என்று ஆருயிர் நண்பன் கூறியும் கேட்காமல் திரும்ப அந்த கேள்வியை கேட்டான் நண்பன் X, “என்ன பார்த்து எதுக்கு மச்சான் அந்த கேள்வியை கேட்டான் ?”.
”மாப்ள, நீ செஞ்ச வேலைக்கு கேள்வி கேட்டுட்டு விட்டார்களே, இதே வேலையை உனக்கு செய்தால் நீ என்ன செய்திருப்பியோ தெரியாது”, என்றான் நண்பன்.
”மச்சான் நான் செஞ்சது தப்பா ? சொல்லு நான் செஞ்சது தப்பா ?, நம்ம்பி அவன் ஷோக்கு முன்னாடி நாளே போனேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்றது தப்பா ? நாட்டுலே கருத்து சுதந்திரமே இல்லையா ? என்ன நாடு இது ? என்ன மக்கள் இவர்கள் ?”
“மாப்ள நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கும், அடுத்தவன் கழுத்தை நெரிக்கறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதல்ல நீ அதை புரிஞ்சுக்கணும்.
முதல்ல நீ செய்த விமர்சன முறை. மேலாண்மையில் ஒரு விதி இருக்கிறது. விமர்சனங்களை சாண்ட்விச் மாதிரி தரணும்னு.
அதாவது ஒன்றை பற்றி விமர்சிக்க ஆரம்பிக்கும் போது அதை பற்றிய நல்ல விசயங்கோளட ஆரம்பிக்கணும்.
நடுவில தவறு என்ன திருத்தி கொள்ளும் முறை என்ன என்பது பற்றி சொல்லணும்
கடைசியில் அவர் திருத்தி கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்பது பற்றி.
மாப்ள விடிய விடிய உட்கார்ந்து பார்த்தது சரி, அதுல பாராட்டுற அளவிற்கு ஒன்னுமே இல்லையா ? இருந்தது எனில் அதை பற்றி எங்காவது சொல்லி இருக்கிறாயா ? நீ உன்னையே கேட்டுக்க. எல்லோரும் தான் விமர்சனம் செய்தாங்க அவன் பொதுவா கேட்ட கேள்வி உனக்கு மட்டும் உரைக்குதுண்ணா உன் மனசாட்சி உறுத்துதுண்ணு தான் அர்த்தம். இப்போதெல்லாம் வழி காட்ட வேண்டியவங்களே தனக்கு பிடிக்காத படைப்புக்களை பற்றி மூத்திரம் பெய்வேன், கிழித்து போடுவேன் என்று ஆரம்பிக்க போய் தான் நம்ப மாதிரி ஆட்கள் எல்லாம் ஆடுறோம்.
இரண்டாவது கருத்து சுதந்திரம்:
நீ உன்னுடைய கடையில் உன் கருத்தை தாராளமா சொல்லு. அத யார் கேட்க போறா. இல்லை ஒரே கருத்து இருப்பவன் கடைக்கு போய் கும்மி அடி. அடுத்தவன் கடை ஒவ்வொண்ணிலும் செட்டா போய் எவனாது நல்லா சொன்னால் போதும் குதறி வைச்சிட்டு வந்தமே அதுக்கு பேர் கருத்து திணிப்பு இல்லாமல் என்ன ? அப்ப எங்க போச்சு கருத்து சுதந்திரம் ?
நமக்குன்னு ஒரு கூட்டம் சேர்ந்தவுடனே நாம என்ன சொன்னாலும் மக்கள் தலையை ஆட்டுவாங்களான்னு யோசிக்க மறந்துட்டோம். இப்பயெல்லாம் மக்கள் முன்ன மாதிரி இல்லை. எதை எடுத்தாலும் யோசனை செய்றாங்க. எவனா இருந்தாலும் தகவல் அறியும் சட்டம் போல எதையாவது ஒன்னை கேள்வி கேட்டு கிட்டே இருக்கானுங்க.
இன்னைக்கு இவன் நாளைக்கு எவனோ. நீ மாறாத வரைக்கும் உனக்கு இந்த மாதிரி கேள்விகள் வருவதை தவிர்க்க முடியாது. பார்த்துக்க”
----
பொதுவாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியதே இல்லை. என் பதிவை பார்த்தாலே தெரியும். நான் எழுதிய முதல் விமர்சன தொகுப்பே ஆயிரத்தில் ஒருவன் தான். நம்முடைய பதிவை நேர்மையான முறையில் சிலர் விமர்சனம் செய்யும் போதே நமக்கு கோபம் வந்து விடுகிறது. ஆனால் ஏகப்பட்ட சரித்திர ஆராய்ச்சிக்கு பிறகு வந்திருக்கும் ஒரு படத்தை ஒரே வார்த்தையில் வாந்தி, குப்பை, கர்மம் என்பது சரியானது தானா ?
நான் முன்பு எழுதிய பதிவு கடுமையாக இருந்ததாக நண்பர்கள் சிலர் அறிவுறுத்தினர். அதற்கு தமிழ் மேல் கொண்ட பற்று தான் காரணமே ஒழிய வேறு தனிப்பட்ட காரணங்கள் இல்லை. இரண்டாவது பதிவுலகில் நான் வைத்திருக்கும் நம்பிக்கை. மீடியாக்களுக்கும், பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசமே கருத்து திணிப்பும், சுய விளம்பரங்களும் இல்லாமல் இருப்பது தான். இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே கருத்து சுதந்திர ஊடகம் வலைப்பதிவு ஒன்று தான். இதிலும் அரசியல் செய்வது தாங்கி கொள்ள முடியாமல் போய் விட்டது.
சில கழகங்கள் ஆட்கள் வைத்து ஓட்டு போட்டு திரட்டிகளில் தினமும் தங்கள் கருத்துக்களை திணிப்பது தெரிந்தது தானே? இப்போது சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு இதில் நுழைய பார்க்கின்றன. கருத்து திணிப்புக்கு ஆதரவான எந்த ஒரு செயலையும் இவ்வூடகத்தில் நாம் அணுமதிக்க கூடாது.
என்னை பொறுத்த வரையில் ஒரு தவறு நடக்கும் போது அமைதியாக இருப்பது அந்த தவறில் பங்கேற்பது போல தான். தமிழனிற்கு சூடு சொரணை இல்லை எனும் வாதம் எழும் முன்னரே இந்த அடிப்படை கேள்விகளை கேட்கும் தைரியமாவது வளர்த்து கொள்வோமே?
25 வாக்குகளும் 600க்கும் மேற்பட்ட வருகைகளும் எனக்கு நம்பிக்கையையே அளித்துள்ளன. கேள்விகள் கேட்க படுவதற்கே.
கேள்விகளுடன் நண்பன்,
சபரிநாதன் அர்த்தநாரி.
[இப்பதிவும் எல்லோர்க்கும் பொதுவானது தான் நான் உள்பட
தயவு செய்து இதற்கும் யாராவது தெலுங்கு பதிவை / படம் பாருங்கள் என்று கருத்து கூற வேண்டாம் அழுதுடுவேன். :) படுதா காலி இதற்கு மேல் ஆயிரத்தில் ஒருவன் எதிர் வினை கிடையாது :) ]
சபரி, உங்கள் பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகள் சரியாக இருக்கிறது. நானும் பல கருத்துகளில் உடன்படுகிறேன்.
பதிலளிநீக்கு//முதல்ல நீ செய்த விமர்சன முறை. மேலாண்மையில் ஒரு விதி இருக்கிறது. விமர்சனங்களை சாண்ட்விச் மாதிரி தரணும்னு.//
http://senthilinpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html
சில மாதங்களுக்கு முன்பே, இந்தப் பதிவில் என் கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
//இப்போதெல்லாம் வழி காட்ட வேண்டியவங்களே தனக்கு பிடிக்காத படைப்புக்களை பற்றி மூத்திரம் பெய்வேன், கிழித்து போடுவேன் என்று ஆரம்பிக்க போய் தான் நம்ப மாதிரி ஆட்கள் எல்லாம் ஆடுறோம்.
//
This is an excuse!! அவர்கள் செய்தால் நாம் ஆட வேண்டுமா? நாமும் படித்தத்தானே இருக்கிறோம்!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச.செந்தில்வேலன்!!
பதிலளிநீக்கு//This is an excuse!! அவர்கள் செய்தால் நாம் ஆட வேண்டுமா? நாமும் படித்தத்தானே இருக்கிறோம்!!//
சரிதாங்க. இதைதான் நானும் மறைமுகமாக பதிவிட்டு இருக்கிறேன். அறிவுரை கூறுவதில் இடைவேளி வேண்டாம் என்று இரு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் போல் முற்பகுதி உள்ளது.