தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும்

[சென்ற இடுகையிலுள்ள விவாதத்தின் தொடர்ச்சியாக கருதலாம்]

இப்போதெல்லாம் பழந்தமிழர் பயன்படுத்திய எல்லா விடயங்களையும் குறை சொன்னால் தான் பகுத்தறிவு வாதி என எளிதாக நிருவலாம் எனும் நினைக்க கூடிய கொடிய வைரஸ் தமிழர்கள் மத்தியில் பரவி வருகிறது. அவற்றில் ஒன்று தான் ”கிரகம்/கோள்” எனும் சொற்களின் பொருட்கள்

வார்த்தைகளின் சிதைவுகள்

தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் சிதைக்கப்பட்ட விதத்தை வைத்து இதனை விளக்கலாம்.

1. பழங்காலத்தில் தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் முற்றிலும் வேறான விதத்தில் பயன்பட்டு வத்தது. வினாடி இன்றைய SI அளவு முறையில் 2 நிமிடங்களுக்கும் அதிகமானது.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் Second எனும் அளவு முறை நடைமுறைக்கு வந்தது.
3. Second என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த வினாடி என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
4. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் உள்ளனர்.
5. நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நினைக்கும்: "பழந்தமிழர்கள் முட்டாள்கள் 1 வினாடிக்கு 2 நிமிடங்களாம் ?" !!!

இப்படி தான் ஆகிவிட்டது கிரகங்கள் எனும் வார்த்தையின் அர்த்தமும்

1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை வானியல் பொருட்கள் அனைத்தையும் குறிக்கும் பொருளில் பயன்பட்டு வத்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
3. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் சோதிடம் தவறு என உளறி கொண்டுள்ளனர்.

பிறகு சாயாகிரகங்கள் - ராகு, கேது பற்றிய விளக்கங்களை அடுத்த இடுகையில் பார்க்கலாம். இது மிக எளிமையான விடயம். “சாயா” என்பதன் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டாலே விளக்கங்கள் கிடைத்து விடும். பின்னூட்டத்தில் விளக்குவதின் மூலம் என்னுடைய நேரத்தை நீங்கள் மிச்சபடுத்தலாம்.

 

நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609085&format=print&edition_id=20060908

2 கண்ணிமை - 1 நொடி

2 கைநொடி - 1 மாத்திரை

2 மாத்திரை - 1 குரு

2 குரு - 1 உயிர்

2 உயிர் - 1சணிகம்

12 சணிகம் - 1 விநாடி

60 விநாடி - 1நாழிகை

2 1/2 நாழிகை - 1 ஒரை

3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் - 1 சாமம்

4 சாமம் - 1 பொழுது

2 பொழுது - 1 நாள்

82 கருத்துகள்:

  1. //சோதிடம் தவறு என உளறி கொண்டுள்ளனர். //

    :(

    பதிலளிநீக்கு
  2. ஆம் தருமி. கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது எனக்கும் வருத்தம் அளிப்பதாக தான் உள்ளது :( ஆனால் என்ன செய்ய ? யார் எப்படி கேட்கிறார்களோ அவர்களுக்கு அம்முறையிலேயே பதில் அளிப்பதே பொருத்தமானது.

    இதே போன்ற கேள்விகள் ஒரு முறை இரு முறை அல்ல ஓராயிரம் முறை வலை பதிவுகள் எங்கும் வெளிப்படுத்துகின்றனர்.

    ஏன் இவ்வாறு முன்னோர்கள் அழைத்தனர் என்று சிந்திப்பது கூட இல்லை. அறிந்தவர்களிடம் விளக்கம் கேட்பதும் இல்லை. இதனால் சோதிடம் தவறு என்று முடிவாகவே அறிவிக்கன்றனர். அவர்களுக்கான இடுகை மட்டும் தான் இது.

    ஒன்றை பற்றி விமர்சிப்பதற்கு முன் அதன் அடிப்படையாவது தெரிந்து கொள்வது தானே விமர்சன நேர்மைக்கு அழகு ? ஆனால் சோதிடத்தை விமர்சிப்பவர்களில் எத்தணை பேருக்கு சோதிடத்தின் அடிப்படை தெரியும் ?

    முடிவு அறிவிப்பதற்கு முன் தயவு செய்து சிந்திப்பரா ?

    பதிலளிநீக்கு
  3. இது சென்ற இடுகையில் வந்த வெளியிடப்படாத பின்னூட்டத்திற்கான காரம் அடங்கிய பதில்.

    பதிலளிநீக்கு
  4. ***
    ஒன்றை பற்றி விமர்சிப்பதற்கு முன் அதன் அடிப்படையாவது தெரிந்து கொள்வது தானே விமர்சன நேர்மைக்கு அழகு ? ஆனால் சோதிடத்தை விமர்சிப்பவர்களில் எத்தணை பேருக்கு சோதிடத்தின் அடிப்படை தெரியும் ?
    ***

    ஜோதிடத்திற்கு அடிப்படை உண்டு என்றே வைத்துகொள்வோம். எத்தனை ஜோதிடருக்கு அந்த அடிப்படைகள் தெரியும் ?

    பதிலளிநீக்கு
  5. //1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை வானியல் பொருட்கள் அனைத்தையும் குறிக்கும் பொருளில் பயன்பட்டு வத்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.//

    விண்மீன், நட்சத்திரம் , கோள்கள் , துணைக்கோள் என்ற வார்த்தைகள் எல்லாம் எப்ப வந்தது ? நீங்கள் சொல்லும் பழங்காலம் (கிரகம் மட்டும் இருந்த) தமிழ்க்காலம் எப்போது ?

    கிரகம் என்பதை இன்னும் கோள்கள் என்ற அர்தத்தில்தான் ஜோசியம் பயன்படுத்துகிறது. மேலும் அவர்கள் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கேவரவில்லை.

    பதிலளிநீக்கு
  6. 17. கோள் kōḷ : (page 1202)

    264). 12. Serpent; பாம்பு. (சீவக. 320, உரை.) 13. cf. ghōra. Poison; விஷம். 14. Ascending node; இராகு. கோள்வாய் மதியம் நெடியான் விடுத்தாங்கு (சீவக. 454). 15. Planet; கிரகம். எல்லாக் கோளு நல்வழி நோக்க (பெருங். இலாவாண. 11, 70). 16. Cloud; மேகம். கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தென (சீவக. 320). 17. Brilliance,

    பதிலளிநீக்கு
  7. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8

    பதிலளிநீக்கு
  8. //Planet; கிரகம்

    ஏங்க இப்பதிவை படிச்சிங்களா இல்லையா ? தயவு செய்து ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிமாற்றம் செய்து வாதிடுவதை நிறுத்தவும். பழந்தமிழ் வார்த்தைக்கு நிகழ்கால அர்த்தம் செய்து காணவும்.

    //விண்மீன், நட்சத்திரம்//
    அவை மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிட தகுந்த மாற்றம் செய்வதில்லை என்பதால் அவற்றை பற்றி ஆராய்ச்சியும் அறிவியல் அறிவும் அப்போது இல்லை.

    அவை கிரங்களாக குறிப்பிட படவும் இல்லை. பூமிக்கு மிக நெருங்கிய பொருள்கள் மட்டுமே கிரகங்களாக குறிக்க பட்டன.

    //அவர்கள் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கேவரவில்லை.//
    ஏங்க இது என்னங்க லாஜிக்.? சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் என்ன சம்பந்தம் ? சூரிய மைய கொள்கை ஏற்றுக் கொண்டு பல வருடங்கள் ஆகி விட்டது.

    சோதிடம் மனிதர்களை குறித்து சொல்ல படுவது. மனிதர்கள் இருப்பது பூமியில். எனவே தான் பூமியை சுற்றி பிற கிரகங்கள் உள்ள பாகையை வைத்து சோதிடம் சொல்கிறார்கள். இதே மனிதன் செவ்வாயில் இருந்தால் செவ்வாயை வைத்து சோதிடம் சொல்ல வேண்டும்.

    தயவு செய்து சோதிடத்தின் அடிப்படையை தெரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள் ஐயா :)

    பதிலளிநீக்கு
  9. //ஜோதிடத்திற்கு அடிப்படை உண்டு என்றே வைத்துகொள்வோம். எத்தனை ஜோதிடருக்கு அந்த அடிப்படைகள் தெரியும் ?//

    சரி அப்படியெனில் அந்த போலி சோதிடர்களுக்கும் போலி பகுத்தறிவாளர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை தானே? இதை தான் நானும் கூற வந்தேன்.

    நீங்கள் இன்னும் நல்ல சோதிடரை சந்திக்கவில்லை போல :)

    நன்றி மணிகண்டன் வருகைக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு
  10. கோள் கிடக்கட்டும் விடுங்க!

    சோதிடத்தால் இதுவரை என்ன நன்மை மக்களுக்கு நடந்துருக்குன்னு சொல்லுங்க!
    சோதிடம் பாக்கலைனா அது நடந்திருக்காதா?, சோதிடம் பார்ப்பதால் வர இருக்கும் கெட்டதை தடுத்திட முடியுமா?

    பதிலளிநீக்கு
  11. //ஏன் இவ்வாறு முன்னோர்கள் அழைத்தனர் என்று சிந்திப்பது கூட இல்லை. //

    முன்னோர்கள் அவுத்து போட்டு திருஞ்சாங்க, நாமளும் அப்படியே திரிவோமா!?

    பதிலளிநீக்கு
  12. //ஒன்றை பற்றி விமர்சிப்பதற்கு முன் அதன் அடிப்படையாவது தெரிந்து கொள்வது தானே விமர்சன நேர்மைக்கு அழகு ?//

    அடிப்படை என்ன, அதுக்கு மேலயே எனக்கு தெரியும்!

    பதிலளிநீக்கு
  13. //நீங்கள் இன்னும் நல்ல சோதிடரை சந்திக்கவில்லை போல :)//


    சே சே நான் அபடி சொல்லவே மாட்டேன்!

    சோதிடர்கள் எல்லோரும் உண்மையானவர்கள் தான், சோதிடம் தான் டுபாக்கூர், ஏற்கனவே எழுதி வச்ச ஒண்ன படிச்ச சொல்றதுக்கு முடியாதா என்ன ஒரு சோதிடனால், அதில் என்ன உண்மையான சோதிடன், பொய்யான சோதிடன்!

    உண்மையான சோதிடன்னா எப்படி எல்லா கோள்களுக்கும் போய் ஆராய்ச்சி பண்ணிட்டு வந்தவனா?

    பதிலளிநீக்கு
  14. போன் ஒயர் கழண்டு மூணு நாள் ஆச்சு !

    பதிலளிநீக்கு
  15. //முன்னோர்கள் அவுத்து போட்டு திருஞ்சாங்க, நாமளும் அப்படியே திரிவோமா!?//
    ரைட்டு கும்மி ஆரம்பிச்சிடுச்சி ?!. முன்னோர்கள் வாயில் சாப்பிட்டார்கள். இப்போது வேறு எங்காவது சாப்பிட முடியுமா ? :)
    இப்போது இடத்திற்கு இடம் ஆடை கூட மாறுபடுகிறது. (இப்படியே விவாதம் தொடர்ந்தால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி எனும் சொல்வடை தான் ஞாபகம் வருகிறது.)

    //போன் ஒயர் கழண்டு மூணு நாள் ஆச்சு !//
    கும்மி மாலை நேரம் தொடரும்.

    பதிலளிநீக்கு
  16. //கும்மி மாலை நேரம் தொடரும். //

    சாயந்தரம் எங்களுக்கு வேற எடத்துல அப்பாயின்மென்ட் இருக்கு

    பதிலளிநீக்கு
  17. இதுயும் நீங்கள் சொன்னதுதான்...

    //1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை வானியல் பொருட்கள் அனைத்தையும் குறிக்கும் பொருளில் பயன்பட்டு வத்தது. //

    இதும் நீங்கள் சொல்வதுதான்...
    ///விண்மீன், நட்சத்திரம்//
    அவை மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிட தகுந்த மாற்றம் செய்வதில்லை என்பதால் அவற்றை பற்றி ஆராய்ச்சியும் அறிவியல் அறிவும் அப்போது இல்லை.

    அவை கிரங்களாக குறிப்பிட படவும் இல்லை. பூமிக்கு மிக நெருங்கிய பொருள்கள் மட்டுமே கிரகங்களாக குறிக்க பட்டன.//

    வானியல் பொருட்கள் அனைத்தையும் என்பது இப்போது பூமிக்கு மிக நெருங்கிய பொருள்கள் என்றளவிற்கு வந்துவிட்டது.

    **

    ஜோதிடத்தின் அடிப்படை உங்களுடனே இருக்கட்டும். ஜோதிடம் அறிவியல் அல்ல என்பதுதான் நான் சொல்லவருவது.

    கிரகம் என்ற வார்த்தையின் காலத்தைச் சொல்லுங்கள் முடிந்தால்.

    ஏன் என்றால் நீங்கள்தான் "அதைத்தவிர அந்தக்காலத்தில் தமிழில் வார்த்தைகளே இல்லை வானியல் பொருட்கள் அனைத்தையும் கிரகம் என்று சொன்னார்கள்" என்று சொன்னீர்கள்.

    அப்படி எல்லா வானியல் பொருட்களுக்கும் கிரகம் என்ற தமிழ்சொல் மட்டும் பாவிக்கப்பட்ட காலம் எது என்று சொன்னால் எனக்கு பேருதவியாக இருக்கும்.
    ***

    //மொழிமாற்றம் செய்து வாதிடுவதை நிறுத்தவும்//

    :-(((
    உங்களிடம் ஏன் வாதம் செய்யவேண்டும் நான் ?

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.

    கிரகம் என்ற ஒரே தமிழ்சொல் இருந்தகாலத்தை உங்கள்மூலம் அறியவே கேள்வி கேட்டேன் மற்றபடி ஒன்றும் இல்லை.

    **

    //சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் என்ன சம்பந்தம் ? சூரிய மைய கொள்கை ஏற்றுக் கொண்டு பல வருடங்கள் ஆகி விட்டது.//

    நல்லது.

    நான்கூட ஜோதிட நவகிரகத்தில் சூரியனும் ஒரு கிரகம் என்று தவறாக நினைத்துவிட்டேன்.

    அதானே சூரியன் மையக்கொள்கை வந்தபின்பு சூரியன் கிரகமாக இல்லாமல் நடு ஸ்டாராக ஜோதிடத்தில் மாறிய நாள் எனக்குத் தெரியாது. சொன்னமைக்கு
    நன்றி!

    பதிலளிநீக்கு
  18. சூரியன யாராலையும் சுட முடியாது !

    இன்பாக்ட் சூரிய வெப்பம் தான் நம்மள சுடும்

    பதிலளிநீக்கு
  19. //அதானே சூரியன் மையக்கொள்கை வந்தபின்பு சூரியன் கிரகமாக இல்லாமல் நடு ஸ்டாராக ஜோதிடத்தில் மாறிய நாள் எனக்குத் தெரியாது. சொன்னமைக்கு
    நன்றி! //

    நாம் கோவில் பக்கம் போவதில்லை என்பதால், நவகிரகத்துக்கு பின் துணைகோள்களுக்காகவே இன்னோரு ரவுண்டு உட்ருக்காங்கன்னு கூட புருடா விடுவாங்க!

    சூரியன் கிரகம்னாரு, ஆனா சோதிடட்துல 27 நட்சத்திரத்தை என்னான்னு சொல்லுவாரு, அவையெல்லாம் மனிதனுக்கு அருகில் இருக்கும் மற்ற கிரகங்களோ, மீதி இருக்குற நட்சத்திரமெல்லாம் ரொம்ப ரொம்ப தூரத்தில் இருக்குது போல!?

    பதிலளிநீக்கு
  20. ஒருவரின் ராசியை தீர்மானிப்பதே சந்திரன் எந்த நட்சத்திரந்த்தின் பாதத்தில் இருக்கிறது என்று தானே!

    சந்திரனுக்கும், சூரிய குடும்பத்துக்கும் சம்பந்தமேயில்லாத நட்சத்திரத்துக்கும் என்ன சம்பந்தம்!

    கேப்பையில நெய் வடியுதுன்னு சொன்னா நாங்க ம்ம்ம்ம் கேட்டுகனுமா!?

    பதிலளிநீக்கு
  21. சாயா ! சாயா !
    சாயா ! எல்லாம் சாயா!

    பட்டும் படாமலே !
    தொட்டும் தொடாமலே !
    தாமரை இல்லை மேல் நீர் போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு !

    பதிலளிநீக்கு
  22. //சோதிடத்தால் இதுவரை என்ன நன்மை மக்களுக்கு நடந்துருக்குன்னு சொல்லுங்க!//
    சோதிடம் என்பது எதிர்காலத்தை பற்றிய கணிப்பை கூறுவது; நம்புபவர்களுக்கு நன்மை பயக்கிறது. (எனக்கும்).

    //சோதிடம் பார்ப்பதால் வர இருக்கும் கெட்டதை தடுத்திட முடியுமா?//
    நன்மையையும் தீமையையும் எதிர் நோக்கி சமாளிக்கும் தன்மையை தருகிறது.

    //வானியல் பொருட்கள் அனைத்தையும் என்பது இப்போது பூமிக்கு மிக நெருங்கிய பொருள்கள் என்றளவிற்கு வந்துவிட்டது.//
    இல்லை. முன்னோர்கள் மிகப்பெரிய பொருள்களை தான் கிரகங்களாக கருதினர். வின்மீன்களை ஒரு கிரகமாக (பொருளாக) கருதவில்லை.

    சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது. அதற்கு முன் அனைத்து சமூகத்தினரும் புவிமைய கோட்பாடு கொண்டு இருந்தனர் என்பது நிரூபிக்க பட்ட வரலாறு. சோதிடம் என்பது வேறு, வானியல் என்பது வேறு. சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது. வானியலின் மாற்று அல்ல. வானியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறபடுகின்றன என்பது தெரியுமா?

    நம் முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் என கூறவில்லை. அவர்கள் பயன்படுத்தியதில் உள்ள சரியானவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. //சோதிடட்துல 27 நட்சத்திரத்தை என்னான்னு சொல்லுவாரு//

    இதற்கு தான் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.

    டிகிரி என்னும் முறை கண்டு பிடிக்க படாத அக்காலத்தில் வெவ்வேரு இடங்களில் இருந்த நட்சத்திர தொகுதிகளை வைத்து 360 டிகிரியை வகைப்படுத்தினர் அவ்வளவு தான். அவை நாம் வானத்தில் காணும் நட்சத்திரங்களில் 27 மட்டுமே அல்ல.

    பதிலளிநீக்கு
  24. //சாயா ! சாயா !
    சாயா ! எல்லாம் சாயா!//

    மிகச்சரியான பாட்டு. இதில் குறிப்பிட பட்டு இருப்பது போல சாயா என்ற வார்த்தைக்கே தோற்றமளிப்பது என்பதே பொருள்.

    தோற்றம் அளிப்பது(கற்பனையானது) எனும் போதே அது பௌதீகமான கிரகமல்ல என்பது தெளிவாகிறது.

    பதிலளிநீக்கு
  25. //சோதிடம் என்பது எதிர்காலத்தை பற்றிய கணிப்பை கூறுவது; நம்புபவர்களுக்கு நன்மை பயக்கிறது. (எனக்கும்). //

    எதிர்காலம், எதிர்காலத்தை பற்றிய கணிப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்!?

    எதிர்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகள், நிகழ்வுகள், இடங்கள் என அனைத்திற்கு பொருந்துமே அவற்றிற்கும் உங்களால் எதிர்காலத்தை சொல்லமுடியுமா?

    சுனாமியில் செத்தவர்கள் அனைவருக்கு ஒரே ஜாதகமா?,

    ஒரே நேரத்தில் பிறந்த நாயும், மனிதனும் ஒண்ணா?
    இல்லையென்றால் ஏன்?

    மனிதனின் முற்பிறவி பயன் தான் இந்த வாழ்க்கை என்றால், ஜாதகத்தால் அதை மாற்ற நினைப்பது, விதியை ஏமாறுவது போல் ஆகாதா?

    விதியை உங்களால் மாற்ற முடியும் என்றால் கடவுளை ஏமாற்றுவது போல் ஆகாதா?

    அப்படியானால் கடவுள் என்பது சக்தியில்லாத டுபாக்கூரா?

    கடவுளே டுபாக்கூர் என்றால் சோதிடம் மட்டும் உண்மையா?

    பதிலளிநீக்கு
  26. //நம் முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் என கூறவில்லை. அவர்கள் பயன்படுத்தியதில் உள்ள சரியானவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.//


    ஏன் சம்பாரிக்கிறதுக்கு வேற பொழப்பு கிடைக்கலையா?
    அப்படி ஏமாத்தி தான் ஆகனுமா?

    பதிலளிநீக்கு
  27. //ஒருவரின் ராசியை தீர்மானிப்பதே சந்திரன் எந்த நட்சத்திரந்த்தின் பாதத்தில் இருக்கிறது என்று தானே!//

    வால்பையன் உங்களுக்கு உண்மையிலேயே சோதிடத்தின் அடிப்படை தெரியுமெனில் நட்சத்திர பாதத்திற்கான விளக்கம் சொல்ல முடியுமா ? (ஏனெனில் உங்களின் கேள்விக்கான பதில் அதிலேயே அடங்கி உள்ளது)

    பதிலளிநீக்கு
  28. //
    இதற்கு தான் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.//


    நட்சத்திரம் என்பது இடம் என்று உங்கள் தேவைக்கு மாற்றி கொள்ளும் போது, சந்திரன், சூரியனும் கோள்கள் என்று உங்கள் தேவைக்கக தான் மாற்றி கொண்டீர்கள் என நான் ஏன் குற்றம் சாட்டக்கூடாது!?

    அது ஏன் 360 டிகிரியை 27 ஆக பிரிக்க வேண்டும்? 30 ஆக ஏன் பிரிக்கவில்லை,

    360/27=13.333333333

    என்ன கணக்கில் எழுதுவீர்கள், ஒரு இடத்தில் உதைக்குமே, அப்பொ பிறந்தவனெல்லாம் கேனயனா!?

    பதிலளிநீக்கு
  29. //தோற்றம் அளிப்பது(கற்பனையானது) எனும் போதே அது பௌதீகமான கிரகமல்ல என்பது தெளிவாகிறது. //

    கற்பனையான ஒன்றை கட்டிகிட்டு ஏன் அழுவோனும்!?

    சாயா என்றால் நாயர்கடை சாயா இல்லையா?

    பதிலளிநீக்கு
  30. //எதிர்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகள், நிகழ்வுகள், இடங்கள் என அனைத்திற்கு பொருந்துமே அவற்றிற்கும் உங்களால் எதிர்காலத்தை சொல்லமுடியுமா?//
    சோதிடத்தை முழுமையாக பயன்படுத்தியவர்களால் சொல்ல முடியும்

    //சுனாமியில் செத்தவர்கள் அனைவருக்கு ஒரே ஜாதகமா?,//
    புவியில் ஏற்படும் நிகழ்வு அனைவரையும் பாதிக்கும்.

    அதன் பிறகு நாடு, மாநிலம் இவை போன்று. இவற்றின் பலன் செயல்படும் போது தனிப்பட்ட மனிதர்களின் சாதகம் பயனற்றவை ஆகிவிடும்.

    //ஒரே நேரத்தில் பிறந்த நாயும், மனிதனும் ஒண்ணா?
    இல்லையென்றால் ஏன்?//
    கிரங்களால் மனிதனும் நாயும் பிறப்பதில்லை. மனிதனும் நாயும் பிறக்கும் போது கிரக நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். கிரக பலன்கள் உயிரினங்களை பொருத்து மாறுபடும்.

    //மனிதனின் முற்பிறவி பயன் தான் இந்த வாழ்க்கை என்றால், ஜாதகத்தால் அதை மாற்ற நினைப்பது, விதியை ஏமாறுவது போல் ஆகாதா?//
    சோதிடத்தால் எதையும் மாற்ற இயலாது.

    //ஏன் சம்பாரிக்கிறதுக்கு வேற பொழப்பு கிடைக்கலையா?
    அப்படி ஏமாத்தி தான் ஆகனுமா?//
    பணம் மட்டும் தான் வாழ்க்கையா இந்த பாழாப்போன உலகத்திலே என்று கேட்க தோன்றுகிறது. ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் எந்த தொழிலில் இல்லை?

    ஒரு துறை தன் விதிகளை சரி செய்து கொள்வது பித்தலாட்டம் எனில் அறிவியல் ஆயிரக்கணக்கான முறை இத்தவறை செய்துள்ளது வால்பையன். நீங்கள் அறிவியல் அறிஞர்களிடம் இக்கெள்வியை கேட்பீர்களா ?

    பதிலளிநீக்கு
  31. //360 டிகிரியை 27 ஆக பிரிக்க வேண்டும்//
    9 கிரகங்கள் * 3 = 27 நட்சத்திரங்கள். வட்டத்தை 9 கிரகங்களுக்கும் பிரித்து உள்ளனர்.

    வால்பையன் pi=3.1428571428571428571428571428571 என ஏன் உபயோகிக்கிறார்கள் ? 3 எனில் இருந்தால் நன்றாக இருக்காது ? :)

    பதிலளிநீக்கு
  32. //வால்பையன் உங்களுக்கு உண்மையிலேயே சோதிடத்தின் அடிப்படை தெரியுமெனில் நட்சத்திர பாதத்திற்கான விளக்கம் சொல்ல முடியுமா ? (ஏனெனில் உங்களின் கேள்விக்கான பதில் அதிலேயே அடங்கி உள்ளது) //

    அவன் பிறக்கும் போது சந்திரன் எங்க இருக்கோ, அது தான் அவன் ராசிம்பிங்க!

    பகல்ல பிறந்தவனுக்கும் ,இரவில் பிறந்தவனுக்கும் ஒரே ராசி நான் காட்டட்டுமா?

    பதிலளிநீக்கு
  33. //புவியில் ஏற்படும் நிகழ்வு அனைவரையும் பாதிக்கும்.

    அதன் பிறகு நாடு, மாநிலம் இவை போன்று. இவற்றின் பலன் செயல்படும் போது தனிப்பட்ட மனிதர்களின் சாதகம் பயனற்றவை ஆகிவிடும்.//

    அப்பூறம் எதுக்கு மனுச்னுங்களுக்கு ஜாதகம் பாக்குறீங்க, பூமிக்கு பாக்க வேண்டியது தானே!

    அது காசு தராதுன்னு பாக்குறதில்லையா?

    பதிலளிநீக்கு
  34. //கிரக பலன்கள் உயிரினங்களை பொருத்து மாறுபடும்.//

    ஆணுக்கும், பெண்ணுக்கும் கூட வேறுபடுமா?

    பதிலளிநீக்கு
  35. //சோதிடத்தால் எதையும் மாற்ற இயலாது. //

    ஆனா காசு மட்டும் சம்பாரிக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  36. //ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் எந்த தொழிலில் இல்லை?//

    தொழிலுக்குள் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள், ஏமாற்றுவதே தொழிலாக இது மட்டும் தானே

    பதிலளிநீக்கு
  37. //ஒரு துறை தன் விதிகளை சரி செய்து கொள்வது பித்தலாட்டம் எனில் அறிவியல் ஆயிரக்கணக்கான முறை இத்தவறை செய்துள்ளது வால்பையன். நீங்கள் அறிவியல் அறிஞர்களிடம் இக்கெள்வியை கேட்பீர்களா ? //

    எவனாயிருந்தாலும் கேட்பேன்!
    விஞ்ஞானி சொன்னா நம்பிடனுமா, அதற்குண்டான சாத்தியகூறுகள் உண்மையான்னு யோசிக்க நமக்கு அறிவு இல்லையா?

    பதிலளிநீக்கு
  38. //வால்பையன் pi=3.1428571428571428571428571428571 என ஏன் உபயோகிக்கிறார்கள் ? 3 எனில் இருந்தால் நன்றாக இருக்காது ? :) //

    அப்ப இங்கிருந்து தான் அந்த 27 வந்துச்சா?
    நல்லா யூஸ் பண்றிங்க அறிவியல!

    பதிலளிநீக்கு
  39. //பகல்ல பிறந்தவனுக்கும் ,இரவில் பிறந்தவனுக்கும் ஒரே ராசி நான் காட்டட்டுமா?//

    வால்பையன் முதலில் பகலும் இரவும் சந்திரன் சுழல்வதால் அல்ல புவி சுழல்வதால் ஏற்படுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். அச்சாதகத்தில் பாருங்கள் லக்னம் (புவி) இடம் மாறி இருக்கும்.
    (ஏன் சாதகம் கற்று கொள்ள சொன்னேன் எனபது புரிகிறதா ?)

    நட்சத்திர பாதத்திற்கான விளக்கம் நானே அளிக்க வேண்டும் போல் இருக்கிறது. நட்சத்திர பாதம் எனும் போதே ”சோதிட நட்சத்திரம்” நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  40. //அப்பூறம் எதுக்கு மனுச்னுங்களுக்கு ஜாதகம் பாக்குறீங்க, பூமிக்கு பாக்க வேண்டியது தானே!//

    ஆம் கண்டிப்பாக பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். சுனாமி, இந்தியா பற்றிய இடுகைகளை பார்த்து விடுங்கள்.

    நான் தொழில் முறை சோதிடன் இல்லை வால்பையன். உண்மையில் சோதிடம் முழுவதும் அறிந்தவன் கூட இல்லை. ஒரு மாணாக்கன் மட்டுமே !!!

    பதிலளிநீக்கு
  41. //ஆனா காசு மட்டும் சம்பாரிக்கலாம் இல்லையா? தொழிலுக்குள் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள், ஏமாற்றுவதே தொழிலாக இது மட்டும் தானே//
    இல்லை.
    தொழிலாக இல்லாமல் வித்தையாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
    காசு வாங்காமல் மக்களுக்கு ஆலோசனை தருபவர்கள் இருக்கிறார்கள்.
    தனது வாழ்க்கையையே ஆராய்ச்சிக்கு செலவிட்டவர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  42. //அப்ப இங்கிருந்து தான் அந்த 27 வந்துச்சா?//
    இல்லை. 30 நட்சத்திரம் ஏன் இல்லை என்ற பகுத்தறிவு கேள்வியை நினைத்து உளம் மகிழ்வால் கேட்டேன் :) :)

    பதிலளிநீக்கு
  43. //எவனாயிருந்தாலும் கேட்பேன்!
    விஞ்ஞானி சொன்னா நம்பிடனுமா, அதற்குண்டான சாத்தியகூறுகள் உண்மையான்னு யோசிக்க நமக்கு அறிவு இல்லையா?//

    இல்லை வால்பையன் மனித மூளை அனைத்தையும் தானாகவே அறிய முடியாது. சூரியன் மையம் என்று கூறிய கலிலியோவை நினைவில் கொள்ளுங்கள். http://ariviyalpaarvai.blogspot.com/2007/07/blog-post_13.html

    கணினி எனும் விடயம் வரும் என்பதை 200 வருடங்களுக்கு முன் கூறி இருந்தால் பைத்தியம் என்று கூறி இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  44. //ஆணுக்கும், பெண்ணுக்கும் கூட வேறுபடுமா?//

    பெண்களுக்கு உள்ள சிறப்பு உருப்புக்களை & தன்மைகளை பொருத்து பலன்கள் மாறும்

    பதிலளிநீக்கு
  45. //வால்பையன் முதலில் பகலும் இரவும் சந்திரன் சுழல்வதால் அல்ல புவி சுழல்வதால் ஏற்படுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். அச்சாதகத்தில் பாருங்கள் லக்னம் (புவி) இடம் மாறி இருக்கும்.
    (ஏன் சாதகம் கற்று கொள்ள சொன்னேன் எனபது புரிகிறதா ?)//


    அப்போ ராசி என்பது டுபாக்கூரா?
    லக்னம், ராசி உடல், உயிர் மாதிரி தானே!

    அதில் ஒன்று டுபாக்கூராக இருந்தால் சாதகமும் பொய் தானே!?

    பதிலளிநீக்கு
  46. //நட்சத்திர பாதத்திற்கான விளக்கம் நானே அளிக்க வேண்டும் போல் இருக்கிறது. நட்சத்திர பாதம் எனும் போதே ”சோதிட நட்சத்திரம்” நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். //

    அட்சரேகை, தீர்கரேகை மாதிரி உங்களுக்கு எல்லாமே கற்பனை கோள்கள், நட்சத்திரங்கள் தான்!

    ஆனால் சோதிடம் மட்டும் கற்பனை என்று ஒப்புகொள்ள மாட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  47. //சுனாமி, இந்தியா பற்றிய இடுகைகளை பார்த்து விடுங்கள்.//

    லிங்க் கொடுங்க!

    இந்தியாவின் சாதகத்தை எதை வைத்து கணிக்கிறீர்கள் என்று விளக்கமும் கொடுங்கள்!

    இந்தியாவிற்கும், இந்தோனிசாவிற்கும் ஒரே சாதகமா?

    பதிலளிநீக்கு
  48. //காசு வாங்காமல் மக்களுக்கு ஆலோசனை தருபவர்கள் இருக்கிறார்கள்.
    தனது வாழ்க்கையையே ஆராய்ச்சிக்கு செலவிட்டவர்கள் இருக்கிறார்கள். //

    இதில் ஆராய்ச்சி பண்ன என்ன இருக்கிறது,
    சோதிடபுத்தகம் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டது தானே! அதை தானே மாறி மாறி உளரிகொண்டு இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  49. ////அப்ப இங்கிருந்து தான் அந்த 27 வந்துச்சா?//
    இல்லை. 30 நட்சத்திரம் ஏன் இல்லை என்ற பகுத்தறிவு கேள்வியை நினைத்து உளம் மகிழ்வால் கேட்டேன் :) :) //

    360 டிகிரியை பிரிக்க நீங்கள் அதை 27 நட்சத்திரத்திற்குள் அடக்கி கொண்டது முன்னாடி செய்த பிராடின் வேலை தான், ஆனால் ஒரு நட்சத்திரத்துக்கு நேரத்தில் துண்டு விழுமே, அந்த நட்சத்திரம் என்ன பாவம் செய்தது!

    இத்தனைக்கும் அது கற்பனை நட்சத்திரம்!

    பதிலளிநீக்கு
  50. //கணினி எனும் விடயம் வரும் என்பதை 200 வருடங்களுக்கு முன் கூறி இருந்தால் பைத்தியம் என்று கூறி இருப்பார்கள். //

    கணிணி என்பது மேம்படுத்தபட்ட ஒரு பொருள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே அபாகஸ் என்ற பொருள் கனிதத்திற்கு உதவியாக இருந்தது!

    ஆனால் சோதிடம் எழுதி வைத்ததை இன்றும் நம்பி கொண்டிருகிறதே!

    கணீணி பொசுகென்று கண்டுபிடிக்கபட்ட ஒரு பொருள் அல்ல நண்பரே, உதாரணத்திற்கு வேறு எதாவது கொண்டுவாருங்கள்!

    பதிலளிநீக்கு
  51. //பெண்களுக்கு உள்ள சிறப்பு உருப்புக்களை & தன்மைகளை பொருத்து பலன்கள் மாறும் //

    இனபொருக்க உறுப்புகள் தவிர்த்து வேறு என்ன சிறப்பு தனியாக!?

    பதிலளிநீக்கு
  52. பேய் இருக்கா இல்லையா !

    இல்ல பேய் வர்றத ஏதாவது அறிகுறி வெச்சு தெரிஞ்சுக்கலாமா

    பதிலளிநீக்கு
  53. //பேய் இருக்கா இல்லையா !

    இல்ல பேய் வர்றத ஏதாவது அறிகுறி வெச்சு தெரிஞ்சுக்கலாமா //

    கல்யாணம் ஆனவங்க கண்ணுக்க்கு தான் அது தெரியும்!

    பதிலளிநீக்கு
  54. மிருக சிரீச நச்சத்திரத்த பேய்ங்களுக்கு ரொம்ப புடிக்குமாமே தானைத் தலைவர் சொல்றாரு

    பதிலளிநீக்கு
  55. ஏன் பக்கத்து வீட்ட எட்டிப் பாத்தா தெரியாதா

    பதிலளிநீக்கு
  56. //ஏன் பக்கத்து வீட்ட எட்டிப் பாத்தா தெரியாதா //

    அந்த பேய் நம்மளை ஒண்ணும் செய்யாதே!

    பதிலளிநீக்கு
  57. //அப்போ ராசி என்பது டுபாக்கூரா? கற்பனை கோள்கள், நட்சத்திரங்கள் தான்!//
    உண்மையில் வானியல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் வால்பையன். அப்போது தான் இரவு பகல் எப்படி ஏற்படுகிறது ? உதயம் (லக்னம்) என்பது என்ன ? சந்திரன் புவிக்கு உள்ள பாகை (இராசி) என்ன? என்பது தெரியும்.
    இல்லாவிட்டால் இப்படி தான் கண்டதையும் குழப்பி குருமா வைக்க நேரிடும்.
    (நான் இங்கு சொல்வது சோதிடம் கூட இல்லை. அடிப்படை வானியல் மட்டும் தான்)

    நமக்கு ஒன்று தெரியாவிடில் அது டுபாக்கூர் அல்ல.


    //அட்சரேகை, தீர்கரேகை மாதிரி உங்களுக்கு எல்லாமே கற்பனை கோள்கள், நட்சத்திரங்கள் தான்!//
    கோள்கள், நட்சத்திரங்கள் எங்கே கற்பனை? முற்காலத்தில் அவை பயன்படுத்தப்பட்ட அர்த்தங்கள் இப்போது மாறி உள்ளன அவ்வளவு தான்.


    //1. எழுதி வைத்ததை இன்றும் நம்பி கொண்டிருகிறதே! 2.இதில் ஆராய்ச்சி பண்ன என்ன இருக்கிறது,
    சோதிடபுத்தகம் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டது தானே! அதை தானே மாறி மாறி உளரிகொண்டு இருக்கிறார்கள்! 3. லிங்க் கொடுங்க!//

    சமீபத்திய ஆராய்ச்சிகள் சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை
    இந்திய சோதிடம் : இந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்

    //இனபொருக்க உறுப்புகள் தவிர்த்து வேறு என்ன சிறப்பு தனியாக!?//
    அவை பொருத்து மட்டும் தான் அவர்களுக்கு சிறப்பு பலன்கள். மற்ற படி வேறு தனி பலன்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  58. //நட்சத்திரத்துக்கு நேரத்தில் துண்டு விழுமே,//
    அதெல்லாம் துண்டும் விழாது வேட்டியும் விழாது.

    சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது.
    1 பாகை = 60 கலை
    1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
    30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள்
    360 டிகிரி = 108 பாதங்கள்

    ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  59. //ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. //

    புரியல!

    27*4=108 தான் வருது

    360!?

    பதிலளிநீக்கு
  60. 27*4=108 * 3டிகிரி 20 கலை = 360டிகிரி

    பதிலளிநீக்கு
  61. எத்தனை கலை, ஒரு பாகை!?

    பதிலளிநீக்கு
  62. //எத்தனை கலை, ஒரு பாகை!?//

    1 பாகை = 60 கலை

    108*3=324 +
    108*20 கலை = 2160/60= 36பாகை = 360 பாகை

    சரியா ? :) :)

    பதிலளிநீக்கு
  63. //வால்பையன்...
    இனபொருக்க உறுப்புகள் தவிர்த்து வேறு என்ன சிறப்பு தனியாக!?//

    //Sabarinathan Arthanari சொன்னது…
    அவை பொருத்து மட்டும் தான் அவர்களுக்கு சிறப்பு பலன்கள். மற்ற படி வேறு தனி பலன்கள் இல்லை.//

    **

    என்னங்க கொடுமை இது சபா?
    ஆண் பெண் இருவருக்கும் இனப்பெருக்க உறுப்பு இருக்கே?

    கருப்பை தான் பெண்ணிற்கு உள்ள அதிகப்படியான ஒன்று
    மார்பகம் ஆணுக்கும் உள்ளது பெண்ணுக்கும் உள்ளது. பால் சுரப்பதும் அள‌வும் தான் வேறுபாடு. பால் சுரக்காத மார்பக‌ம் உடைய பெண்கள் உண்டு (ஹார்மோன் குறைபாடுகள்)

    1.
    Transgenders
    Male to Female
    ஆண் பெண்ணாக மாறும் போது (நோ கருப்பை) , ஹார்மோன்கள் உதவியுடன் மார்பகத்தை பெரிதாக்கி , ஆண்குறியை வெட்டிவிட்டால்...

    2.Transgenders
    Female to Male
    பெண் ஆணாக மாறிய பின்னால் கருப்பை எடுக்கப்பட்டு, செயற்கை ஆணுறுப்பு பொருத்தப்பட்டு , முலைகளையப்பட்டு..

    இவர்களை ஆராய சிறப்பு பலன்கள் உள்ளதா? அவர்களாக சொல்லாமல் கண்டுபிடிக்க முடியுமா? ஆச்சர்யமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  64. //தயவு செய்து ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிமாற்றம் செய்து வாதிடுவதை நிறுத்தவும். //
    என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். ஏனெனில் அவ்வாறு செய்வது பதிவின் அடிப்படையையே மாற்றுவது போலாகும் என்பதால் தான்.
    //வாதிடுவதை நிறுத்தவும்.// என்று அல்ல.

    கல்வெட்டு இதில் என்ன கொடுமையை கண்டீர்கள்? ஆண், பெண் இருவருக்கும் உறுப்பு ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? 18+ போட வேண்டி வரும் என்பதால் அதை பற்றி அதிகம் கூறவில்லை.

    1. கர்ப்ப பை என்பது மட்டுமல்ல.
    2. மாதவிலக்கு என்பதும் உண்டு.
    3. மெனோபாஸ் எனும் நிலை உண்டு.
    4. தாய்மை அடையும் நிலை உள்ளது.
    5. பாலூட்டும் நிலை உள்ளது.

    திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய குறிப்புகளும் சோதிடத்தில் உண்டு. அவர்களாக சொல்லாமல் கண்டு பிடிக்க முடியும்.

    ஹார்மோன்களில் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றம் ஜீன்களை பொறுத்தது எனில் பிறக்கும் போதே கண்டு பிடிக்க முடியுமா முடியாதா ? (இது சோதிடத்திற்கு நேரடியாக சம்பந்தமில்லை எனினும் பிரச்சிணையின் வேறு கோணத்தை உணர்த்த பயன் படுத்தி கொண்டேன்)

    இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.

    இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோயை தீர்மானிக்கிறது.

    பதிலளிநீக்கு
  65. //அவர்களாக சொல்லாமல் கண்டு பிடிக்க முடியும்.
    //


    குடியை மறக்க அற்ப்புத மருந்து !

    (குடிப்பவர்களுக்கு தெரியாமலும் கொடுக்கலாம் !)

    பதிலளிநீக்கு
  66. // அவர்கள் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கேவரவில்லை//


    இன்றும் எல்லா கோவில்களிலும் நவக்ரகங்களில் மையமாக இருப்பது சூரியன் தான்

    பதிலளிநீக்கு
  67. //

    supersubra சொன்னது…


    இன்றும் எல்லா கோவில்களிலும் நவக்ரகங்களில் மையமாக இருப்பது சூரியன் தான்//

    நன்றி சுப்ரா.
    நான் சொல்வது சூரியன் என்ற நட்சத்திரம் பற்றி. சூரியன் (நட்சத்திரம்) , சனி (கோள்) மற்றும் சந்திரன்(துணைக்கோள்) , என்று எல்லாவற்றையும் கலந்துகட்டி ஒரே அள‌வீட்டில் குறிப்பிடும் கிரகம் குறித்தானது அல்ல.

    பதிலளிநீக்கு
  68. Sabarinathan Arthanari

    நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

    Transgenders
    M to F
    F to M

    Same Sex orientation
    M-M
    F-F
    Bi Sex Orientation
    M-F-M-F

    Straight
    M-F

    போன்ற நடக்கப்போகும் நிகழ்வை குழந்தை பிறக்கும் முன்னரே, அவர்களின் ஜீன் வேளையைக்காட்டு முன்னரே (ஜீன் இருந்தும் அது செயல்பாட்டை குறைத்துக் கொள்ளும் முன் அல்லது அதிகமாக செயல்படும்முன்) அறிவியல் மருத்துவத்தில் அறிய‌முடியாது.

    ஜோசியத்தில் அறியமுடியும் என்றால் அடுத்த நோபல் 9உயிரியல் ஜீன் மருத்துவ துறையில்) உங்களுக்கே.
    தயவு செய்து பேட்டண்ட் அப்ளை செய்யவும்.

    பதிலளிநீக்கு
  69. //கிரகம் குறித்தானது அல்ல//
    கிரகம் என்பதன் அர்த்தம் தற்போது மாறிவிட்டது என்பதை ஏற்காமல் திரும்ப திரும்ப கும்மி அடிப்பதால் யாருக்கு என்ன லாபம் ?

    //ஜோசியத்தில் அறியமுடியும் என்றால் //
    குழந்தை பிறக்கும் முன் சோதிடம் பார்க்க முடிவதாக கூறும் உங்களது சோதிட அறிவை (புது வித பகுத்தறிவாக) பேடண்ட் செய்து கொள்ளுங்கள் :) :)

    பதிலளிநீக்கு
  70. //Sabarinathan Arthanari சொன்னது…
    கிரகம் என்பதன் அர்த்தம் தற்போது மாறிவிட்டது என்பதை ஏற்காமல் திரும்ப திரும்ப கும்மி அடிப்பதால் யாருக்கு என்ன லாபம் ?
    //

    இன்னும் நீங்கள் கிரகம் மட்டும் இருந்த தமிழ் காலத்தைச் சொல்லவிலை.

    நட்சத்திரம் என்ற ஒன்றும் கிரகம் என்ற ஒன்றும் ஜோசியத்தில் ஒரே காலத்தில் உள்ளது. ஆனால் சூரியன் கிரகமாக அடையாளம் காணப்படுகிறது.

    //குழந்தை பிறக்கும் முன் சோதிடம் பார்க்க முடிவதாக கூறும் உங்களது சோதிட அறிவை (புது வித பகுத்தறிவாக) பேடண்ட் செய்து கொள்ளுங்கள் :) :)//

    நான் என்றும் ஜோசியத்தால் இது முடியும் என்று எதையும் சொன்னதில்லை. சொன்னதில்லை.

    **

    உங்களிடம் பேச்சை ஆரம்பித்தமைக்கு நான் வருந்துகிறேன்
    நான் அடிப்பது கும்மி அல்ல.

    நன்றி !

    பதிலளிநீக்கு
  71. //போன்ற நடக்கப்போகும் நிகழ்வை குழந்தை பிறக்கும் முன்னரே,
    ஜோசியத்தில் அறியமுடியும் என்றால்//
    இப்படி கூறியது எந்த சோதிடர் ? உங்களை தவிர :) :)

    திரும்ப திரும்ப நட்சத்திரம் என்று கூறுகிறீர்களே அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ? நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து அடையாளம் கண்டதை தவிர.

    சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்றா ? சூரியன் இல்லாவிட்டால் மற்ற நட்சத்திரங்களால் புவியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியுமா ? புவிக்கு தரும் பலன்களை வைத்து தான் சொற்களின் வித்தியாசம் இருக்கிறது.

    இப்போதைய நட்சத்திரம், சூரியன் என்பதன் விளக்கங்களே வேறு. ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? இதை புரிந்து கொள்ளாமல் ஒரே கேள்வியை கேட்பதால் கும்மியை தவிர என்ன பயன்?

    //உங்களிடம் பேச்சை ஆரம்பித்தமைக்கு நான் வருந்துகிறேன்
    நான் அடிப்பது கும்மி அல்ல.//
    நல்ல விவாதமாக நினைத்தது வெறும் கும்மியாக முடிந்தது எனக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  72. //Sabarinathan Arthanari சொன்னது…

    ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? //

    ?????

    கொடுமை இது.

    நமது பூமி(Planet Earth )யானது சூரியன்(Sun) என்னும் நட்சத்திரக் (Star) குடும்பததைச் சார்ந்தது.

    நமது கேலக்சியில் மட்டுமே இது சூரியன்(Sun)போல பல ஆயிரம் நட்சத்திரங்கள்(Star) உள்ளன.

    சூரியன் (Sun) என்பது ஒரு நட்சத்திதின் (Star) பெயர் அது மட்டுமே நட்சத்திரம்(Star) இல்லை.

    ---

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்(Star) ஒரு பெயர் உண்டு(Ex: sun). அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தைச்(Star) சுற்றியும் கோள்கள்(Planet) உண்டு. அந்த கோள்களைச் சுற்றி துணைக்கோள்கள்(Satellite) உண்டு.

    இது போல பலகோடி நட்சத்திரங்களை(Star) உள்ளடக்கியது கேலக்சி.

    பலகோடி கேலக்சிகளை உள்ளடக்கியது யுனிவர்ஸ்.

    பதிலளிநீக்கு
  73. //Sabarinathan Arthanari சொன்னது…

    ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? //

    மனிதன்னு ஒரு பொது பெயர் இருக்கும் போது அருண்ணு(என் பேர் தான்) பேர் வச்ச முட்டாள் யாருங்க!?

    பதிலளிநீக்கு
  74. உண்மையில் நீங்கள் கேட்ட கேள்வி ஆங்கிலத்துக்கு வந்த சோதனை!

    உங்க தலைப்பு எப்படி மேச்சாகுது பாருங்க!

    பதிலளிநீக்கு
  75. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  76. Sabarinathan Arthanari,
    1. நீங்கள் பூமியையும்(Earth) கிரகம் (Planet) என்று சொல்கிறீர்கள்.

    2.நிலவையும்(Moon) கிரகம் (Planet) என்று சொல்கிறீர்கள்.

    3.சூரியனையும்(Sun) கிரகம் (Planet) என்று சொல்கிறீர்கள்.

    4.கேட்டால் அந்தக்காலத்தில் எல்லாமே கிரகம்தான்(Planet) என்றும் சொல்கிறீர்கள்.

    5.சரி, அது எந்தக்காலம்? என்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.


    FYI:
    http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8

    மேலே உள்ள் சுட்டியில் கோள் என்ற சொல்லும் பழந்தமிழில் உள்ளது.

    **

    6. அதெல்லாம் இருக்கட்டும்.
    இப்போதுதான் கோள்(Planet),துணைக்கோள்(Satellite),நட்சத்திரம்(Star) என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறதே.

    7. ஏன் இன்னும் ஜோசியத்தில் எல்லாவற்றையும் கிரகம்(Planet) என்று இருக்க வேண்டும்? மாற்றவேண்டியதுதானே?


    ***********************************

    எல்லாவற்றிற்கும் மேலாக.. நீங்கள் இப்படிக்கேட்டு
    // ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? //

    உங்களை வெளிப்படுத்துகிறீர்கள்.

    http://www.tamilscience.co.cc என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா??

    பதிலளிநீக்கு
  77. //நமது கேலக்சியில் மட்டுமே இது சூரியன்(Sun)போல பல ஆயிரம் நட்சத்திரங்கள்(Star) உள்ளன.
    மனிதன்னு ஒரு பொது பெயர் இருக்கும் போது அருண்ணு(என் பேர் தான்) பேர் வச்ச முட்டாள் யாருங்க!?//
    :) :) தனித்து தெரிவதற்கு தான் ஏனெனில் அணைத்து வகையானவர்களும் ஒரே மாதிரி இல்லை. பலன்கள் வேறு வேறு. இதெல்லாம் எனக்கும் தெரியும் அறிவு பூரணமாக பேசுவதாக சம்பந்தமில்லாமல் பேசும் உங்களுக்கு தெளிவு படுத்தவே இதை கேட்டேன். அப்போது சூரியன் என்பதும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் வேறு வேறு என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? (இது அறிவியல் நிறுபிக்க பட்டது. தெரியவில்லை எனில் தாவரங்களின் ஸ்டார்ச் சேகரிப்பு படியுங்கள். மற்ற நட்சத்திரங்கலால் இது நம் பூமியில் நிகழுமா ?)

    அப்போது என் சூரியனுக்கு தனித்து பெயர் கொடுத்துள்ள சோதிடத்தை விமர்சிக்கிறீர்கள். கவனியுங்கள். நான் சொல்வது நேரடி வானியல் அல்ல. புவியின் பலன்கள் மட்டும் தான். இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றன

    பதிலளிநீக்கு
  78. //.கேட்டால் அந்தக்காலத்தில் எல்லாமே கிரகம்தான்(Planet) என்றும் சொல்கிறீர்கள்.//

    திரும்ப சொல்கிறேன் பதிவை படியுங்கள். சோதிடம் சொல்லும் கிரகத்திற்கும் (பழைய வார்த்தைக்கும்) இப்போதைய பிளானெட் என்பதன் கருத்திற்கும் சம்பந்தம் இல்லை.

    இதை புரிந்து கொள்ளாமல் பின்னூட்டமிட்டால் கும்மி என்று தான் கூற முடியும்

    பதிலளிநீக்கு
  79. //இப்போதுதான் கோள்(Planet),துணைக்கோள்(Satellite),நட்சத்திரம்(Star) என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறதே.

    7. ஏன் இன்னும் ஜோசியத்தில் எல்லாவற்றையும் கிரகம்(Planet) என்று இருக்க வேண்டும்? மாற்றவேண்டியதுதானே?//

    //சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது. அதற்கு முன் அனைத்து சமூகத்தினரும் புவிமைய கோட்பாடு கொண்டு இருந்தனர் என்பது நிரூபிக்க பட்ட வரலாறு. சோதிடம் என்பது வேறு, வானியல் என்பது வேறு. சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது. வானியலின் மாற்று அல்ல. வானியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறபடுகின்றன என்பது தெரியுமா?

    நம் முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் என கூறவில்லை. அவர்கள் பயன்படுத்தியதில் உள்ள சரியானவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.//

    சோதிடத்தில் இருப்பதெல்லாம் பொய் என்ற ஒன்றை மட்டுமே குறித்து பேசி கொண்டிருப்பதால் உங்க கண்களுக்கு தேரியவில்லை போல

    பதிலளிநீக்கு
  80. அது சரி வால் , கல்வெட்டு: ஸ்டாடிஸ்டிக்ஸ் ப்ரோபபிளிட்டி வகை கணிதங்களை ஒழிக்க எப்போது கொடி பிடிப்போம்

    ஏனெனில் ப்ரோபபிளிட்டி சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ என்று சொல்கிறதே :) :)

    இது பகுத்தரிவிற்கு எதிரானது அல்லவா :) :)

    (சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது. நீங்கள் கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்து தான் இப்படி எழுதி இருக்கிறேன். கேட்கும் முன் சிந்தியுங்கள்.)

    பதிலளிநீக்கு
  81. //உங்களை வெளிப்படுத்துகிறீர்கள்.

    http://www.tamilscience.co.cc என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா??//

    @கல்வெட்டு: நட்சத்திரம் சூரியன் இரண்டும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்று என்பதை விடவா இது கொடுமை ? :) :)

    பதிலளிநீக்கு
  82. @கல்வெட்டு: பழம் தமிழில் Satelliteஆ துணை கோள் என்பது எந்த அர்த்தத்தில் பயன் பட்டது தெரியுமா ? :) :)

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)