சோதிடம்
அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு உருவானதே சோதிடம் ஆகும்
சோதிடம் பார்பதன் பலன் என்ன ?
எல்லாமும் ஏற்கனவே நிர்ணயிக்க பட்டு இருந்தால் (விதி) சோதிடம் பார்ப்பதனால் மட்டும் என்ன பயன் ? எனும் கேள்வி எழும் போது மதி (பகுத்தறியும் திறன்) பற்றிய தெளிவை ஔவையார் நமக்கு அளிக்கிறார்.
சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
- ஔவையார்
”சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு” என்ற பதத்தை “அன்பே சிவம்” எனும் பதத்தின் மூலம் பொருள் விளங்கி கொள்ளலாம். அதாவது மனித வாழ்வின் அடிப்படையான அன்பை மனதில் இருத்தி தூய வழியில் செல்வோர்க்கும், தூய அறிவின் மூலம் தம்மை பாதுகாத்து கொள்வோர்க்கும் விதி என்பதை அவர்களின் மதி(பகுத்தறியும் திறன்) வென்று விடும் என்பதாகும்.
அதாவது இறைவன் மனிதர்களுக்கு அளித்த கொடை மதி (பகுத்தறியும் திறன்) என்பதாகும். இது விதிக்கு கட்டு படாதது. இதை கொண்டு தன்னுடைய மதியை மாற்றி கொள்ள இயலும் என்று தெளிவிக்கிறார். இங்கு பகுத்தறியும் திறன் என்பது அறிவுத்திறனை மட்டும் குறிக்கவில்லை. அதை கொண்டு எது வாழ்க்கைக்கு சரியான பாதை என்று அறிதல் ஆகும்.
சோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்கள்
சோதிடம் என்பது பழைய வானவியல் அறிஞர்களால் வானவியல் நிகழ்வுகளால், புவியில் இருக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்களை அறிவதற்கு பயன்படுத்த பட்ட முறை ஆகும். இதனை தனி சாஸ்திரமாக அறிவித்தனர். இதன் மூல நூல் ஆசிரியர்களாக பின்வருவோர் குறிக்க படுகின்றனர்.
1. சூரியன்
2. பிரமன்
3. சேதவியாசர்
4. பராசரர்
5. அத்திரி
6. உரோமர்
7. வசிட்டர்
8, மரிசி
9. பௌலகர்
10. யவனர்
11. சௌனகர்
12. மநு
13. பிருகு
14. ஜனகர்
15. அங்கீரசர்
16. காசிபர்
17. கார்த்திபர்
18. நாரதன்
நூல்கள்
கீழ்காணும் நூல்கள் மூல நூல்களாக அறிய படுகின்றன.
1. ஹோராசாரம்
2. சாராவளி
3. பாராசாரியம்
4. சந்தான தீபிகை
5. பிருகத் ஜாதகம்
6. சர்வார்த்த சிந்தாமணி
7. கேரளம்
8. சம்பு
மொத்தம் 4,50,000 ஸ்லோகங்கள் உள்ளதாக இந்நூல்கள் அறிவிக்கின்றன.
சொல்லப்பட்டவை
இந்நூல்களில் பாலாரிஷ்டம், நன்மை & தீமை, இராஜயோகம், நவாம்ச சக்கரம், நட்பு, ஆட்சி, உச்சம், நீசம், பகைகள், திரைக்காண சக்கரம் ஆகியவற்றுடன் மூலத்திரிகோணம் தாமத, சாத்வீக, இராஜத முக்குணவேளை, ஹோரா சக்கரம், மகாதிசை, கால சக்கர திசை, துவாத, சாமிச, திரிமிசாமிச சக்கரங்களையும் இலக்கினம் முதலான பன்னிரண்டு பாவங்கள் சொல்லும் உப பாவங்களின் பலன் போன்றவை பொதுவாக குறிப்பிட பட்டுள்ளன.
[தொடரும்]
”ஜோ”திடம்,
பதிலளிநீக்குசா”ஸ்”திரம்
எல்லாம் அறிவியல் தமிழில் புதுசா சேர்த்துருக்காங்களா தல!?
@வால்பையன்
பதிலளிநீக்கு”ஜோ”திடம்,
சா”ஸ்”திரம் போன்றவை தமிழ் எழுத்து இல்லை போல ?!!
இவை எந்த மொழி எழுத்து தல ?
”j" , "sh" போன்ற ஒலிகளை குறிக்க தமிழில் வார்த்தை இல்லை என்பது பெருமையா, சிறுமையா ?
இது அறிவியல் ரீதியாக பழைய கருத்துக்களை ஆராய்வது, கண்ணை மூடி கொண்டு நிராகரிப்பது அல்ல.
ஜோதிடம், சாஸ்திரம் இரண்டும் தமிழ் சொற்களா?
பதிலளிநீக்குஎனக்கு இப்போ தாங்க தெரியும், பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்றிங்க, நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்!
சொம்பை அடிக்கடி கை மாத்திகோங்க, ஒரே கையில் தூக்கினால் கை வலிக்கும்!
விதின்னு ஒன்னு இருந்த ஜோசியமும் இருக்கு
பதிலளிநீக்கு@வால்பையன்
பதிலளிநீக்கு//நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்!//
நன்றிங்க
//சொம்பை அடிக்கடி கை மாத்திகோங்க, ஒரே கையில் தூக்கினால் கை வலிக்கும்!//
அனுபவஸ்தர் சொல்றிங்க கேட்டுக்க வேண்டியது தான். எனக்கு பயன்படாதுங்க நன்றி
தெரியாத கேள்விக்கு விடை சொல்லாமல் சொம்பு கொம்பு திசை மாத்தரதை யார் கிட்ட கத்துகிட்டிங்க தல ? ;)
@soundar
பதிலளிநீக்குஎன்ன கொடுமைங்க soundar இது் ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//தெரியாத கேள்விக்கு விடை சொல்லாமல் //
பதிலளிநீக்குஉங்களுக்கா தெரியாதா!?
ஸ், ஜே எல்லாம் தமிழில் இல்லை என்று வருத்தப்படும் ஒரு உன்னத ஆன்மா நீங்கள், தமிழுக்கே உங்களால் பெருமை, அறிவியல் தமிழுக்கு இனி உங்கள் பெயர் தான் சூட்டனும்!
@வால்பையன்
பதிலளிநீக்கு//ஸ், ஜே எல்லாம் தமிழில் இல்லை என்று வருத்தப்படும்//
யாருங்க திரும்ப திரும்ப தமிழில் இல்லைன்னு சொல்றது? யார் வருத்த படணும் ?
தமிழில் இல்லாமலா லதா பாண்டில் சேர்த்து விண்டோஸில் டைப் செஞ்சிங்க?
காமெடி கலக்கல் தல
நீங்க தான் “வாழும் பகுத்தறிவு பகலவன்”
//யாருங்க திரும்ப திரும்ப தமிழில் இல்லைன்னு சொல்றது? யார் வருத்த படணும் ?//
பதிலளிநீக்குஅறிவியலுக்கு பிறகு தான் அதை தமிழில் சேர்த்தாங்க! கணிணிக்கு முன்னரே அச்சில் கூட வந்து விட்டது, காரணம் வடமொழி பெயர்ச்சொல்லை அப்படியே உச்சரிக்க!
@வால்பையன்
பதிலளிநீக்கு//அறிவியலுக்கு பிறகு தான் அதை தமிழில் சேர்த்தாங்க!//
//காரணம் வடமொழி பெயர்ச்சொல்லை அப்படியே உச்சரிக்க//
அப்படியா!! ”j" , "sh" போன்றவை வடமொழிங்கறிங்க ?? ரைட்டு
இந்த ஒலிகளுக்கு தமிழில் எழுத்து தேவைங்கறீங்களா ? இல்லையா ? தெளிவா பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
என்னை கேட்டால் இதே போல b/p (ப்), d/t(ட்), f(ஃப்), g/k(க்) போன்றவைகளின் உச்சரிப்பு தெளிவு தமிழில் வெளிப்படுத்த முயன்றால் இன்னும் நல்லது.
//என்னை கேட்டால் இதே போல b/p (ப்), d/t(ட்), f(ஃப்), g/k(க்) போன்றவைகளின் உச்சரிப்பு தெளிவு தமிழில் வெளிப்படுத்த முயன்றால் இன்னும் நல்லது. //
பதிலளிநீக்குநீங்க தான் அறிவியல் தமிழராச்சே, நீங்களே சொல்லுங்க கேட்டுகிறோம்!
தமிழ் பற்று மிக்க சிலர் பாரதியின் சமஸ்க்ரிதப் பற்று என்று ஒன்றை கண்டுபிடித்து பதிவெல்லாம் போட்டு இருக்காங்க. அந்த பதிவில் வெகு இயல்பா சம்ஸ்க்ரிதமும் ஆங்கிலமும் கலந்து பாரதியின் தமிழை விமர்சித்து இருக்காங்க. அங்கெல்லாம் போய் இந்த கேள்வியக் கேக்க மாட்டீங்களா ?
பதிலளிநீக்கு'சோ'திடப் பதிவில் சோதிட விளக்கம் கேக்கணும். இல்லை விட்டு விடணும். பதிவின் நோக்கை திசை திருப்ப இது என்ன கேள்வி ?
அப்புறம் சீவன் ஜீவன் பற்றி ஒண்ணும் சொல்லவே இல்லையே
http://www.virutcham.com
இம்புட்டு நாளாப் பாக்காம போயிட்டேனே உங்க ப்ளாக்க....தொடர்கிறேன் சந்தோசமா.வாழ்த்துக்கள் சபரி சார்.
பதிலளிநீக்கு@Vidya
பதிலளிநீக்குஏங்க இதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க. நண்பர் வால்பையன் ஜோதியை கூட சோதி என்றும் ஸ்டோர்ஸை இச்டோர்ச் என்றுமே தூய தமிழ் படுத்தி பயன்படுத்துவார் போல. ;)
வெட்டி வேதாந்தத்தை விட வெட்டி காழ்ப்புணர்வு தீமை பயப்பது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@மயில்ராவணன்
பதிலளிநீக்குநன்றிங்க வருகைகும் தொடர்வதற்கும்
ஜோதின்னே சொல்வேன்! ஆனா நிச்சயமா அதை அறிவியல் தமிழ்ன்னு சொல்ல மாட்டேன்!
பதிலளிநீக்கு@வால்பையன்
பதிலளிநீக்குஆமா ஆமா ஜோதின்னு சொல்றது தமிழே இல்லைன்னு சொல்றது தான் அறிவியல் ;))
@Sabari
பதிலளிநீக்குநான் உணர்ச்சி வசப்படவில்லை. இது வேறொறொரு விவாதத்தின் தொடர்ச்சி. வால் பையனுக்கு புரியும்.
தமிழில் இருக்கும் சமஸ்க்ரிதக் கலப்பே அவரை அதிகம் பாதிக்கிறது. ஆங்கிலக் கலப்பை கண்டு கொள்வதில்லை. இதை தான் நான் கேட்டிருந்தேன்.
@Vaal paiyan
கடவுளையே நம்ப வேண்டும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இந்து மதத்தில் இல்லை. அதேபோல் சோதிடத்தையும் நம்ப வேண்டும் என்பது இல்லை. ஆனால் என்ன வென்று தெரிந்து கொள்வதில் தவறு இல்லை அல்லவா ? தமிழ் மீதான உங்கள் ஈர்ப்பு புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் அணுகுமுறையில் நியாயம் இருக்கா என்று பார்க்க வேண்டும் என்பதே என் கருத்து.
கொஞ்சம் இதையும் பாருங்க http://www.virutcham.com/?p=1918
http://www.virutcham.com
கலப்பு இருக்கு என்பதற்காக தனித்தமிழை உதாசின படுத்தக்கூடாது, நிச்சயம் அதற்கு அறிவியல் தமிழ் என்ற பெயரும் கேவலபடுத்தும் செயல்!
பதிலளிநீக்கு@வால்பையன்
பதிலளிநீக்குஇத்தகைய எழுத்துக்கள் இப்போது வடமொழிக்கு பயன்படுவதை விட அறிவியல் சொற்களுக்கு தான் அதிகம் பயன்படுத்த படுகிறது.
உதாரணமாக யுரெனஸ் என்பீர்கள் யுரனெச் என்பீர்களா ?
1000 வருடங்களுக்கு முன் இருந்த மத புத்தகங்கள் சொல்வது மட்டும் தான் உண்மை என்பதற்கும், நீங்கள் சொல்லும் 1000 வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ் எழுத்து மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் என்ன வித்தியாசம் ?
தமிழ் மொழியில் சரியான ஒலிக்குறியீடுகளை பயன்படுத்த கூடாதென திரும்ப திரும்ப கூறுவதற்கு ஏதெனும் உள் குத்து இருக்கிறதா ?
உங்களிடம் நடைமுறை சாத்தியமில்லாத வெட்டி காழ்ப்புணர்வு தான் தென்படுகிறது. இதற்கு வடமொழி எழுத்து எனும் சால்ஜாப்பு வேறு.
இவை தமிழ் அல்ல என்பதன் மூலம் உண்மையில் நீங்கள் தான் கேவலப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் உணருங்கள்.
//இவை தமிழ் அல்ல என்பதன் மூலம் உண்மையில் நீங்கள் தான் கேவலப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் உணருங்கள். //
பதிலளிநீக்குகேவலபட்டு போறேன்!
ஆனா அது தமிழ் என்று ஏற்றுகொள்ள முடியாது!, நீங்க உங்க விருப்பத்துக்கு தமிழை கொலை பண்ணுங்க!
@வால்பையன்
பதிலளிநீக்குரைட்டு. மாற்றங்களை ஏற்ப மறுக்கும் மனோபாவம் தான் மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தடை.
நம்ப படிக்கிற எல்லா இடத்திலும் இவ்வெழுத்துக்கள் பயன்படுத்த பட்டு தான் இருக்கு.
அறிவியல், புத்தகங்கள், நாட்காட்டிகள், அறிவிப்பு பலகைகள் எல்லாவற்றிலும்.
வெட்டி வீம்பு கறிக்கு உதவாது.
தனித்தமிழ் தனித்தமிழ் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏன் தம் பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் சேர்க்கிறார்கள் தல :) ??
@வால்பையன்
பதிலளிநீக்குவிக்கிப்பீடியா பேச்சு:ஒலிபெயர்ப்புக் கையேடு
விவாதங்கள்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81
@வால்பையன்
பதிலளிநீக்குதமிழின் மறுமலர்ச்சி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=604100712&format=html