சோதிடத்தை பற்றி அன்மைய காலங்களில் பெரும் விவாதக்கள் நடந்து கொண்டுள்ளது நாம் எல்லோரும் அறிந்ததே. இவ்விவாதங்களில் ஒரு நண்பர் சோதிடத்தின் பயன் என்ன என்பதை அறிவியல் பூர்ணமாக நடைமுறையில் உணர்த்த முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இக்கேள்வியிலும் நியாயம் உள்ளது. சோதிடத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டுள்ள ஒருவன் என்பதால் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விளக்க முயல்கிறேன்.
சோதிடத்தின் பயன் என்ன?
சோதிடம் என்பது உங்களது வாழ்க்கையின் அத்தனை வருங்கால நிகழ்ச்சிகளையும் படம் பார்ப்பது போன்று காட்டாது. இது ஒரு கை விளக்கின் உதவியின் வழியே தொலைதூர பாதையை பார்ப்பது போன்றது தான். இது கண் பார்வை அற்றவருக்கு கைத்தடி கொடுக்கும் பலனை கண்டிப்பாக கொடுக்கிறது.
சோதிடம் பார்ப்பது பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாததே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமென நினைக்கிறேன். வளர்ப்பதற்கு ஆடு வாங்கலாமா? கோழி வாங்கலாமா? என்பதை பார்ப்பவர்களை கூட அறிந்திருக்கிறேன். மனிதர்கள் இயல்பாகவே எதிர்காலத்தின் இயல்புகளை அறிய இயலாதவர்களாக உள்ளனர். வருங்காலத்தை கணிக்க இயலாத சாதரண மானுடர்களுக்கு ஆறுதல் தந்து மனத்துயர் துடைக்கும் கருவியாக தான் சோதிடம் உள்ளது.
சோதிடம் என்பது வானியலையும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. ஒரு செயலை அறிவியல் பூர்ணமாக நிரூபிக்க அக்கணிதத்தை யார் செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் ஒரே பலன்களை தான் தர வேண்டும் என்பது அடிப்படை விதி. கீழ்கண்ட கணிதங்களை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செய்து பாருங்கள். இதில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள், கால நேரங்கள், தசாபுத்திகள் துல்லியமானதாக இருக்கும். (It's consistent) இவற்றிலிருந்து சோதிடத்தின் பலனை நடைமுறையில் நாம் உணரலாம்.
இந்தியாவின் நிலை என்ன ?
பிறந்த இடம்: டெல்லி
ஜென்ம நட்சத்திரம்: பூசம்
லக்கினம் ரிஷபம்
பிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்: 29.08.1965 வரை
புதன் திசை 17-00-00: 29.08.1982 வரை
கேது திசை 7-00-00: 29.08.1989 வரை
சுக்கிர திசை 20-00-00: 29.08.2009 வரை
இப்போது சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 - 08/2009
சுதந்தரமடைந்த போது நிலை என்ன?
இதில் லக்னத்தில் (Asc) ராகு(Ra) இருப்பதையும், 6ல் குரு(Ju) இருப்பதையும், 7ல் கேது(Ke) இருப்பதையும் குறித்து கொள்ளுங்கள். இந்தியா சுதந்திரமடைந்த போது முழு பிரசவமாக இல்லாமல், பல கூறுகளாகவும் (இந்தியா, பாகிஸ்தான் (,பங்களாதேஷ்), இலங்கை, நேபாளம், பூடான், பர்மா) அவற்றிற்கிடையே பிரச்சிணைகளையும் பிரித்தாணியர் விட்டு சென்றதையும், நாட்டின் பஞ்ச நிலையையும் தெளிவாக காட்டுகின்றன.
ராகு கிரகமும், சனி கிரகமும் நம் நாட்டின் சூழ்நிலைகளை எந்த அளவிற்கு எடுத்து காட்டியுள்ளன என்று பார்ப்போம்.
ஏழரை சனி -1: 1947 முதல் 09/1950 வரை
இந்தியா பிறக்கும் போதே அதற்கு ஏழரை சனி பிடித்திருந்தது கூர்ந்து நோக்க தக்கது.
- பிரித்தாணியரின் இன, மத பிரித்தாளும் சதியால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுடன் காஷ்மீர் போரையும் தந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் பாகிஸ்தான் வசம் போனது.
சனி திசை ராகு புத்தி: 04/1960 முதல் 02/1963 வரை
1962 சீன யுத்தம் தோல்வி
அஷ்டம சனி -1: 01/1964 முதல் 12/1966 முடிய
- May 27, 1964 பிரதமர் நேரு இறப்பு
- 1965 இரண்டாவது காஷ்மீர் போர் இந்தியாவிற்கு பிரயோசனமின்றியும் எவ்வித முடிவுமின்றியும் முடிந்தது.
ஏழரை சனி -2: 06/1973 முதல் 06/1980 முடிய
- புதன் திசை ராகு புத்தி: 02/1975 முதல் 09/1977 வரை: 1975-1977 எமர்ஜென்சி
- 1977 ஜனதா பார்ட்டி அரசு, இந்திரா கைது, அரசியல் நிரந்திரமின்மை, அரசு கவிழ்வு
கேது திசை சனி புத்தி: 07/1987 முதல் 09/1988 வரை
10/1987-1990: இலங்கை யுத்த தோல்வி
அஷ்டம சனி -2: 03/1993 முதல் 02/1996 முடிய
- 12 March 1993 - Series of 13 bombs go off killing 257 (சுதந்திர இந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம் )
- 1995ல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் Mr.Beant Singh பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
சுக்ர திசை ராகு புத்தி: 10/1996 to 10/1999
- February 14, 1998 கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு (தென்னிந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம்)
- June 1999 கார்கில் போர்: இந்திய பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு
தொடரும்...
[அடுத்த பாகம்: இந்தியாவும், நிகழ்கால சூழ்நிலைகளும்]
வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள்!
வாங்க சுப்பையா ஐயா,
பதிலளிநீக்குதங்களது பதிவுகள் தான் என்னை போன்ற புது மாணவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் ஊக்கத்தை அளிக்கின்றன. தங்களது பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
குடும் ஆட்சி மத்தியில் தொடங்க சனியும் ராகுவும் தான் காரணம். சனி 7இல் இருப்பதால் இந்தியாவின் எதிரி எப்போதும் பெண்ணாகவே இருக்கலாம். ஆனால் புதன் 4 வீட்டில் இருப்பதால் கூத்தாடிகள் நாட்டை ஆள விரும்புவார்கள். செவ்வாயின் பார்வை புதனில் படுவதால் மக்கள் நடிகைகளின் நாய்களுக்குகூட கோயில் கட்டுவார்கள். குரு நீசம் அடைவதனால் பார்ப்பணர்கள் தமிழர்களின் விரோதிகளாக இருப்பார்கள்.
பதிலளிநீக்குகுடும்ப ஆட்சியால் நாடு குட்டிச் சுவராகி ஒரு காலத்தில் பிளவுபட வாய்ப்புள்ளது.
வாங்க பெயரில்லா,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் முதலில் மிக்க நன்றி!!
தங்களுடைய கணிப்புகள் சற்று ? வித்தியாசமான :-)) முறையில் உள்ளன.
கிரகங்கள் வெறும் அறிவிப்பாளர்கள் மட்டுமே! தினை விதைப்பவர்களும், அறுவடை செய்பவர்களும் நாம் தான் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.
நன்றி!!