தமிழர்களின் சுய பரிசோதணை

எவ்வளவு முக்கியமான பிரச்சிணைகள் நாட்டில் நடந்தாலும், அறிவாளிகளால் மொழியப்படும் பொன்மொழிகள் கீழே.

 

  1. நமக்கு பிரச்சிணை இல்லையெனில் எவன் செத்தாலும், பிழைத்தாலும் நாம் என்ன செய்ய இயலும் ? நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் பார்த்து கொண்டாலே போதும்
  2. கேள்வி கேட்க என்று எவனாவது கேணையன் வருவான். நாம் வெறும் வாயில் அவல் மென்றாலே போதும்
  3. பிரச்சிணை என்று வரும் போது ஓடி ஒழிபவனே புத்திசாலி.
  4. எல்லொருக்கும் நடப்பது தானே எனக்கும் நடக்கும் ? நம்முடைய உரிமைகளை நாம் கேட்க தேவையில்லை. எல்லோரும் எவ்வழியோ நானும் அவ்வழி
  5. அதிகாரமும் ஆளுமையும் படைத்தவர்களை எதிர்த்து ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இல்லாத நாம் என்ன செய்ய இயலும் ?
  6. நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்பவர்களை கேள்வி கேட்கும் தேவையும் நமக்கு இல்லை !
  7. தியாக புருசர்கள் என்று தனியாக தோன்றுவார்கள் அவர்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

 

”முதுகெழும்பற்ற கோழைத்தனம்” என்பதற்கு தான் நாட்டில் எவ்வளவு நயமான சமாதானங்கள் ?!! மேற்கண்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவையா ? இல்லை. தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான பிரச்சிணைகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டியது இல்லை என்ற அடிப்படை நாகரீகத்தின் மோசமான நீட்சிகள். ஆனால் இவை சாதாரணமாக இந்திய/தமிழக குடும்பத்தில் தாரக மந்திரமாக திரும்ப திரும்ப நிணைவூட்டப்படுகின்றன.

 

நாம் என்ன செய்கிறோம் ?

தோல்வி அடைந்தவர்களின் நிலைகளையும், வலிமையற்றவர்களின் செயல்களையும், நட்சத்திரங்களின் செய்திகளையும், வேறு நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், முச்சந்திக்கு முச்சந்தி நின்று விமர்சன அசை போடுவதில் மட்டும் நாம் வெட்கமடைவதேயில்லை.

தோல்வியடைந்தவனையும், வலிமையற்றவனையும் துன்புறுத்தி பார்ப்பது, சேடிசம் என்பது நமக்கு எப்போதேனும் உறைத்திருக்கிறதா? நம்மை விட குறைந்த வலிமையுள்ளவர்கள் நம்மை ஏதும் செய்து விட முடியாதெனும் திமிர் அச்செயலில் ஒளிந்திருக்கிறது. நட்சத்திரங்களை சொறிந்து விடும் செயல் முழுநிலவை நோக்கி நரிகள் ஊளையிடுவது போன்றதும், சூரியனை பார்த்து நாய் குறைப்பதை போன்றதும் தான் எனும் அல்பதனமும் உறைப்பதில்லை.

 

அமைப்புகளின் கோர அரசியல்

ஆனால் மேற்கூறிய பொன்மொழிகள், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை தேவைகளையுமே அசைத்து பார்க்கும் பிரச்சிணைகளுக்கு மட்டும் தெளிவாக பின்பற்ற படுவது எவ்வளவு கேவலமானது ? ஆயிரக்கணக்காணோரின் உயிரும், இலட்ச கணக்கானோரின் வாழ்வாதார பிரச்சிணகளும் கேள்விக்குறியாக ஆக்கபட்ட போதும், இன்னும் இருக்கும் போதும் கூட, நான் புத்திசாலி -நிலா மரம் மட்டையை பற்றி மட்டும் தான் சிலாகிப்போம் என்று இருப்பவர்களும் மனித உணர்ச்சி உள்ளவர்கள் தாமா ?

தனிப்பட்ட நபர்களின் தவறான செயல்களை விட அரசு, அமைப்புகளின் தவறான செயல்கள் மிக மோசமானவை தடுக்க பட வேண்டியவை. அவற்றிற்கு எதிராக குறைந்த பட்சமாக நாம் செயல்படுத்தும் நமது கருத்து சுதந்திரம் கூட மாற்றம் தரக்கூடிய வலிமை வாய்ந்தது. குறைந்த பட்சம், நமது சமூக எண்ணங்களை நமது குடுப்பத்தினரிடம் உரையாடுவதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த குடிமகன் தாம் என்பதை நமது குடுப்பத்தினரிடமாவது தெரியபடுத்துவோம். விழிப்புணர்வும், ஞானமுமே நம்மை அடிமை தளைகளிலுருந்து விடுவிக்கும்.

நமது தாய் தந்தை, மணைவி, குழந்தைகள் பொன்றோருக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது கூட ஒரு அழகான சமுதாயத்தை உருவாக்குவது தானே ?  போபால் விசவாயு விபத்து பற்றி என்றேனும் குறைந்த பட்சம் நமது குடுப்பத்தினருடனாவது விவாதித்து உள்ளோமா ? தமிழக அணு மின் உலை விபத்து ஏற்பட்டால் இதே போன்ற நிலை தான் நமக்கு ஏற்படும் என சிந்தித்தோமா ? கரையிலும், கடலிலும் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டது குறித்து அரற்றியிருக்கிறோமா ? இந்த அரசுகளுக்கு மக்கள் உயிரின் மேல் உள்ள மெத்தனம் நமது உணர்ச்சிகளை தூண்டியதே இல்லையா ?

அரசுகளின் தவறான கொள்கைகளும்,  சீமான்களின் சுரண்டலும் மறைமுகமாக தம்முடைய ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கி கொண்டிருக்கின்றன என்பதன் வீரியம் நமக்கு எப்போது புரியும் ?

அமைப்பு ரீதீயான வன்முறைகளும், கட்ட பஞ்சாயத்துகளும் நம்மை ஒவ்வொரு நொடியும் அடிமை தனத்தின் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றன என்பது எப்போது உணர போகிறோம் ?

 

ஏன் மறந்தோம் ?

பிற்போக்கு எண்ணங்களையே திரும்ப, திரும்ப விதைப்பதின் விளைவு ஒன்று தான். வலிமையுள்ளவனுக்கு ஜால்ரா அடித்து நக்கி பிழைக்கும் அடிமை பரம்பரையினரை தான் விட்டு செல்ல போகிறோம். அவர்கள் மனிதர்கள் என்பதற்கு உடல் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.

இந்தியாவில் இப்போது இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் கிடைத்தது கூட காந்தி, நேரு, நேதாஜி போன்ற சில உயர்குடி சீமான்களின் வழி காட்டல்கள் மட்டுமல்ல. அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியற்று இருந்த பாரதி, திருப்பூர் குமாரசாமி, காமராஜர் போன்ற கோடிக்கணக்கானோரின் வீரம் தான் என்பதை ஏன் மறந்தோம் ?

4 கருத்துகள்:

  1. மிக முக்கியமான பதிவுக்கு நன்றி.
    மனிதன் குறைந்தபட்ச பொதுநலன் கொண்டிருந்தாலே போதும்,
    =======
    தன் குழ்ந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க த்லைகீழாக தண்ணீர் குடிக்க நினைக்கையில்,குழ்ந்தை தொழிலாளியை கண்டால் அவர்களின் கல்விக்கு தன்னால் ஆனதை செய்யலாம்.நண்பர்களிடம் கேட்கலாம்.பாட புத்தகமாவது வாங்கிதரலாம்
    =======
    தன் அம்மா அப்பாவை மிக சொகுசாக வைத்துக்கொள்ள பாடுபடுபவர்கள்,சமூகத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் கைவிடப்பட்ட முதியோர்களை கண்டால் அவர்கள் வாழ்வுக்கு ஏதேனும் செய்யலாம்,கொஞ்சகொஞமாக பழகிக்கொண்டால் கைவந்துவிடும் .

    போபால் விஷயம்,ஈழம்,பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் தெரிந்துகொள்ளவேண்டும்.அப்போது தான் அது சந்ததிக்கு உரமாகும்.

    பதிலளிநீக்கு
  2. @|கீதப்ப்ரியன்|Geethappriyan| வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பகிர்வுங்க. ஒவ்வோரு தமிழனும் படித்து தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம்

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)