காதலர்களின் ஏகாந்த தனிமை-கவிதை(Dating)

[காதலர்களின் ஏகாந்த தனிமை. மூல ஒளிப்பதிவு காணவும்.]

நிஜமாக நான் தானா? இங்கு உன் இடம் உள்ளேனா?
இதன் பெயர் தான் காதலா? ஏதோ விந்தையை பார்க்கின்றேன்
எவரோ எங்கோ நுழைந்து எல்லாம் செய்கின்றாரா?
பின்னால் பின்னால் வந்து என்னை தள்ளுகின்றாரா?

ஹரேஹரே ஹரேஹரே ராமா !
இங்கே எங்கே வந்தது இத்துணிவு
எவ்வளவு உஷாராக இருந்ததே இம்மனது ஏம்மா ?   [2 தடவை]

[நிஜமாக]

இவ்வயதினில் ஒவ்வொர் கணமும் ஒவ்வோர் வசந்தம்
என்மனதுக்கு ஒவ்வோர் க்‌ஷணமும் நீயே பிரபஞ்சம்
சமுத்திரமாய் அனுதினமும் பொங்கும் சந்தோசம்

அருகினில் சென்று கரங்களை கோர்த்து நடந்திட்ட தூரம் எவ்வளவு உண்டே
களைப்போ இன்றி கடந்திட்ட காலம் இவ்வளவு என நம்புவமோ ?

[நிஜமாக]

என் கனவு இங்கே நிஜமாக நிற்கின்றதே
என் பழமை இங்கே வெட்கமதை தருகின்றதே
உன் அருகாமை உல்லாசத்தை கொடுக்கின்றதே
கன்னத்தின் அருகே சென்றிற்ற உதடு நம் பரவசம் தொடங்கட்டுமே
பகலே எனினும் வின்மீனெல்லாம் உதயம் காணட்டுமே

[நிஜமாக]

[ஹரேஹரே 2 தடவை]

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=xA0sSwB3wyU) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

4 கருத்துகள்:

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)