அவற்றில் ஒன்று யு.எஸ். ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்நாட்டில் சென்ற வருடம் மட்டும் 26.8 இலட்சம் மாணவர்கள் வங்கி முறிதல்(மஞ்சள்) அறிவிக்கை கொடுத்துள்ளனர் என்பது தெரியுமா ? http://www.pdviz.com/student-bankruptcy-in-america-0.
அமெரிக்க கலாசாரத்தின் படி பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதீத சொத்து எதுவும் விட்டு செல்வதில்லை. ஆனால் சராசரியாக ஒரு மாணவர் தன் கல்லூரி படிப்பை முடிக்க 20000டாலர் ஆகிறது. எனவே ஒவ்வொரு மாணவரும் தன் கல்லூரி படிப்பை தொடர வங்கிகளிலேயே கடன் வாங்க வேண்டியது அவசியம் ஆகிறது.
படிப்பை முடித்து நல்ல வருமானம் கிடைத்தால் மட்டுமே மாணவர் பிழைத்தார். இல்லையேல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுக்க வேண்டிய நிலை தான். கல்லூரி மாணவர்களில் 5ல் 1 பங்கினர் படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நிற்கின்றனர் ! இவ்வாறு நின்றாலும் கல்விகடனை திருப்பி செலுத்த வேண்டியது அவசியமாகிறது !! வங்கி முறிதல் அறிவிக்கை கொடுப்பவர்களின் மொத்ததில் 19% பேர் மாணவர்கள்.
புதிய விதிகளின் படி யு.எஸ்இல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுத்தோருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த வித கடனும் வழங்கப்படாது. எனவே வேறு தொழில் சேய்யவும் வாய்ப்பு இல்லை. அதே சமயம் கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும்.
அடுத்த பத்தாண்டுகளில் யு.எஸ்இல் 3 மில்லியன் (30 இலட்சம்) தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை நிதிச்சுமையின் காரணமாக ஆரம்பிக்க விரும்ப மாட்டர் என கணக்கெடுக்க பட்டுள்ளது.
அமெரிக்காவின் திறந்த நிலை பொருளாதார கொள்கைகளே மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லை, கடன் தொகை இரத்து இல்லை போன்ற நிலையினை உருவாக்கி உள்ளது என்பது தனித்து சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.
--**--
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக தன்னை காண்பித்து கொள்ளும் நாட்டிலேயே இந்நிலை எனில் அந்த நாட்டிடம் பிச்சை எடுக்கும் நாடான இந்தியாவில் அதே போன்ற பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் மக்களின் கதி ?
அதிலும் தமிழகத்தில் ஆளும் அரசின் பொருளாதார & கல்வி கொள்கைகள் மிக கேவலமானதாக இருக்கின்றன.
-
உலக வங்கியிடம் அடிப்படை வசதிகளுக்கே பிச்சை எடுக்கும் நிலையிலுள்ள ஒரு அரசு
-
அடிப்படை கட்டமைப்புகளை விரிவு படுத்தாத ஒரு அரசு (பெரும்பாலான கல்வி கூடங்கள் இன்றும் மரத்தடி நிழலின் உள்ளன)
-
பொறியியல் கல்வியின் கட்டணத்தை கண்டபடி உயர்த்தியுள்ள ஒரு அரசு (அரசாங்க கணக்கில் மட்டும் 10 வருடங்களுக்கு முன்பு 5000 இப்போது 50000- )
-
பெரும் முயற்சி செய்து உலக வங்கிகளிடம் கடன் பெற்று வண்ண தொலைக்காட்சிகளை அள்ளி வழங்கி வருகிறது.
வண்ண தொலைக்காட்சிகளின் அரசியல்
இத்திட்டமும் மக்களுக்கான திட்டமா ? கஞ்சிக்கும், கல்விக்கும் வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் வண்ண தொலைக்காட்சிகளுக்கான திட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது ?
சினிமா என்பது சரியான முறையில் செய்தால் பணம் கொடுக்கும் ஆமுத சுரபி என்ற மகத்துவம் தெரிந்தது தானே ஆள்பவர்களுக்கு இத்திட்டத்தின் அவசியம் ?
சினிமாவின் மூலம் கிடைக்கும் நேரடி வருமானம்
பாடல் காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,
நகைச்சுவை காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,
முழுப்படத்திற்கும் ஒரு அலைவரிசை,
இவற்றை கலந்து ஒரு பல்சுவை அலைவரிசை,
சினிமா நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்படும் தொலைக்காட்சி தொடர்கள்
சினிமாவை முன்னிறுத்தும் வானொலிகள் (எப் எம்)
சினிமாவை பற்றிய செய்திகளை முன்னிலை படுத்தும் பத்திரிக்கைகள்
என திரும்ப திரும்ப மக்களை திரை ஆளுமைகளுக்கும், திரைப்படத்திற்கும் அடிமையாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு தாம் வாழ மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, மக்களையே மொட்டை அடிக்கும் அரசாங்கங்களை நாம் என்ன செய்ய போகிறோம் ?
இப்போது இருக்கும் ஏழை பெற்றோர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதற்கான காசு கூட எவ்வளவு கடின சுமையை ஏற்படுத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 20/30 வருடங்கள் கழித்து நமது சந்ததியினர் படிக்க வழியில்லாமல் பாமரர்களாய் பரதேசிகளாய் அலையும் போது, எப்படி நேர்ந்தது என்று கேட்க, இப்போது வண்ண தொலைக்காட்சிகளை வழங்குபவர்களும் இருக்க மாட்டார்கள் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனுபவிக்கும் நம் தலைமுறையினரும் இருக்க மாட்டோம் என்பது வருந்த தக்க உண்மை.
இந்நிகழ்வுகள் மாற்ற முயற்சி செய்யவில்லை எனில் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தலைமுறையினராக நாம் இருப்போம் என்பது மட்டும் புரிகிறது :(
மிக அற்புதமான கட்டுரை,செம சாட்டையடி,இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்,இதை யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்புங்க,நிறைய பேர் பார்ப்பாங்க youthful@vikatan.com
பதிலளிநீக்கு@|கீதப்ப்ரியன்|Geethappriyan|
பதிலளிநீக்குவருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க
சிறந்த பதிவு. மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் தனக்கான சிக்கல்களை சிந்திக்கக்கூடாது என்பதற்காகவே வண்ணத்தொலைக்காட்சியும் டாஸ்மாக்கும் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.
பதிலளிநீக்கு@seeprabagaranவருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க
பதிலளிநீக்குநல்ல பதிவு... அரசும் இதை கருத்தில் கொள்ளுமா??
பதிலளிநீக்கு@ரோஸ்விக் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க. குடிமக்களாக நம் கருத்தை தெரிவிக்க முயற்சி செய்வோம். மக்கள் & அரசு விழிப்புணர்வு அடைவார்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு//கஞ்சிக்கும், கல்விக்கும் வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் வண்ண தொலைக்காட்சிகளுக்கான திட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது ?//
பதிலளிநீக்குஅனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
மக்களின் அவசியம் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
@பாலமுருகன் சரி தாங்க. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
பதிலளிநீக்கு//Hi,
பதிலளிநீக்குCongrats!
Your story titled 'மாணவர்களை பிச்சைகாரர்களாக்கும் அரசுகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 23rd July 2010 07:21:03 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/307828
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
//
நன்றி நண்பர்களே