Aaromale (Malayalam) ஆருயுரே (தமிழில்)

 

மாமாலையேறி வரும் தென்றல்
புது மணவாளனின் தென்றல்
பள்ளி மேடையை தொட்டு தள்ளாடி பாதம் தொழுது வரும் போது
வரவேற்று மலையாளதமிழ் மனசம்மதம் சொரியும்

ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...

 

 

சுகம் சுகம் தரும் சுபவேளை
சுமங்கலி ஆகிய மணமகளே (2)

மகிழ் இரவு தன் அந்தரத்தில்
விலகி சென்றிடும் தாரகையே

பனி கண்டிட்ட கதிரொளியாய்
அகற்றி நின்றிடும் பெண்மணமே

வளைந்து நிற்கும் கிளையில் நீ கூக்கூவெனும் பூங்குயிலோ ? 
அகல்விளக்கின் பரம்சோதியை தேடியதுவோ பூரணமே ?

சுகம் சுகம் தரும் சுபவேளை
சுமங்கலி ஆகிய மணமகளே

 

ஆருயுரே...ஆருயுரே...

கரையருகே கடலோடிணையும் நதிபோல் ஸ்நேகமுண்டோ ?
மெழுகதுருகுவதுபோல் கரையும் காதல் மனதில் உண்டோ ?

ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...
ஆருயுரே...

 

இக்கவிதை விண்ணை தாண்டி வருவாயா பட மலையாள பாடலின்(http://www.youtube.com/watch?v=GO6fQFjhcSk) மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.