பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும் கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.
திரை படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா
[தான தொ தனன,தான தொ தனன]
Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையேMale: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
[தான தொ தனன,தான தொ தனன]Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!
Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
Male: பூந்தளிரே ……
Female:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?
Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே!
Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
Male/Female: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]
Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?
Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
Male: இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]
Mass
நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !
இப்பாடலை தாமதமாக கேட்க நேர்ந்ததை முன்னிட்டு அதிகம் கேட்கிறேன் போல. (தொடர்ந்து 10 வது முறையாக!!!)
Thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)