாற்ற பட வாய்ப்பு உள்ளவர்கள் 6 பேர் .

மங்களூர் – வாணூர்தி சாலையில் பறக்கும் அவசர ஊர்திகள், காவல் வாகனங்கள், உறவினர் வாகனங்கள், தொலைகாட்சியில் அடிபட்ட குழந்தையை தூக்கி கொண்டு ஓடும் காவலர் போன்றவை ஒன்று தான் ஞாபகப்படுத்துகிறது மரணபயம்.இறந்தவர்களுக்கு அஞ்சலிகள் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

g-cvr-100521-indiaCrash-802p.hmedium

இந்த சம்பவம்  ஒரு விபத்து மட்டுமா ?

1. பெங்களூர் விமான நிலையம் மற்ற நிலையங்களை விட குறைவான நீளம் உள்ளதாக கூறப்படுகிறது.

2. போயிங் 737-800 அதிக விபத்து நடக்கும் விமான வகைகளில் ஒன்று. கீழுள்ள பக்கங்களை பாருங்கள் 

Check this out  Boeing 737-600/700/800/900 Crash rate of 0.13 per million one of the highest among many.

Fatal Plane Crash Rates for Selected Airliner Models http://www.airsafe.com/events/models/rate_mod.htm 

Airlines with No Fatal Plane Crashes Since 1970 http://www.airsafe.com/events/nofatals.htm

 

கடும் கண்டனங்கள்

அரசாங்கம் கொடுக்கும் சில இலட்சங்கள் உயிரின் மதிப்பை பெறுமா ? சில லட்சங்கள் கொடுத்தால் இந்த அடிமைகளின் உயிரை வேண்டுமானாலும் எடுக்கலாம் அதுவரை கோடிகளில் சம்பாரிக்கலாம் எனும் அரசாங்கம் & கனவாண்களின் எண்ணம் ஒடுக்க பட வேண்டியது.

இந்த அரசில் உயர்குடி மக்களாக பொற்றபடும் பணக்காரர்களுக்கே இந்த கதி எனில் இந்நாட்டின் அன்றாடம் காய்ச்சிகளை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் அருவெறுக்க தக்கது.

அரசாங்கத்திலுள்ள முட்டாள்களினாலும் சுயநலமிகளாலும் எத்தணை உயிர்களை இழக்க போகிறோம் ?

 

[கடும் மன நெருக்கடியினால் அதிகம் எழுத இயலவில்லை.]

4 கருத்துகள்:

  1. நன்கு கட்டுரை எழுதி....மிகவும் மனம் கணக்கின்றது கண்கள் குளமாகின்றது.

    பதிலளிநீக்கு
  2. @nidurali
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.......ஏர் இந்தியா,இந்தியன் ஏர்லைன்ஸ் விமானசேவையில் மெத்தனமான போக்கு காணப்படும்,ஆகவே நான் எப்போதும் நம்புவதில்லை.விமானத்தில் ஆயில் கூட வழிவதை பார்க்க முடியும்.காசு கூட போனாலும் எமிரேட்ஸ் போன்றவற்றில் போவது நல்லது, விமான நிலைய ஓடுப்பாதையை விரிவாக்கம் செய்யாமல் அந்த வகை விமானத்தை தரையிறங்க அனுமதி அளித்திருப்பது அரசின் மெத்தனபோக்கை பறைசாற்றுகிறது.உயிருக்கு மதிப்பில்லை

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)