உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

 

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதில். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

கேள்வி :

//தியானம் என்பது இப்படி தான் செய்யனும் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றேன்!
நான் செய்வதே தியானம் என்ற போதே தெரியவில்லையா!?//

பதில்:

தியானம் என்பது பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். தியானம் என்பது மன அறிவியல் ஆகும். இதை நம்மால் நிரூபிக்க முடியும். வால்பையனுக்கு நான் தியானத்தை நடைமுறையிலேயே உணர்த்த முடியும். உங்களை நீங்களே உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

ஏனெனில் பிறவியிலுருந்தே கண்களை மூடி கொண்டு இருப்பவருக்கு முழு நிலவின் அருமையை விளக்குவது அவருக்கும், விளக்குபவருக்கும் துன்பம் தரும் செயல் அல்லவா?எளிமையான வழி: கண்களை திறவுங்கள். முழு நிலவு தாமாகவே தெரியும்.

அதுபோலவே தியானம் செய்யுங்கள். அந்நேரத்திற்கும், மற்ற நேரத்திற்குமான வித்தியாசம் தாமாகவே தெரியும்.

ramanar

இரமணர் சொல்கிறார். “ஒருவன் கடவுளை தேட வேண்டிய அவசியமே இல்லை. ‘நான்’ என்பது என்ன என்பது பற்றி அறிந்தாலே போதும். மற்ற ஆன்மீக / உண்மை தேடல்களுக்கான எல்லா பதில்களும் கிடைத்து விடும்”

நான் என்பது என்ன (உடலா / மனமா / உயிரா) ?

[பகுத்தறிவு வாதிகளுக்கு இப்போதே ஒரு கேள்வி உதயமாகி இருக்கும்? மனம், உயிர் என்பது பொய் என கீழ் கண்டவற்றை செய்யுங்கள் உங்களுக்கே உண்மை தெரியும்]

  1. ஒரு அலாரம் டைப் செட்டரில் 10 நிமிடங்கள் அமைப்பை ஏற்படுத்தவும்
  2. நீங்கள் ஒரு தனி அறையில் (அ) தனிமையில் தளர்வாக, வசதியாக (உடம்பை சிரமப்படுத்தாத அளவிற்கு) அமருங்கள் / படுத்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அறை உங்களுடைய உடல், உடமைகள் பற்றி நீங்கள் பொருட்படுத்தாத அளவிற்கு இருக்க வேண்டும்.
  3. உங்கள் கண்களை மூடுங்கள்.
            இப்போது உங்கள் மனம் மிக மிக வேகமாக சூப்பர் கணினியை போல சிந்தணைகள் செய்யும்.
  4. இப்போது சில சிந்தணைகள் தோன்றும். அவற்றை பின் தொடருங்கள்.
  5. எந்த சிந்தணையையும் தடை செய்யாதீர்கள். (இதுவே மிக மிக முக்கியம்) எவ்வளவு தூய எண்ணங்களானுலும், தீய சிந்தணைகளானுலும் சரியே
  6. இவ்வாறு செய்யும் போது தூக்கம் வரும். தயவு செய்து தூங்க மட்டும் வேண்டாம் ;-)
  7. நடுவில் கண் விழிக்க நேர்ந்தால் கவலை பட வேண்டாம். இவ்வாறு எவ்வளவு நேரம் இருக்க முடிந்தது என்பதை  குறிப்பெடுத்து கொள்ளவும். மறுபடியும் முயற்சி செய்யவும்.
  8. கண்களை மூடிக்கொண்டு இருந்த போது  உங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும்,
    இத்தியானத்திற்கு பிறகு 15 நிமிடங்களுக்கு நீங்கள் செய்த செயல்களையும் வரிசை கிரமமாக ஒரு பேப்பரில் குறிப்பெடுத்து கொள்ளவும்.

இவ்வளவு தான் முதற் கட்ட தியானம். உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் குறைந்த பட்சம் 3 படி நிலைகள் உள்ளன. அதை இத்தியானம் செய்பவர்களுக்கு தாமாகவே தெரியும்.

 

இம்முதற் கட்ட நிலையை செய்தவர்களுக்கு தாமாகவே பல சந்தேகங்கள் தீர்ந்து விடும்.    உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.

வாழ்த்துக்கள்.

9 கருத்துகள்:

  1. சிந்தனையைத் தொடர்ந்து கொண்டே இருங்கள், நாளா வட்டத்தில் மனம் நிச்சலனமாகி விடும் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். மணிக் கணக்கானாலும் மனசு ஓயாதிருப்பதுதான் பல வருஷங்களாக என் பிரச்சினை!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. வால்பையனுக்குப் பதில் சொல்லும்போது, அவர் அப்படி எங்கே சொன்னார் என்ற சுட்டியையும் கொடுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

    வால்பையனுக்குப் பதில் சொல்கிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது, அவர் சொல்லியிருப்பது மாதிரித் தான் இருக்கிறது. அவர் அவருடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்,அதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் அனுபவமும் வரும்போது அதுவும் மாறும்.

    பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் நிலையே வேறு. அவர்களிடம், நிச்சயமாக, உங்களுடைய முதற்கட்டம் மட்டுமல்ல கடைசிக் கட்ட தியானமும் கூடப் பயன்தராது. கண்களை இருக்க மூடிக் கொண்டு வெளிச்சம் என்பதே இல்லை, வெளிச்சம் என்பது பொய் என்று வாதிடுவதில் மட்டுமே அவர்கள் ஸ்பெஷலிஸ்டுகள்!

    அதே மாதிரி, ரமணரை மேற்கோள் காட்டியிருப்பதற்கும் ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் ஒரு விழிப்பு நிலை ஏற்பட, என் தந்தையைத் தேடித் போகிறேனென்று வீட்டை விட்டு ஓடி வந்தவர் அவர். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள், வீட்டை விட்டு ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்-நீங்கள் சொல்வது, வீட்டை விட்டு ஓடிப் போகிறவர்கள் எல்லோருமே இன்னொரு ரமணராகி விட முடியும் என்று பொதுமைப் படுத்துவது போல இருக்கிறது.

    எந்த ஒரு உண்மையும் அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது. எந்த இரு மனிதர்களுக்கும் அந்தத் தருணம் ஒரே நேரத்தில், ஒரே தடவையில் அல்லது ஒரே பிறவியில் நிகழ்ந்து விடுவதுமில்லை!

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  4. ஒரு பொருளையோ இஷ்ட தேவதையோ தெய்வத்தையோ நினைத்து மனமுருக வேண்டினால், நினைப்பது நண்டக்கும் என்பது சாஸ்திரம். அதனால் தான் கண் மூடி இரண்டு வினாடியானாலும் வழிபடுங்கள் என்கிறார்கள்.

    நாத்திகர்களுக்கு, 'எனக்கு நம்பிக்கை இல்லை' என்பது நம்பிக்கை. அவர்கள் திறமை மீது நம்பிக்கை வைப்பார்கள்.

    --
    அன்புடன்
    விஜயஷங்கர்
    பெங்களூரு
    http://www.vijayashankar.in

    பதிலளிநீக்கு
  5. //சிந்தனையைத் தொடர்ந்து கொண்டே இருங்கள், நாளா வட்டத்தில் மனம் நிச்சலனமாகி விடும்//
    வாங்க Jawarlal, நீங்கள் குறிப்பிட்டு இருந்தது முழு உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!


    //மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்//
    வாங்க supersubra, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

    //நாத்திகர்களுக்கு, 'எனக்கு நம்பிக்கை இல்லை' என்பது நம்பிக்கை. அவர்கள் திறமை மீது நம்பிக்கை வைப்பார்கள்.//
    வாங்க Vijayashankar, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  6. //சுட்டியையும் கொடுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.//
    சுட்டி இணைக்கப்பட்டுள்ளது. சுட்டி காட்டியமைக்கு நன்றி

    //கண்களை இருக்க மூடிக் கொண்டு வெளிச்சம் என்பதே இல்லை, வெளிச்சம் என்பது பொய் என்று வாதிடுவதில் மட்டுமே அவர்கள் ஸ்பெஷலிஸ்டுகள்!//

    மூல இடுகையில் இவ்வாறு பின்னூட்டம் இட்டு இருந்தேன்.
    “நானும் வால்பையன் ஊருக்கு (ஈரோடு-பள்ளிபாளையம்) பக்கத்து ஊர் தான். எனவே பெரியாரின் புத்தகங்களை விரும்பி படித்தவன் தான். அதன் பிறகு தான் உண்மையான ஆன்மிக விடயங்களுக்கான தேடலும் விடையும் கிடைத்தன.
    எனவே பகுத்தறிவு வாதிகள்(உண்மைக்கான தேடல் உள்ளவர்கள் மட்டும்) என்னை பொருத்த வரையில் ஆன்மீகத்தின் முதல் படியில் உள்ளவர்களே.”
    இவரை போன்றோருக்கு மட்டுமே என் பதில்கள்.

    //வீட்டை விட்டு ஓடிப் போகிறவர்கள் எல்லோருமே இன்னொரு ரமணராகி விட முடியும் என்று பொதுமைப் படுத்துவது போல இருக்கிறது.//

    நண்பரே இப்பதிவு வீட்டை விட்டு ஓடிப் போவது பற்றியல்ல. தியானம் பற்றியது. சரியான வகையில் கடை பிடிக்கும் யாவரும் சத்தியத்தை கண்டிப்பாக அறியலாம். எனவே தான் இது மன அறிவியல் என்கிறேன்.

    //எந்த இரு மனிதர்களுக்கும் அந்தத் தருணம் ஒரே நேரத்தில், ஒரே தடவையில் அல்லது ஒரே பிறவியில் நிகழ்ந்து விடுவதுமில்லை!//

    தியானம் என்பது மன ஒருமைப்பாட்டை பற்றியது. இது சில பயிற்சிகள் மூலம் எளிதாக பெற முடியும். தற்செயலாக / தாமாகவே சிலருக்கு மட்டுமே நிகழும்.
    ”முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்”

    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  7. //கிருஷ்ணமூர்த்தி சொன்னது…
    வால்பையனுக்குப் பதில் சொல்லும்போது, அவர் அப்படி எங்கே சொன்னார் என்ற சுட்டியையும் கொடுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்//


    http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html
    இதுதான் நண்பரே அந்த மூல இடுகை உங்கள் பதிலை அங்கேயும் தரலாம்..

    பதிலளிநீக்கு
  8. //இவ்வாறு செய்யும் போது தூக்கம் வரும். தயவு செய்து தூங்க மட்டும் வேண்டாம் ;-) //


    இங்கதான் எனக்கு ஸ்லிப் ஆயிடுது! :(

    பதிலளிநீக்கு
  9. //சந்ரு சொன்னது…
    உங்கள் பதிலை அங்கேயும் தரலாம்..



    //என் பக்கம் சொன்னது…
    நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

    சந்ரு,என் பக்கம்- வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!

    //நாமக்கல் சிபி சொன்னது…
    இங்கதான் எனக்கு ஸ்லிப் ஆயிடுது! :(
    மனதை குவிக்க உங்களுக்கு பிடித்த உயர்ந்த ஒரு பொருளை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள் ;-)

    ஆரம்பத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் மனதை குவிக்க முயற்சி செய்ய வேண்டாம்.

    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)