அவதாருக்கு ஆப்பு :)

[பின் நவீனத்துவ லாஜிக், பகுத்தறிவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பதிவுலக நண்பர்களிடம்  அவதார் கற்பனையாக படும் பாடு. தப்பிப்பு குறிப்பு: பதிவு முற்றிலும் கற்பனையானது. பதிவுலகின் சில குறிப்பிட்ட பதிவுகளை ஞாபகப்படுத்தினால் தற்செயலானதே ;) ]

 

பின் நவீனத்துவ லாஜிக் நண்பர்

    ஜேம்ஸ் கேமரூன் என்பவரின் வாந்தி தான் அவதார். தனியாக நாவிக்களின் உடலையே செயற்கை கருவறையில்  உருவாக்க முடியும் விஞ்ஞானிகளால் ஒரு மனிதருக்கு காலை செயல்படுத்த முடியாமல் போவதாக காட்டி இருப்பது எவ்வளவு பெரிய ஓட்டை. எனவே படம் ஆரம்பிக்கும் போதே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது.

    சில மணி நேரங்களிலேயே அனைத்து நாவிக்களையும் வானூர்தி மூலம் அழிக்க முடிந்த மனிதர்கள் ஆரம்ப காட்சிகளில் கவச உடை அணிந்து கனரக வாகனங்களில் செல்வதும் கோட்டை போன்ற அரண்களும் ஏற்படுத்தி கொள்வதும் ஏன்? (2 மணி நேரம் வேஸ்ட்)

    நாவிக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று காட்டி இருப்பதை விட மிகப்பெரிய ஜோக் என்ன ? பெரிய கண்டாமிருகங்களும், சிறுத்தைகளும் உலவும் காட்டில் பெரிய சிங்கம் இல்லாதது இயக்குனரின் கற்பனை குறைபாட்டை தான் காட்டுகிறது. இப்படம் பார்த்த கருமத்தை தொலைக்க சில உயர்ந்த பதிவுகளை போட வேண்டியது தான்

    இப்படத்தில் வரும் வன்முறை காட்சிகளும், ஆடை இல்லாமல் வரும் பெண்களும் ஜேம்ஸ் ஒரு சைக்கோ என்பதை காட்டுகிறது. முழு ஆணாதிக்க படமாகிய இதை மெல்லிய பெண்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இதை போன்ற ஒரு படம் எடுப்பதற்கு பதில் Cannibal Holocaust, Caligula [நன்றி பாலா] போன்ற பின் நவீனத்துவ படங்கள் 100 எடுத்திருக்க முடியும். ஏனெனில் இப்படங்கள் மசாலா படங்கள் என்று சொல்லி விட்டே எடுக்க படுகின்றன.

[அப்பாடா இன்றைய தினத்தை ஒப்பேற்றியாகி விட்டது. நம் நண்பர்களுக்கு சேட் செய்து ஓட்டு போட சொல்ல வேண்டியது தான்]

 

பகுத்தறிவு நண்பர்

    இப்படம் நாவிக்களின் கடவுளாகிய புனித மரத்தை பற்றியது. மனிதர்களுக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாகவும் அது தங்களை காப்பாற்றும் என்று நம்பும் நாவிக்கள் அழிவது பகுத்தறிவிற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு மரத்தால் (கடவுளின் செயலால்) உயிர் காப்பாற்றபடும் என்று காட்டி இருப்பது எழுத்தாளரின் குடுமியை நமக்கு காட்டுகிறது.

 

    கூடுவிட்டு கூடு பாயும் செயலை காட்டி இருப்பதை விட இப்படம் என்ன பெரியதாக சாதித்து இருக்கிறது ? முழுக்க முழுக்க ஒரு இந்து பார்ப்பனிய கருத்துக்களை திணிக்கும் படமாகிய இவற்றை புறக்கணிக்க வேண்டுமென நம் தலைவர் 1935ம் வருடமே நம் புனித ஏட்டில் கூறி இருப்பதால், அவரின் 2010ம் வருடத்தில் பொருந்தி வரும் தீர்க்க தரிசனத்தை நாம் உணர வேண்டும். வாழ்க அவர் நாமம். [இதற்கு நாமே தமிழ் மணத்தில் 3 ஓட்டுகள் போட வேண்டியது தான்]

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு நண்பர்

    நாவிக்கள் எனும் பிற்போக்கு மக்கள் அறிவியல் அற்ற மலைகுடிகள் அறிவியலில் முன்னேறி இருக்கும் மனிதர்களுக்கு தேவையான மூலப்பொருள்களை தர மறுத்து போர் புரியும் படம் தான் இது. சிங்கூரிலும் இதை போலவே நடந்தது குறிப்பிட தக்கது. நிலம், பணம், மூல பொருள்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் எனும் மிகப்பெரிய தத்துவம் லெனின் எனும் தீர்க்க தரிசியால் உண்டாக்க பட்டது ஏன் என மக்கள் புரிந்து கொள்ளலாம்.

    நாவிக்கள் எனும் பெரும்பான்மை இன மக்கள் மனிதர்களாகிய சிறுபான்மை இன மக்களை அழித்து ஒழிப்பது தான் இந்த ஏகாதிபத்திய வாத படம். தேசிய வாதத்தினாலும், இன வாதத்தினாலும் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்ல பட்டு இருப்பதை நாம் அறிவோம். மனிதர்களாகிய சிறுபான்மை மக்கள் எது செய்தாலும் அது நன்மையானது தான் எனும் நம் அறிய தத்துவம் மறந்த இயக்குனருக்கு கடும் கண்டனங்கள். (எப்போதும் போல நம் இயக்க தொண்டர்கள் திரட்டியில் பதிவு வரும் வரை ஓட்டு போட கேட்டு கொள்ள படுகிறார்கள்)

 

இப்படிக்கு,

எப்படத்திற்கும் லாஜிக் காண்போர் சங்கம்.

என்னாதிது சின்ன புள்ள தனமா கண்ணை துடை கண்ணை துடை

என்று ஆருயிர் நண்பன் கூறியும் கேட்காமல் திரும்ப அந்த கேள்வியை கேட்டான் நண்பன் X, “என்ன பார்த்து எதுக்கு மச்சான் அந்த கேள்வியை கேட்டான் ?”.

”மாப்ள, நீ செஞ்ச வேலைக்கு கேள்வி கேட்டுட்டு விட்டார்களே, இதே வேலையை உனக்கு செய்தால் நீ என்ன செய்திருப்பியோ தெரியாது”, என்றான் நண்பன்.

”மச்சான் நான் செஞ்சது தப்பா ? சொல்லு நான் செஞ்சது தப்பா ?, நம்ம்பி அவன் ஷோக்கு முன்னாடி நாளே போனேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்றது தப்பா ? நாட்டுலே கருத்து சுதந்திரமே இல்லையா ? என்ன நாடு இது ? என்ன மக்கள் இவர்கள் ?”

5354_1

 

“மாப்ள நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கும், அடுத்தவன் கழுத்தை நெரிக்கறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதல்ல நீ அதை புரிஞ்சுக்கணும்.

முதல்ல நீ செய்த விமர்சன முறை. மேலாண்மையில் ஒரு விதி இருக்கிறது. விமர்சனங்களை சாண்ட்விச் மாதிரி தரணும்னு.

அதாவது ஒன்றை பற்றி விமர்சிக்க ஆரம்பிக்கும் போது அதை பற்றிய நல்ல விசயங்கோளட ஆரம்பிக்கணும்.

நடுவில தவறு என்ன திருத்தி கொள்ளும் முறை என்ன என்பது பற்றி சொல்லணும்

கடைசியில் அவர் திருத்தி கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்பது பற்றி.

 

    மாப்ள விடிய விடிய உட்கார்ந்து பார்த்தது சரி, அதுல பாராட்டுற அளவிற்கு ஒன்னுமே இல்லையா ? இருந்தது எனில் அதை பற்றி எங்காவது சொல்லி இருக்கிறாயா ? நீ உன்னையே கேட்டுக்க.  எல்லோரும் தான் விமர்சனம் செய்தாங்க அவன் பொதுவா கேட்ட கேள்வி உனக்கு மட்டும் உரைக்குதுண்ணா உன் மனசாட்சி உறுத்துதுண்ணு தான் அர்த்தம். இப்போதெல்லாம் வழி காட்ட வேண்டியவங்களே தனக்கு பிடிக்காத படைப்புக்களை பற்றி மூத்திரம் பெய்வேன், கிழித்து போடுவேன் என்று ஆரம்பிக்க போய் தான் நம்ப மாதிரி ஆட்கள் எல்லாம் ஆடுறோம்.

 

இரண்டாவது கருத்து சுதந்திரம்:

    நீ உன்னுடைய கடையில் உன் கருத்தை தாராளமா சொல்லு. அத யார் கேட்க போறா. இல்லை ஒரே கருத்து இருப்பவன் கடைக்கு போய் கும்மி அடி. அடுத்தவன் கடை ஒவ்வொண்ணிலும் செட்டா போய் எவனாது நல்லா சொன்னால் போதும் குதறி வைச்சிட்டு வந்தமே அதுக்கு பேர் கருத்து திணிப்பு இல்லாமல் என்ன ? அப்ப எங்க போச்சு கருத்து சுதந்திரம் ?

     நமக்குன்னு ஒரு கூட்டம் சேர்ந்தவுடனே நாம என்ன சொன்னாலும் மக்கள் தலையை ஆட்டுவாங்களான்னு யோசிக்க மறந்துட்டோம். இப்பயெல்லாம் மக்கள் முன்ன மாதிரி இல்லை. எதை எடுத்தாலும் யோசனை செய்றாங்க. எவனா இருந்தாலும் தகவல் அறியும் சட்டம் போல எதையாவது ஒன்னை கேள்வி கேட்டு கிட்டே இருக்கானுங்க.

 

    இன்னைக்கு இவன் நாளைக்கு எவனோ. நீ மாறாத வரைக்கும் உனக்கு இந்த மாதிரி கேள்விகள் வருவதை தவிர்க்க முடியாது. பார்த்துக்க”

 

----

    பொதுவாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியதே இல்லை. என் பதிவை பார்த்தாலே தெரியும். நான் எழுதிய முதல் விமர்சன தொகுப்பே ஆயிரத்தில் ஒருவன் தான்.  நம்முடைய பதிவை நேர்மையான முறையில் சிலர் விமர்சனம் செய்யும் போதே நமக்கு கோபம் வந்து விடுகிறது. ஆனால் ஏகப்பட்ட சரித்திர ஆராய்ச்சிக்கு பிறகு வந்திருக்கும் ஒரு படத்தை ஒரே வார்த்தையில் வாந்தி, குப்பை, கர்மம் என்பது சரியானது தானா ?

 

    நான் முன்பு எழுதிய பதிவு கடுமையாக இருந்ததாக நண்பர்கள் சிலர் அறிவுறுத்தினர். அதற்கு தமிழ் மேல் கொண்ட பற்று தான் காரணமே ஒழிய வேறு தனிப்பட்ட காரணங்கள் இல்லை. இரண்டாவது பதிவுலகில் நான் வைத்திருக்கும் நம்பிக்கை. மீடியாக்களுக்கும், பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசமே கருத்து திணிப்பும், சுய விளம்பரங்களும் இல்லாமல் இருப்பது தான். இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே கருத்து சுதந்திர ஊடகம் வலைப்பதிவு ஒன்று தான். இதிலும் அரசியல் செய்வது தாங்கி கொள்ள முடியாமல் போய் விட்டது.

    சில கழகங்கள் ஆட்கள் வைத்து ஓட்டு போட்டு திரட்டிகளில் தினமும் தங்கள் கருத்துக்களை திணிப்பது தெரிந்தது தானே? இப்போது சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு இதில் நுழைய பார்க்கின்றன. கருத்து திணிப்புக்கு ஆதரவான எந்த ஒரு செயலையும் இவ்வூடகத்தில் நாம் அணுமதிக்க கூடாது.

    என்னை பொறுத்த வரையில் ஒரு தவறு நடக்கும் போது அமைதியாக இருப்பது அந்த தவறில் பங்கேற்பது போல தான். தமிழனிற்கு சூடு சொரணை இல்லை எனும் வாதம் எழும் முன்னரே இந்த அடிப்படை கேள்விகளை கேட்கும் தைரியமாவது வளர்த்து கொள்வோமே?

 

25 வாக்குகளும் 600க்கும் மேற்பட்ட வருகைகளும் எனக்கு நம்பிக்கையையே அளித்துள்ளன. கேள்விகள் கேட்க படுவதற்கே.

 

கேள்விகளுடன் நண்பன்,

சபரிநாதன் அர்த்தநாரி.

 

[இப்பதிவும் எல்லோர்க்கும் பொதுவானது தான் நான் உள்பட

தயவு செய்து இதற்கும் யாராவது தெலுங்கு பதிவை / படம் பாருங்கள் என்று கருத்து கூற வேண்டாம் அழுதுடுவேன். :) படுதா காலி இதற்கு மேல் ஆயிரத்தில் ஒருவன் எதிர் வினை கிடையாது :) ]

நாராயணா பீத்த பதிவர்கள் தொல்லை தாங்க முடியலடா

விமர்சனங்கள் பற்றிய விமர்சனங்கள்!!!

 

வலையுலகின் பட விமர்சனங்கள் பற்றி ”உன்னை போல் ஒருவன்” வெளியீட்டின் போதே எழுத நினைத்திருந்தேன். ஆனால் ஆயிரத்தில் ஒருவனுக்கு எழும் நேர்மையற்ற விமர்சனங்கள் இதை எழுத தூண்டியது.

 

”ஆயிரத்தில் ஒருவன்” மேல் சிலருக்கு என்ன காண்டு என்று தெரியவில்லை. ஒரு வேளை வேட்டைகாரன் எனும் மாணம் கெட்ட படம் தியேட்டரில் இருந்தே ஓடி விடும் 50 நாள் கூட தாங்காது என்ற பயமோ தெரியவில்லை. என்ன எரிச்சல் என்றால் ”1. இப்படத்திற்கே போக வேண்டாம். 2. குப்பை” எனும் கேண தனமான விமர்சனங்கள் தான். படங்களை குறைந்த பட்சம் கீழ்கண்ட வாறு வகைப்படுத்துங்கள் சாமிகளா

  1. பார்த்து பாராட்ட பட வேண்டிய படங்கள் (அருமை: பசங்க போன்று)
  2. பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டிய படங்கள் (சிந்திக்க தூண்டுபவை: ”உன்னை போல் ஒருவன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்று)
  3. பார்த்து இரசித்து விட்டு மறந்து விட வேண்டிய படங்கள் (மசாலா: சிவாஜி, கில்லி, பில்லா போன்று)
  4. பார்க்காமலேயே புறக்கணிக்க வேண்டிய படங்கள் (மொக்கை: வேட்டைகாரன், வில்லு, ஆழ்வார் போன்று)

 

சரி விடுங்கள் ”ஆயிரத்தில் ஒருவன்”ல் மக்கள் இரசிக்க வேண்டிய விசயங்கள்.

மூல கதை

 1. 1000 வருடங்களுக்கு முட்பட்ட மக்களின் கதையை சொல்ல தேர்ந்தெடுத்திருக்கும் தைரியம்.
 2. இதன் மூலம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று புதினங்கள் பல பகுதிகளாக எடுக்க முடியும் என்ற தைரியத்தை நமக்கு கொடுத்திருப்பது
 3. தெலுங்கு படங்களின் கதை & காட்சி அமைப்பு சீன் பை சீன் காப்பி அடித்து தமிழிற்கும், (அதையும் ஒழுங்காக செய்யாமல்) தெலுங்கிற்கும் ஒரே சமயத்தில் பாதகம் செய்யாமல், தமிழர்களின் கதையை கொடுத்திருப்பது
  snapshot20100119085757

 

பார்த்தினின் உடல் மொழி செதுக்க பட்டிருக்கும் விதம்.

 1. ஒரு மறைந்திருக்கும் மன்னன் மக்களுக்கு எதும் செய்ய இயலாத நிலையில் தன் இயலாமையை நினைத்து உருகும் முதல் காட்சி
  snapshot20100119085545
 2. சிருங்கார இரசம் கொஞ்சும் பெண்ணிடம் கூட ஆவேச நடனம் இட்டு தன் மக்களிடம் தான் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தும் காட்சி
  snapshot20100119085429
 3. ஊருக்கு செல்வதாக மக்களுக்கு அறிவித்து விட்டு அவர்களின் சந்தோசத்தை பார்த்து ஆனந்த படும் காட்சியும் ஆனந்த நடனமும்

  snapshot20100119090048 

  snapshot20100119085811 
    
 4. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னரும் வரும் வீரச்சிரிப்பு
 5. தன் கண் முன்னே தன் மனைவியும், மகளும் கொடுமை படுத்த படுவதை பார்த்து விட்டு மனம் ஒடியும் கடைசி காட்சி

 

 • மக்களின் பஞ்சம் சித்தரிக்க பட்டிருக்கும் விதம். பஞ்சத்தினால் மக்கள் தங்கள் அடிப்படை நாகரீகங்களை மீறும் காட்சிகள்
 • மறந்து விட்ட நம் அடிப்படை தமிழ் வரலாற்றை & உணர்ச்சியை நம் கண் முன்னே நிறுத்தி இருப்பது
 • பழம் பெரும் பாடகர் PB Srinivasன் குரலை திரையில் கேட்கும் வாய்ப்பை அளித்திருப்பது

 

[விமர்சனங்களை ஏகாம்பரங்கள் பதிவில் பார்த்து கொள்ளவும்]

 

என்னை பொறுத்த வரையில் முக்கியமான கதை இரண்டாவது பகுதியில் தான் வருகிறது. பார்த்திபன் நடிக்க வில்லை; வாழ்ந்து விட்டார். இயக்கமும் அருமை. இதை விமர்சனம் செய்த முண்டங்களுக்கு தமிழர்களை/தமிழை புரிந்து கொள்ளும் உலக அறிவு(?) இன்னும் வரவில்லை போல. நல்ல வேளை இம்மக்களை புரிந்து கொண்டு சில் சீன்களை செல்வராகவன் முன் பகுதியில் வைத்தார். இல்லாவிடில் இது போன்ற தமிழ் தற்குறிகள் மூலம் படம் தோல்வி அடைவது நிச்சயம்.

 

நம்முடைய ஆட்கள் மசாலா படங்கள் எல்லாவற்றையும் இது தமிழ் படம் எனும் ஒற்றை வரியில் தாண்டி செல்கின்றனர். (அதாவது தமிழ் படம் என்றாலே கேவலமாக இருப்பது வழக்கமாம்) ஆனால் இது போன்ற புது முயற்சிகளுக்கு ஆங்கில படத்தின் உச்ச கட்ட காட்சிகளை ஒப்புவமை செய்து தங்களது சுய சொறிதலை வெளிப்படுத்துவர். ஐயா நீங்கள் எல்லாம் தெரிந்த பீட்டர் ஏகாம்பரம் தான் ஒப்பு கொள்கிறோம். தள்ளி நில்லுங்கள் தமிழ் காற்று வரட்டும். 

 

ஒருவர் கூறுகிறார். “விசய் நடிக்கிறது உலகப்படம் அல்ல,மசாலா படம்... அதுல விசய் அம்பது அடி அல்ல, இமயமலைல இருந்து குதிச்சு கன்யாகுமரியை ரீச் பண்ணுவாரு. ஆனா தமிழ் படத்த அடுத்த கட்டத்துக்கு நகட்ரோம்னு சொல்றவங்க ஒழுங்கா படம் எடுக்கணுமா வேண்டாமா..”

 

அதாவது ஊரறிந்த ?? தொண்டர்கள் உத்தமியின் சேலை நழுவியதை பார்த்து கமெண்ட் அடிப்பது போல (வேண்டாம் நான் இதற்கு மேல் எழுதினால் இன்னும் கடுமையாகி விடும்).

 

ஆயிரத்தில் ஒருவன் - படக்கதையை எப்படி அணுகுவது ?

 1. ஒரு பெண் தன் குழந்தைக்கு கொடுக்கும் முலையில் இருந்து இரத்தம் வருவதை(பஞ்சத்தினால்) தன் மன்னனுக்கு காட்டும் சித்தரிப்பு எந்த நவீன கதையிலாவது வந்திருக்கிறதா ?
 2. Time machineல் ஏறி 1000 வருடங்கள் பின்னோக்கி பயணித்து சோழர்களிடம் செல்லுவதை போன்ற அனுபவம் வேண்டுமா?
 3. இலங்கையில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கு காட்சியாக விளக்கப்பட வேண்டுமா ?

- அது தான் ஆயிரத்தில் ஒருவனின் கதை.

படக்கதையை எப்படி அணுகுவது ?

இக்கதை சரித்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதை. சோழர்களின் வரலாறு தெரிந்திந்தால் தான் கதையையே புரிந்து கொள்ள முடியும்.

தமிழன் என்று ஒரு வீரமிக்க இனம் இருந்தது.;)  அவர்களிடம் கொள்கை பிடிப்பும், மான உணர்ச்சியும் மிகுந்து இருந்தது. அவர்கள் ஒரு கால கட்டத்தில் தெற்காசியாவின் பெரும்பான்மையான இடங்களை தங்கள் அரசின் கீழ் ஆட்சி செய்தனர். அழிந்து போன அவ்வின மக்களின் உணர்ச்சிகளை திரும்ப பெறுவதற்கான ஒரு சிறு முயற்சி தான் இப்படம்!!!!

 

தமிழகம் + ஈழம் சரித்திரம்

இராஜேந்திர சோழனின் ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழ் அரசாங்கம் !!! wiki: Chola's empire and influence at the height of its power (c. 1050)

250px-rajendra_map_new

 

இப்படத்தில்

நாயகன்(பார்த்திபன்) - ? (Guess)

சோழ மக்கள் - ஈழ மக்கள்

பாண்டியர்கள்- இலங்கை அரசு

பாண்டிய படை - இராணுவம்

 

படம் பார்த்த பின் வரும் சந்தேகங்களும் விளக்கங்களும்

 1. நன்றாக இருக்கிறதா ? இல்லையா ?
  கார்த்தி, ரீமா, ஆண்டிரியா விற்காக செல்பவர்கள் படத்தின் முதல் பாதியிலும், தமிழிற்காக செல்பவர்கள் இரண்டாம் பாதியிலும் தங்களது டிக்கெட் விலையின் ஒவ்வொரு பைசாவிற்கான பலனையும் அனுபவிப்பது நிச்சயம். போதுமா ?
   
 2. சோழர்கள் அவ்வளவு தூரம் செல்ல இயலுமா?
  அக்கால சோழர்கள் கடற்போரில் & பயணத்தில் வல்லவர்கள் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொண்டு இருந்திருப்பீர்கள். எனவே இளவரசன் உயிர் தப்ப தொலைதூர தீவிற்கு செல்லுதல் பிரச்சினையே இல்லை.
 3. ஹெலிகாப்டர் பயணம் ஏன் முதலில் இல்லை ?
  சோழ மக்கள் அடர்ந்த குகை பகுதியில் வசிப்பதாக காண்பிக்க படுகிறது. அவர்களுடைய இருப்பிடம் கண்டு பிடிக்க மற்றவர்களுக்கு ஓலைசுவடியை தவிர வேறு வழி இல்லை. ஒருமுறை கண்டு பிடித்தவுடன் அறிவியல் யுக மனிதர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருதல் எளிது.
 4. கிராபிக்ஸ் மட்டம் ?
  1000  கோடி ஆங்கிலப்படம் பார்த்து விட்டு கிராபிக்ஸ் பற்றிய விமர்சனம் எழுப்புபவர்கள் தயவு செய்து 300 கோடி கூட வேண்டாம் இன்னும் 30 கோடி கொடுத்தால் போதும் செல்வராகவன் மிகச்சிறப்பாக எடுப்பார் என்பதில் ஐயமில்லை. ;)
 5. ஆபாசம் ?
  இப்படத்தை பார்க்க குடும்பத்தவர்க்கும் சொல்லுங்கள்(13 வயதிற்கு மேல்). கண்டிப்பாக ”இராணி 6 இராஜா யாரு?”ல் வருவதை விட குறைவாகவே ஆபாசமான காட்சி அமைப்புகள் உள்ளன.
   
 6. விமர்சனம் செய்ய கூடாதா ?
  தாராளாமாக இப்படத்தை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தமிழர்கள் நாம் எல்லோரும் ஒரு முறை படத்தை பார்த்து விட்டு, வெற்றியடைய வைத்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.

 

இப்படம் தோற்கின் தமிழ் சினிமா உலகத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்விற்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நாம் இன்னும் குருவி, வேட்டைகாரன், வில்லு, பரமசிவன், வரலாறு போன்ற மக்கள் விரும்பும் (?) படங்களை பார்க்க நேரிடும் என்பதை நினைத்து பாருங்கள்.

அண்ணன் கேபிளார் தன்னுடைய கருத்தை வேறுவிதமாக ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், இப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனி இடுகை இட கேட்டு கொள்கிறேன். சுருக்கமாக சொல்வதெனில் பார்த்திபனுக்கும், செல்வராகவனுக்கும் தமிழக விருது நிச்சயம்; தேசிய விருதுக்கு மிகபிரகாசமான வாய்ப்பு உள்ளது.

 

இன்னுமா படத்தை பார்க்க கிளம்பவில்லை ?