இந்தியாவின் வளமையான எதிர்காலம்

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும்; முந்தைய இடுகைகள்

 

எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது!

  நாட்டின் இப்போதைய சூழல் (09/2009 வரை) எப்படி இருக்கும் என்று பார்த்தோம்.

  1. வரும் பொது தேர்தலில் எந்த கூட்டணிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்காமல் இந்தியாவில் அரசியல் குழப்ப நிலை ஏற்படும்.
  2. உலக பொருளாதார குழப்ப சுமை இறுதியாக பட்ஜெட் வடிவில் ஏழை மக்களுக்கு வந்து சேரும்.
  3. மத தலைவர்களுக்கும், மத ஒற்றுமைக்கும் அச்சுருத்தல் ஏற்படும்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இத்தகைய நிலை தற்காலிகமானது தான்.

மாறுதலுக்கான காலகட்டங்கள் (09/2009 முதல் 09/2015 வரை)

  செப்டம்பரில் சூரிய திசை ஆரம்பிக்க போவதால் இது முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். 2010 அண்டு முதல் கடுமையான ஆட்சியாளர் ஒருவர் ஆட்சிக்கு வருவார்.

  ஆனால் சுக்கிர திசை முடிய போவதால், கடந்த காலங்களில் இருந்த அளவிற்கு பொருளாதர வசதிகளும், கட்டுபாடற்ற சுதந்திரமும் இருக்காது.  அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊடங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் உள்ள கட்டுபாடற்ற சுதந்திரத்தின் விளைவுகளை தான் அனுபவித்து கொண்டு இருக்கிறோமே ?! எனவே இதுவும் நல்லது தான்.

கவனிக்க பட வேண்டிய தருணம்: சூரிய திசை ராகு புத்தி (10/2010 முதல் 09/2011 வரை)

    ஒவ்வொரு ராகு திசை நடந்த போதும் இந்தியா சகிக்க முடியாத பல்வேறு கொடுமைகளுக்கும் போர்களுக்கும் உட்படுத்த பட்டதை எப்போதும் பார்த்து உள்ளோம். இக்காலகட்டத்திலும் இந்தியா மீது ஒரு நாடு படையெடுக்கும். ஆனால் எப்போதும் போல இறுதி வெற்றி இந்தியாவிற்கு தான் :-)).

இந்தியாவின் கடந்த கால வெற்றி பாதைகள்

  1. சனி திசை 08/1965 வரைnehru
    1. 1950 அனைத்து மக்களுக்குமான சம உரிமை குடியரசு: புதன் புத்தி
    2. 1956ல் மொழி வாரி மாகாணங்கள்: சுக்ர புத்தி
    3. 1964வரை நேருவின் சோஷலிஸ பொருளதார நிர்வாகம்
  2. புதன் திசை: திருமதி. இந்திரா காந்திindira
    1. பசுமை புரட்சி- உணவு உற்பத்தியில் தன்னிறைவு: (1965 புதன் புத்தி)
    2. பங்களாதேஷ் போர் வெற்றி: (16 December 1971 சூரிய புத்தி)
    3. 20 ஆண்டு கால ரஷ்ய கூட்டணி உடன்படிக்கை: (1974 செவ்வாய் புத்தி),
    4. இந்தியாவின் முதல் அணு குண்டு தயாரிப்பு 1974
  3. சுக்ர திசை vajpayee(குரு புத்தி, சனி புத்தி)
    1. திரு.வாஜ்பாய் அரசு(1998-2004)
      1. தகவல் தொழில் நுட்ப பலம்,
      2. தொலைதொடர்பு துறை வளர்ச்சி,
      3. அணுகுண்டு சோதணை வெற்றி May 11, 13, 1998
      4. கார்கில் போர் வெற்றி  June 1999
      5. உள் நாட்டு கட்டமைப்பு தங்க நாற்கர திட்டம்
    2. வானவியல் ஆராய்ச்சிkalam1
      1. செயற்கை கோள்கள்
      2. சந்திராயன் திட்டம்

சோதிட விதி: ஒரு ஜாதகருக்கு திரேகோனாதிபதிகள்(1,5,9) தங்களது திசையில் நல்ல பலன்கள் தருவார்கள் என்பது மிக சரியாக பொருந்துகிறது  அல்லவா? (இந்தியாவிற்கு சுக்ரன் -1, புதன் -5, சனி-9 அதிபதிகள்)

பொற்காலம்

   09/2015 முதல் 04/2022 வரை சந்திர திசை நடைபெறும் போது பொற்காலமாக திகழும். இது வரை நடைபெற்ற வளர்ச்சிகளை மிஞ்சும் வகையில் இக்காலகட்டத்திலிருந்து இந்தியாவிற்கு அருமையான காலம் துவங்கும். இந்தியா எல்லா துறைகளிலும் வேகமான வளர்ச்சி பெறும். 2020லிருந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும்.

இத்தொடர் இடுகைகள் உங்களுக்கு கிரகங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் நிலமையை கூட எவ்வாறு எடுத்துரைக்கும் என விளக்கி இருக்கும் என நம்புகிறேன். சோதிடம் பற்றி மேலும் பல விளக்கங்களுக்கு SP.VR. SUBBIAH போன்ற சோதிட அறிஞர்களின் பதிவுகளை படிப்பதும், அணுகுவதும் நலம்.

வாழ்க பாரதம்!

முடிவுற்றது.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா ?

  krishna1 நண்பர் இளவரசி ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் முக்கிய பகுதிக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இதே கேள்வியை பலரும் கேட்டு கொண்டுள்ளனர். இப்பதிலை இவ்வனைவருக்கும் தரக்கூடிய வாய்ப்பாக கருதுகிறேன்.

  “ஒருவன் புலுக்கமாக இருக்கிறது என்று விசிறி வீசிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் விசிறி வீசுவது என்பது கடமை காற்று வருவது அதனுடைய பலன்,ஆகவே பலனை எதிர்பார்த்துதான் ஒருவன் தன் கடமையை செய்கிறான்

  ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற பதம் பலரால் தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. பகவான்  கடமை என்பதை இது போன்ற சிறு விடயங்களுக்கு சொல்லவில்லை. இங்கு கடமை என்பதை (essential actions) தான் குறிப்பிடுகிறார், சிலர் நினைப்பது போல் வேலையை(basic tasks) அல்ல.  அதேபோல பலன் என்பது தன் சொந்த ஆதாயங்களை, புலன் நிகர்ச்சியை(self interest) தான் குறிப்பிடுகிறார்; விளைவு(result) என்பதை குறிக்கவில்லை.

  ஒருவன் தன் அடிப்படை கடமையை செய்வதற்கு கூட அதன் மூலம் தனக்கு ஒரு இன்பம், சுகம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறு உதாரணமாக சிறு குழந்தைகளை பெற்றோர் காப்பாற்றுவதும், வயதான பெற்றோரை குழந்தைகள் காப்பாற்றுவதும் என்பதும் கடமை அதில் ஒரு பலனை எதிர்பார்ப்பது தவறானது அல்லவா?

  இரண்டாவது பலனை எதிர்பார்க்காதே என்ற சொல்லாடலுக்கு பலன் கிடைக்காது என்றோ, செய்வதற்கு முன் முறைபடுத்தாதே (plan) என்றோ பொருள் அல்ல. இந்த செயலை செய்வதனால் எனக்கு இந்த பலன் தான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் தவறானது என்று குறிப்பிடுகிறார்.

  திருமணம் என்பதை உடலின்பத்திற்காக என்ற நோக்கத்திற்காக மட்டும் ஒருவன்/ஒருத்தி அக்கடமையை செய்தால் அவன் மிகுந்த ஏமாற்றம் அடைவான்/ள் என்பது சந்தேகமில்லை. எதிர்பாராத பல பக்க விளைவுகளையும் (குடும்பம், குழந்தைகள்) சந்திக்க வேண்டியிருக்கும் (இது நகைச்சுவைக்காக :-)) )

netaji1 அதே போல தான் பலருக்கும் பல உதவிகள் செய்திருந்தாலும் ஒருவரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று கவலை படுபவர்களை அதிகம் பார்த்திருப்போம். பிறருக்கு உதவி செய்வதில் கூட பலனை எதிர்பாராதீர்கள் என்று பகவான் கற்பிக்கிறார். பாரதியார், வ.உ.சி., சிவா, பகத்சிங், நேதாஜி போன்றோர்களை நினைத்து பாருங்கள்: இவர்களே உதாரண புருஷர்கள். இவர்கள் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு  ஏதேனும் சுய பலனை (ஆதாயங்களை) எதிர்பார்த்திருப்பார்களா ?

ஒருவன் அடிமையாக இருப்பதற்கு மறுப்பது என்பது கூட ஒரு கடமை தான் (தனக்கு தானே செய்து கொள்வது). எனவே தான் தன் சொந்த புலன் ஆதாயங்களை கருதாது மேற்கூறிய தலைவர்கள் பாடுபட்டனர்.

இந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2

 

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும், முதல் இடுகைக்கு இங்கு செல்லவும்]

குரு பெயர்ச்சி என்பது என்ன?

விஞ்ஞான ரீதியாக குரு (Jupiter) கிரகம் 6.12.08 அன்று பகல் 11.15 மணிக்கு, பூமிக்கு 270 டிகிரியிலுருந்து 271 டிகிரிக்கு மாறியது. தமிழில் பூமியின் 230 முதல் 270 பாகைக்கு வில்-தனுசு என்றும், 270 முதல் 300 பாகைக்கு சுறா-மகரம் என்றும் பெயர். சோதிடத்தில் இதையே சோதிடத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு  குருபகவான் பெயர்ச்சியடைந்தார் என்று கூறுவர். 

 

குரு பெயர்ச்சியின் விளைவுகள் எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சியின் ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பலன்கள் பூமிக்கு கிடைத்து விடும் என்பது சோதிட விதியானதால் நாம் 6.11.2008 நாளிலிருந்து கிடைக்கும் பலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். சமீபத்திய குரு பெயர்ச்சி உலகிற்கு மிக முக்கியமான கிரகமான குரு சாதகமாக இல்லாத சூழ்நிலையை இப்போது உலகிற்கு  ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிகள் தெளிவாக காட்டுகிறது. 

  1. உலக பொருளாதார நெருக்கடியின் உச்ச நிலை (ஆயில் விலை, ஆட்டோ நிறுவனங்கள் சரிவு-நவம்பர் 2008)
  2. காசா பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் (டிசம்பர் 2008)
  3. இலங்கையில் தீவிரமடைந்துள்ள போர் (நவம்பர் 2008)

இந்தியாவில்,

  1. பாகிஸ்தான் பயஙகரவாதிகளினால் மத சம நிலைக்கு எற்பட்டுள்ள அச்சுருத்தல் (நவம்பர் 2008)
  2. சத்யம் நிறுவனத்தால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு (ஜனவரி 2009)

 

குரு உலகிற்கு எவ்வெவற்றை அளிக்கிறார்?

இப்போது குரு நீச நிலையில் உள்ளார். நீச நிலை என்பது பலம் குறைந்துள்ளதையும், எதிர் மறையான பலன்களையும் குறிக்கிறது. எனவே உலகில் கீழ்கண்ட விடயங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

”தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை, நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், மத தலைவர்கள், சான்றோர், புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல்.”

இந்தியா பிறந்த ஜாதகத்தின் படியும் இப்போது சாதகமான நிலையில்லை. சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 முதல் 08/2009 வரை, ஏழரையாண்டு சனி வேறு 09/2009 வரை நடக்கிறது.

ஏழரை சனி -3: 07/2002 முதல் 09/2009 முடிய

  1. July 11, 2006 மும்பை குண்டு வெடிப்பு
  2. 2007ல் 6 பயங்கரவாத தாக்குதல்கள்
  3. 2008ல் 10 பயங்கரவாத தாக்குதல்கள்
  4. திறமையற்ற அரசு நிர்வாகம்

இவ்வருடத்தில் பின்வருபவை ஏற்பட வாய்ப்பு உள்ளதை எடுத்து காட்டுகிறது.

  1. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையும் குழப்பங்களும் ஏற்படும். வரும் தேர்தலில் மக்கள் கட்சி பாகுபாடின்றி  தூய தலைவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
  2. நாட்டின் நிதி நிலைமை- நிதி நிறுவனங்கள், நிதி சந்தைகள் பாதிக்கப்படும்.  மக்கள் தக்களது சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். புதிய கடன்களை அறவே தவிர்க்க வேண்டும்.
  3. பட்ஜெட் மக்களை வாட்டி வதைக்கும்- ஏழை மக்கள் மேலும் கடும் வரிச்சுமையினால் பாதிக்கப்படுவர். மக்கள் ஆதிக்க மனநிலையை விட்டு பொருளாதார சம நிலைக்கு பாடுபட வேண்டும்.
  4. மததலைவர்கள் உயிருக்கும்  மத நிறுவனங்களுக்கும் ஊறு ஏற்படும். மத நல்லினக்கம் பாதிக்கப்படும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து பிளவு படுத்துபவர்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.

ஆனால் இத்தகைய நிலை தற்காலிகமானது தான். 29.08.2009 முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

தொடரும்...

[அடுத்த பாகத்தில்: இந்தியாவின் வளமையான எதிர்காலம்]

 

இந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்

சோதிடத்தை பற்றி அன்மைய காலங்களில் பெரும் விவாதக்கள் நடந்து கொண்டுள்ளது நாம் எல்லோரும் அறிந்ததே. இவ்விவாதங்களில் ஒரு நண்பர் சோதிடத்தின் பயன் என்ன என்பதை அறிவியல் பூர்ணமாக நடைமுறையில் உணர்த்த முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இக்கேள்வியிலும் நியாயம் உள்ளது. சோதிடத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டுள்ள ஒருவன் என்பதால் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விளக்க முயல்கிறேன். 

சோதிடத்தின் பயன் என்ன?

சோதிடம் என்பது உங்களது வாழ்க்கையின் அத்தனை வருங்கால நிகழ்ச்சிகளையும் படம் பார்ப்பது போன்று காட்டாது. இது ஒரு கை விளக்கின் உதவியின் வழியே தொலைதூர பாதையை பார்ப்பது போன்றது தான். இது கண் பார்வை அற்றவருக்கு கைத்தடி கொடுக்கும் பலனை கண்டிப்பாக கொடுக்கிறது.

சோதிடம் பார்ப்பது பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாததே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமென நினைக்கிறேன். வளர்ப்பதற்கு ஆடு வாங்கலாமா? கோழி வாங்கலாமா? என்பதை பார்ப்பவர்களை கூட அறிந்திருக்கிறேன். மனிதர்கள் இயல்பாகவே எதிர்காலத்தின் இயல்புகளை அறிய இயலாதவர்களாக உள்ளனர். வருங்காலத்தை கணிக்க இயலாத சாதரண மானுடர்களுக்கு ஆறுதல் தந்து மனத்துயர் துடைக்கும் கருவியாக தான் சோதிடம் உள்ளது.

சோதிடம் என்பது வானியலையும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. ஒரு செயலை அறிவியல் பூர்ணமாக நிரூபிக்க அக்கணிதத்தை யார் செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் ஒரே பலன்களை தான் தர வேண்டும்  என்பது அடிப்படை விதி. கீழ்கண்ட கணிதங்களை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செய்து பாருங்கள். இதில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள், கால நேரங்கள், தசாபுத்திகள் துல்லியமானதாக இருக்கும். (It's consistent) இவற்றிலிருந்து சோதிடத்தின் பலனை நடைமுறையில் நாம் உணரலாம்.

இந்தியாவின் நிலை என்ன ?

 india chart

பிறந்த இடம்: டெல்லி
ஜென்ம நட்சத்திரம்: பூசம்
லக்கினம் ரிஷபம்
பிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்: 29.08.1965 வரை

புதன் திசை 17-00-00: 29.08.1982 வரை
கேது திசை 7-00-00: 29.08.1989 வரை

சுக்கிர திசை 20-00-00: 29.08.2009 வரை

இப்போது சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 - 08/2009

 

சுதந்தரமடைந்த போது நிலை என்ன?

இதில் லக்னத்தில் (Asc) ராகு(Ra) இருப்பதையும், 6ல் குரு(Ju) இருப்பதையும், 7ல் கேது(Ke) இருப்பதையும் குறித்து கொள்ளுங்கள். இந்தியா சுதந்திரமடைந்த போது முழு பிரசவமாக இல்லாமல்,  பல கூறுகளாகவும் (இந்தியா, பாகிஸ்தான் (,பங்களாதேஷ்), இலங்கை, நேபாளம், பூடான், பர்மா) அவற்றிற்கிடையே பிரச்சிணைகளையும் பிரித்தாணியர் விட்டு சென்றதையும், நாட்டின் பஞ்ச நிலையையும் தெளிவாக காட்டுகின்றன.

ராகு கிரகமும், சனி கிரகமும் நம் நாட்டின் சூழ்நிலைகளை எந்த  அளவிற்கு எடுத்து காட்டியுள்ளன என்று பார்ப்போம்.

 

ஏழரை சனி -1: 1947 முதல் 09/1950 வரை

இந்தியா பிறக்கும் போதே அதற்கு ஏழரை சனி பிடித்திருந்தது கூர்ந்து நோக்க தக்கது.

  1. பிரித்தாணியரின் இன, மத  பிரித்தாளும் சதியால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
  2. பாகிஸ்தானுடன் காஷ்மீர் போரையும் தந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் பாகிஸ்தான் வசம் போனது.

சனி திசை ராகு புத்தி: 04/1960 முதல் 02/1963 வரை

1962 சீன யுத்தம் தோல்வி

அஷ்டம சனி -1: 01/1964 முதல் 12/1966 முடிய

  1. May 27, 1964 பிரதமர் நேரு இறப்பு
  2. 1965 இரண்டாவது காஷ்மீர் போர் இந்தியாவிற்கு பிரயோசனமின்றியும் எவ்வித முடிவுமின்றியும் முடிந்தது.

ஏழரை சனி -2: 06/1973 முதல் 06/1980 முடிய

  1. புதன் திசை ராகு புத்தி: 02/1975 முதல் 09/1977 வரை: 1975-1977 எமர்ஜென்சி
  2. 1977 ஜனதா பார்ட்டி அரசு, இந்திரா கைது, அரசியல் நிரந்திரமின்மை, அரசு கவிழ்வு

கேது திசை சனி புத்தி: 07/1987 முதல் 09/1988 வரை

10/1987-1990: இலங்கை யுத்த தோல்வி

அஷ்டம சனி -2: 03/1993 முதல் 02/1996 முடிய

  1. 12 March 1993 - Series of 13 bombs go off killing 257 (சுதந்திர இந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம் )
  2. 1995ல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் Mr.Beant Singh பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

சுக்ர திசை ராகு புத்தி: 10/1996 to 10/1999

  1. February 14, 1998 கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு (தென்னிந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம்)
  2. June 1999  கார்கில் போர்: இந்திய பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு

தொடரும்...

[அடுத்த பாகம்: இந்தியாவும், நிகழ்கால சூழ்நிலைகளும்]

இப்பதிவு பற்றி...

வணக்கம் நண்பர்களே!

DSC00773 4என் பெயர் சபரிநாதன். நான் ஒரு கணிப்பொறி வல்லுனர்.

இயல்பாகவே தமிழர்களுக்கு இருக்கும் கலாசார பெருமையின் பால், இப்பதிவு எழுத நேர்ந்தது. நம்முடைய தொன்மையான நாகரீகம் பல அறிவியல் மற்றும் நுண்கலைகளை பெற்று இருந்தது.

    1. இரசவாதம் (Chemistry)
    2. மனோதத்துவம் (Psychology)
    3. சித்த மருத்துவம் (Indian medicine)
    4. சோதிடம் (Indian astronomy)
    5. சிற்பகலை
    6. ஓவியகலை

இவை பல நூற்றாண்டுகள் பழைமையானவை. இக்காலத்திற்கு ஏற்றவாறு புது கருத்துக்கள்/மாற்றங்கள் செய்ய பட வேண்டியவை என்பவற்றில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இன்று இவற்றில் பெரும்பான்மை பலவித காரணங்களால் அழியக்கூடிய நிலையில் உள்ளன. இவற்றின் சிறப்புக்களை எனக்கு தெரிந்த வகையில் எடுத்துரைப்பதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.

இப்பதிவு குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாமல் எழுதுங்கள்.

நன்றி!