பொருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)

[எதிர்வினை: இவ்விடுகைக்கு காரணமான தோழி தீபாவின் இடுகையை பார்வையிடவும்]

ஜாதகம் தவறல்ல. ஜாதகம் பார்க்கும் முறை தான் தவறு. ஒரு சிலர் சுய வைத்தியம் செய்வது போல சுய ஜாதக பொருத்தம் பார்க்கிறார்கள். இது மிக மிக தவறு.

இரண்டாவது ஜாதகம் பற்றிய மூட நம்பிக்கைகள்

1. 10 பொருத்தம் மட்டும் பார்ப்பது.
2. சில நட்சத்திரங்களை தாங்களாகவே ஒதுக்குவது.
3. செவ்வாய் தோசம், நாக தோசம் பற்றிய விதிவிலக்குகளை நிராகரிப்பது (தோசம் இல்லை என ஒத்து கொள்ள மறுப்பது)

 

பத்து பொருத்தம்

எவ்வளவு ஜாதக ஆராய்ச்சியாளர்கள் சொன்னாலும் சரி மக்கள் 10 பொருத்தம் மட்டுமே பார்க்கிறார்கள். ஆண் மற்றும் பெண் ஜாதகத்தை ஒன்றினைத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையில் 10 பொருத்தங்கள் மட்டுமே பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது சாதக அறிஞர்களுக்கு நன்றாக தெரியும்,
10 பொருத்தம் என்பது நட்சத்திரங்களை பொருத்தி பார்ப்பது. உதாரணமாக ஒருவர் புனர்பூசம் நட்சத்திரம் எனில் அவருக்கு மீதமுள்ள 5 நட்சத்திரங்கள் பொருந்தி வருகிறது.

http://www.chennaiiq.com/astrology/marriage_match_by_star_tamil.asp

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உலகத்தில் உள்ள அனைவருமே 27 நட்சத்திரங்களில் ஒன்று தான். எனவே  600 கோடி * 5 / 27  = 111 கோடி பேர் பொருந்தி வருவர். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் ?

 

எப்படி பார்க்க வேண்டும் ?

சாதக பொருத்தம் பார்ப்பது என்பது தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஆண் பெண் சாதகம் பார்ப்பது மட்டுமே. இதற்கு முன்னோட்டம் மட்டுமே 10 பொருத்தம்.  மேலை நாடுகளில் உள்ளது போல ஆணும் பெண்ணும் ஒன்றினைந்து சில காலம் தங்கி விட்டு பின் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நம் கலாசாரத்திற்கு ஒத்து வரகூடியது அல்ல. எனவே இம்மாதிரியான தருணங்களில் ஜாதகம் ஒரு அருமையான கருவியாக அமையும். உண்மையில் ஜாதகம் பார்ப்பதில் கீழ் காணும் சில விடயங்களை கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

1. ஆண் உண்மையில் ஆண்மை உடையவரா ?
2. ஆண் / பெண் ஒருபால் உறவில் ஆர்வம் உள்ளவரா?
3. ஆண் / பெண் திருமணத்தில் ஆர்வம் உள்ளதா?
4. பெண் உண்மையில் குழந்தை பெரும் அளவு கருப்ப பை உடையவரா ?
5. ஆணிற்கும் பெண்ணிற்குமான உடலுறவு எப்படி பட்டது (செக்ஸ் ஒத்துழைப்பு) ?
6. ஆண் பெண் மனப்பொருத்தம் எப்படி பட்டது ?
7. ஆண் பெண் எதிர் கால வாழ்க்கை எப்படி செல்லும் ?


ஆனால் எந்த சோதிடராவது ஒரு ஆண் ஆண்மையற்றவர் என கூறி சாதகத்தை நிராகரித்ததை கேள்வி பட்டது உண்டா ? இம்மாதிரியான விசயங்களை வெளியிடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வேறு விதமாக கூறுவர். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


என்னுடைய இரு நண்பர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே காதல் திருமணம் தான் நடக்கும் என்று நான் கணித்து கூறியது இன்று மிகச்சரியாக நடந்துள்ளது. சோதிடம் என்பது நம் முன்னோர்களின் ஒளிவிளக்கு. அதை நாம் தான் சரியான முறையில் பயன்படுத்தி உண்மை சோதியாக மாற்ற வேண்டும்.