வெளியாக இருக்கும் ”காதல் சொல்ல வந்தேன்” படத்தில் உள்ள மிகவும் பிடித்த பாடல் “என்ன என்ன என்ன ஆகிறேன் ?”. தலைவியை பார்த்து தலைவன் பாடும் பாடல். யுவன் சங்கர் ராஜா, நா. முத்துக்குமார் எப்போதும் போல அழகு செய்துள்ளனர். விஜய் ஜேசுதாசின் குரலில் பாடல் அழுத்தம் திருத்தமாக உள்ளது மிகச்சிறப்பு.
என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்…காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
பார்வையில் உந்தன் யோசனை, புரிந்து சேவை யாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை, கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்மண்ணில் எது சுகம் ? பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ?
உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே…காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விருட்சமாகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் ? அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ?
செத்தாலும், உன் மடி, தந்தாலே நிம்மதி…
காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதேஎன்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்…
தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்.
///தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பதிலளிநீக்குபறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்.///
கற்பனை காற்றில் பறக்கிறது...
@rk guru//கற்பனை காற்றில் பறக்கிறது... // ஆமாங்க காதலர்களுக்கு இதமான பாட்டு
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//தலைவியை பார்த்து தலைவன் பாடும் பாடல்//
பதிலளிநீக்குயாருங்க அந்த தலைவனும் தலைவியும்
@பாலமுருகன்
பதிலளிநீக்குஎல்லோர் மனதிலும் எப்போதும் இருக்கும் சங்க கால தலைவனும் தலைவியும் என்று வைத்து கொள்ளுங்களேன் :).
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல பகிர்வு நண்பரே
பதிலளிநீக்கு@|கீதப்ப்ரியன்|Geethappriyan| வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு